Friday, January 31, 2014

அத்தி பழம் பயன்கள்

அத்திப் பழங்கள் பழமாகவும், உலர் பழமாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்திப் பழம் என நாம் பார்க்கக் கூடியது உண்மையான பழமல்ல. அது பூவேயாகும். அத்திமரத்தில் விநோதமான பூவும் விதைகளும் சேர்ந்தே பழம் எனும் ஒரு தோற்றத்தை தருகின்றது. அத்திப் பழங்கள் 6 - 8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. பெரிய முட்டை வடிவிலான இலைகள் இருக்கும். அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது  Racemosa எனவும் தாவரவியலில் திகழ்கின்றது.

அத்திப் பழத்தின் சத்துகள்

அத்திப் பழங்களில் 84% பழக்கூடும் 16% தோலும் இருக்கும். அத்திப் பழங்களில் புரதம்-4 கிராம், கால்ஷியம்-200 மி.கி, இரும்பு-4 மி.கி, வைட்டமின்-100 ஐ.யு, தயாமின்-0.10 மி.கி, கலோரி அளவு-260 ஆகியவை 100 கிராம் அத்திப் பழத்தில் அடங்கியவையாகும். உலர்ந்த அத்திப் பழங்களில் அதிக நார்ச்சத்து இருக்கும். குறைவான நீர்ச்சத்து இருக்கும். அத்திப்பழங்களில் வேறு எந்தப் பழத்திலும் இல்லாத அளவு கால்ஷியம் சத்தும், நார்ச்சத்தும் உள்ளது.

அத்தியின் மருத்துவப் பயன்கள்

அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants  உள்ளன. அத்திப் பழம் அதிக போஷாக்கு அளிக்கக் கூடியது அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும். உலர்ந்த அத்திப் பழங்களை தேனில் ஊற வைத்து சாப்பிட்டால் அளவற்ற போஷாக்கை பெறலாம். உலர்த்திப் பொடி செய்து ஒரு ஸ்பூன் வீதம் பாலில் போட்டும் சாப்பிடலாம்.


அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.

அத்திப் பழம் சீரண சக்தியை தூண்டும். தினசரி சாப்பிட்டு வர ஆரோக்கியம் பெருகும். உடல் உஷ்ணத்தை தணிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண் போன்ற உஷ்ண உபாதைகள் அகலும். அத்திப் பழம் உடலுக்கு குளிர்ச்சியூட்டக் கூடியது. பெண்களின் வெள்ளை படுதலையும் போக்கிடும். நாட்டு அத்தியின் பாலை, மரு, மூலம் போன்றவற்றில் போட்டு வர அவை சுருங்கி விடும். உபாதைகள் குறையும். அத்தி மரத்தை வெட்டினால் பால் வடியும் இது துவர்ப்பு மிக்கதாகும். அடிமரத்தின் கீழ் வேரைப் பறித்து வேரின் நுனியைச் சீவி விட்டால் பால் வடியும். இதுவே அத்தி மரத் தெளிவாகும். தெளிந்த இந்த நீரை தினமும் 300 மி.லி வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீரிழிவு குணமாகும்.

Wednesday, January 29, 2014

Banana Cream

Banana Cream

Time of preparation :     20 Minutes
Serves :     4

Ingredients    


8 Ripe Bananas.
1 Cup Cream.
1/3 Cup Sugar.
12 Shortbread Biscuits.   

Method of cooking
    
Peel And Mash 4 Bananas In A Bowl.
Add Cream And Sugar, And Mix Well.
Crush 8 Biscuits And Divide Among 4 Parfait Glasses.
Peel And Slice Remaining Bananas, And Place On Top Of Biscuits Reserving 4 Slice For Decoration.
Pour Banana Cream Mixture On Top And Decorate Each Glass With A Whole Shortbread Biscuits And A Slice Of Banana.

Method of Serving      
Serve Hot.

Tuesday, January 28, 2014

பிரசவத்திற்கு பின் குண்டாகாமல் இருக்க

 பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாயாவது. தாய், சேய் இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிக்கு தரும் கவனம் குழந்தை பிறந்த பின்னும் தொடர வேண்டும். பிரசவத்துக்குப் பின் பெண்கள் குண்டாகி விடுவது சகஜம். அதை தவிர்க்க வேண்டும்.

பிரசவத்துக்கு பின் பெண்கள் குண்டாவதற்கு முதல் காரணம் - "நார்மல்" பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக கொழுப்பு, ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் தருவது. குழந்தை பிறந்திருப்பதால் ஏற்பட்ட பலவீனத்தை போக்க இது தான் வழி என்று பெற்றோர்கள் அதிக ஊட்டச்சத்து உணவை பிரசவமான பெண்களுக்கு திணிக்கிறார்கள். சில பெண்கள் பிரசவத்துக்குப் பின் "ஒய்விலேயே" இருக்கின்றனர். பிரசவத்திற்கு பின்னும் லகுவான, சிரமமில்லாத உடல் உழைப்பு (அல்லது) உடற்பயிற்சி தேவை. இதை தாயின் பெற்றோர் கவனிக்க வேண்டும். நமது நாட்டில், பிரசவமான பெண்ணை வீட்டில் வேலை செய்யவே மற்ற குடும்பத்தினர் விடவே மாட்டார்கள். இந்த அதீத அன்புத் தொல்லையால் உடல் எடை கூடும்.

"சிசேரியன்" செய்து பிரசவித்த பெண்களால் உடனடியாக நார்மல் செயல்களை செய்ய முடியாது. உடற்பயிற்சியிலும் ஈடுபட இயலாது. அதனால் அவர்களின் கர்பப்பை நார்மல் நிலைக்கு சுருங்குவது தாமதமாகும். இதனால் அடிவயிறு பெருத்து விடும். கூடவே போஷாக்கான, கொழுப்பு / இனிப்பும் சேர்ந்த உணவுகளும் கொடுக்கப்படுகின்றன. இதனால் 'ஓபிசிடி' உண்டாகும்.

சில பெண்கள், பிரசவ காலத்தில் ஏற்படும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் இவற்றால் மனோரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எல்லோரிடமும் எரிந்து விழுதல், அநாவசியமாக கோபப்படுதல் போன்ற குணமாற்றங்கள் ஏற்படுவது அதிசயமல்ல. பிரசவ பாதிப்புகளில் இதுவும் ஒரு அங்கம். மனபாதிப்பினால் இத்தகைய பெண்கள் அதிகம் உண்ணத் தொடங்கி, உடல் எடையை கூட்டிக் கொள்கின்றனர்.

ஆயுர்வேத சிகிச்சை முறைகள்

1. உணவு கட்டுப்பாடு - உங்களின் செல்லக் குழந்தை பிறந்த பின் ஏறும் எடையை குறைக்கலாம். அதற்கு முதல் தேவை "பத்தியம்" அல்ல. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு சத்தான உணவு தேவை. எனவே அவசரப்பட்டு "டயட்" டில் இறங்கி விடாதீர்கள். உங்கள் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தேவையின்றி "எக்ஸ்ட்ரா" கலோரிகளை ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

2. நிறைய தண்ணீர் குடிக்கவும். உணவுடனும் குடிக்கவும். தண்ணீர் அதிகமாக குடிக்க, உணவு குறைவாகும்.

3. உணவில் நார்ச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து சாப்பிட்ட பின் சர்க்கரை உட்கிரகிக்கப்படுவதை தாமதப்படுத்தும். நார்ச்சத்தினால் வயிறு சீக்கிரமே நிறைந்தது போல் உணர்வீர்கள். பழங்கள், காய்கறி, பீன்ஸ், பழுப்பு அரிசி (கைக்குத்தல் அரிசி, முழுத்தானியங்கள், பார்லி, ஓட்ஸ்) முதலியவை நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்.

4. சர்க்கரையை கூடிய வரையில் தவிர்க்கவும். சர்க்கரையில் எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லை. சர்க்கரைக்கு பதில் தேனை பயன்படுத்தலாம்.

5. கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.

6. உணவு உண்ணும் போது நன்றாக மென்று விழுங்கவும்.

7. ஆயுர்வேதம் தாய்க்கும் சேய்க்கும் ஏற்ற வாசனை திரவியங்கள் கலந்த உணவை வலியுறுத்துகிறது. உணவுகள் புதிதாக தயாரிக்கப்பட வேண்டும். ஈரப்பசை உடையதாக இருக்க வேண்டும். இளம் சூட்டுடன் பரிமாறப்பட வேண்டும். சீரகம், கருஞ்சீரகம், இஞ்சி, கடுகு, துளசி, மஞ்சள், வெந்தயம், இலவங்கப்பட்டை, பூண்டு (வறுத்து உபயோகிக்க வேண்டும் பச்சையாக அல்ல) முதலியவை உணவில் இடம் பெற வேண்டும். மாமிசம் இரு வாரங்களுக்கு ஒரு முறை போதும். காப்பி, டீ, வெள்ளை சீனி, பச்சை காய்கறிகள், உலர்ந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.

8. காய்கறிகளின் பயன்கள் கரட், தக்காளி வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெற உதவும் காய்கறிகள்.
பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள், தர்பூசணி போன்றவை உடலின் கொழுப்பை கரைக்கின்றன.

9. நெய்யை தவிர்க்காதீர்கள். சிறிதளவு பசுநெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. உணவைத் தவிர நிறைய இளம்சூடான சுத்தமான தண்ணீர், கொதிக்க வைத்து இளம் சூட்டுக்கு ஆறின பால் இவற்றை நாள் முழுவதும் குடித்து வரலாம்.இதர டிப்ஸ்

1. இளம் சூடான நல்லெண்ணையால் உடல் மசாஜ் செய்து கொண்டு குளிப்பது நல்லது.
2. ஒரு பருத்திப் புடவை எடுத்து வயிற்றை சுற்றி இறுக்கமாக கட்டிக் கொண்டால் வாயு சரிநிலையில் இருக்கும். வயிறு சாதாரண நிலைக்கு திரும்பும். இதை 42 நாட்கள் செய்யவும். தற்போது இதற்கென பிரத்யேக பெல்ட்டுகள் கிடைக்கின்றன.
3. ஆயுர்வேத திரிபால கஷாயம் உடல் எடை குறைய உதவும். 20 கிராம் த்ரிபாலா சூரணத்தை 200 மி.லி. நீருடன் கலந்து, நீர் 50 மி.லி. அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சவும். வடிகட்டி தேன் சேர்த்து பருகவும்.
4. கடுக்காய் வயிற்றை சுத்திகரிக்கும் குணமுடையது. உடல் கொழுப்பையும் குறைக்கும். கடுக்காய் தோலின் பொடியை 1 டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் படுக்கும் முன்பு எடுத்துக் கொள்ளவும்.

கடைசியாக, லேசான உடற்பயிற்சி எடை குறைக்க மிகவும் உதவும். இதை டாக்டரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.

உலர்ந்த திராட்சை மருத்துவப் பயன்கள்

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சையில் பொட்டாசியம் மாங்கனிஸீம் உள்ளன. அதனால் திராட்சை அமிலத்தன்மை கொண்ட உணவாகிறது. அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை திராட்சை காரத்தன்மையாக (Alkaline) மாற்றவல்லது. உணவின் அதிக அமிலத்தன்மை, சருமநோய்கள், கட்டிகள், ஆர்த்தரைடீஸ், கவுட், முடி இழப்பு, இதய நோய்கள் முதலியவற்றை உண்டாக்கும்.

திராட்சையில் உள்ள கால்சியம் எலும்புகள், பற்கள் இவை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆஸ்டியோத பொராசிஸ் (Osteo porosis) எனும் எலும்பு பலவீனம், உலர் திராட்சையில் உள்ள போரான் (Boron) தாதுப்பொருளால் குறைக்கப்படுகிறது.

ரத்த சோகைக்கு உலர் திராட்சையில் உள்ள செம்பு, இரும்பு, விட்டமின் பி12 நல்லவை. இவை ரத்தம் உண்டாக உதவுகின்றன.

உலர் திராட்சையில் உள்ள Polyphenolic phyto - nutrients என்ற சத்துக்கள் பேக்டீரியா உள்பட எல்லா தொற்று நோய்களிலிருந்து உடலை காப்பாற்றுகிறது.


Free radical உடலை காப்பது உலர் திராட்சையின் ஆன்டி- - ஆக்சிடான்ட் குணங்கள் தான். கண்புரை, குருடு - இவைகள் தவிர்க்கப்படுகின்றன.

குழந்தை உண்டாக உதவுகிறது உலர் திராட்சை. இதில் உள்ள ஆர்ஜினைன் (Arginine) என்ற அமினோ அமிலம், பாலியல் பலவீனத்தை போக்கி பாலியல் ஆர்வத்தை தூண்டும்.

பொதுவாக குழந்தைகளுக்கு (ஏன், பெரியவர்களுக்கு கூட) இனிப்புகள் சாப்பிட்டால் பற்களில் சொத்தை உண்டாகும். உலர் திராட்சை இனிப்பானாலும் பற்களை பாதிக்காது. அதில் உள்ள ஓலியோநாலிக் (Oleanolic) அமிலம் பற்களை பற்சிதைவு, சொத்தை, ஈறுநோய்கள் முதலியவற்றிலிருந்து காப்பாற்றுகிறது.

உலர் திராட்சையில் ஃப்ரூக்டோஸ் (Fructose) மற்றும் குளூகோஸ் (Glucose) அதிகமாக உள்ளது.

மேலும் உலர் திராட்சை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். புற்றுநோயை தடுக்கும்.

உலர் திராட்சையில் விட்டமின் 'சி' மிகவும் குறைவு.

குன்றாத இளமையைத் தரும் கற்றாழை

சோற்றுக் கற்றாழை
கற்றாழை என்றும், சோற்றுக் கற்றாழை என்றும் அழைக்கப்படும் மூலிகை சரித்திர புகழ் பெற்றது. உலகெங்கும் அறிந்த மூலிகைகளில் ஒன்று. நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் கற்றாழைக்காக அந்த காலத்திலேயே 'போர்' நடந்திருக்கின்றது. மாவீரன் அலெக்சாண்டரின் கருவான அரிஸ்டாடில்' கற்றாழை போர்வீரர்களுக்கு ஏற்படும் புண்கள், காயங்களை உடனடியாக ஆற்றி விடும் ஆற்றல் படைத்தது என்பதை தெரிந்து, அலெக்சாண்டரை கிழக்கு ஆப்ரிக்க தீவான சாக்கோர்டோ (Socorto) மீது படையெடுக்க தூண்டினார். ஏனென்றால் இந்த தீவில் அபரிமிதமாக விளைந்திருந்த கற்றாழையை கைப்பற்றத்தான்! அரிஸ்டாடில் பிறகு கற்றாழையை உபயோகித்து, போர் வீரர்களின் காயங்களை அகற்றிக் காட்டினராம்.

உலகெங்கும் மூலிகை பொருட்களை அதிகம் பயன்படுத்தும் விருப்பம் அதிகரித்து வருகிறது. மருந்தாகட்டும் இல்லை அழகுப்பொருள் சாதனமாகட்டும் கற்றாழை இன்று வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.நம் நாட்டு சித்தர்கள் கற்றாழை குன்றாத இளமையை தருவதால் இதை 'குமரி' என்று குறிப்பிடுகின்றனர். உலகப் பேரழகிகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் 'கிளியோபாட்ரா' வால் புகழப்பெற்றது கற்றாழை!

விஞ்ஞான ரீதியாக கற்றாழையின் பெயர் Aloe Barbadensis வட ஆப்ரிக்காவில் முதன் முதலாக பயிரிடப்பட்டது. ஆங்கிலப் பெயர் Aloe vera இதில் உள்ளவை

அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், என்சைம்கள் (Enzymes).

சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின் சில குறிப்பான அணுக்கூறுகள் (Molecules) உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில Receptor (விரும்பி வரவேற்கும்) களுக்கு மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகின்றது. முக்கியமாக Phagocytes எனப்படும் நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றது. இதனால் உடல் பல விதத்தில் சுத்தீகரிக்கப்படுகின்றது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றது.

கற்றாழை சாறு பற்றிய விளம்பரங்கள் வெகுவாக இப்போது வருகின்றன. இதில் ஒரு விதமான கொழுப்பும், நாற்றமும் இருப்பதால் உணவாக சேர்த்துக் கொள்வது கடினம். அதனால் சுவையூட்டப்பட்ட Ready made ஜுஸாக கற்றாழை கிடைக்கின்றது. இதன் சாறு நல்ல டானிக், வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அடங்கியது.

வீட்டில் தயாரிக்க வேண்டுமென்றால் மடல்களை 10 முறை தண்ணீரில் கழுவி உலர்த்தி, பொடி செய்து, தினசரி இரு வேளை அரை ஸ்பூன் அளவு வெந்நீருடன் அருந்த, மலச்சிக்கல் நீங்கும், மூல வியாதிக்கு நல்லது. காயங்கள், தீப்புண்கள், இவற்றுக்கு கற்றாழையை வெட்டி அதன் 'ஜெல்' (Gel) எடுத்து அப்படியே பூசிட காயங்கள் ஆறும், வடுவும் வராது.

தேங்காய் எண்ணெய்யுடன் இதன் சாற்றை காய்ச்சி, வாசனை திரவியங்கள் சேர்த்து, 15 நாள் வெய்யிலில் வைத்து தலைக்கு உபயோகிக்க, தலைமுடி செழித்து வளரும்.

சோரியாசிஸ், எக்சிமா போன்ற பல சர்ம வியாதிகளுக்கு கற்றாழை 'சோறு' நிவாரணமளிக்கின்றது. எரிச்சல், அரிப்பு இவற்றை நீக்குகின்றது. மேலை நாடுகளில் தயாராகும் பல வித அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை இல்லாமல் இல்லை. தோலை மிருதுவாக்கி இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை புதுப்பிக்கின்றது.

வாய், பற்களின் சுகாதாரத்திற்கு Mouth Wash ஆகவும் கற்றாழை தயாரிக்கப்படுகிறது. கற்றாழையில் "குழம்பு" (Pulp) வயிற்றுப் புண்கள், கல்லீரல் நோய்கள் (Cirrhosis), ஆர்த்தரைடிஸ், மூட்டுவலி இவை வராமல் தடுக்கின்றது. வலியுள்ள மூட்டுக்களில் கற்றாழை சாற்றை தடவலாம்.

சித்த வைத்தியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கும், ஆண் தன்மை நீடிப்பதற்கும், கற்றாழை பயனா கின்றது. ஹோமியோபதி முறையிலும் கற்றாழை அருமருந்தாக பயன்படுகின்றது.

இதன் பயனை அடைய தினமும் ஒரு டீஸ்பூன் கற்றாழை சாற்றை குடிக்க ஆரம்பிக்கவும். நாளாக இதை 2 (அ) 4 டேபிள்ஸ்பூனாக (தினசரி) அதிகரிக்க வும். மூன்று மாதம் குடித்தால் உங்கள் சக்தி பெருகும். இந்த மருத்துவ பயன்களை தவிர, கற்றாழை நார் துணிகள் நெய்ய பயன்படுகின்றது! எனவே கற்றாழை பயிரிடுவது நல்ல பணம் தரும் விவசாயமாகிவிட்டது. வீட்டில் முதலுதவிக்காக நீங்களும் மண் தொட்டியில் கற்றாழையை வளருங்கள்!

Saturday, January 25, 2014

Adai


Time of preparation :     2 Hours 20 Minutes
Serves :     4

Ingredients:     

1 Cup Channa Dal
1 Cup Tuvar Dal
1/4 Cup Urad Dal
1/4 Cup Moong Dal
1/4 Cup Rice
1/2 Cup Grated Coconut
2 Green Chilies
4 Red Chilies
1'' Ginger
Salt to Taste
1/2 Cup Chopped Coriander
8 Curry Leaves
Oil

Method of cooking:    

Soak dals together and rice separately for 2 hours.
Grind rice, chilles, curry leaves and ginger together.
Add dals and grind again.
Add salt, coriander and coconut and mix well, Heat a griddle and pour some batter and spread in a circular motion.
Spread one spoon of oil around the dosa and cook both sides.

Method of Serving:     
Serve Hot.

Friday, January 24, 2014

க்ரீன் டீயின் நன்மைகள் (GreenTea -Health Benefits)

Green Tea

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

* இதய நோய் வராமல் தடுக்கிறது.


* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

* பருக்கள் வராமல் தடுக்கிறது.

* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

குழந்தைகளின் உயரம் & எடை

AGE (years) MALE (HT) FEMALE (HT) MALE(WT) FEMALE(WT)       

Masala Vada

Time of preparation : 30 Minutes
Serves :     6

Ingredients:     

    1 Cup Yellow Gram 'Chana' Dak
    1/2 Cup Onion Finely Chopped
    1/2 Cup Coriander Finely Chopped
    1/2 Cup Dill Leaves Finely Chopped
    3-4 Green Chillies Finely Chopped
    1/2 Tsp. Cumin Seeds
    Oil O Deep Fry   

Method of cooking:   

Wash And Soak Dal For 3-4 Hours, Keep 2 Tbsp. Dal Aside, Grind The Rest, Coarsely.
Mix All Other Ingredients, Including Whole Dal. Add 2-3 Tbsp. Hot Oil To The Mixture.
Heat Oil, Make Pattie Shaped Rounds With Moist Palm.Let Carefully Into The Hot Oil.
Fry First One Side Then The Other Till Golden Brown.


Method of Serving    
Serve Hot With Green Chutney, Tamarind Chutney, Or Ketchup     

Thursday, January 23, 2014

Home Remedies To Cure Dandruff

 • The Use Of Fenugreek Seeds Is One Of The Most Important Remedies In The Treatment Of Dandruff.
 • A Valuable Prescription For Removal Of Dandruff Is The Use Of Green Gram Powder. The Hair Should Be Washed Twice A Week With Two Tablespoons Of This Powder Mixed With Half A Cup Of Curd.
 • Create A Mixture Of Curd, Lime Juice, Cider, Vinegar, And Amla Juice And Apply To Hair.
 • Apply Warmed Coconut Oil With The Juice Of Two Lemons, And Leave In Hair For Two Hours Before Shampooing Out.
 • Exposure Of The Head To The Rays Of The Sun Is Also Useful Measure In The Treatment Of Dandruff.
 • Rinse The Hair After Soaking Some Neem Leaves In Water And Then Filtering.
 • Soak Two Tablespoons Of Fenugreek ‘Methi’ Seeds In Water Overnight. Grind Into A Fine Paste In The Morning, Apply On The Scalp And Leave For Half An Hour. Wash Off, Preferably With A Soap-Nut ‘Ritha’ Solution. Use The Water In Which The Seeds Were Soaked As An After-Shower Hair Tonic. Follow This Regimen Twice A Week For The First Two Weeks And Once A Week For Another Two Weeks.
 • Squeeze A Teaspoon Of Fresh Lime Juice Into The Last Rinse While Washing Your Hair.
 • Make A Paste Of Lemon Juice And Fuller's Earth And Apply This Mixture To The Scalp Once A Week.
 • Keep Curd In The Open For Three Days And Massage Your Hair With It For Half An Hour Before Washing.
 • Mix Cider Vinegar With Equal Quantities Of Water And Dab Onto The Scalp With Cotton Wool Before Washing.
Prevention Of Dandruff:
 • Washing Your Hair At Least Three Times A Week.
 • Avoiding The Use Of Chemicals On The Scalp, Such As Those Used In Hair Colouring.
 • Making Sure That You Have Enough Vitamins Such As Zinc, Beta-Carotene, B6, B12 And Selenium In Your Diet.
 • Regular Daily Brushing.
 • Sunlight May Be Good For Dandruff. But Because Exposure To Ultraviolet Light Damages Your Skin And Increases Your Risk Of Skin Cancer, Don't Sunbathe.

Natural Homemade Dandruff Remedies

 • Add Six Spoonfuls Water, Two Spoonfuls Pure Vinegar And Apply It On The Scalp With Cotton Wool Before Going To Bed. Tie A Towel Around Your Head To Protect The Pillow. Wash Your Hair Next Morning. After Shampooing, Rinse Again With Vinegar Water. Continue This Once A Week For At Least Three Months.
 • Mix A Spoonful Of Lemon Juice With Two Spoonfuls Of Vinegar And Massage On The Scalp. Wash Your Hair With An Egg Shampoo After This.
 • Soak Fenugreek 'Methi' Seeds In Yogurt Overnight And Apply The Curd On Your Scalp For Half An Hour Before Washing In The Morning.
 • Hair Washed With Methi Seed Paste Prevents Dandruff, Falling Hair, Baldness And Dandruff Keeping The Hair Long, Healthy And Black. Just Soak The Fenugreek Seeds Overnight In Water To Soften The Seeds And Grind In The Morning To Make Paste. Before Hairwash, Apply This Paste On Scalp And Hair And Leave It On For Half An Hour. Wash Off With Shampoo Later.
 • Beat Two Eggs And Add Two Tablespoons Of Water To It. Wet The Hair And Apply The Egg Mixture Over The Hair. Now Massage Your Scalp And Let The Mixture On For Ten Minutes To Fifteen Minutes. Then Rinse The Hair With Lukewarm Water. This Will Keep Both Dandruff And Hairfall Problem Away From You.
 • Soak A Few '4-5' Tablets Of Camphor In Your Hairoil 'Coconut' To Keep Away Dandruff And Lice.
 • To Get Rid Of Dandruff Apply The Following Mixture Of Once Or Twice A Week. Keep For 20-25 Minutes Before Washing Off With A Mild Soap Or Shampoo. Warm Together, 1 Tbsp. Curds, 2 Tsp. Oil And 1 Tsp. Lemon Juice.

 • Mix Equal Amounts Of Dried Shikakai, Amla And Ritha. Grind It. Add Some Water And Soak This Mixture Over Night. Next Day Sieve It And Use It To Wash Hair.
 • Take 2 Tbsp. Of Beetroot Juice And Add 1 Egg And 1 Tspn Limejuice To This. Apply And Leave For 1/2 Hour Before Washing.Oil Hair Well Before Going To Bed. Next Morning Mix 1 Tspn Limejuice With 1/2 Tspn Salt. Rub This On The Scalp With The Peel Of A Lime Turned Inside Out. Leave For 1 Hour Before Shampooing.
 • Natural-Homemade-Dandruff-Remedies
 • Infuse 2 Tbsp. Of Fresh Or Dried Rosemary And Sage In 1 Gallon Of Water For 24 Hours. Use Daily As A Hair Rinse To Control Dandruff.
 • Mix The Olive Oil With The Almond Oil. Apply And Leave It On About 5 Mins After It Starts To Burn. Rinse Well To Clear Dandruff.
 • Massage Your Hair With Warm Coconut Oil And Apply The Juice Of Two Lemons, Leave The Oil On For About 2 Hours. Shampoo With A Mild Shampoo. Repeat 2-3 Times A Week. Repeat Till Dandruff Goes.
 • Crush A Tablespoon Of Fenugreek Seeds In About 5 Tablespoons Of Warm Coconut Or Olive Oil. It Would Be Better To Boil Them In The Oil. Cool The Mixture And Apply Generously All Over The Scalp. Leave It On For Two Hours. Rinse And Wash Off.
 • Mix 1 Tblspn Of Olive Oil With 1 Tspn Of Lime Juice. Apply Well On The Scalp And Cover The Head By Tying An Old Scarf. Keep It On Overnight And Shampoo The Next Morning.
 • 1 Tspn Of Fenugreek Seed Powder Mixed With An Egg. Apply And Leave For 1/2 An Hour Before Shampooing The Hair.
 • 1 Tspn Fenugreek Seed Powder Mixed With 1 Cup Of Yogurt. Apply And Leave For 1/2 An Hour Before Washing.
 • Soak Two Tablespoonfuls Of Fenugreek Seeds Overnight In Water. In The Morning The Softened Seeds Are Ground Into Fine Paste And Applied On The Scalp, Left On For 1/2 Hr. Good To Avoid Dandruff.
 • About 10-15 Minutes Before You Wash Your Hair, Rub A Lot Of Aloe Vera Gel Into Your Scalp. Leave It On For 10 Minutes, And Shampoo Your Hair Like You Regulary Do. If You Do This Everyday The Dandruff Will Stay Away.

Home Remedies For Dandruff

 • Soak 2 tablespoon fenugreek seeds, methi dana in water overnight. In the morning grind into a fine paste. Apply all over scalp and leave for ½ an hour. Wash with Shikakai or mild shampoo.   
 • Boil a handful of neem leaves in 4 teacups of water. After cooling and filtering use for rinsing hair.
 • To treat dandruff, mix 1 tbsp of lemon juice and 2 tbsp of coconut oil and massage it into the scalp. Leave it on for about 2 hours, then wash your hair with warm water. Dry it well with a soft towel before brushing the hair.
 • Keep the rice water also called kanji after straining the cooked rice. If kept overnight and applied on the scalp next day, it will remove dandruff from the hair.

home remedies for dandruff

 • Put About 21 Leaves Of Tulsi And 10 Gms. Of Amla Powder In A Big Bowl. Add A Little Of Water To Make A Paste Of It. Apply It Evenly On Your Head And Allow It To Dry. Then Wash It With Cold Water. This Will Prevent Hair Loss And Clear Dandruff Also.
 • Mix Equal Quantities Of Dried Curry Leaves Lime Peel, Shikakai, Fenugreek Seeds And Green Gram ‘Moong Saboot’ And Grind Them Finely. Store And Use As A Substitute For Soap Or Shampoo.
 • Apply Fenugreek Seeds, Grind With Some Water And Paste It On The Head. Allow It To Soak At Least For 40 Minutes Before Washing. Use Every Morning For A Month.
 • Soak 2 Tablespoon Fenugreek Seeds In Water Overnight. In The Morning Grind Into A Fine Paste. Apply All Over Scalp And Leave For 1/2 An Hour. Wash With Shikakai Or Mild Shampoo.
 • Boil A Handful Of Neem Leaves In 4 Teacups Of Water. After Cooling And Filtering Use For Rinsing Hair.
 • Fresh Limejuice Is Considered Valuable As A Part Of Home Remedy For Dandruff. All You Need To Do Is To Apply 1 Tsp Limejuice On Your Scalp For The Last Rinse. It Will Not Only Aid In Removing Stickiness And Getting Rid Of Dandruff, But Also Lend A Glow To Your Hair.
 • Soak 2 Tablespoons Fenugreek Seeds In Water Overnight. In The Morning Grind Into A Fine Paste. Apply All Over Scalp And Leave For 1/2 An Hour. Wash With Mild Shampoo.
 • Beat Two Eggs And Add Two Tablespoons Of Water To It. Wet The Hair And Apply The Egg Mixture Over The Hair. Now Massage Your Scalp And Let The Mixture On For Ten Minutes To Fifteen Minutes. Then Rinse The Hair With Lukewarm Water. This Will Keep Both Dandruff And Hair Fall Problem Away From You.
 • Beets Can Be Used To Your Advantage In Treating Dandruff. Boil Its Tops And Roots In Water And Then Massage Your Scalp With This Water Every Night.
 • Boil The Water And Soak Rosemary Leaves In It. Let It Stand For One Night. Strain And Add Vinegar To It. After Shampooing Wash Your Hair With This Preparation. It Treats The Hair Very Fast.

Monday, January 20, 2014

Aval Dosai

Time of preparation : 1 Hour 10 Minutes
Serves : 2

» Ingredients


    2 Cups Rice
    3/4 Cup Aval
    1/2 Cup Urad Dhall
    1 1/2 Tsp Salt

» Method of cooking

 
    Rinse And Soak Rice, Aval And Urad Dhall In Water For 1 Hour.
    Wet Grind The Above With Salt Into A Nice Batter.
    Keep At Room Temperature For 12 Hours.
    Spread A Big Spoon Full Of The Above Batter On A Hot Non-Stick Pan, And Put 1 T.Spoon Of Oil Around It.
    Close The Dosa With A Cover And Let It Cook For A Few Minutes. Do Not Turn The Dosa.  Enjoy Your Aval Dosai. Hope You Love This Indian Recipe.


» Method of Serving

 
Serve It Hot With Chutney.


குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?(WEANING/COMPLEMENTARY FEEDING)


பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை  தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும். தண்ணீர் கூட தர தேவை இல்லை.


இதற்க்கு EXCLUSIVE BREAST  FEEDING  என்று பெயர். கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை. ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது.

இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING  என்று பெயர்.

WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to  the baby (UNICEF)


WEANING  என்றால் முற்றிலும்  தாய்ப்பாலை  நிறுத்திவிட்டு  உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால்  தற்போது COMPLEMENTARY  FEEDING  என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது.

நான்கு மாதங்களுக்கு  பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை  செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன.

தலை நன்கு நிமிர்ந்து  நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு  பிறகே

குழந்தையின் எடை 5  மாதத்தில் பிறந்ததை போல்  இரு மடங்காக  அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும்.  மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும்  இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும்.

குடலில் உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும்  4 -5  மாதங்களில்தான்.

எனவே 180 நாட்கள் முடிந்தபிறகே இணை உணவுகளை  ஆரம்பிப்பது  நல்லது.

முதலில் ஏதேனும் ஒரு  தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது  பழகிய பிறகே  இரண்டு அல்லது  மூன்று  தானிய  கலவைகளை  சேர்த்து அரைத்து  தர வேண்டும்.

அரிசி சாதம் மிகவும் எளிதில் ஆரம்பிக்க சிறந்தது. ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன்  மட்டும் தரவேண்டும். படிப்படியாக  இந்த அளவை அதிகரிக்க வேண்டும்.

தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும்.

ஒரு வயது வரை  உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை  போல் நூறு மடங்கு கலோரி  தேவை.  அதாவது  6 கிலோ  குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு  தேவை. எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக  பாலும்  இணை உணவும்  தரவேண்டும்.

ஐஸ் போடாத வீட்டில் செய்த  பழச்சாறு  6  மாதம் முதல் தரலாம்.  ஆரஞ்சு , ஆப்பிள்  சிறந்தது.

நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6  மாதம் முதல் தரலாம்.

முட்டை - 7  -9  மாதங்களில் தரலாம்.  முதலில்  மஞ்சள் கருவும்  பின்பே வெள்ளை  கரு தரவேண்டும்.  ஏனெனில் வெள்ளை  கரு சில குழந்தைகளுக்கு  ஒவ்வாமையை  ஏற்படுத்தலாம்.

6 -8  மாதங்களில் மசித்த  உருளை கிழங்கு , மசித்த பருப்பு  ஆகியவற்றை தரலாம்.

மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி  ) 9 -12  மாதங்களில்  தரவேண்டும்.

ஒரு வயது ஆகும்போது  வீட்டில்  செய்யும் எல்லா   உணவுகளையும்  தரலாம்.

அசைவ  உணவை  ஒரு வயதுக்கு  பின்பே ஆரம்பிப்பது  நல்லது.  (முட்டை சைவம் தானே ?!!)

ஒரு வயதுடைய  குழந்தை  அம்மா சாப்பிடும்  அளவில் பாதி அளவு  உணவு சாப்பிடவேண்டும்.  (மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )

ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி  தேவை.

தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன்  சேர்த்தே தரவேண்டும். இரண்டு வயது வரை தருவது கட்டாயம். அதற்க்கு மேல் கொடுப்பது  தனிப்பட்ட விருப்பம். ,( அப்துல் கலாம் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவர். )

Sunday, January 5, 2014

பெண்கள் சாப்பாட்ல சத்து இருக்கா? - 100th Post

பிறந்தது முதல் இறப்பு வரை பெண் உடலமைப்பிலும் மனதளவிலும்  பல கட்டங்களைக்  கடந்து வர வேண்டியிருக்கிறது.


குழந்தைப்பேறு ,ஹார்மோன்கள்  மாற்றம்  உள்ளிட்ட  உடல்நலக் கோளாறுகள், அதற்கான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் என உடலளவிலும்  பெண்கள் சந்தித்தே ஆகவேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. அந்தந்த   நிலைகளைக் கடக்க பெண்கள் சத்தான  ஆகாரங்களை எடுத்துக்கொள்வதுடன்  நல்ல மனநிலையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் பெண்கள் தங்களுக்காக   நேரம் ஒதுக்குகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதனால், பெண்களின் காலை உணவு என்பது பெரும்பாலாக  இல்லாமலே போய்விடுகிறது  காலையில் குடிக்க வேண்டிய காபியோ, பாலோ கூட குடிப்பதற்கு நேரமில்லாமல்   அல்லாடும்   நிலை பெரும்பாலான பெண்களுக்கு நடுத்தரக் குடும்பங்களில் இருக்கிற உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு அம்மாக்கள்  பட்டினி கிடப்பதும்   உண்டு.

கர்ப்பம், குழந்தைப் பராமரிப்பு போன்ற நிலைகளில் பெண்களுக்கு சத்தான   உணவு அவசியம்.  நடுத்தர வயதை எட்டும் போது எலும்பு தேய்மானம், அனிமியா போன்ற நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் 30 வயதைக் கடக்கும் போதே பல சிக்கல்களுக்கும்  ஆளாகிறார்கள்  .உடல்நலக் கோளாறுகளால் பல பெண்கள் மன உளைச்சல், மனச்சோர்வு என மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டிரெஸ், மன அழுத்தம் போன்ற சிக்கல்களில்  சிக்கும் பெண்கள் பலருக்கும்  சரியான தூக்கம், சரிவிகித உணவு  இல்லாததே குறைபாட்டுக்குக் காரணமாக இருக்கிறது.            
    
இரும்புச்சத்து  குறைபாடு என்பது பொதுவாக பெண்கள் பலரிடமும்  காணப்படுகிறது.  பெண்களுக்கு அவர்களது உடலில் 500 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கவேண்டும். ஆனால், அவை 150 மில்லிகிராம்  அளவு கூட இருப்பதில்லையாம் அனேக பெண்களுக்கு. ஒரு நாளைக்கு 15  மிகி., அளவு இரும்புச்சத்தை பெண்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், 11மிகி., அளவுகூட எடுத்துக் கொள்வதில்லையாம்.

இத்தகைய இரும்புச்சத்துக் குறைபாடுதான் அனிமியா போன்றவற்றிற்குக் காரணமாகிறது. அசதி, மனதளவில் எரிச்சல் தன்மை, முடிகொட்டுதல், மாதவிடாய்   கோளாறு போன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிகிறது.   பிட்டோ               எலும்புகளில் அடர்த்திக் குறைபாடு என்பதும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளில்  முக்கியமானதாகும்.  

இதுதான் மெனோபாஸ் சமயத்தில் பெண்களைப் பாடாய்படுத்தும் காரணியாக இறக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் கொண்ட உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆச்டியோபோட்ரிசிஸ், எலும்பு முறிவு போன்ற சிக்கல்களிலிருந்து தப்பலாம். பால் மற்றும் பால் பொருட்கள், சோயா, மீன் போன்ற உணவு வகைகளை அதிகம் சேரத்துக்கொள்ள வேண்டும்

விதவிதமான  காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வதும் அவசியம். முழு கோதுமையால் சமைக்கப்பட்ட   உணவுகளையும் சேர்த்துக் கொள்வது அவசியம். இவை வைட்டமின்கள் பைட்டோ நியூட்டிரியன்ட்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவாகும். முதுமைத் தோற்றத்தை இவை தள்ளிப்போடும் என்பது உறுதி. வைட்டமின் "சி ","இ", பீடா  கெரோடின், பிட்டோ நியூட்டிரியன்ட் போன்ற ஆண்டி ஆக்சிடெண்ட்  சத்துகொண்ட பழங்கள், காய்கறிகள், டீ  போன்றவை முதுமையை விரட்ட உதவுகின்றன. சோயா, பிளேக்ஸ் [ஆலி] விதைகள் உடல்ரீதியான பல குறைபாடுகளை களைகின்றனவாம். உணவில் சர்க்கரை, ஈஸ்ட் போன்றவற்றைக்  குறைத்துக்கொள்வது அவசியம். சத்துமிக்க கரையும் தன்மை கொண்ட கொழுப்புச்சத்துகள் மிகுந்த  உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

Friday, January 3, 2014

தேங்காய் எண்ணெயில் இருக்கு ஆரோக்கியம்

தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக் கூடியது. 100 கிராம்  எண்ணெய்  884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் 85 சதவீதம் பூரிதமான கொழுப்பு சத்து உள்ளது. நீண்ட காலம்  கெட்டு போகாத ஆயுள் கொண்டது.

தென்னையின் வேரில் இருந்து குருத்து வரை எல்லா பாகங்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புரத சத்து , மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாது பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை 'பி' காம்ப்ளெக்ஸ் சத்துக்கள், நார்ச் சத்து என உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் தேங்காய் எண்ணெயில் உள்ளன. தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது.லூரிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இதுவே தேங்காய் எண்ணெய் உறையும்  வெள்ளை நிறத்தை தருகிறது. வேறு பல உண்ணக் கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் தர வல்லவை. 232 டிகிரி வெப்ப நிலையில்தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.

லூரிக் அமிலம், கார்பாரிக் அமிலம், காப்பிரிலிக்  அமிலம், காப்ரோயிக்  அமிலம் போன்றவை பூரிதமாக கொழுப்பில் 68 சதவீதம் அடங்கி உள்ளது. ரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கும், குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின் இ குறைந்த அளவு உள்ளது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண் விரைவில் ஆறும். கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் ஏற்படும்போது, அதிக உதிரப்போக்கு கட்டுப்பட, தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.

வெள்ளைபடுதலுக்கு தென்னம் பூ மருந்தாக பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்குடன், கருஞ்சீரகத்தையும் சேர்த்து, தோல் நோய்க்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.

தேங்காய் பால் நஞ்சு முறிவாக பயன்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றிற்கு தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறுபட்ட புண்களை குணப்படுத்துகின்றன. 'மீடியம் செயின் பேட்டி ஆசிட்' தேங்காயில் அதிகம் உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் கார்பாரிக் ஆசிட், லாரிக் ஆசிட் ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளது.