Tuesday, December 9, 2014

கரும்புள்ளி, தோல் சுருக்கத்தை போக்கும் ஸ்டீம் முறை

35 வயதை தொடும் பெண்களுக்கு முகத்தில் சுருக்கம் தோன்ற ஆரம்பிக்கும் அவர்கள் இந்த ஸ்டீம் முறையை பின்பற்றி வந்தால் முகத்தில் உண்டான சுருக்கம் படிப்படியாக மறைவதை காணலாம்.

வெறும் தண்ணீரில் ஆவி பிடிப்பதை விடவும், சில பொருட்களைப் போட்டு ஆவி பிடிப்பது நல்ல பலனைத் தரும். இங்கே இரண்டு வகை ஸ்டீம் முறைகளைத் தந்திருக்கிறேன். முயற்சித்துப் பாருங்கள். 

 வேப்பிலை ஸ்டீம்: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் நாலைந்து வேப்பிலையைப் போடுங்கள். இரண்டு நிமிடங்கள் கழித்து வேப்பிலையை எடுத்துவிட்டு ஆவி பிடியுங்கள். பிறகு, முகத்தைத் துடைக்காமல், ஐஸ் கட்டிகளை மெல்லிய துணியில் கட்டி, முகம் முழுக்க லேசாக ஒத்தி விடுங்கள். இதனால் முகம் குளிர்ச்சியாவதுடன், கன்னிப் போன தோல் மிருதுவாகும். அரிப்பு, பருக்களினால் ஏற்படும் பாதிப்பிலிருந்தும் நிரந்தரமாக விடுபடலாம்.

எலுமிச்சை ஸ்டீம்: கொதிக்கிற தண்ணீரில், 1 எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து ஆவி பிடியுங்கள். முடித்ததும் முகத்தைத் துடைக்காமல், `ஐஸ்' கட்டி ஒத்தடம் கொடுங்கள். பிறகு, ஏடு இல்லாத தயிருடன் கடலை மாவை கலந்து `பேக்' போட்டு 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். மாதம் ஒருமுறை இதைச் செய்து வந்தாலே முகத்தில் வந்த சுருக்கம் ஓடிப்போகும். இனி, சுருக்கமும் வராது. எலுமிச்சைக்கு, முகத்தின் கருமையையும் கரும்புள்ளிகளையும் விரட்டி விடுகிற சக்தி உண்டு. 

நோய் தீர்க்கும் வாழைப்பழம்

வாழைப்பழம்


வாழைப்பழம், குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. எனவே, தினமும் இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மருத்துவர்களை சந்திக்காமல் இருப்பதற்கு உதவும். வாழையின் பூ, தண்டு, இலை முதல் நார் வரை அனைத்து பாகங்களையும் உபயோகிக்கலாம்.

இன்றும் நமது இல்லங்களில் சாதாரணமாக வாழைப்பழங்கள் இருக்கும். ஆனால், நம்மில் பலர் இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதில்லை. வாழையால்  உடல் பருமன் அதிகரிக்கும் என்ற பயத்தில் பலர் இந்த வாழையின் பக்கம் போவதில்லை. ஆனால், வாழை பல நோய்களை தீர்க்கும் குணமுள்ளது.

வாழைப்பழத்தில், சுக்ரோஸ், பிரக்டோஸ், குளுகோஸ், என மூன்று இயற்க்கை சர்க்கரை உள்ளது. இதில் செரிமானத்திற்கு மிகவும் முக்கியமான பைபரும் பெருமளவு இணைந்துள்ளது. ஒரு வாழை ஏராளமான ஆற்றல் உடையது. இரண்டு வாழைப்பழங்கள், விறுவிறுப்பான 90 நிமிட நடைபயிற்சிக்கு போதுமான ஆற்றலை கொடுக்கவல்லது. ஆனால், வாழைப்பழத்திலிருந்து நமக்கு கிடைப்பது ஆற்றல் மட்டுமல்ல. அன்றாட வாழ்வுக்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் கொண்டுள்ளதுடன், சில நோய்களுக்கு சிறந்த தீர்வாகவும் அமைந்துள்ளது.

மன அழுத்தம்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட  மக்கள்  மத்தியில் மேற்கொள்ளப்பட்ட  ஒரு சமீபத்திய  ஆய்வின்படி, ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது மன அழுத்தத்திலிருந்து விடுபட உதவும். இதற்கு காரணம், வாழைப்பழங்களில் உள்ள டிரிப்தோபன் என்ற புரதம் ஆகும். இது நம் உடலில், உடலை  நிலைப்படுத்தும்  தன்மை  கொண்ட , செரொடொனினாக மாறுகிறது.

ரத்த சோகை
வாழையில் அதிகமாக மற்றொரு சத்துப் பொருள், இரும்பு, இது ரத்த ஹீமோகுளோபின் உற்பத்தியை தூண்டுவதுடன், ரத்த சோகைக்கு பெரும் நிவாரணம் தரக்கூடியது. எனவே ரத்த சோகைக்காக பேரிச்சையை மட்டும் நாடாமல், எளிதாக கிடைக்கும் வாழையையும் கொஞ்சம் எடுத்துக்கொள்ளலாம்.

ரத்த அழுத்தம்


வாழைப்பழத்தில் அதிக அளவு பொட்டாசியமும், குறைந்த அளவு உப்பும் உள்ளது. எனவே ரத்த அழுத்தத்தை சீராக்க பெரிதும் பயன்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம், வளரும் இளம் மூளையை மேம்படுத்துவதில் இன்றியமையாதது. எனவே, வாழைப்பழம் மாணவர்களுக்கு மிகவும் ஏற்றப்பழமாகும்.

நெஞ்செரிச்சல்

வாழைப்பழங்கள் இயற்கையான ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் நிறைந்தது. எனவே அடுத்த முறை நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வெறும் வாழைப்பழம் போதும்.