தேங்காய் எண்ணெய் அதிக ஆற்றல் தரக் கூடியது. 100 கிராம் எண்ணெய் 884 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் 85 சதவீதம் பூரிதமான கொழுப்பு சத்து உள்ளது. நீண்ட காலம் கெட்டு போகாத ஆயுள் கொண்டது.
தென்னையின் வேரில் இருந்து குருத்து வரை எல்லா பாகங்களிலும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. புரத சத்து , மாவுச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாது பொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை 'பி' காம்ப்ளெக்ஸ் சத்துக்கள், நார்ச் சத்து என உடல் இயக்கத்திற்கு தேவைப்படும் அனைத்து சத்துக்களும் தேங்காய் எண்ணெயில் உள்ளன. தேங்காய் பால் உடல் வலிமைக்கு நல்லது.
லூரிக் அமிலம் எனப்படும் கொழுப்பு அமிலம் அதிக அளவில் உள்ளது. இதுவே தேங்காய் எண்ணெய் உறையும் வெள்ளை நிறத்தை தருகிறது. வேறு பல உண்ணக் கூடிய கொழுப்பு அமிலங்களும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் தர வல்லவை. 232 டிகிரி வெப்ப நிலையில்தான் தேங்காய் எண்ணெய் ஆவியாகும் என்பதால் காய்கறிகளை சமைக்க ஏற்றது.
லூரிக் அமிலம், கார்பாரிக் அமிலம், காப்பிரிலிக் அமிலம், காப்ரோயிக் அமிலம் போன்றவை பூரிதமாக கொழுப்பில் 68 சதவீதம் அடங்கி உள்ளது. ரத்த ஓட்டத்திற்கு நன்மை பயக்கும், குளிர்ந்த தேங்காய் எண்ணெயில் வைட்டமின் இ குறைந்த அளவு உள்ளது. தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப் படுகிறது. தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண் விரைவில் ஆறும். கூந்தல் வளர்ச்சிக்கு சிறந்த டானிக். தேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்கு தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது. மாதவிடாய் ஏற்படும்போது, அதிக உதிரப்போக்கு கட்டுப்பட, தென்னை மரத்திலிருந்து எடுக்கப்படும் சாறு நல்ல மருந்து.
வெள்ளைபடுதலுக்கு தென்னம் பூ மருந்தாக பயன்படுகிறது. தேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்குடன், கருஞ்சீரகத்தையும் சேர்த்து, தோல் நோய்க்கான மருந்து தயாரிக்கப்படுகிறது. தேங்காய் சிரட்டையில் இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய் பால் நஞ்சு முறிவாக பயன்படுகிறது. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றிற்கு தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறுபட்ட புண்களை குணப்படுத்துகின்றன. 'மீடியம் செயின் பேட்டி ஆசிட்' தேங்காயில் அதிகம் உள்ளது. உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் கார்பாரிக் ஆசிட், லாரிக் ஆசிட் ஆகிய இரண்டு அமிலங்களும் தேங்காயில் போதிய அளவு உள்ளது.

No comments:
Post a Comment