Pages

Tuesday, July 19, 2016

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க...


 garlic and onion க்கான பட முடிவு

பூண்டு, வெங்காயத்தை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆலமர விழுதுகளை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி காய வைக்கவும். இத்துடன் படிகாரம் சேர்த்து அரைத்து வைத்து கொண்டு, அதில் பல் துலக்கினால் பல் தொடர்பான பாதிப்புகள் குறையும்.

ஆலமர பட்டையில் கஷாயம் வைத்து வாய் கொப்பளித்தால் பல்வலி குறையும்.

நல்லெண்ணெய், 20 மிலி அளவுக்கு வாயில் ஊற்றி அடக்கி இருபது நிமிடம் கழித்து வாய் கொப்பளித்து துப்பினால் வாயில் ஏற்படும் கிருமித் தொற்று நீங்கும்.

கிராம்பு, கொட்டைப்பாக்கையும், சம அளவில் பொடி செய்து பல் துலக்கினால் பல்வலி குணமாகும். ஈறுகள் பலப்படும்.

கொய்யா இலை, கரு வேலம்பட்டை, உப்பு மூன்றையும், சம அளவில் எடுத்து, பொடி செய்து, பல் துலக்கி வந்தால், பல் வலி விலகும்.

Friday, July 15, 2016

வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சி: அதிக கலோரியை எரிக்கலாம்


என்னதான் உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்தும் நம்மால் போதுமான அளவு கலோரிகளை எரிக்க முடிவது இல்லை. வீட்டில், நாம் செய்யும் அன்றாட வேலைகளை அதிகக் கவனத்துடன் செய்வதாலும் அல்லது வாழ்வில் சில மாற்றங்களைச் செய்து கொள்வதன் மூலமும் கூடுதலாகச் சில கலோரிகளை எரிக்க முடியும். 

வீட்டில் பாத்திரம் கழுவுவது, தரை துடைப்பதன் மூலம் எவ்வளவு கலோரி

வீட்டு வேலைகளில் உள்ள உடற்பயிற்சி
செலவிடப்படுகிறது என்பது அவரவர் உடல் எடையைப் பொருத்தது. ஒருவரின் எடை 45 கிலோவாக இருந்து, 15 நிமிடங்கள் பாத்திரம் கழுவினால் 38 கலோரிகள் வரை எரிக்கப்படும். தரையை சுத்தம் செய்தால் 65 கலோரிகள் வரை எரிக்கலாம். 

வீட்டுச் சுவற்றில் பந்து வீசிப் பிடிப்பதன் மூலம், அரை மணி நேரத்தில் 105 முதல் 285 கலோரி வரை எரிக்கலாம்.  வீட்டில் தினமும் 50 நிமிடங்களுக்கு ஸ்கிப்பிங் விளையாடினால், 500 கலோரிகளை எரிக்கலாம்.  ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு போன் பேசுவதற்குப் பதில், பாதுகாப்பாக நடந்தபடியே பேசுங்கள். அவ்வப்போது எழுந்து உட்காருங்கள்.

இதனால், கூடுதல் கலோரிகளை எரிக்க முடியும்.  வீட்டில் உள்ள மியூசிக் சிஸ்டத்தை ஆன் செய்துவிட்டு, சில நிமிடங்கள் நடனம் ஆடலாம்.  மணிக்கணக்கில் உட்கார்ந்த நிலையில் இல்லாமல், ஃபைல், பேப்பர் படிக்கும்போதுகூட எழுந்து நின்று படிக்கலாம். காலாற ஓய்வு அறைக்கு நடந்து ஐந்து நிமிடங்கள் புஷ் அப்ஸ் அல்லது ஜம்ப் செய்யலாம்.

இதனால், உடலுக்கு புத்துணர்வு கிடைப்பதுடன் 50 கலோரிகள் வரை எரிக்க முடியும்.  துடிப்பான வேகத்துடன் அதாவது மணிக்கு 4 மைல் வேகத்தில் 90 நிமிடங்கள் நடந்தால், 500 கலோரிகளை எரிக்கலாம்.  அலுவலகத்தைச் சுற்றிலும் ஒரு 10 நிமிடத்துக்கு நடந்தாலே, குறைந்தது 80 முதல் 100 கலோரிகளை எரிக்க முடியும். 

இளைஞர்கள், மூட்டுப் பிரச்சனை இல்லாதவர்கள் மணிக்கு 6 மைல் வேகத்தில் ஓடலாம். இதன் மூலம் 42 நிமிடங்களில் 500 கலோரிகளை எரித்துவிடலாம்.  குழந்தைகளுடன் விளையாடுங்கள். குழந்தைகளுடன் ஒரு ஒன்றரை மணி நேரத்தை செலவிடுவதன் மூலம் 500 கலோரிகளை எரிக்கலாம்.

இதனால், மன அழுத்தமும் குறையும். உடலும், மனமும் புத்துணர்ச்சி பெறும்.  தினசரி 65 நிமிடங்கள் நீச்சல் செய்யலாம். நீச்சல் செய்யும் திறன், என்ன மாதிரியான நீச்சல் பயிற்சி செய்கிறீர்கள் என்பதைப் பொருத்து, ஒரு மணி நேரத்தில் 450 முதல் 950 கலோரிகள் வரை எரிக்க முடியும். 

சைக்கிளிங் உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. பெடல் மிதிப்பதைப் பொருத்து 75 முதல் 670 கலோரிகளை வெறும் அரை மணி நேரத்திலேயே கூடுதலாக எரிக்க முடியும் 

கொத்தமல்லி சாண்ட்விச்


 coriander sandwich

என்னென்ன தேவை?

பிரெட் - 4 ஸ்லைஸ்,
வெண்ணெய் - தேவைக் கேற்ப,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2,
பொடியாக நறுக்கிய பெரிய தக்காளி - 2,
உப்பு - தேவைக்கேற்ப.

அரைக்க...

கொத்தமல்லி - 3/4 கப்,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - 1/2 இஞ்சி துண்டு.

எப்படிச் செய்வது?  

அரைக்க வேண்டிய பொருட்களை அரைத்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியுடன், உப்பு சேர்த்துக் கலந்து கொள்ளவும். இரண்டு பிரெட் துண்டுகளுக்கு நடுவே தேவையான அளவு இந்த விழுதை வைத்து நன்கு மூடவும். தவாவில் வெண்ணெய் சேர்த்து, பிரெட்டை இரண்டு பக்கமும் நன்கு டோஸ்டு செய்து எடுக்கவும். சாஸுடன் பரிமாறவும்.

முகத்தை கழுவ எந்த ஃபேஷ் வாஷ் சிறந்தது


பலர் முகம் கழுவுகிறேன் என்று ஏனோதானோவென்று கண்ட கண்ட ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி கழுவுவார்கள். முகம் கழுவும் போது அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் சில பெண்களுக்கு ஃபேஷ் வாஷ் செய்யும் போது பின்பற்ற வேண்டியவைகள் மற்றும் பின்பற்றக்கூடாதவைகள் பற்றி தெரியவில்லை. அதனால் பெண்கள் பல சரும பிரச்சனைகளை சந்தித்து, சருமத்தின் அழகையே கெடுத்துக் கொள்கிறார்கள். சருமத்திற்கு ஏற்ற ஃபேஷ் வாஷை பயன்படுத்த வேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சருமம் என்பதால், ஒவ்வொருவரும் தங்களின் சருமத்திற்கு ஏற்றதை தேர்ந்தெடுக்க வேண்டும். நல்ல நறுமணமிக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தினால், அதில் உள்ள கெமிக்கல்கள் சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். முடிந்த அளவு மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்துவது தான் சருமத்திற்கு நல்லது.

குளிர்காலத்தில் தினமும் 2 முறை ஃபேஷ் வாஷ் பயன்படுத்தியும், அதுவே கோடைக்காலமாக இருந்தால் மூன்று முறையும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தை கழுவ வேண்டும். முக்கியமாக கழுவிய பின் மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும்.

மேலும் ஃபேஷ் வாஷ் பயன்படுத்திய உடனே வெயிலில் செல்லக்கூடாது. அதுமட்டுமின்றி, முகம் கழுவிய பின்னர் சிறிது நேரம் கழித்தே சன் ஸ்க்ரீன் லோசனைப் பயன்படுத்த வேண்டும். முகத்தை கடுமையாக தேய்த்து கழுவக்கூடாது. கழுவி முடித்த பின் மென்மையாக முகத்தை துடைக்க வேண்டும்.

அல்லது மென்மையான டவலால் ஒற்றி எடுக்க வேண்டும். மேக்கப்பை நீக்க ஃபேஷ் வாஷைப் பயன்படுத்தக் கூடாது. அதற்கு மேக்கப் ரிமூவர் அல்லது நல்ல மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தியே நீக்க வேண்டும். அப்படி மேக்கப்பை நீக்கிய பின் ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவவும். சிம்பிளாக மைல்டு ஃபேஷ் வாஷை பயன்படுத்தி முகத்தைக் கழுவினாலே போதுமானது. 

மறதி நோய் என்றால் என்ன?


மறதி நோய் என்பது, 60 வயதிற்கு மேலான முதியோரை தாக்கும், ஞபாக சக்தி, கொஞ்சம் கொஞ்சமாக குறையும். சரியான புரிதல் திறன் இருக்காது.

இதய நோய் தாக்குதலுக்கு காரணமான, ரத்த அழுத்தம், நீரழிவு பாதிப்பு
கொழுப்புச் சத்து, அடிபட்டு  தலையில் காயம் ஏற்படுதளாலும், இந்த நோய் வருகிறது.

நம் மூளையின் திறனை சரியான விகிதத்தில் பயன்படுத்தினால், இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். அதாவது படித்தல், அதிகமாக அறிதல் திறனை வளர்ப்பது, மறதி நோயை தடுக்க உதவும்.

Thursday, July 14, 2016

இளம் நரையா - இதைப் படிங்க முதல்ல

உங்களுக்கு இளநரை வந்து விட்டதே என்று கவலைப் பட வேண்டாம். அதற்கு கறுப்பு எள் உபயோகமாகும். கால் கிலோ கறுப்பு எள்ளை தண்ணீரில் ஊற வைங்க. இரண்டு மணி நேரம் கழிச்சு எள்ளை மையமாக அரைத்து தலைக்கு பூசி குளிக்கவும். தொடர்ந்து செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட இளநரையும் இல்லாது போகும்.

சிலருக்கு "டிரை ஸ்கால்ப்" பிரச்சினை இருக்கும். மண்டையை சொரிந்தாலே வெள்ளையாக தோல் பிய்ந்து வரும். அரிக்கும். கொஞ்சம் அசட்டையாக இருந்தால் அந்த இடத்தில் முடி கொட்டி போகும்.

இந்த பிரச்சினைக்கு வால் மிளகு, பிஞ்சு கடுக்காய் காம்பினேஷன் நன்றாக பயன் தரும். வால் மிளகையும், பேபி கடுக்காயையும் மையாக அரைத்து தலையில் பூசி குளிக்கவும். மண்டையின் மேல் தோல் ஆரோக்கியமாவதோடு, முடி கொட்டுவதும் டக்கென்று நின்று விடும்.

ஒரு சில பெண்களுக்கு மெல்லிய மீசை வளர்வதுண்டு. மேலும், சிலருக்கு கை, கால் எல்லாம் முடி வளர்ந்து அழகியே குலைத்து விடும்.

குப்பை மேனி இலை, வேப்பிலை, விராலி மஞ்சள் இம்மூன்றையும் சம அளவு எடுத்து, அரைத்து வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கப் போகும் முன்பு, ரோமம் உள்ள இடங்களில் பூசி வர, சில நாட்களில் முடி உதிர்ந்து விடும். மேனியும் பெண்மையில் பொலிவோடு மிளிரும்.

முட்டையின் வெள்ளைக் கருவை மிக்ஸியில் அடிக்கவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் எண்ணெய் கலந்து, தலையின் மயிர்க் கால்களில் ஊடுருவிச் சொல்லும்படியாக அழுத்தமாக தேய்க்க வேண்டும். இயற்கையான கண்டிஷனரோடு உங்கள் கூந்தலுக்கு எழிலூட்டும்.

Wednesday, July 13, 2016

மூளையின் செயல்பாட்டால் என்ன நடக்கிறது?


மொழித்திறன், செயல்திறன், புலனறிவு, நினைவாற்றல் ஆகியவற்றுக்கு, மூளையின் இயக்கமே காரணம்.

விரிவாக சொல்வது என்றால், அன்றாட அடிப்படை திறமை சார்ந்த மற்றும் ஒய்வு சார்ந்த வேலைகளை, சரியாக, சீராக, முறையாக செய்தல், அறிதல் மற்றும் புரிதல் திறனுடன் சூழ்நிலைகேற்ப செயல்படுதல், உடல் மற்றும் புலன் ஆகியவை முழுமையாக இயங்க, மூளையின் செயல்பாடு முக்கியம்.

மன நோயை அறியும் அறிகுறிகள் இதுதான் !


மனம், அறிவு, உணர்வு, நினைவாற்றல், விருப்பம், ஒழுக்கம், நடவடிக்கை, செயல் இவற்றின் மாறுபாட்டை மன நோய் என அறிந்துக்கொள்ள வேண்டும். மனநோய் என்றால் ஆயுர்வேதத்தில் மட்டுமே குணப்படுத்த முடியும் என பழங்காலத்தில் நம்பிக்கை இருந்தது.

பழங்காலத்தில் மன நோய்கள் உள்ளவர்களை சங்கிலியால், கட்டி கோவிலை சுற்றி வலம் வர வைப்பது, அடிப்பது இவை தன சிகிச்சை. சமூகத்தில் மன நோய்யை பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை. ஆயுர்வேதத்தை பொருத்தவரை மனது தான். மனித சிந்தனைகளின் பிறப்பிடம். மனிதன் இறந்தால், மூளையும் இறந்துவிடும். நவீன மருத்துவ முறைகளை பொறுத்த வரை மூளை தான் பிரதானம். மனதுக்கும் மூளைக்கும் வித்யாசமில்லை. மனதில் எண்ணங்கள் தோன்றுவதெல்லாம் மூளையின் செயல்பாடுதான்,

மனோ வியாதி இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நியூரோசிஸ் உள்ளவர்களுக்கு தங்கள் குறைபாடு தெரியும். மனச்சோர்வு, மனப்பதற்றம், ஆழ்ந்த பயம், கருத்து ஆவேசம் அல்லது என்ன சுழற்சி, அதிக உணர்ச்சி வசப்படுதல், தன் உடலைப்பற்றி அதிக கவலை என்பவை நியூரோசிஸ் பிரிவில் வருபவை.

சைகோசிஸ் தீவிரமான மன வியாதி, நோயாளிகளுக்கு தன் குறைபாடு தெரியாது. தன்னைச் சுற்றியுள்ள நிஜ வாழ்க்கை புரியாது. எண்ணச் சிதைவு ஏற்ப்படும். உச்சக் கட்ட மனநோய் வியாதியான  மனச் சிதைவு இந்த பிரிவை சேர்ந்தது. மன எழுச்சி நோயும் சைகோசிஸ் வியாதிதான். இவை தவிர குழந்தைகளுக்கு வரும் மனவியாதிகள், ஆளுமை கோளாறுகள் போன்ற மன வியாதிகள் உள்ளன. வாதத்தினாலும், பித்தத்தினாலும், கபத்தினாலும், இந்த மூன்றின் சேர்க்கையாலும் எதிர்பாராத விதமாக ஏற்ப்படும் உடல் மன நலிவுகளாலும் மனநோய் உண்டாகும்.

மூளையில் உள்ள நாளங்கள் எண்ணங்களை கொண்டு      செல்பவை. இவை கோபம், தூக்கம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் மனோ வியாதி ஏற்படும். சரிவர உடலை பராமரிக்காதது, தவறான உணவுகளை உட்கொள்ளுதல், மனது ஒப்புக்கொள்ளாத சிந்தனைகளை அடிக்கடி யோசிப்பது, மூளையின் செயல்பாடுகளை தடுக்கும் வகையில் அதிர்ச்சியான சம்பவங்கள் நிகழ்த்துவது போன்றவை மனநோய் வர காரணங்களாக உள்ளன.

மனநோய் என்பது பிற நோய்களை போல சத்து குறைபட்டினாலோ அல்லது வயது காரணமாகவோ வருவதல்ல. மனதில் எழும் குழப்பங்கள், மூளை சிந்திக்கும் அளவை தாண்டி செயல்பட தூண்டுகிறது. இதனால் மூளையிலுள்ள செல்கள் மாற்றுப் பாதையில் செயல்படும் வாய்ப்பு உருவாகிறது. இதனால் மனிதனின் நடவடிக்கைகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. பணிச்சுமை, மன உளைச்சல், தேவையில்லாத சிந்தனைகளை நாள்தோறும் யோசிப்பது போன்ற அனைத்துமே மனநோயின் அடிப்படையாக உள்ளது.
  

பக்கவாதம் என்றால் என்ன?


பக்கவாதம்


உடலில் ஆக்சிஜன் மற்றும் குளுக்கோஸ் அளவு குறையும் போது, மூளையின் உள்ள செல்கள் இறக்க நேரிடுவது : மூளைக்கு செல்லும் ரத்தம் தடைபடுவது ஆகியவை, பக்கவாதம் ஏற்படக் காரணங்களாக அமைகின்றன. இறப்புக்கான காரணமான நோய்களில், இது, மூன்றாவது இடத்தில் உள்ளது. 6 நொடிக்கு ஒருவர் என, ஆண்டுக்கு, 1.5 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இதில், 15 முதல் 30 சதவீதம் பேர், படுத்த படுக்கையாகி விடுவர்.

இந்த நோய் பாதித்தால் உடனடியாக, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். அதிக ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், கொழுப்புச் சத்து அதிகமாகி உடல் எடை கூடுதல், குடிப்பழக்கம், மன அழுத்தம் போன்றவை இதற்கு காரணம்.

கோயில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய 50 விதிகள்!

1. பிறப்பு, இறப்பு, தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

2.வெறும் கையுடன் கோயிலுக்குப் போகக்கூடாது. குறைந்த பட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும்.

3. குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது.

4. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலை விரித்துப் போட்டுக்கொண்டு செல்லுதல் நிச்சயம் கூடாது.

5. கோயில் அருகில் சென்றதும், கோபுரத்தின் அருகே நின்று, ஆண்கள் அனைவரும் இரண்டு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்திக் கும்பிட வேண்டும்.

6. பெண்கள் தங்கள் இரண்டு கைகளையும் நெஞ்சோடு வைத்துக் கும்பிட்டாலே போதும்.

7. கைலி, தலையில் தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது.

8. கவர்ச்சியான ஆடைகள், ஈர துணி, ஓராடை மற்றும் அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது.

9. பசுமடம் உள்ள கோயிலுக்குச் செல்லும்போது, வாழைப்பழம் அல்லது அகத்திக்கீரை கொண்டு செல்வது சிறப்பு.

10. தீபம் ஏற்றி வழிபடுவது சிறப்பு.

11. நமது வேண்டுதல்களை நினைத்து, 48 நாட்கள் (ஒரு மண்டலம்) தொடர்ந்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், நினைத்தது நிறைவேறும்.

12. சிவன் கோயில் என்றால் மூன்று, ஐந்து, ஏழு என எண்ணிக்கையில் வலம் வருவது சிறப்பு.

13. சிவன் கோயில் என்றால், நந்தி பகவானை வழிபட்ட பின்னரே, சிவபெருமானை வழிபட வேண்டும்.

14. விநாயகரை  இரு கைகளால், தலையில் குட்டிக்கொண்டு தோப்புக்கரணம் போட்டு வணங்கி வழிபட வேண்டும்.

15. இறைவனிடம் நம்மையே முழுமையாக அர்ப்பணிக்கும் வண்ணம், ஆண்கள் தரையில் விழுந்து வணங்க வேண்டும்.

16. பெண்கள் அனைவரும், பஞ்சாங்க நமஸ்காரம் முறையில், தலை மற்றும் இரண்டு முழங்கால்களையும் தரையில் படும்படியாக இறைவனை வணங்கி வழிபட வேண்டும்.

17. கோயிலின் உள்ளே உள்ள மற்ற சன்னதிகளை காட்டிலும், கொடி மரத்தின் அருகில் மட்டுமே விழுந்து கும்பிட வேண்டும்.

18. விக்கிரகங்களைத் தொட்டு வணங்கக் கூடாது.

19. சன்னதியின் முன்போ, மற்ற நபர்களிடமோ கைகளைத் தட்டிக் வணங்கக் கூடாது.

20. ஒவ்வொரு சன்னதிக்கும் ஏற்றத் துதி பாடல்கள் பாடி வழிபடுவது சிறப்பு.

21 மந்திரங்கள் மற்றும் துதி பாடல் தெரியாதவர்கள், அந்தச் சன்னதியில் உள்ள தெய்வத்தின் பெயரைச் சொல்லி ஓம் (கணபதியே) போற்றி என்று கூறலாம்.

22. நமது கரங்களை, நமது இதயத்திற்கு அருகில் மார்பிற்கு நேராக வைத்து, மந்திரங்களைச் சொல்லி மனதிற்குள்ளேயே வேண்டிக்கொள்ள வேண்டும்.

23. நந்தியின் கழுத்தில் எந்த ரகசியமும் சொல்ல வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.

24 பிரகாரம் வலம் வரும் பொழுது வேகமாக நடக்கக் கூடாது.

25. பலிபீடம்,நந்தி, கோபுரம் நிழலை மிதிக்கக் கூடாது.

26. நந்தி தேவருக்கும் சிவலிங்கத்திற்கும் இடையில் போகக் கூடாது.

27. கோயிலில் விபூதியோ குங்குமமோ கொடுத்தால், அவற்றை வலது கையால் மட்டுமே வாங்க வேண்டும்.

28. நடந்துகொண்டே நெற்றியில் விபூதி இடக்கூடாது.

29. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

30. பலிபீடத்திற்கு உள்ளே சந்நிதியில் யாரையும் வணங்கக் கூடாது.

31. நம்முடைய பேச்சுக்களோ செயல்களோ அடுத்தவர்களுடைய வழிபாட்டையோ, தியானத்தையோ  கெடுக்கக்  கூடாது.

32. கோயில் உள்ளே உரக்கப் பேசுதல் கூடாது.

33. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் பேசுதல் கூடாது.

34. வெற்றிலை பாக்கு போடுதல், பொடிபோடுதல் நிச்சயம் கூடாது.

35. கோயிலுக்குள் முக்கியமாக பூஜை நேரத்தில் புகைப்படம் எடுக்கக் கூடாது.
36. கோயில் உள்ளே செல்போன் பேசுதல் கட்டாயம் கூடாது. அணைத்து வைப்பது அனைவருக்கும் சிறப்பு.

37. ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது.

38. தோளில் துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது

39. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும்.

40. கோயிலுக்குள் உறங்கக் கூடாது.

41. கோயிலில் இருந்து வீட்டிற்குக் கிளம்புவதற்கு முன்பாக, கோயிலில் ஏதாவது ஒரு இடத்தில் சிறிது நேரம் அமர்ந்துவிட்டு பிறகுதான் செல்ல வேண்டும்.

  42. கோயிலில் நுழையும் போதும், திரும்பி வரும் போதும் கோபுர தரிசனம் அவசியம்.

43. கோயிலுக்குள் நுழைந்தது முதல் வெளியே வரும் வரை நிதானமாக அவசரம் இன்றி, கடவுளை நமக்குள் உணர்ந்து மந்திரம் கூறி வழிபடுவது சிறப்பு.

44. கோயிலுக்குச் சென்று வந்தபின் வீட்டில் உடனடியாகக்  கால்களைக்  கழுவக் கூடாது. சிறிது நேரம் அமர்ந்த பிறகுதான் கழுவ வேண்டும்

45. ஸ்தல விருட்சங்களை இரவில் வழிபடக்  கூடாது.

46. அஷ்டமி,நவமி, அமாவாசை,பௌர்ணமி,மாத பிறப்பு, சோமவரம், பிரதோஷம், சதுர்த்தி, இந்த தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. இதற்கு முதல் நாள் மாலையிலேயே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

47. கோயில் சொத்துக்களை எவ்விதத்திலும் அபகரிக்கவோ அனுபவிக்கவோ கூடாது.

48. கோயிலுக்குச் சென்று வந்ததும், குறைந்த பட்சம் ஒருவருக்காவது தானம் செய்ய வேண்டும்.

49. கோயிலுக்கு வரும்பொழுதும், திரும்பிச் செலும்பொழுதும், நமது மனதில் உள்ள அனைத்து விதமான தீய எண்ணங்களையும் முழுவதுமாக அழித்து விட வேண்டும். எந்த கறை படிந்த எண்ணங்களும் நமது மனதில் இருக்கக்கூடாது.

50. கோயிலில் இருந்து நேராக நாம், வீட்டிற்குத்தான் செல்ல வேண்டும்.

-----விகடன் பக்கத்தில் இருந்து





தண்ணீர் தரும் அழகு

Water
நாம் பருகும் சுத்தமான நீர் நம் உடலை சுத்தப்படுத்துகிறது. புதுப்பிக்கிறது. சருமத்திற்கு பொலிவை உண்டு பண்ணுகிறது. எடை குறைய உதவுகிறது.

சாப்பிடும் முன் தண்ணீர் பருகினால் குறைவாகச் சாப்பிடலாம்.

உடற்பயிற்சிக்கு இடையில் நீர் பருகுவதும் நல்லது.

முகத்தில் குறைந்தது 20 முதல் 25 முறைகளாவது குளிர்ந்த நீரை முகத்தில் அடித்து கழுவுங்கள். முகம் புத்துணர்வு பெறும் .

வீட்டில் பாத்ரூம் கதவு, ஜன்னலை மூடி விட்டு கொதிக்கும் நீரை பைப்பில் திறந்து விட்டாலோ, அல்லது ஆவி பறக்கும் நீரை தரையில் கொட்டி விட்டாலோ புகை எழும்பும். இதில் சிறிது நேரம் அமைதியாக அமர்ந்த பின் உடல் வியர்வையை ஒரு சுத்தமான டவலால் துடைத்த பின் குளித்தால் பிரஸ்ஸாக இருக்கும்.

வேப்பிலை அல்லது அரைத்த 50 கிராம் இஞ்சி அல்லது இரண்டு கைப்பிடி புதினா இலைகள் அல்லது செம்பருத்தி இலைகள், பூக்கள் இவற்றை குளிக்கும் நீரில் போட்டு கொதிக்க வைத்துக் குளித்தால் உடல் சருமத்திற்கு மிகவும் நல்லது.

தினமும் எழுந்ததும் வெற்று பாதங்களுடன் திறந்த புல்வெளியில் பத்து நிமிடங்கள் நடக்கலாம். இல்லை முட்டி வரை நனையும்படி குளிர்ந்த நீரில் 10 நிமிடம் நனைத்து வைத்திருந்த பின் துடைத்து விட வேண்டும்.
இப்படி செய்வதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

பண்டைய சீனர்கள், ஜப்பானியர்கள் இப்படி செய்வார்களாம். காலையில் எழுந்ததும் 4 முதல் 6 டம்ளர்கள் சுத்தமான நீர் பருக வேண்டும்.



வின்ஸ்டன் சர்ச்சில் - கொஞ்சம் தெருஞ்சுக்கங்க


வின்ஸ்டன் சர்ச்சில்


பதினான்கு நூல்களை எழுதி தள்ளிய எழுத்தாளன், வீரம் கொண்டு துப்பாக்கி பிடித்து ராணுவ வீரனாவார். ஓவியராக திகழ்ந்தவர். இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக விளங்கியவர். வின்ஸ்டன் சர்ச்சில், போரும் வீரமுமே வாழ்வாக, 23 வயதில் துவங்கிய அவரது போராட்ட வாழ்வு, 90 வயது வரை நீண்டது. துணிவுக்கு மருப்பெயரான சர்ச்சிலின் போர் அனுபவங்கள், 20 நூல்களாக வெளி வந்துள்ளன. இரண்டு உலகப் போர்களை முன்னின்று நடத்தியதும், ஹிட்லருக்கு சவால் விட்டதும், இந்த நூலில் சிறப்பாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 'சாவ்ரோலா' என்ற நாவலை எழுதிய இவர், அந்த கதாநாயகனின் அதிரடி வெற்றிகளை கற்பனையில் கண்டதை, இவர் வாழ்விலும் அடைந்தது வியப்புக்கு உரியது.

வீரமும், நேர்மையும், கடும் உழைப்பும், பிடிவாத குணமும் கொண்ட சர்ச்சில், பல முறை தோல்விகளில் இருந்து மீண்டு எழுந்த வரலாற்றை, இந்த நூல் அழகாக பதிவு செய்துள்ளது.

மனித உடலின் அதிசய செய்திகள்

மனித உடலின் அதிசய செய்திகள்

மனித உடலுக்குள் ஆயிரத்துக்கு அதிகமான உறுப்புகள், சத்தமில்லாமல் தங்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த உறுப்புகளில் ஒன்று தன் பணியை செய்ய மறுத்தால் மனிதனுக்கு சிக்கல் தான். முதலில் நம் உடலில் உள்ள நமக்கு தெரியாத உறுப்புகள் மற்றும் பணிகள் குறித்து தெரிந்து கொள்வோம்.

நமது மூக்கு 50 ஆயிரம் விதமான வாசனைகளை நுகர முடியும். நமது மூளை 80 சதவீதம் தண்ணீரால் ஆனது. பகலை விட இரவில் மூளை சுறுசுறுப்புடன் இருக்கும். அதிகமாக சிந்தனைகள் தோன்றும். வலி என்ற உணர்வே மூளையின் உதவியால் தான் உணரப்படுகிறது. ஆனால் மூளையில் காயம் பட்டால் வலி தெரியாது.

சராசரி மனிதன் ஆண்டுக்கு ஆயிரத்து 460 கனவுகள் காண்கிறான். அதாவது தினமும் குறைந்தபட்சம் நான்கு கனவுகள். நாம் ஒரு அடி எடுத்து வைக்கும் போது நமது உடலில் 200 தசைகள் செயல்படுகின்றன. நம் கண் விழியின் சராசரி எடை 28 கிராம். தும்மும் போது நமது கண்களை திறந்து வைத்திருக்க முடியாது. மூக்கு துவாரங்களை மூடிக்கொண்டு முனங்க முடியாது. நம்மால் வாசனை பிடிக்க முடியாத நிலை அனாச்மிய எனப்படுகிறது. அதிகமாக வாசனை பிடிக்கும் சக்தியை ஹைபரோஸ்மியர் என்கிறார்கள்.

நமது உடலில் உவுலா என்ற உறுப்பு எங்கிருக்கிறது தெரியுமா? 

அடிநாக்கு பகுதியில் நாக்கின் மேற்புறம் காணப்படும் சிறு தசையே உவுலா எனப்படுகிறது. நாம் இதனை உள்நாக்கு என்கிறோம். மனித உடலில் உள்ள உறுதியான தசை நமது நாக்குதான். பிறக்கும் போது நமது உடலில், 300 எலும்புகள் உள்ளன. ஆனால் வளர்ச்சி அடைந்த மனித உடலில் 206 எலும்புகள் இருக்கும். பல எலும்புகள் ஒன்றிணைந்து விடுவதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

எலும்பின் வெளிப்புறமே கடினமானது. உட்புறம் எலும்புகள் மென்மையானதாக இருக்கும். ஏனெனில் எலும்புகள் 75 சதவீதம் தண்ணீரால் ஆனது. மனித எடையில் எலும்புகளின் பங்கு 14 சதவீதம். நமது ரத்தம் தண்ணீரைவிட 6 மடங்கு அடர்த்தியானது. ஆண்களின் உடலில் 5.6 லிட்டர் ரத்தமும் பெண்களின் உடலில் 4.5 லிட்டர் ரத்தமும் காணப்படுகிறது. நமது உடலில் உள்ள ரத்த நாளங்களை ஒன்றிணைத்தால் 60 ஆயிரம் மைல்கள் இருக்கும்.

சிறுநீரகம் ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை சுத்திகரிக்கிறது. தினமும் 1.4 லிட்டர் சிறுநீரை வெளியேற்றுகிறது. ஒவ்வொரு மனிதனின் கைரேகையை போலவே கால் ரேகை மற்றும் நாக்குரேகைகள் தனித் தன்மை வாய்ந்தவை.

வாய் விட்டு சிரிங்க சர்க்கரை குறையும்!



பொதுவாக நன்றாக சிரிப்பவர்களுக்கு ரத்த அழுத்தம் வர வாய்ப்பு குறைவு. அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், நல்ல மூடும் உருவாகும். என்றெல்லாம் முன்பே சொல்லப்பட்டன.

இப்போது, டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நன்றாக வாய் விட்டு சிரித்தால், சாப்பாட்டிற்குப் பிறகு ஏறும் குளுக்கோஸின் அளவு குறையும் என்கிறார்கள். இந்நோய் உள்ளவர்களை இரண்டு தனித் தனி நாட்களில் பரிசோதித்துப் பார்த்து, இந்த முடிவை வெளியிட்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் சீரியசான விரிவுரையை கேட்க வைத்திருக்கிறார்கள். இனொரு நாள் நன்றாக வாய்விட்டுச் சிரிக்கும் காமெடி நிகழ்ச்சியில் பங்குகொள்ள வைத்திருக்கிறார்கள். சீரியசான விரிவுரையை கேட்ட நாளை விட, காமெடி நிகழ்ச்சியில் கலந்து வாய் விட்டு சிரித்த நாளில், அவர்களின் குளுகோஸ் அளவு குறிப்பிட்ட அளவு குறைந்திருந்ததாம்.

புரோட்டா சாப்பிடாதிங்க!



தினமும் இரவு பரோட்டா சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்பதி கிடைக்கிறதா? அப்படியானால், ஆபத்தை விலை கொடுத்து வாங்குகிறீர்கள் என்று அர்த்தம். இன்று தமிழகம் முழுவதும் அதிகமாக காணப்படுவது பரோட்டா கடைகள் தான். அந்த பரோட்டாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு! விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா.

பரோட்டா எப்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட கோதுமை பற்றாக்குறையினால் , மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள், தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின. பரோட்டாவும் பிரபலமடைந்தது. மைதா மாவில் உப்பு போட்டு, தண்ணீர் விட்டு உருட்டி ஒவ்வொரு உருண்டையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி , தோசைக்கல்லில் போடுவார்கள்.

இப்போது பரோட்டாவின் மூலப்பொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது. பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பலவகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது. நம் பிறந்த நாளுக்கு கொண்டாட வாங்கும் கேக்கும் இதில் அடங்கும்.
மைதா எப்படி தயாரிக்கிறார்கள்? நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதை பனசாயல் பெரோசிடே (benzoyl  peroxide ) என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள். அதுவே மைதவாகும்.  benzoyl  peroxide நாம் முடிக்கும் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம். இந்த ரசாயனம் மாவில் உள்ள protein  உடன் சேர்ந்து, சர்க்கரை நோய் வர காரணியாய் அமைகிறது. இது தவிர alloxan  என்னும் ரசாயனம் மாவை மிருதுவாக்க, கலக்கப்படுகிறது. artificial  colours, minerals  oils , taste makers preservatives, , sugar, saccarine, ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது. இதில் aloxan  சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவழைக்க பயன்படுகிறது. ஆக பரோட்டாவில் உள்ள alloxen  மனிதனுக்கு நீரழிவு வர துணை புரிகிறது.

மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்ததல்ல.  மைதாவில் நார் சத்து கிடையாது. நார் சத்து இல்லா  உணவு நம் ஜீரண  சக்தியை குறைத்து விடும். எனவே இரவில் கண்டிப்பாய் தவிர்க்கப்பட வேண்டும்.

இதில் சத்துக்கள் எதுவும் இல்லை. குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது. எனவே குழந்தைகள் மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்ணுவதை தவிர்ப்பது நல்லது. சில அயல் நாடுகள் இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன. மைதா உணவுகளை உட்கொள்வதால், சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரழிவு போன்ற நோய்கள் வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு.

Monday, July 11, 2016

மண்டையை பிளக்கும் மைக்ரேன் தலைவலி

மைக்ரேன் இது ஒரு ஸ்பெஷல் தலைவலி. சில காரணங்களால் சிலருக்கு வரும். ஆனால் வழக்கமான தலைவலி போல, எந்த அறிகுறியோ,அடிக்கடி வருவதோ இருக்காது. ஆனால் வந்தால் உயிரே போகும் அளவுக்கு கடுமையாக இருக்கும்.
இந்த தலைவலி வந்தால், அதை அனுபவிப்பவர்கள், தங்களுக்கு எந்த மாதிரியான வலி இருக்கிறது என்று சொல்லவே முடியாமல் தவிப்பர். அப்படி பயங்கரமாக இருக்கும் தலைவலி, அதிலும், தலையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் வலி இருக்கும். சிலருக்கு மணி கணக்கில், நாட்கணக்கில் நீடிக்கும். கண்களில் கருவளையம் கட்டி, கண் பார்வையும் கூட சிலருக்கு பாதிக்கப்படும். எதைப்பர்த்தலும், ஒரு வித எரிச்சல் ஏற்படும். அதனால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கவே விரும்புவர்.

ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் மைக்ரேன் வரும். பெண்களுக்கு அவர்களுக்கே உரிய மாதவிடாய் பிரச்சனைகளால் வரும். ஆண்களுக்கும் அப்படித்தான். தனித்தனி காரணங்கள் உள்ளன. எப்படியிருந்தாலும், நெற்றிப்போட்டில்தான் பலருக்கு வலி அதிகமாக இருக்கும். குடும்பத்தில் தாய் தந்தை என்று யாருக்காவது மைக்ரேன் (migraine ) இருந்தால், கண்டிப்பாக வாரிசுகளில் யாருக்காவது தொடரும். எல்லாருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. யாராவது ஒருவருக்கு வரும். அது மகளாக இருக்கலாம்: மானாகவும் இருக்கலாம் மகளாகவும் இருக்கலாம். சாக்லேட், பாலாடைக்கட்டி என்று சில கொழுப்பு சமாச்சாரங்களை அதிகம் சாப்பிடுவோருக்கு இது வரலாம்.

அலர்ஜி: இப்போதுள்ள வாழ்க்கை முறையில், இளம் தலைமுறையினர் அதிக சத்தம், அதிக ஒளியில் தான் காலத்தைக் கழிக்கின்றனர். அதுவும் மைக்ரேனுக்கு காரணம். வாக்மேன் கருவியில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, டி.வி அதிக ஒலியுடன், அதிக கலர் வைத்து பார்ப்பது போன்றவற்றை, இளைய தலைமுறையினர் இப்போதே நிறுத்துவது நல்லது. இதைவிட, சிலருக்கு சில வாசனைகளால் கூட மைக்ரேன் வரும்.சிலரை பார்த்தால், எந்தவித வசனயாவது முகர்ந்தாலோ காற்றில் வந்ததை சுவசித்தாலோ, அவர்களுக்கு லேசாக தலைவலி வரும். ஆரம்பத்திலேயே அவர்கள் தங்களுக்கு அலர்ஜியான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. 

வந்து விட்டால்... மைக்ரோன் (migraine ) என்று வந்து விட்டால், அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மற்ற தலைவலி போல நினைத்து, கண்ட கண்ட மருந்துகளை கடைகளில் வாங்கி சாப்பிடவோ, மருத்துவ முறைகளை மாற்றவோக் கூடாது. தகுந்த டாக்டரிடம் காட்டி அவரின் ஆலோசனை பேரில், தலைவலி மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். அப்படியிருந்தால், தலைவலி வீரியம் குறையும். சத்தம் இல்லாத, வெளிச்சம் வராத இருட்டறையில் ஒய்வு எடுப்பது தலைவலி கடுமையாக குறைக்கும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் மைக்ரேன் வந்தால், அவர்கள் தங்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்ளவது நல்லது. அதுபோல, ஆண்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றால், அதை விட்டு விடுவது நல்லது.

ஸ்டெம்செல் சிகிச்சை எதிர்கால நம்பிக்கை


அண்மை காலமாக மருத்துவத் துறை வளர்ச்சியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் 'ஸ்டெம்செல்' சிகிச்சையின் மூலம், பல்வேறு நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் மனித உடலில் திசுக்கள் மற்றும் பல்வேறு உறுப்புகளில் ஏற்படும் சேதங்கள் நிரந்தரமாகச் சீரமைக்கப்படுகின்றன.
எலும்பு மஜ்ஜை, கருப்பையில் உள்ள கரு, வெண்படலம், ரத்தம், பல், கலீரல் ஆகியவற்றின் திசுக்களில் இருந்து "ஸ்டெம்செல்"கள்உற்பத்தி செய்யப்படுகின்றன. "ஸ்டெம்செல்" சிகிச்சை, மருத்துவத்துறையில் ஒரு புரட்சியாகவும், மனித வாழ்வுக்கு மறுமலர்ச்சியையும் தந்து, வியத்தகு வளர்ச்சியை அடைந்து  வருகிறது. 
ஸ்டெம்செல்" சிகிச்சை இப்போது நீரழிவு நோய், நிணநீர் மண்டலப் புற்றுநோய், மூளைக்கட்டி இதய நோய், முதுகுத்தண்டுவடப் பாதிப்பு, சிறுநீரகக் கோளாறு, தைராய்டு பிரச்சனை உள்ளிட்ட 85-க்கும் மேற்ப்பட்ட நோய்களுக்கு நிரந்தரத் தீர்வாகப் பயன்படுத்தப் படுகிறது. அடுத்த பரிணாம வளர்ச்சியாக, இப்போது பெண்களின் மாதவிடாய் காலத்தில் வெளியேறும் ரத்தக் கழிவுகளில் இருந்து "ஸ்டெம்செல்"களைப் பிரித்தெடுத்து அதன் மூலம் சிகிச்சை அளிக்கவும் மருத்துவத் துறை பெரும் முயற்சி எடுத்து வருகிறது.

"ஸ்டெம்செல்"  குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையத் தொடங்கியுள்ளது. இதனால் "ஸ்டெம்செல்" களை அதற்குரிய "ஸ்டெம்செல்" வங்கிகளில் சேமித்து வைப்பது அதிகரித்து வருகிறது. இப்போது தொப்புள் கொடியில் இருந்தும், எலும்பு மஜ்ஜையில் இருந்தும் எடுக்கப்படும் "ஸ்டெம்செல்"களைச் சேமித்து வைப்பதே அதிகமாக உள்ளது. இந்த வகை "ஸ்டெம்செல்"களை சேமித்து வைக்க தனியார் "ச்டேம்செல்" வங்கிகள் ரூ . 25 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கின்றன. இக்கட்டணத்தை சில தனியார் "ஸ்டெம்செல்" வங்கிகள், தவணை முறையிலும் வசூலிக்கின்றன. அதேவேளையில் "ஸ்டெம்செல்" மூலம் சிகிச்சை பெறுவதற்குரிய வழி முறைகளையும், வங்கிகளே செய்து கொடுக்கின்றன.

இதன் காரணமாக நடுத்தர மக்களும் "ஸ்டெம்செல்" களை தனியார் "ஸ்டெம்செல்" வங்கிகளிடம் சேமித்து வைக்கும் பழக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன.

"ஸ்டெம்செல்" மூலம் வருங்காலத்தில் மேலும் பல நோய்களுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நிலை ஏற்ப்படும் போது, "ஸ்டெம்செல்" மூலம் இப்போது அடையும் பயனைவிட மக்கள் அடைய முடியும்.

ஆனால் இப்போதுள்ள் சூழ்நிலையில், "ஸ்டெம்செல்" சேமித்து வைக்கத் தனியார் நிறுவங்கள் மட்டுமே "ஸ்டெம்செல்" வங்கிகளை உருவாக்கி வருகின்றன. "ஸ்டெம்செல்" சிகிச்சையளிக்கும் வசதி தமிழகத்தில் 4 மருத்துவமனைகளில் உள்ளது. இதில் 3 மருத்துவமனைகள் சென்னையில் உள்ளது. ஒரு மருத்துவமனை மட்டும் வேலூரில் உள்ளது. 

காதுவலி குணமாக...


இரண்டு கிராம் பெருங்காயத்தை, 
20 மில்லி நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து, 
ஓரிரு துளிகள் காதில் விட்டால், காது வலி குணமாகும்.

இடுப்புவலி நீங்க வழிகள்


  • சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணையைவிட்டு, மீண்டும் கொதிக்க விட்டு, வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளம்சூட்டுடன் இடுப்பில் நன்றாக தேய்த்து வர இடுப்பு வலி நீங்கும்.
  •  வெண்டைக்காய் விதையை சிறிது பார்லி கஞ்சியில்போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும். 
  • உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை சாப்பிட்டு வந்தால், ரத்தக்குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.
  • வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் ஆகாது. காரத்தைக் குறைத்துக் சாப்பிடுங்கள். தேங்காய் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவரா? நீங்கள்



  • பொடி செய்த ஓமத்தை, பாலில் கலந்து வடிகட்டி படுக்கப் போவதற்கு முன் குழந்தைகளுக்கு கொடுத்தால், சளியை தூர விரட்டும். 
  • திராட்சையை பன்னீரில் ஊற வைத்து சாப்பிட்டால் இதயம் பலம் பெரும், தொடர்ந்து திராட்சை சாப்பிடுபவர்களுக்கு நிச்சயம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
  • மாதுளம் பழச்சாறு தினமும் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என, பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
  • குழந்தைகள் ஞாபகசக்தியுடன் இருக்க வேண்டுமானால், தினமும் உணவுக்குப் பின், வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க வையுங்கள். 
  • சின்ன வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்குங்கள்,வெறும் வயிற்றில் தினமும் ஐந்தாறு என்ற கணக்கில், இரண்டு வாரங்கள் சாப்பிட்டு வர, நரம்பு தளர்ச்சி, குணமாகும், உடலும் குளிர்ச்சியடையும்.

எது அசல் தேன்?


அசல் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கேட்டுப் போகாமல் நல்ல நிலையில் அப்படியே இருக்கும். ஆனால் சிலர் சர்க்கரைப் பாகு அல்லது வெள்ளப் பாகுவை தேன் என்று விற்று விடுகின்றனர். நாமும் அதை அசல் தேன் என்று நம்பி விடுகின்றோம்.

அசல் தேன், கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் மூன்று வழிகளில் கண்டறியலாம்.

1) ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடுங்கள்.அந்த தேனை தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும், மேலும் அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

அல்லது அந்த வெள்ளைத் தாள் ஒரு துளி தேனை உறிஞ்சிவிட்டாலோ, பரவ விட்டாலோ அந்த தேன் கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

2) ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன் தண்ணீரில் கரையாமல், நேராக கீழே சென்று விழுந்தால் அது அசல் தேன்.

ஒரு வேலை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்து விட்டால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில், ஒரு துளி தேனை விட்டு, தீப்பெட்டியின் பக்க வாட்டில் உள்ள மருந்துப் பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எறிந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு வேலை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

நீங்க ஹார்ட் பேஷண்டா தினமும் 3 கப் டீ குடிங்க...!

டீ குடித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு

ஹார்ட் பேஷண்ட்...! மனதை நெருட வைக்கும். இந்த பட்டத்தை சுமந்து வாழ பலரும் விரும்ப மாட்டார்கள். நவீன மருத்துவத்தில இதய நோய்க்கு இன்று பல தீர்வுகள் வந்து விட்டன. ஆனால் இந்த சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டால், கட்டாயம் மாத்திரைகளை ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டும். இதனால் தங்களுக்கு இதய நோய் வந்து விட்டதை போல் உணர்கின்றனர்.
ஆனால் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வந்தாலே, இதய நோயை விரட்டிவிடலாம் என்பது தான் லேட்டஸ்ட் மருத்துவம். இதய நோய்க்கு, தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம் என்பது மருத்துவர்கள் கூறும் அட்வைஸ். இதய நோய் வராமல் தடுக்க, நாம் தினமும் குடிக்கும் டீ உதவி செய்கிறது. என்றால் டீ குடிக்க கசக்குமா என்ன? தினமும் 3 கப் டீ குடித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு என், பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனனர். டீ


டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் மேகொள்ளப்பட்டிருந்தாலும், பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ராக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு 70 சதவீதம் குறைவு, என்பது தெரிய வந்துள்ளது. தவிர 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைவு.

Wednesday, July 6, 2016

கிருமிகள் தங்குமிடம்

 house cleaning
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால், அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி, நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க, செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம். வீட்டில் அழுக்குத் துணிகளை நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரு நாளைக்கு ஒரு முறையாவது துணிகளைத் துவையுங்கள். அதோடு உங்கள் வாஷிங் மெஷினையும், சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இதை செய்ய சிறந்த வழி, உள்ளங்கையளவு பிளீச்சிங் அல்லது சுத்தம் செய்யும் பவுடரை அதில் போட்டு சில நிமிடம் ஓட விடுங்கள். இது அதில் சேர்ந்துள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும். மற்றுமொரு பிரச்னை, அழுக்கு டவல்கள். அவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துவைத்து, வெந்நீரில் அலசி கிருமிகளைப் போக்குங்கள்.

வீட்டில் உள்ளோர் அனைவரும், தனித்தனி டவல்களை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை மெத்தை உறைகளை மாற்றுங்கள். மெத்தையில் அமர்ந்து உண்பதை அனுமதிக்காதீர்கள். இது, எறும்பு மற்றும் புழுக்களை ஈர்க்கும். சுத்தம் செய்யும் சானிடைசர் கொண்டு, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சுத்தம் செய்யுங்கள். அலமாரி, கதவுக் கைப்பிடிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யவும் மறக்காதீர்கள். 

சிறிய வேக்யூம் கிளீனர் கொண்டு, கம்ப்யூட்டர் கீபோர்டை சுத்தம் செய்யுங்கள். சமையலறையில் பாத்திரம் கழுவும் இடமும், கிருமிகள் வளரும் இடமும் ஒரே இடமாதலால் அதை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்கள் சமையலறை மேடைக்கும் இது பொருந்தும்.

யோகா தொடங்கும் முன் கவனிக்க வேண்டியவை


 * முதலில் இந்த யோகாசனப் பயிற்சிகளை செய்யும்போது சற்று தடுமாற்றமாக இருக்கும். ஆனால், தொடர்ந்து தினமும் செய்யும்போது, எளிதில் செய்யக்கூடிய அளவுக்கு உடல் வளைந்து கொடுக்கும் தன்மையைப் பெறும்.  

* குளிப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்போ அல்லது பின்போ, யோகாசனம் செய்யலாம்.

* உணவு உண்ட பிறகு யோகாசனம் செய்யக் கூடாது.  காலை உணவு, சிற்றுண்டிக்குப் பிறகு 21/2 மணி நேரம் இடைவெளி விட வேண்டும். மதிய உணவுக்குப் பிறகு, 4 மணி நேர இடைவெளி தந்து யோகப் பயிற்சி செய்யலாம்.

* ஆசனங்களையும், உடற்பயிற்சிகளையும் ஒரே நேரத்தில் செய்யக் கூடாது. உடலைத் தளர்த்தும் பயிற்சிக்குப் பிறகே ஆசனங்களைத் துவங்க வேண்டும்.

* ஆசனங்களின் ஒவ்வொரு நிலையிலும் உடலைத் தளர்த்துவது மிக அவசியம். ஆசனங்களின் உச்ச நிலையிலும் எல்லா இறுக்கங்களையும் அகற்றவும். ஓர் ஆசனத்துக்கும் அடுத்த ஆசனத்துக்கும் இடையில் சில நிமிடங்கள் ஓய்வு எடுக்கலாம்.    

* சுலபமாகக் கால்களை, கைகளை அசைப்பதற்கு வசதியாக உள்ள பருத்தி ஆடைகளை உடுத்துதல் நலம்.

* எந்த ஓர் ஆசனம் செய்த பிறகும், செய்பவர்களின் உடல் புத்துணர்ச்சியுடனும், சுகமாகவும் இருக்க வேண்டும். களைப்படைந்தோ, சக்தி இழந்தோ வியர்த்தோ போகக் கூடாது.

முகத்தை ஜொலிக்க செய்யும் மாஸ்க்



• ஒரு தேக்கரண்டி வெள்ளிக்காய் விழுது, ஒரு தேக்கரண்டி கடலை மாவில் தயிர், சிறிதளவு தேன் மற்றும் பன்னீரை கலந்து முகத்தில் தடவி வந்தால், சருமத்தின் இறுக்கம் குறைந்து இலகுவாகி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

• நன்குக் காய்ச்சியப் பாலில் இருந்து எடுக்கப்பட்ட பாலாடையை இரவு தூங்குவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பு மாஸ்க் போல முகத்தில் உபயோகப்படுத்தி பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

• தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முல்தானி மெட்டியை பன்னீரில் கலந்து முகத்தில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நாளில் முகம் கழுவி வந்தால் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள் படிப்படியாக குறைந்துவிடும்.

நாடி சுத்தி விளக்கம்

நமது சுவாசத்தை நெறிப்படுத்தி, நமக்கு நிறைந்த உயிர் கொடுத்து நமது பிராணனாகிய உயிரை உயர்த்தி வளப்படுத்துவதற்க்கு, நமது மூச்சுக் காற்றோடு தொடர்புடைய உள் இழுக்கும் மற்றும் வெளியே தள்ளும் இயக்கங்களை மேம்படுத்தி வைப்பதற்காக மனிதர் யாருக்கும் எவருக்கும் ஏற்றவகையில் சில வகையான மூச்சுப்பயிற்சி முறைகளை நமது சித்தர் பெருமக்கள் கண்டறிந்து போதித்தனர்.

இவை 1. நாடிசுத்தி 2. ஜீவசுத்தி 3. பிராணசுத்தி 4. பந்தனசுத்தி 5. கண்டசுத்தி 6. சோஹம்சுத்தி என்பனவாகும்.

இவை அனைத்தும் உள்ளிளுக்கும் இயக்கம், வெளித்தள்ளும் இயக்கம் ஆகிய இருவகை இயக்கங்களை மேம்படுத்துபவை ஆகும். என்பதை நாம் உணரவேண்டும். இந்த ஆறுவகை மூச்சுப் பயிற்சிகளும், பிராணாயாமம் என்ற அதி உன்னதமான உயிர்க்கலைக்கு அடிப்படைப் பயிற்சிகளாகும்.

நாடிசுத்தி செய்யும் முறை:-

பத்மாசனத்தில் அமரவேண்டும். பத்மாசனம் சரியாக வராதவர்கள் வஜ்ராசனத்தில் அமரலாம். இடது பக்க நாசித்துளையை இடதுகைக் 
கட்டைவிரலால் மூடிக்கொண்டு, வலதுபக்க நாசித்துளை வழியே முதலில் உள்ளேயிருக்கின்ற காற்றை (கொஞ்சமாக இருந்தாலும்) சுத்தமாக வெளியேற்ற வெண்டும்.

வலது நாசித்துளை வழியே காற்றை வேகமாகவும் இல்லாமல், ரொம்ப மெதுவாகவும் இல்லாமல் ஒரு நிதானமான கதியில் காற்றை உள்ளே இழுக்கவேண்டும்.

நுரையீரல் காற்றால் நிறைந்ததும் இடதுகை நடுவிரலாலோ அல்லது ஆள்காட்டி விரலாலோ வலதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு, இடதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வேண்டும்.

இப்போது இடதுபக்க நாசித்துளை வழியே காற்றை நுரையீரல் நிரம்புமளவுக்கு இழுத்துக்கொண்டு, இடதுபக்க நாசித்துளையை மூடிக்கொண்டு வலதுபக்க நாசித்துளை வழியே காற்று முழுவதையும் வெளியேற்ற வெண்டும்.

இது ஒருசுற்று நாடிசுத்தி ஆகும். இவ்வாறு குறைந்தது பத்துச் சுற்றுக்கள் முதல் இருபது சுற்றுக்கள் வரை செய்யலாம். பயிற்சியாளர் விரும்பினால் மேலும் பத்துச் சுற்றுக்கள் கூடுதலாகவும் செய்யலாம்.

திராட்சையால் தீராத நோய் எதுவும் இல்லை!



grapesதிராட்சை பழத்திலும், அதன் விதையிலும் உடலுக்கு பயன் தரும் பல நல்ல சத்துக்கள் உள்ளன. எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் உண்டு. சரியாக பசி இல்லாமல், வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள், கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தினால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.

பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதம். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு நல்லது. அரை டம்ளர் சாறில், சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றை, தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.

இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற, முதலில் வயிற்று புண்ணை ஆற்ற வேண்டும். எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு, கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து தொடர்ந்து காலை, மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தால் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான காபியில், அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.

தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக பிளந்து, ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்து விட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம்பழத்தை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலச்சிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வராது.

திராட்சை விதை சாற்றை, இயற்கை உணவு என ஜப்பான் அங்கீகரித்துள்ளது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் -இ பாதுகாப்பில், மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட, திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு, அருமருந்தாக பயன்படுகிறது. ரத்தக் குழாய் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சை பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.

ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது. சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்ய பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி, கண்களில் ஒளியைத்தருகிறது. பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகளிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.

கத்தரிக்காய் வதக்கல்

 கத்தரிக்காய் வதக்கல்
தேவையான பொருட்கள் :

வெங்காயம் - 200 கிராம்
சிறிய கத்தரிக்காய் - 250 கிராம்
இஞ்சி பூண்டு விழுது - 2 ஸ்பூன்
மிளகு தூள் - 2 ஸ்பூன்
தனியா தூள் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
ப. மிளகாய்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு
 
செய்முறை :

* கடாயில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை போட்டு வதக்கி இஞ்சி பூண்டு விழுது போட்டு  வதக்கவும்.

* அடுத்து கத்தரிக்காய், தேவையான அளவு உப்பு போட்டு காய் நன்கு வேகும் வரை வதக்கி மிளகாய்தூள், மஞ்சள் தூள், தனியா தூள், மிளகு தூள், ப. மிளகாய், கொத்தமல்லி இலை போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

* அடுப்பை மிதமான தீயில் வைத்து எலுமிச்சை சாறு பிழிந்து சிறிது நேரம் கிளறவும்.

* கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.