Saturday, January 3, 2015

இப்படித்தான் குழந்தை வளர்க்க வேண்டும்.


இப்படித்தான் குழந்தை வளர்க்க வேண்டும்.
இன்றைய குழந்தைகள் தான் நாளைய தலைவர்கள். அவர்கள் தலைவர்கள் ஆவதும் தயங்கி, தளர்ந்து  நிற்பதும் பெற்றோரின் வளர்ப்பில் தான் உள்ளது. கீழே காணும் ஆலோசநிகளை பின்பற்றினால், உங்கள் குழந்தையும் நாளைய தலைவன்தான்.

குழந்தைகள் வளர்ப்பில் சில முக்கிய குறிப்புகள்:

* கணவன் மனைவி சண்டை சச்சரவு குழந்தைகளுக்கு தெரியக்கூடாது. அவர்கள் முன்னிலையில், சண்டையிட்டுக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

* தீய சொற்களை பேசுவதை தவிருங்கள். அதிலும் குழந்தைகள் முன்னிலையில் பேசுவதை அறவே தவிருங்கள். நீங்கள் பேசுவதை கவனித்து தான் உங்கள் குழந்தை பேசுகிறது என்பதை  நினைவில்  வைத்துக் கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை மிரட்டும் பொது கொன்னுடுவேன், தலையை திருகிடுவேன், கையை உடைப்பேன் போன்ற வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள்.

* சில தாய்மார்கள் சில விஷயங்களை கணவரிடம் இருந்து மறைக்க விரும்புவர். எனவே, குழந்தைகளிடம், அப்பாகிட்டே சொல்லிடாதே என்று கூறுவர். அப்படி நீங்கள் சொன்னால், உங்கள் குழந்தை தன்னை பெரிய ஆளாக நினைத்துக் கொண்டு, உங்கள் கணவர் முன்னிலையிலேயே அப்பாக்கிட்டே சொல்லிடுவேன் என்று மிரட்டும்.

இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி


 இடுப்பு பகுதியில் உள்ள அதிகப்படியான சதையை குறைக்க உதவும் பயிற்சி

உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்க ஏராளமான உடற்பயிற்சி முறைகள் உள்ளன. ஆனால் இந்த உடற்பயிற்சி முறைகள் அனைத்தும் அனைவருக்கும் உகந்தது அல்ல. காரணம் ஒவ்வொரு மனித உடலும் தனித்தன்மையானவை.

எனவே உடலுக்கு ஏற்ற சரியான உடற்பயிற்சியை, தகுந்த ஆலோசனையின் பேரில், சரியான முறையில் சரியான அளவில் செய்வது நல்லது. இடுப்பு பகுதியில் சேர்ந்திருக்கும் சற்று அதிகப்படியான சதையைக் குறைப்பதற்கான சில உடற்பயிற்சி முறைகள் உள்ளன.  


இந்த பயிற்சிகள் அனைத்தும் அதிகப்படியான தொடை சதையைக் குறைப்பதற்கே, பொதுவாகவே சற்று பருமனான உடல்வாகு கொண்டவர்களுக்கு இந்த பயிற்சிகள் பயன் தராது. முதலில் விரிப்பில் நேராக நின்று கொண்டு பாதங்கள் இரண்டிற்கும் 30 செ.மீ இடைவெளி இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிமிர்ந்து நின்று கொள்ளவும். 

கைகளை இடுப்பில் வைத்துக் கொள்ளவும். கட்டை விரல் இரண்டும் முன்னோக்கி இருக்கட்டும். அதாவது, கட்டைவிரல் முதுகைப் பார்த்தவண்ணம் இல்லாமல், வயிற்றின் மீது இருக்கட்டும். இப்பொழுது இடுப்பை இடமிருந்து வலமாக சுற்றவும். சுமார் 30 வினாடிகள் இதுபோல் இடுப்பை சுற்றவும். 

பின்னர் அடுத்த 60 வினாடிகள் அதே போல் எதிர் திசையில், அதாவது வலமிருந்து இடமாக சுற்றவும். இதுபோல் மாறி மாறி 20 முறை செய்யவும். இந்தப் பயிற்சி செய்யும்போது பாதம் முழுவதும் தரையில் அழுத்தமாக ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.

ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 20 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியான எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30  முறை செய்யலாம்.

கல்யாணப் பெண்களுக்கு அழகு தரும் பீட்ரூட்


 கல்யாணப் பெண்களுக்கு அழகு தரும் பீட்ரூட்

`ஆவணி பொறக்கட்டும்' என்று காத்திருக்கும் கல்யாணப் பெண்களுக்கு ஒரு நற்செய்தி, மணப்பெண் அலங்காரத்துக்காக என்ன செய்வது என்று மண்டையை கசக்க வேண்டாம்.

உங்களை மேலும் அழகாக்கி, மண மேடையில் ஜொலிக்க வைக்க, இதோ இருக்கிறது பீட்ரூட்! கீழே உள்ள 2 சிகிச்சைகளையும் தொடர்ந்து செய்யுங்கள். `எப்படி வந்தது இந்தப் புது மெருகு' என்று ஊரே விசாரிக்கும்.

1. கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை தோல் அரைத்த விழுது - டேபிள் ஸ்பூன்,
பீட்ரூட் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
பாதாம் அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை... 


இவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணையை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.  


இந்த பேஸ்ட்டை முகத்திலும் உடம்பு முழுவதும் நன்றாகப் பூசி, குளித்தால்... முரடு தட்டிப்போன முகம் மிருதுவாகும். உடம்பும் நறுமணத்துடன் பளபளக்கும்.

2. தலையில் ஒன்றிரண்டு வெள்ளி முடிகள் மின்னுகின்றவா? அதற்கும் பீட்ரூட் வசம் தீர்வு இருக்கிறது. ஒரு பிடி அவுரி இலையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) பீட்ரூட் சாறில் ஊற வைத்து அரையுங்கள்.

இதை தலைக்கு `பேக்' ஆகப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். நரைமுடி கருநீலமாக மாறும். முடியும் பளபளப்பாகும். இந்த 3 சிகிச்சைகளையும் திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

பிற்கென்ன? ஒட்டு மொத்த அழகையும் கொட்டித் தந்ததுபேல் மேனி தகதகக்கிற மாயாஜாலத்தைக் கண்டு மயங்கிப் போவார்கள் மாப்பிள்ளை வீட்டினர்.

Friday, January 2, 2015

சர்க்கரை நோயை தெரிஞ்சுக்குங்க!

சர்க்கரை நோயை தெரிஞ்சுக்குங்க!

சர்க்கரை நோய் என்பது மருத்துவ சிகிச்சை முறையால் குணப்படுத்த முடியாத நோயாகவே மனிதர்களை அச்சுறுத்தி வருகிறது. இன்சுலினை கண்டுபிடித்த பிரெடெரிக் பெண்டிங்கின் நினைவைப் போர்டும் விதமாக அவரது பிறந்த தினமான நவம்பர் 14 ஆம் தேதி, ஆண்டு தோறும் உலக நீரழிவு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.

சர்க்கரை நோய் என்றால் என்ன?

உணவில் இருக்கும் மாவுச்சத்து தான் சர்க்கரையாக (குளுகோசாக) மாறி, ரத்தத்தில் கலந்து, உடல் இயக்கத்திற்கு தேவையான சக்திய அளிக்கிறது. இப்படி ரத்தத்தில் கலக்கும் சர்க்கரை, சக்தியாக மாற, வயிற்றுப்பகுதியில் இருக்கும் கணையம், இன்சுலின் என்ற ஹார்மோனை சுரக்க வேண்டும்.

இந்த இன்சுலின் தான் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை  சக்தியாக மாற்றும். கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவு குறைந்தாலோ, அல்லது முற்றாக நின்று போனாலோ, மனிதனின் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அப்படியே தேங்கி விடும். இப்படி ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு, குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக போவது தான் சர்க்கரை நோய் என்று அறியப்படுகிறது.

எப்படி கண்டறிவது?

ஒருவர் சாப்பிடுவதற்கு முன்னர் அவரது ரத்தத்தில், நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் எழுபது மில்லிகிராம் சர்க்கரை இருக்கும். அதே நபருக்கு சாப்பிட்ட பிறகு, நூறு மில்லி லிட்டர் ரத்தத்தில் நூற்றி இருபது முதல் நூற்றி முப்பது மில்லிகிராம் சர்க்கரை வரை காணப்படும். இந்த அளவுக்கு மேல் காணப்பட்டால், அவருக்கு சர்க்கரை நோய் வந்திருப்பதாக பொருள்.

சர்க்கரை நோய் வகைகள்

முதல் வகை சர்க்கரை நோய், இரண்டாவது வகை சர்க்கரை நோய் என்கிற இரண்டு வகை நோய்கள் தான், இந்த உபகண்டத்தின் 98 சதவீதமானவர்களை தாக்குகிறது. முதல் ரக சர்க்கரை நோய் பெரும்பாலும் குழந்தைகளை தாக்கும் தன்மை கொண்டது.

மனிதர்களின் உடம்பில் இயற்கையிலேயே இருக்கும் நோய் எதிர்ப்பு தன்மையானது. திடீரென கணையத்தை தாக்கி அதில் இருக்கும் இன்சுலின் சுரக்கும் லாங்கர்ஹரன் திட்டுக்களை முற்றாக அளித்து விடுகிறது. இதனால் இன்சுலின் சுரக்கும் தன்மையை கணையம் இழந்து விடுகிறது.

இது தான் உதல் ரக சர்க்கரை நோய்க்கு காரணமாக கருதப்படுகிறது. முதல் ரக சர்க்கரை நோய்க்கு, ஆயுட்காலம் முழுவதும் இன்சுலின் ஊசி மூலம் சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தான் ஒரே வழி.

இரண்டாவது ரக சர்க்கரை நோய், பெரும்பாலானவர்களை பாதிக்கிறது. பெற்றோர்மூலம் பிள்ளைகளுக்கு வருவதற்கான வாய்ப்புகள் 80%, கூடுதல் உடல் பருமன் மூலமும் அதிகரிக்கலாம். அதிக கொழுப்பு உணவுகள் சாப்பிடுவது, உடற்பயிற்சியற்ற வாழ்க்கைமுறை போன்றவற்றையும் முக்கிய காரணங்கள்.

நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ உடற்பயிற்சி அவசியம்


 நீண்ட காலம் ஆரோக்கிமாக வாழ உடற்பயிற்சி அவசியம்
உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக, உயர்தர ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதில் அணு அளவும் ஐயமில்லை. ‘உடற்பயிற்சி செய்தால் நீண்ட காலம் சிறந்த ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று உறுதி அளிக்க முடியும்.

தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுள் இறுதி வரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.  


உடற்பயிற்சி என்பது, உடலை வருத்தி தினம் 2 மணி நேரம் ஓட்டமும் நடையும், ஜிம்மில் எடை தூக்குவதும்தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். சிறியதாக உடற்பயிற்சிகள் - தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் செய்து பாருங்கள்...

நீங்களே வியக்கும் வண்ணம் பல நல்ல மாறுதல்களை உடலிலும் உள்ளத்திலும் உணரத் தொடங்குவீர்கள். உடல்நலக் குறைவுகள் உங்களிடம் வர பயந்து, விலகி ஓடத் தொடங்கும். மிகவும் முக்கியமாக இதய நோய்கள் உள்பட அதிபயங்கர நோய்கள் உங்களை நெருங்க அஞ்சும்.

முன்பே இந்த நோய்கள் உள்ளவர்கள், மேலே கூறியபடி, 30 நிமிட உடற்பயிற்சிகளை மெதுவாகச் செய்து நோய்களின் வீரியத்தைக் குறைத்து, நல் ஆரோக்கியத்தைப் பெறலாம். 

மூத்த குடிமக்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் அடைவது மட்டுமல்ல... எவரது உதவியும் இல்லாமல் தங்களின் தேவைகளை தாங்களே நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.