Pages

Showing posts with label அவுரி இலை. Show all posts
Showing posts with label அவுரி இலை. Show all posts

Saturday, January 3, 2015

கல்யாணப் பெண்களுக்கு அழகு தரும் பீட்ரூட்


 கல்யாணப் பெண்களுக்கு அழகு தரும் பீட்ரூட்

`ஆவணி பொறக்கட்டும்' என்று காத்திருக்கும் கல்யாணப் பெண்களுக்கு ஒரு நற்செய்தி, மணப்பெண் அலங்காரத்துக்காக என்ன செய்வது என்று மண்டையை கசக்க வேண்டாம்.

உங்களை மேலும் அழகாக்கி, மண மேடையில் ஜொலிக்க வைக்க, இதோ இருக்கிறது பீட்ரூட்! கீழே உள்ள 2 சிகிச்சைகளையும் தொடர்ந்து செய்யுங்கள். `எப்படி வந்தது இந்தப் புது மெருகு' என்று ஊரே விசாரிக்கும்.

1. கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
எலுமிச்சை தோல் அரைத்த விழுது - டேபிள் ஸ்பூன்,
பீட்ரூட் சாறு - 1 டேபிள் ஸ்பூன்,
பாதாம் அரைத்த விழுது - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - ஒரு சிட்டிகை... 


இவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணையை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள்.  


இந்த பேஸ்ட்டை முகத்திலும் உடம்பு முழுவதும் நன்றாகப் பூசி, குளித்தால்... முரடு தட்டிப்போன முகம் மிருதுவாகும். உடம்பும் நறுமணத்துடன் பளபளக்கும்.

2. தலையில் ஒன்றிரண்டு வெள்ளி முடிகள் மின்னுகின்றவா? அதற்கும் பீட்ரூட் வசம் தீர்வு இருக்கிறது. ஒரு பிடி அவுரி இலையை (நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும்) பீட்ரூட் சாறில் ஊற வைத்து அரையுங்கள்.

இதை தலைக்கு `பேக்' ஆகப் போட்டு, அரை மணி நேரம் கழித்து அலசுங்கள். நரைமுடி கருநீலமாக மாறும். முடியும் பளபளப்பாகும். இந்த 3 சிகிச்சைகளையும் திருமணத்துக்கு 10 நாட்களுக்கு முன்பே செய்ய ஆரம்பித்து விடுங்கள்.

பிற்கென்ன? ஒட்டு மொத்த அழகையும் கொட்டித் தந்ததுபேல் மேனி தகதகக்கிற மாயாஜாலத்தைக் கண்டு மயங்கிப் போவார்கள் மாப்பிள்ளை வீட்டினர்.