Saturday, August 16, 2014

மஞ்சள் பூசும் பழக்கம் உண்டா?

நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது; தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில் முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை. மஞ்சள் பூசிய முகத்திற்கு முன்பெல்லாம் அதிக மவுசு உண்டு. இப்போது கிராமப் பெண்கள் தான் மஞ்சள் பூசுகின்றனர்; அதுவும் ஒரு சிலரே.

இந்திய கலாசாரத்தில் மஞ்சளின் முக்கியத்துவம்: இந்து கலாசாரத்தில், சமையலில் மஞ்சள் பயன்படுத்தப்படுவது போல் மற்றவர்கள் பயன்படுத்தவில்லை என்றாலும், அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சள் கலந்து தயாரிக்கும் பழக்கம் உலக நாடுகளில் காணப்படுகிறது. மஞ்சள் நிறத்திற்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவே தான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்று சொல்லப்படுகிறது.

ஆனால், “ஆண்கள் மஞ்சள் பயன்படுத்துவதில்லை. ஏன்? ஆற்றலின் வடிவமாய் விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம்; இந்த ஆற்றலை வழிநடத்தும் ஆண்களுக்கு மஞ்சள் அவசியமில்லை’ என்று, ஜகதீச அய்யர் என்பவர், இந்தியர்களின் கலாசாரம் குறித்த தனது புத்தகத்தில் எழுதியுள்ளார். அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகையின் போது, பொங்கல் பானையில், மஞ்சள் செடி மங்கல அடையாளமாக கட்டப்படுகிறது. மஞ்சள் கட்டப்பட்ட பானையில், பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தை குறிப்பதாகக் கருதப்படுகிறது.

பண்டிகைகள், விழா கொண்டாட்டங்கள், நற்காரியங்கள் அனைத்திலும், மஞ்சள் சிறப்பிடம் வகிக்கிறது. குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் துணி, பழங்கள் மற்றும் பரிசு பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து விருந்தினர்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற நல்ல காரியங்களின் போது வழங்கும் வழக்கம், இந்துக்கள் மத்தியில் காணப்படுகிறது. மஞ்சளின் புனித தன்மையால், அவற்றை திருமணத்தில் கட்டப்படும், மங்கள நாண் எனப்படும் “தாலிக் கயிறில்’ பூசப்படுகிறது.

சமையலில் மஞ்சளின் பயன்பாடு:

இந்தியர்களின் சமையல்களிலும், மஞ்சள் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மஞ்சள் பயன்படுத்தாத, இந்திய சமையல்களை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. இது இயற்கையான நிறமியாக இருப்பதால், பெரும்பாலான உணவு பதார்த்தங்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவின் தென்பகுதிகளில், சாம்பார், முட்டைகோசு கறி போன்றவற்றை, மஞ்சள் அதிக சுவையுடையதாக ஆக்குகிறது. அதேபோல், வடஇந்தியர்கள் கொழுக்கட்டையில் மஞ்சளை பயன்படுத்துகின்றனர். இது ஊறுகாயை பதப்படுத்தி பாதுகாக்கவும் உதவுகிறது.

அழகு சாதனமாக பயன்படும் மஞ்சள்:

வெகு காலமாகவே இந்தியப் பெண்கள் தங்கள் முகத்தையும், உடலையும் அழகுபடுத்திக் கொள்ள மஞ்சளைப் பயன்படுத்தி வருகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி பொலிவு கொடுப்பதில் மஞ்சளுக்கு நிகர் வேறில்லை. மஞ்சள் இயற்கை சன்ஸ்கிரீனாக பயன்படுவதால், இந்திய பெண்கள் தோலுக்கு ஊட்டமளிக்கும் பொருளாக பயன் படுத்துகின்றனர். இது முகத் தில் ரோமங்கள் வளர்வதை தடுப்பதோடு, இயற்கை, “ப்ளீச்’சாக செயல்பட்டு கடினமான கையை மென்மையாக்குகிறது. இன்னும் சில வீடுகளில் எறும்புகள், பூச்சிகள், கரையான்கள் போன்றவை வராமல் தடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மஞ்சளின் மருத்துவ குணம்:

* வயிற்றுப் புண்ணை மஞ்சள் ஆற்றும்.

* உடலின் எந்த இடத்தில் கட்டி இருந்தாலும், அதன் மீது மஞ்சள் பூசி, ஒரு இரவு ஊறினால், கட்டி பழுத்து, சீழ் வெளியேறி விடும்.

* ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் குணமும் மஞ்சளுக்கு உண்டு.

* உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது.

* மிகச் சிறந்த கிருமி நாசினியாக விளங்குகிறது.

* மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.

முகத்தில் முடிகளை நீக்க வேண்டுமா?

சில பெண்களுக்கு முகத்தில் முடிகள் காணப்படும். இவை சிலருக்கு அடர்த்தியாக தெரியும் வகையிலும், சிலருக்கு மெல்லிய இழைகளாகவும் இருக்கும். உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களுக்கு ஏற்ப, இந்த முடிகளின் தன்மையும் மாறுபட்டு காணப்படும்.

முகத்தில் முடிகள் தோன்ற காரணம்:


பெண்களுக்கு முகத்தில் முடிகள் தோன்ற முக்கிய காரணமாக அமைவது ஹார்மோன் சமநிலையின்மை பிரச்னை. பெண்களின் உடலில், பெண்களுக்கான ஈஸ்ட்ரோஜன் மற்றும் ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஆகிய இரண்டு ஹார்மோன்களுமே இருக்கும். வயது அதிகரிக்கும் போது, இந்த இரண்டு வகை ஹார்மோன்களின் அளவிலும் மாறுபாடு ஏற்பட்டு, ஹார்மோன் சமநிலையின்மை தோன்றுகிறது. இதனால், சில நேரங்களில், ஆண்களுக்கான ஆண்ட்ரோஜன் ஹார்மோன் அதிகளவில் சுரப்பதாலும், சில பெண்களுக்கு முகத்தில் அடர்த்தியான முடிகள் தோன்றுவதுண்டு. சில பெண்களுக்கு பரம்பரை ரீதியாகவும், முகத்தில் அடர்த்தியான முடிகள் உருவாவது உண்டு. இதற்கு சிறந்த தோல் சிகிச்சை நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. சில மருந்துகளின் பக்கவிளைவுகளாலும், முகத்தில் முடிகள் தோன்றுவதற்கான வாய்ப்பு உள்ளது.

முகத்தில் தோன்றும் முடிகளை நீக்க: 
கருவி கொண்டு நீக்குதல்: 

 உருவாகும் முடிகளை, “ட்வீசர்’ என்னும் கருவி கொண்டு நீக்கும் முறையில், மிக விரைவாகவும், குறைவான விலையிலும் நீக்கலாம். போதிய வெளிச்சத்தில், முகத்தின் தாடை மற்றும் கன்னப்பகுதிகளில் காணப்படும் முடிகளை, “ட்வீசர்’ மூலம் எடுத்து விடலாம். அதன் பின், அந்த பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவத்தால் சுத்தப்படுத்த வேண்டும். ஆனால், இத்தகைய முறையால், அப்பகுதிகளில் எரிச்சல் உண்டாகும் வாய்ப்பு உள்ளது.

ஹேர் ரிமூவிங் கிரீம்: 

ஏதேனும் பார்ட்டி அல்லது வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய அவசர நேரத்தில், மிக விரைவாக முடிகளை நீக்க, ஹேர் ரிமூவிங் கிரீம்கள் பயன்படுகின்றன. இந்த கிரீம்கள், கைகள், கால்கள் மற்றும் அக்குள் ஆகிய பகுதிகளில் உள்ள முடிகளை நீக்குவதில் சிறப்பான முறையில் செயல்படுகின்றன. இத்தகைய கிரீம்களை பயன்படுத்துவதற்கு முன், அவற்றால் அலர்ஜி ஏதேனும் ஏற்படுமா என்பதை சோதனை செய்து கொள்ள வேண்டும்.

வாக்சிங்:

 தேவையற்ற முடிகளை நீக்குவதற்காக பயன்படுத்தும் மிகப் பிரபலமான முறை வாக்சிங். ஏனென்றால், இதற்கு மிக குறைவாக செலவாவதுடன், மூன்று முதல் நான்கு வாரங்களுக்கு பலன் அளிக்கிறது. வாக்சிங் செய்து முடித்த பின், செய்யப்பட்ட பகுதிகளில் தொற்று ஏற்படாமல் தடுக்கும் திரவம் பயன்படுத்தி சுத்தப்படுத்துவதுடன், குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். வெதுவெதுப்பான நீரால், சருமத்தின் துளைகள் திறந்திருப்பதால், தொற்று ஏற்பட வழிவகுக்கும்.

ப்ளீச்சிங்: 

முகத்தில் முடிகள் தோன்றும் பிரச்னையை சமாளிக்க ப்ளீச்சிங் செய்து கொள்ளலாம். ப்ளீச்சிங் செய்வதால், முகத்தில் காணப்படும் முடிகள் வெளுத்து, அவை எளிதில் மற்றவர்கள் பார்வைக்கு தெரியாது. ப்ளீச்சிங் சருமத்தை வறண்டு போக வைப்பதால், நல்ல மாய்ச்சரைசர் கிரீமை அப்ளை செய்ய வேண்டும்.

மருத்துவ முறைகள்:

எலக்ட்ரோலிசிஸ்: 

இந்த முறையில், ஊசியை தோலில் செலுத்தி, குறைந்த அளவிலான மின்சாரத்தை பாய்ச்சி, அதன் மூலம், முடிகளின் வேர் முடிச்சுகள் அழிக்கப்படுகிறது. ஆனால், இச்சிகிச்சை சிறியளவிலேயே பலன் தருவதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

லேசர் சிகிச்சை: 

லேசர் முறையில், முகத்தில் தோன்றும் முடிகளை வலியின்றி நீக்கலாம். இதன் பலன் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஒரு தடவை, நூற்றுக்கும் மேற்பட்ட முடிகள் நீக்கப்படும். இச்சிகிச்சைக்கான செலவு அதிகம். இச்சிகிச்சையால் சில விளைவுகள் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது


ஸ்லிம்மாக இருக்க விரும்புபவரா நீங்கள்?

கல்லூரி மாணவர்கள், இளம்பெண்கள் என அனைவருமே ஒல்லியாக இருக்கவே விரும்புகின்றனர்.

ஒல்லியாக இருப்பது தான் அழகு என்று நினைப்பது தான் இதற்கு காரணம். பல பெண்கள் சிம்ரன் போல ஒல்லியாக இருக்க வேண்டும்; சினேகா போல இடுப்பு வேண்டும் என்று தங்கள் எடையை குறைக்க விரும்புகின்றனர். விளைவு, “நான் டயட்டில் இருக்கேன்’ அப்படின்னு பெருமையா சொல்லிட்டு, அவங்க இஷ்டத்துக்கு ஏதேதோ சாப்பிடறாங்க; சில பேர் சாப்பிடாம பட்டினி கிடக்குறாங்க. சாப்பிடாமல் இருந்தால் ஸ்லிம்மாகி விடலாம் என்று யார் சொன்னது? உண்மையில், முறைப்படி சாப்பிட்டால் தான் ஸ்லிம்மாக முடியும். அளவாக சத்தான உணவை சாப்பிட் டால், என்றைக்கும் மாறாத இளமையோடும், அழகோடும் இருக்கலாம். அவரவர் உடம்புக்கு எந்தெந்த உணவு வகைகள் ஒத்துக் கொள்கிறதோ, அதைச் சாப்பிட்டு வந்தாலே போதும். அதை விட்டுவிட்டு சாப்பிடாமல் பட்டினி கிடந்தால், பீரியட்ஸ் ப்ராப்ளம், ரத்தசோகை, மன அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் தான் வரும். எனவே, ஒல்லியாகப் போறேன் அப்படின்னு உங்க இஷ்டத்துக்கு உணவை குறைக்காதீங்க; உங்கள் வயதுக்கேற்ற, ஆரோக்கியமான, சத்தான உணவை சாப்பிடுங்கள். அவரவர் உயரத்துக்கு தகுந்த எடையுடன் இருப்பது தான் அழகு. அப்படி நீங்க ஸிலிம்மாக விரும்பினால் நீங்கள் செய்ய வேண்டியவை:

மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்:


உங்கள் உடல் அமைப்பு, உணவுப் பழக்க வழக்கங்கள், நாள் ஒன்றுக்கு செலவாகும் சக்தி போன்ற பல விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மருத்துவர் உங்களுக்கு ஆலோசனை அளிப்பார். எனவே, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று அதற் கேற்ப டயட்டில் இருங்கள்.

உடற்பயிற்சி செய்யுங்கள்:

எடையைக் குறைக்க உடற்பயிற்சி மிகவும் அவசியம். ஜிம்,யோகா, நீச்சல், டான்ஸ், வாக்கிங் ஆகியவையும் உடற்பயிற்சி தான். இதுபோன்ற ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். அதற்காக, அதி தீவிரமாக பயிற்சியில் ஈடுபடாதீர்கள். அது ஆபத்தில் கொண்டு போய் விடும். அளவான பயிற்சி, அளவான சாப்பாடு போன்றவை தான் நல்ல பயனை தரும். டயட்டீஷியன், பிட்னெஸ் மாஸ்டர் ஆகியோரை ஆலோசித்து செயல்படுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உணவுமுறையில் கவனம் செலுத்துங்கள்:


ஸிலிம்மாக மாற வேண்டுமென்றால், நிச்சயமாக நீங்கள் உண்ணும் உணவில் கவனம் செலுத்த வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகள், கொழுப்புச்சத்து நிறைந்த பொருட்கள் ஆகியவற்றை தவிருங்கள். அவை சுவையுள்ளதாக இருப்பினும் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என்பதை நினைவில் கொள்ளுங்கள். இப்படி குண்டாக இருக் கோமே என்று கவலைப் படுவதை விட்டுவிட்டு, உரிய நபர்களிடம் தகுந்த ஆலோசனை பெற்று, உங்கள் விருப்பப்படி ஸிலிம்மாக மாறி லைப்பை என்ஜாய் செய்யுங்கள்.

துளசி இலையின் மருத்துவ குணங்கள்

எளிதாகக் கிடைக்கும் துளசியில் மகத்துவங்கள் ஏராளம். துளசிச் செடியை ஆரோக்கியமான மனிதன் தினமும் தின்று வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் அவன் வாழ்நாள் முழுவதும் வராது. ஜீரண சக்தியும், புத்துணர்ச்சியையும் துளசி இலை மூலம் பெறலாம்.

வா‌ய் து‌ர்நா‌ற்ற‌த்தையு‌ம் போ‌க்கு‌ம். நமது உடலுக்கான கிருமி நாசினியாக துளசியை உட்கொள்ளலாம். துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி நம்மை நாடாது. உடலின் வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க குளிக்கும் நீரில் முந்தைய நாளே கொஞ்சம் துளசி இலையைப் போட்டு வைத்து அதில் குளித்தால் நாற்றம் நீங்கும். தோலில் பல நாட்களாக இருக்கும் படை, சொரிகளையும் துளசி இலையால் குணமடையச் செய்ய முடியும்.

துளசி இலையை எலுமிச்சை சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதை தோலில் தடவி வந்தால் படைச்சொரி மறையும். சிறுநீர் கோளாறு உடையவர்கள் துளசி விதையை நன்கு அரைத்து உட்கொண்டு வர வேண்டும். கூடவே உடலுக்குத் தேவையான அளவிற்கு தண்ணீரும் பருகி வர பிரச்சினை சரியாகும்.

துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும்.

Thursday, August 14, 2014

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?

இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும்.


பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.

என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

குழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.

குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.

பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.

திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.

குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.

வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.

குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.

பலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்:

வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.

அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.

அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.

பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.

சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

வேக வைத்து மசித்த காய்கறிகள்:

பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.

முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

ஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.

எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.

ஒவ்வாமை:

குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.

குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.

உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.

உணவு சாப்பிட மறுத்தால்:

சில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.

சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.

ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.

சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.

நன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.

குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

வீடு பார்க்கப் போறீங்களா?

வீடு பார்க்கப் போகும் போது பகல் நேரத்திலேயே செல்லுங்கள். பஸ் ஸ்டாப்பிலிருந்து அந்த வீட்டுக்கு நடந்து சென்று பாருங்கள். ஏனென்றால் நடந்து வந்தால் தான் எவ்வளவு நேரம் (தூரம்) ஆகிறது என்று தெரியும். நீங்கள் கார், வண்டி வைத்திருக்கலாம். ஆனால் உங்கள் வீட்டில் மனைவியோ, குழந்தைகளோ அடிக்கடி வெளியே செல்ல பஸ்தான் தேவைப்படும்!


முடிந்த வரை உங்கள் பிள்ளைகள் படிக்கிற பள்ளி அருகிலேயே வீடு இருக்கும்படி பாருங்கள்.

வீட்டைச் சுற்றி இடமிருந்தால் அதன் வழியே நடந்து சுற்றிப் பாருங்கள். அப்போதுதான் எங்கிருந்தெல்லாம் உங்கள் வீட்டைப் பிறர் கவனிக்க முடியும் என்பது புரியும்.

நீங்கள் குடிபோகும் வீட்டில் ஏற்கனவே குடியிருப்பவர்கள் காலி பண்ணாமல் இருந்தால் நீங்கள் சென்று வீடு பார்க்காதீர்கள். யாருமே இல்லாமல் வெறும் வீட்டை மட்டும் பார்க்கும்-போதுதான் வீடு எவ்வளவு பெரியது, நாம் வைத்துள்ள பொருட்களுக்கு அந்த வீடு போதுமா? என்பது தெரிய வரும்.

தண்ணீ­ர் வசதி, மின் வசதிக்கு தனி மீட்டர் தானா என்று நீங்களே சோதித்துப் பார்த்து விடுங்கள்.

தண்­ணீர் பைப் லீக் ஆவது, பாத்ரூமில் தண்ணீ­ர் அடைத்துக் கொண்டு போகாமல் இருப்பது, சில கதவுகள், ஜன்னல்கள் லாக் பண்ண முடியாமல் இருப்பது என்று எதுவாக இருந்தாலும் உங்க வீட்டு உரிமையாளரிடம் சொல்லி செய்யச் சொல்லுங்கள். அந்த வசதியை அவர் செய்து கொடுத்த பிறகே குடி வாருங்கள். குடி வந்த பிறகு அவர் செய்து தரமாட்டார்.

சில இடங்களில் கீழ் வீட்டை வாடகைக்கு விட்டு விட்டு மாடி வீட்டில் உரிமையாளர் இருப்பார். அவர் நாய் வளர்த்தால் எங்கு கட்டி வைப்பார்கள் என்று பாருங்கள். கேட் அருகே அல்லது உங்கள் வீட்டருகே கட்டி வைத்தால் அது குரைத்துக் கொண்டே இருக்கும். உங்களுக்குத் தொந்தரவாக இருக்கும். மேலும் அந்த இடத்தையும் நீங்கள் தான் சுத்தம் பண்ண வேண்டி வரும்.

குடிபோகும்போதே, வீட்டில் எத்தனை டியூப் லைட், ஃபேன் மற்றும் கண்ணாடி, ஜன்னல் உடைந்திருக்கிறது என ஒரு நோட்டில் குறிப்பிட்டு உங்கள் கையெழுத்து மற்றும் வீட்டு உரிமையாளர் கையெழுத்தையும் வாங்கி பத்திரப்படுத்துங்கள். இல்லாவிட்டால் நீங்கள் காலி பண்ணும்போது ஏற்கனவே உடைந்திருந்த கண்ணாடி ஜன்னலுக்கும் நீங்கள்தான் தண்டம் அழவேண்டி வரும்.

நீங்கள் குடிபோகும் வீட்டின் காம்பவுண்டில் எத்தனை வீடுகள் உள்ளது என்று கவனியுங்கள். அவர்களுக்கு பாதை எது என்பதையும் கவனியுங்கள். ஏனென்றால் அவர்கள் செல்லும் பாதை உங்களுக்கோ, நீங்கள் புழங்கும் இடத்திற்கோ இடைஞ்சல் இல்லாமல் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

நீங்கள் எத்தனை இரு சக்கர வாகனம் வைத்துள்ளீர்கள்... உங்கள் வண்டியை நிறுத்த இடம் உள்ளதா எனபதைக் கவனியுங்கள்.

வீட்டு வாடகையை எத்தனை வருடத்துக்கு ஒருமுறை உயர்த்துவார்கள் என்பதைத் தெளிவாக பேசிக்கொள்ளுங்கள் ஏனென்றால், சில இடங்களில் உரிமையாளர் திடீரென்று 'அடுத்த மாத வாடகையுடன் ரூ.200 சேர்த்துக் கொடுங்கள்' என்று சொல்லி விடுவார்கள்.

Wednesday, August 13, 2014

கணினியில் வேலை செய்கிறீர்களா?

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிசெய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்:

* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.

* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.

* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். 

* கூடவே தண்ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். 

* தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.

* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். 

* தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.

* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.

* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்.

சோயா  சாதம்

தேவையானவை:

சோயா சங்க்ஸ் - 10,
பாசுமதி அரிசி அல்லது சீரக சம்பா அரிசி - ஒன்றரை கப்,
பச்சை பட்டாணி - அரை கப்,
நீளமாக நறுக்கிய  வெங்காயம் - 2,
தக்காளி - 1,
நெய் - 3 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்,
கிராம்பு - 2,
சோம்பு - சிறிது,
பட்டை - 1 துண்டு,  
மராட்டி மொக்கு - 1,
பிரியாணி இலை - 2,
ஏலக்காய் - 2,
தயிர் - 2 டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
புதினா இலை -  சிறிது,
கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு - தேவைக்கேற்ப,
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்.

அரைப்பதற்கு...

முந்திரி - 10,
சோம்பு - அரை டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 6,
கசகசா - அரை டீஸ்பூன்,
கிராம்பு - 2,
வெங்காயம் - பாதி,
இஞ்சி - சிறு  துண்டு,
பூண்டு - 6 பல், கொத்தமல்லி மற்றும் புதினா இலை (இரண்டும் சேர்த்து) - கால் கப்.

செய்முறை: 

 சோயா  சாதம்அரிசியை 10 நிமிடங்களுக்கு வெந்நீரில் ஊற வைத்து, தண்ணீரை வடித்து வைக்கவும். அதற்கு மேல் ஊற விட வேண்டாம்.  அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைக்கவும். சோயா உருண்டைகளை தண்ணீரில் ஊற வைத்து, 10 நிமிடங்களுக்கு மிதமான  தணலில் கொதிக் கவிட்டு, அடுப்பை அணைக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீரிலிருந்து சோயாவை தனியே எடுத்து,  அவற்றிலுள்ள அதிகப்படியான தண்ணீரைப் பிழிந்துவிட்டு, ஒவ்வொரு உருண்டையையும் நான்காக வெட்டவும். பிரஷர் குக்கரில் எண்ணெயையும் நெய்யையும் சூடாக்கவும். புதினா இலை, பிரியாணி இலை, சோம்பு, பட்டை, மராட்டி மொக்கு,  கிராம்பு, ஏலக்காய் சேர்க்கவும். வாசனை வரும் போது வெங்காயம் சேர்த்து பொன்னிறத்துக்கு வதக்கவும். தக்காளி சேர்த்து எண் ணெயும் தக்காளியும் தனித்தனியே பிரிகிற வரை வதக்கவும்.

தண்ணீர் சேர்க்க வேண்டாம். நறுக்கி வைத்துள்ள சோயா, பட்டாணி, மஞ்சள் தூள் சேர்த்து 3 நிமிடங்களுக்கு வேக விடவும். தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை. தயிர் சேர்க்கவும். அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து நன்கு கிளறவும். இந்தக் கட்டத்தில் அரிசியைச் சேர்த்து நன்கு பிரட்டவும். ஒன்றுக்கு ஒன்றே  கால் அளவு கணக்கில் தண்ணீர் சேர்க்கவும். தேவைப்பட்டால் இன்னும் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். உப்பு, எலு மிச்சைச்சாறு, கொத்தமல்லித்தழை சேர்த்து 2 நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். எலுமிச்சைச்சாறு சேர்ப்பதால் அரிசி ஒன்றோடு  ஒன்று ஒட்டாமல் வேகும். குக்கரை மூடி, குறைந்த தணலில் 2 விசில் வைத்து 10 நிமிடங்களுக்கு வேக விடவும். ரெய்த்தா உடன் பரிமாறவும்.

வீட்டு வைத்திய குறிப்புகள்!

சுக்கு, மிளகு, திப்பிலி, இஞ்சி, புளி, துளசி, பேரிக்காய், கேரட், நன்னாரி, சோற்றுக்கற்றாழை, சோம்பு, சுரைக்காய், பூசணிக்காய், விளாம்பழம், அமுக்கிராகிழங்கு, கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீழாநல்லி இவையனைத்தும் எளிமையாக கிடைக்கும் அல்லது ஏற்கனவே வீட்டில் பயன்படுத்தும் பொருட்களாகும். இவையனைத்தும் மனிதனுக்கு ஆரோக்கியத்தைக் கொடுக்கும் இயற்கையான மருத்துவ குணங்கள் கொண்டவை.

1.சுக்கு,மிளகு,திப்பிலி:
இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல், இருமல், ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது மல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்தி வரவேண்டும். இதனால் கொலஸ்ட்ரால் பிரச்சனை தினமும் கட்டுப்படுத்தப்படும்.

2.இஞ்சி:
தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது. வயதானவர்கள் பசியில்லை என்று சொல்ல மாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.

3.புளி:
சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் வைட்டமின் பி மற்றும் சி, டார்டாரிக் அமிலம், கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம், அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே, காய்ச்சல், ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு, பூண்டு,புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள். சாம்பார் தினமும் இடம் பெறட்டும்.

4.துளசி:
துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி இலைச் சாறில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி, இருமல் உள்ள குழந்தைகளுக்கு தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்த துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டிபயாட்டிக்குகள் நல்லதல்ல.

5.பேரிக்காய், காரட்:
இவற்றில் புற்று நோயை குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது.மூட்டுகளில் வலி இருந்தால் கொஞ்ச நாளைக்காவது மூலிகை நன்கு சேர்த்து வரவும்.

6.நன்னாரி:
உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும்.தினமும் 30 கிராம் அளவு வேரை தேனீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும். இரத்தம் சுத்தமாகும். எல்லா உறுப்புகளும் சீராகச் செயல்படும். காய்ச்சலின் போது நன்னாரி டீ அருந்தினால் உடனே உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும்.

Saturday, August 9, 2014

தீராத தலைவலிக்கு நொச்சி இலை வைத்தியம்


தமிழகத்தில் பருவநிலை மாற்றமடைந்துள்ளது. வெயில், காற்று, மழை என மாறி மாறி தட்பவெப்பநிலை நிலவுகிறது. இதனால் மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தும்மல், சளி பிடித்தல், இருமல், தலையில் நீர் ஏற்றம்,  தலைவலி மற்றும் காய்ச்சலால் அவதிக்கு ஆளாகின்றனர். சிக்குன்குன்யா, டெங்கு காய்ச்சல் மற்றும் விஷக்காய்ச்சலை கட்டுப்படுத்தும் நிலவேம்பு கசாயம் அனைத்து அரசு மருத்துவமனை சித்தா பிரிவிலும் கிடைக்கிறது. நோயாளிகள் குடித்தும், பவுடராக வாங்கியும் செல்கின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவக்கல்லூரி சித்த மருத்துவ உதவி மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி கூறியதாவது: சீதோஷ்ண நிலை மாற்றத்தால் சளி, காய்ச்சல் என சிகிச்சைக்கு வருகிறார்கள். சளி, காய்ச்சல் குணம் அடைய சித்தா மருத்தவ பிரிவில் தேவையான மருந்துகள் இருக்கிறது. உடல்வலியுடன் கூடிய விஷகாய்ச்சலுக்கு சித்த மருத்துவ பிரிவில் நிலவேம்பு என்ற கசாயம் காய்ச்சி வைத்து இருக்கிறோம். அதை இலவசமாக குடித்து செல்லலாம். தொடர்ந்து குடித்தால் நான்கு நாட்களில் குணமாகிவிடும். ஒருநாளைக்கு இருமுறை குடிக்கலாம். நாங்கள் மருத்துவமனையில் காலையில் மட்டுமே வழங்குகிறோம். இந்த கசாயத்தை வெறும் வயிற்றில் குடித்தால் பலன் அதிகம்.

இதுபோக, தலைவலிக்கு நீர்கோவை என்ற மாத்திரையை உரைத்து பத்துபோட வேண்டும். ஆடாதோடை என்ற இலையை கசாயமாக செய்து தொடர்ந்து 4 நாட்கள் குடித்தால், சளி, காய்ச்சல் கட்டுக்குள் வரும். மேலும் நொச்சி இலை அல்லது கற்பூரவள்ளி இலையை சுடுநீரில் போட்டு ஆவிபிடித்தால், மூக்கடைப்பு, மூக்கில் நீர்வடிதல், தும்மல், சளி பிடித்தல், இருமல், தலையில் நீர்ஏற்றம், தலைவலி குணமாகும். தாளிசபத்திரி சூரணம், வசந்தகுசுமாத்திரை, சுதர்சன மாத்திரை, சாந்த சந்திரோதயம் மாத்திரைகள் உட்கொண்டால் சளி மற்றும் காய்ச்சல் குணம் அடையும்.

Friday, August 8, 2014

லிப்ஸ்டிக் போடலாம் வாங்க!

சிலருக்கு தங்கள் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் தேர்ந்தெடுப்பது மற்றும் அதை போட்டு கொள்வது எப்படி என்று தெரிவதில்லை. அவர்களுக்கான டிப்ஸ் இதோ:

• கறுப்பாக இருப்பவர்கள் மிகவும் லைட்டாகவோ அல்லது டார்க்காகவோ இல்லாமல், பொதுவான கலரில் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம்.

• மாநிறமாக இருப்பவர்கள் நேச்சுரல் கலரில் லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், அழகாக இருக்கும்.

• சிவப்பாக இருப்பவர்களுக்கு எல்லா கலர் லிப்ஸ்டிக்கும் பொருத்தமாக இருக்கும்.

• வெயில் காலங்களில் இரண்டு கலர்களை சேர்த்து லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக இருக்கும்.

• லிப்ஸ்டிக்குக்கு ஏற்ற வகையில் லிப் லைனர் மற்றும் பென்சிலை தேர்ந்தெடுக்க வேண்டும். லைனர் போட்ட பிறகு, லிப் பிரஷ் பயன்படுத்தி லிப்ஸ்டிக்கை போட்டு கொண்டால், திட்டு திட்டாக இல்லாமல், ஒரே சீராக அழகாக இருக்கும்.

• லிப் லைனர் பயன்படுத்தும் போது, பெரிய உதடு உள்ளவர்கள், உதடுக்கு உள்ளே வரைந்தால், உதடுகள் சிறியதாக தெரியும்.

• உதடுகள் பெரிதாக தெரிய வேண்டுமெனில், முதலில் தேவையான நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டு கொள்ள வேண்டும். பிறகு வெள்ளை நிற லிப்ஸ்டிக்கை உதட்டின் நடுவில் தடவினால், உதடுகள் பெரிதாக பளிச்சென்று தெரியும்.

• உடையின் நிறத்துக்கு ஏற்ற லிப்ஸ்டிக் போட்டு கொண்டால், எடுப்பாக அழகாக இருக்கும். பொதுவாக, இந்திய பெண்களின் நிறத்துக்கு மெரூன், பிங்க் மற்றும் பிரவுன் கலர் லிப்ஸ்டிக் அழகாக இருக்கும்.

கலர் பிடிக்காதவர்கள் நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கை பயன்படுத்தலாம். மேற்கூறிய முறைகளை பின்பற்றி வந்தால், அழகான மற்றும் சிவந்த உதடுகளுடன் நீங்களும் அழகு ராணியாக வலம் வரலாம்.

இயற்கை தரும் ஆரோக்கியம்! - 300th Post

தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

 மூட்டு வலி குறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

 காதுவலி குறைய: கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

 கண் உஷ்ணம் குறைய: வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

 வாய்ப்புண் குறைய: பலா இலையை வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

தடுப்பூசிகள் அவசியமானதா?


ம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்! 
தடுப்பாற்றல் மண்டலம்:

உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், 'தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.
நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; இதற்கு 24 மணி நேரமும்
தடுப்பு மருந்துகள்
நம்மைக் 'காவல் காக்கும்’ வேலைதான். நாட்டைக் காக்கின்ற ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'கேம்ப் ஆபீஸ்’. ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். 'T’ அணுக்கள், 'B’ அணுக்கள், 'மேக்ரோபேஜ்’ அணுக்கள், 'எதிர் அணுக்கள்’ (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள்.  
ரத்தக்குழாய்களும், ரத்தக்குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க்குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள். சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் என்று சொன்னோமல்லவா? அவற்றுடன்தான் யுத்தம். இந்தக் கிருமிகளுக்குள்ளும் பலவிதங்கள் உண்டு. சுருக்கமாகப் பிரித்தால், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும்.
இந்த 'எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப் படை தன்னிடமுள்ள 'சிப்பாய்’களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்துத் 'தளபதி’க்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை.
இவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு 'நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது 'நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.
நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது? 'முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகள்:
தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம்.

சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் மஞ்சள்

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுக்கும். இதுப்போன்று சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கும். எனவே இப்போது மஞ்சளை எப்படியெல்லாம் பயன்படுத்தினால், என்ன பிரச்சனை நீக்கும் என்பதை பார்க்கலாம்.

• முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்த, பின் கழுவ வேண்டும்.

• மஞ்சள் தூளில் கடுகு எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் ஸ்கரப் செய்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் மூன்று முறை செய்து வந்தால், பருக்கள் படிப்படியாக மறைவதை காணலாம்.

• மஞ்சள் தூளில், வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் முகத்தில் உள்ள கருமை நீங்கும்.

• சருமம் சுருக்கங்களுடன் காணப்பட்டால், மஞ்சள் தூளில் கரும்புச்சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் சரிசெய்யலாம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள். மஞ்சள் தூளில் மோர் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன், சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

Thursday, August 7, 2014

"மணப்பெண்ணே தங்கமாய் ஜொலிங்க!"

முகூர்த்த்துக்கு நாள் குறித்ததும், அந்தப் பெண்ணுக்கு ஏற்படும் சந்தோஷத்துக்குச் சமமாக… டென்ஷன், அலைச்சல், கனவு, எதிர்பார்ப்புகள், பயம் ஆகியவையும் வரிசை கட்டும்! கலவர கண்கள், பூக்கும் பருக்கள்… என அதன் வெளிப்பாடு புறத்தோற்றத்திலும் பிரதிபலிக்கும். `கல்யாணப் பொண்ணு… என்ன இப்படி டல்லா இருக்கற…?!’ என்று பார்ப்பவர்களின் கண்களுக்கும் அது புலப்படும்.

அதையெல்லாம் தவிர்க்க, நிச்சயமான நாள் முதல் மணநாள் வரை, `ஒரு நல்ல வாழ்க்கை நமக்கு காத்திருக்கு’ என்ற அமைதியான மனதுடன், இந்தச் சருமப் பாதுகாப்பு பராமரிப்புகளையும் செய்து வந்தால், மணவறையில் நீங்கள் `ஜொலிக்குதே ஜொலி ஜொலிக்குதே’ தான்!

* தினமும் வெதுவெதுப்பான பாலில் பஞ்சை தோய்த்து கை, கால், நகம், விரல் இடுக்குகள் மற்றும் மூக்கு, காது பகுதிகளில் தேய்த்து சுத்தம் செய்யுங்கள். இந்த `க்ளென்ஸர்’ காரணமாக அழுக்கு நீங்கி, நகமும் பளபளப்பாக மின்னும்.

* உறங்கப்போவதற்கு முன் சூடான தண்ணீரில் ஒரு பிடி கல் உப்பு, நான்கு புங்கங்காய் தோலை போட்டு ஊற வைத்து, அதில் கால் இரண்டையும் பத்து நிமிடம் அமிழ்த்தி வையுங்கள். பிறகு எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி, அதன் தோலை காலில் தேய்த்துக் கழுவுங்கள்.வெள்ளைத் துணியால் நன்றாக துடைத்து விட்டு கிளிசரின் தடவுங்கள். வாரம் இரு முறையாவது இப்படிச் செய்து வந்தால்… பாதத்தின் வெடிப்பு, பிளவுகள் நீங்கும்! பின் மெட்டி போடும் போது `மெத்’தென்று இருக்கும்!

* காலில் ஷூ, கொலுசு போடுவதால் அந்த இடத்தை தவிர மற்ற இடங்களில் கறுப்பாக இருக்கும். பாதாம் ஆயில் அல்லது பாதாம் பருப்பு அரைத்த விழுதை பூசி வந்தால், கருமை மறைந்து எல்லா இடங்களும் ஒரே நிறத்துக்கு வரும்.

* சிலருக்கு கை, கால்களில் அதிகமாக முடி இருக்கும். இதற்கு கடலை மாவு, கஸ்தூரி மஞ்சளை சமமாக எடுத்து பேஸ்டாகும் அளவுக்கு பால் சேர்த்து திக்காக கலந்து பத்து போல் போடுங்கள். ஓரளவு காய்ந்ததும் (துடைத்து எடுக்கும் அளவுக்கு) சிறிய வெள்ளைத் துணியால் ஒற்றி எடுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இதைச் செய்து வர, முடி வலுவிழந்து லேசாகி உதிர்ந்து விடும்.

* பசும் மஞ்சளை விழுதாக அரைத்து, சிறிது பயத்த மாவு, பாலை கலந்து முகம் முதல் பாதம் வரை உடம்பு முழுவதும் பூசிக் குளியுங்கள். தோலைப் பளபளப்பாக்கி நல்ல வாசனையையும் கலரை கொடுப்பதோடு… குற்றாலத்தில் குளித்தது போல் உடம்பே குளுகுளுவென்று இருக்கும். மாலை சூடும் வேளையில், உங்களை தங்கம் போல ஜொலிக்க வைக்கும்!

* நன்கு காய்ச்சிய அரை கப் பாலை ஒரு பஞ்சில் நனைத்து, கண்கள், மூக்கைச் சுற்றிலும் ஒற்றி எடுக்க வேண்டும். சிறிது காய்ந்ததும் பஞ்சை இன்னொரு முறை பாலில் நனைத்து ஒற்றி எடுக்கவும்.

இவ்வாறு நான்கு அல்லது ஐந்து முறை செய்து பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் சுத்தம் செய்யவும். இது, உஷ்ணத்தை குறைத்து வெப்பத்தினால் ஏற்பட்ட சிறு சிறு கட்டிகள் மற்றும் தோலின் நிறம் ஆங்காங்கே மாறி இருப்பது போன்றவற்றுக்கு மிகவும் சிறந்தது.

* இரண்டு டீஸ்பூன் மாதுளைச் சாறை, ஒரு டீஸ்பூன் பாதாம் எண்ணையுடன் கலந்து முகத்தில் போடுவது, சருமத்தை வெளிறிப் போகாமல் காக்கும். பொதுவாக, சத்தான உணவு சாப்பிட்டாமல் இருப்பவர்களுக்கு கண்களும் முகமும் வெளிறிக் காணப்படும்.

இது, இரும்புச்சத்துக் குறைவால் ஏற்படுகிறது. மாதுளைச்சாறு, இழந்தச்சத்தை மீட்டுக் கொடுக்கும். பாதாம் ஆயில், சரும வறட்சியை நீக்கி மினுமினுப்பைக் கொடுக்கும்.

உருளைக்கிழங்கு கூந்தலை பளபளப்பாக்கும்!

உருளைக்கிழங்கு சமையலில் ருசியைக் கூட்டுகிற ஐட்டம் உருளைக்கிழங்கு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். உங்களை அழகுபடுத்தும் மந்திரமும் உருளைக்கிழங்கில் இருப்பது எத்தனை பேருக்குத் தெரியும்? உருளைக்கிழங்கின் தோலை நீக்கி, பொடியாக நறுக்கி வெயிலில் மொறுமொறுப்பாகக் காய வைத்து, பவுடராக்கிக் கொள்ளுங்கள்.

இந்த உருளை ஸ்டார்ச் பவுடர், ஒரு அற்புதமான அழகுக் கலை நிபுணர்! உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச், தோலை மிருதுவாக்கி, கூந்தலை பளபளப்பாக்கும்.

* கண்களுக்குக் கீழ் இருக்கும் கருமையைப் போக்குவதில் உருளைக்கிழங்குக்கு நிகர் வேறில்லை. 50 கிராம் உருளை ஸ்டார்ச் பவுடருடன், 10 கிராம் பார்லி பவுடரை கலந்து கொள்ளுங்கள். இதிலிருந்து ஓரு டீஸ்பூன் எடுத்து, மசித்து வாழைப்பழம் ஒரு டீஸ்பூன் கலந்து கண்களைச் சுற்றிப் பூசுங்கள். இதைத் தொடர்ந்து செய்தால் கண்களுக்குக் கீழ் இருக்கும் கருமை மறையும்.

* முகத்தை ப்ளீச் செய்தது போல பளிச்சென்று மாற்றும் சக்தி
உருளைக்கிழங்குக்கு உண்டு. ஸ்டார்ச் பவுடர் 50 கிராமுடன் 200 கிராம் பார்லி பவுடரைக் கலந்து கொள்ளுங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, பால் கலந்து முகத்தில் பேக் ஆகப் போட்டுக் கழுவுங்கள். முகம், அன்று மலர்ந்த தாமரையாக ஜொலி ஜொலிக்கும்.

* சிலருக்கு பாதம், நகங்களில் வெடிப்பு ஏற்பட்டிருக்கும். சிலருக்கு கழுத்து, முழங்கை, மூட்டுப் பகுதிகள் கருத்து, தோலும் முரடுதட்டிப் போயிருக்கும். இதற்கு ஒரு டீஸ்பூன் உருளை ஸ்டார்ச் பவுடர், அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இரண்டையும் கலந்து, வெடிப்பு, கருமை படர்ந்த இடங்களில் பூசுங்கள். வெடிப்பு மறையும். கருமையும் காணாமல் போகும்.

* உருளை ஸ்டார்ச் பவுடர், கஸ்தூரி மஞ்சள், பயத்தமாவு மூன்றையும் ஒரே அளவு எடுத்து, கலந்து, குளியல் பவுடராகப் பயன்படுத்துங்கள். உடலைக் குளிர்ச்சியாக்கி, புத்துணர்வை அள்ளித் தரும் ஸ்நானப் பொடி இது.

* நான்கு சீயக்காய்களை முந்தைய நாள் இரவே வெந்நீரில் ஊற வையுங்கள்.


மறுநாள், இந்த சீயக்காய்களுடன் 4 செம்பருத்தி இலை, 2 டீஸ்பூன் உருளை ஸ்டார்ச் பவுடரை சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதைத் தலையில் தேய்த்துக் குளியுங்கள். உடல் சூடு தணிவதுடன் தலையும் சூப்பர் சுத்தமாகிவிடும்.

* கூந்தல் பளபளவென மின்ன வேண்டுமா? பூந்திக் கொட்டை, காய்ந்த செம்பருத்தி இலை. வெந்தயம், பயத்தம் பருப்பு, உருளை ஸ்டார்ச் பவுடர். இவற்றை தலா கால் கிலோ எடுத்து மெஷினில் கொடுத்து பவுடராக்குங்கள். வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து இந்தப் பவுடரைப் போட்டு அலசுங்கள். கூந்தல் பட்டுப்போல மின்னும்.

* அரை கிலோ வெந்தயத்துடன், உருளை ஸ்டார்ச் பவுடர், பூலான் கிழங்கு, சீயக்காய் மூன்றையும் தலா 100 கிராம் சேர்த்து, வெட்டிவேர் 10 கிராம் கலந்து சீயக்காய் மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வாரம் இருமுறை தலைக்குத் தேய்த்து அலச, வறண்ட கூந்தல் மிருதுவாகும்.

ரோஜாப்பூ தரும் அழகு பயன்கள்

ரோஜாப்பூ
அழகு பலன்களை அள்ளித் தருவதில் ரோஜாவுக்கு இணை வேறு எதுவும் இல்லை.

* ரோஜா பன்னீர் தயாரிக்கும் முறை இதற்கு பிங்க் நிற ரோஜாக்கள் தான் பயன்படுத்த வேண்டும். வருடங்கள் கடந்தாலும் வாசனை போகாமல் அப்படியே இருக்கும் இந்த ரோஜா பன்னீரை, தயாரிக்கும் விதம் இதோ...

* 50 ரோஜாக்களை இதழ்களாக உதிர்த்துத் தனியாக வைத்துக் கொள்ளவும். 2 லிட்டர் தண்ணீரைக் காய்ச்சி, அதில் ரோஜா இதழ்களைப் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடுங்கள். தண்ணீர் அரை லிட்டராக சுண்டியதும் ஆற வைத்து, வடிகட்டி பாட்டிலில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இது தான் பன்னீர். தேவைப்படும் போது ஐஸ் டிரேயில் நிரப்பிப் பயன்படுத்தலாம்.

* கர்ப்பிணிப் பெண்களுக்கு குழந்தைப் பிறப்புக்குப் பிறகு வயிற்றில் ஏற்படும் வரிகளை போக்குவதுடன், வராமல் தடுக்கவும் உதவுகிறது. ரோஜா பன்னீர். அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சளுடன் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர், கால் டீஸ்பூன் பால், இவை கலக்கும் அளவுக்கு ரோஜா பன்னீரை சேர்த்து, குளிப்பதற்கு முன்பு வயிற்றுப் பகுதியல் 5 நிமிடம் தடவி விட்டு குளியுங்கள். இதனால் வயிற்றுப் பகுதி வரிகள் மறைந்து விடும். டெலிவரி ஆவதற்கு 2 மாதங்களுக்கு முன் பிருந்தே இந்த பேஸ்ட்டைத் தடவி வரலாம். இப்படிச் செய்தால் வரிகள் விழாது.

* பிறந்த குழந்தைகள் சில நேரம் இரவில் தூங்கவே தூங்காது. இதற்கு, அரை டீஸ்பூன் கடலை மாவுடன், பயத்தமாவு, பூலாங் கிழங்கு பவுடர் தலா அரை டீஸ்பூன் எடுத்து இவை கலக்கும் அளவுக்கு பன்னீரைச் சேருங்கள். இந்த பேஸ்ட்டை குழந்தைக்குத் தேய்த்துக் குளிப்பாட்டுங்கள். இந்த வாசனைக்கே குழந்தை நிம்மதியாக உறங்கும். சருமத்துக்கு நல்ல நிறத்தையும் கொடுக்கும் இந்த பன்னீர்க் கூட்டணி.

* மேக்கப் போட்ட பிறகும் சிலருக்கு முகத்தில் எண்ணெய் வடிந்து கொண்டேயிருக்கும். டல்லடிக்கும் முகத்தையும் டாலடிக்க வைக்கும் சக்தி பன்னீருக்கு உண்டு. அரை டீஸ்பூன் முல்தானிமெட்டி பவுடருடன் அரை டீஸ்பூன் அரை டீஸ்பூன் சந்தனப்பவுடர் சேர்த்து, எடுத்து இவை கலக்கும் அளவுக்கு பன்னீரை விட்டு முகத்தில் பூசி கழுவுங்கள். பிறகு `மேக்கப்' போடுங்கள். முகத்துக்குப் புத்துணர்வைக் கொடுக்கும் இந்த பேக், நீங்கள் வீட்டுக்கு `பேக்கப்' ஆகும் வரை உங்கள் `மேக்கப்' கலையாமல் இருக்கும்.

* அரை டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடருடன், ஜாதிக்காய் பவுடர், சர்க்கரை, வெண்ணெய், இவை தலா கால் ஸ்பூன் எடுத்து, இவை கலக்கும் அளவுக்குப் பன்னீரை விட்டு பேஸ்ட் செய்யுங்கள். இந்த கிரீமை வாரம் ஒரு முறை முகத்தில் மேலும் கீழுமாகப் பூசி வந்தால் பளீரென முகம் பிரகாசிக்கும். பருக்களும் மறைந்து, ஃபேஷியல் செய்தது போல் உங்கள் முகம் ஜொலி ஜொலிக்கும்.

* ரோஜாப் பூவில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும். இதிலிருந்து எடுக்கப்படும் தைலம் சருமத்துக்கு மிருதுத் தன்மையையும் பளபளப்பையும் கொடுப்பதுடன் நல்ல நிறத்தையும் தருகிறது.

Wednesday, August 6, 2014

கருப்புன்னு கவலையா?-சிவப்பழகியா மாறுங்க!

கருத்த சருமம் கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கருப்பான பெண்கள் நிறமாக மாற, அப்படிக் காட்டிக் கொள்ள என்னவெல்லாம் அழகு சிகிச்கைகள் உள்ளன….?
பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்து கொள்ளக்கூடிய சிகிச்சைக
ள்.


பழ பேஷியல்


முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரிச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங்கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத்தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்துக்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கிறபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள்ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், இரண்டு துளிகள் தேன், கொஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.


காய்கறி பேஷியல்


முதலில் சொன்ன மாதிரி பச்சைப் பாலால் முகத்தைத் துடைக்கவும். முட்டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள்ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டைக் கோஸ் மசித்ததைக் கொண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடையே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தைத் துடைத்து விட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.

மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் பதினைந்து நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல்லாதவர்கள் என்றால் பத்து நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.

சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச்சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன்றாகக் குழைத்து முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் அப்படியே விட்டு பிறகு கழுவலாம்.

நன்கு அடித்த பூவன் வாழைப் பழத்துடன் தேன், ஆரஞ்சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.

குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்குமப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்துக்கு வரும் போது குடிப்பது தான் பலன் தரும்.

ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்தனத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.

வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூ வீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இளநீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

கர்ப்பிணி பெண்களுக்கு சீமந்தம் கட்டாயமானதா?

ஆணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் ஆன பின் சில மாதங்களில் கர்ப்பமானதும்  வளைகாப்பு பெண்களுக்காக கொண்டாடப்பட்டு தான் வருகின்றது. கர்ப்ப காலத்தில் நிறைய சம்பிரதாயங்களும் அதை சார்ந்த கொண்டாட்டங்களும் இருந்து கொண்டு தான் உள்ளன. இவை நமக்குள் உற்சாகத்தையும் கொண்டாடடத்தையும் கொண்டு வரும். கலாச்சாரங்களும் கொண்டாட்டங்களும் நம்முடைய மற்றும் நமதுசமூதாயத்தின் நலன் கருதிதான் இருக்கும். இத்தகையகாரியங்கள் கர்ப்பிணி பெண் ணை தனித்துவமாகவும் சந்தோஷமாகவும் வைக்கும். எல்லாவித கொண்டாட்டங்களின் மத்தியில் வளையல் அணிவிக்கும் விழா மிகவும் சிறப்புமிக்கதாக இருக்கும்.

 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் போடுவதன் மூலம் எளிதாக பிரசவம் ஆகும் என் று ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதை நாம் வளைகாப்பு மற்றும் சீமந்தம் என்றும் அழைப்போம். கர்ப்பமான பெண்ணின் வீட்டார்பலரையும் இந்த விழாவிற்கு அழைப்பார்கள். அவர்கள் அப்பெண்ணுக்கு ஆளுக்கு இரண்டு வளையல்களை போட்டு விடுவார்கள்.

 இதை தவிர வேறு பல கொண்டாட்டங்களும் கர்ப்பிணி பெண்களுக்காக நடத்தப்படும். இத்தகைய விழாக்களை கொண்டாடுவதில் ஏதேனும் அறிவியல் ரீதியான அர்த்தம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் சிலர் இவற்றை போலியானவை என்றும் கூறுகின்றனர். கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்துவதால் பிரசவம் எளிதாக அமையுமா…?

 நீங்கள் கர்ப்பமான பின்பு உங்களது அடுத்த தேடல் எவ்வாறு எளிதான முறையில் குழந்தையை பெற்றெடுப்பது என்பது தான். கீழ்காணும் பகுதியில் அறிவியல் காரணத்துடன் செய்யப்படும் சம்பிரதாயங்க ளை பற்றி பார்ப்போம்: இவை எளிய முறையில் குழந்தையை பெற்றெடுக்க உதவுகின்றது.

வளையல் விழா:  ‘வளையல்க ளை கர்ப்பிணிகளுக்கு பரிசளிக்கும்போது அந்த வளையலின் சத்தம் குழந்தையை சென்றடைகின்றது. செவியைமட்டும் பயன்படுத்தி வெளியுலகை உணரமுடியும் தன்மையை கொண்ட சிசு இத்தகைய சத்தங்கள் கேட்பதற்கு ஏங்கிக் கொண்டிருக்கும்’ என் று கூறுகிறார்கள். இதுதான் நமக் கு பிரசவத்தை எளிதாக்குகின்றது.

பிரசவ இடம்: வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புவதை போல முதல் பிரசவத்தை தாய் வீட்டில் வைத்தால் அப்பெண் ணுக்கு பயங்கள் நீங்கி அவளின் எளிய பிரசத்திற்கு உதவியாக இருக்கும் என்ற கருத்தும் உண்டு. இது பிரசவத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய முக்கிய குறிப்பாகும்.

பயணம்: கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்கள் தாய் வீட்டிற்கு ஏழு அல்லது ஒன்பது மாதத்தில் செல்வார்கள். கரு கலைவ தற்கு வாய்ப்பு இருப்பதால் கடைசி மாதங்களில் செல்கின்றனர். அது மட்டுமல்லாமல் பிள்ளையை பெற்ற பின் கணவர் வீட்டிற்கு மூன்று மாதத்திற்கு பின் தான் வரமுடியும். இது உடலுறவை தவிர்பதற்காக செய்யப்படும் முயற்சியாகும்.

இசையின் அற்புதங்கள்: கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு பொதுவாக மன அழுத்தம் அதிகமாக இருக்கும். இந்த சமயங்களில் நல்ல மெல்லிய இசையை கேட்டுக் கொண்டிருந்தால் இந்த மன அழுத்தத்திலிருந்து அற்புதமாக தப்பிக்க முடியும். இது சிசு கேட்கும்திறனை அதிகரிக்கும். மிகவும் அதிகமான மன அழு த்தம் உள்ள பெண்ணிற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவே குறைந் த எடை கொண்ட குழந்தைகள் பிற க்க வாய்ப்பு அதிகம்.

உணவு முறை: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தனிப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டும். வளையல் போடுவது பிரசவத்தை எளிதாக்கும் என்று நாம் நம்புகிறோம் அல்லவா, அப்போது நல்ல சத்தான உணவும் இதற்கு உதவும் என்று நம்புவோம். இந்த ஒரு காரியத்தை எந்த ஒரு பெண்ணும் நிச்சயம் பின்பற்ற வேண்டு ம். இவை எந்த ஒரு விழாவில் இல்லாவிட்டாலும் இதை பின்பற்ற வேண்டும்.

நெய் சாப்பாடு: இந்திய கலாச்சாரப்படி கர்ப்ப கால பெண்கள் கணவன் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு செல் லும்போது நெய் டப்பாவை கொடுத்தனுப்புவார்கள். ஏனெனில் நெய் சாப்பிட்டால் தசைகளை தளர வைத்து பிரசவத் தை சுலபமாக்கும் என்று அறிவியல் ரீதியாக நிருபிக்கப்பட்ட விஷயமாகும்.

விழாக்கள் மற்றும் கொண்டாட்டங்கள்: எந்த ஒரு பெண்ணின் கர்ப்பகாலத்திலும், அவளது பெற்றோராலும் நண்பர்களாலும் அவள் மிகவும் தனித்துவமாக உபசரிக்கப்படுவாள். இவை அந்த பெண்ணை சந்தோஷமாகவும், மனதை அமைதியாகவும் வைக்கும். இது ஒரு முக்கியமான ஆலோசனையாகும். இந்த சமயத்தில் மனதை அமைதியாக வைத்து உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக வைப்பது பிரசவத்திற்கு மிகவும் அவசியமானதாகும்.

சர்க்கரை நோய்க்கு வீட்டில் இருக்கு மருந்து

சாதாரண தலைவலி, இருமல் வந்தாலே பர்ஸ்சை துடைத்து போடும் அளவுக்கு செலவாகிறது. இதில் சர்க்கரை நோய் வந்தால் என்ன செய்வது என  கவலைப்பட வேண்டாம். இன்சுலின் செடி சர்க்கரைநோய்க்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இன்சுலின் செடியை வீட்டிலே வளர்த்து அவற்றை  நாம் சர்க்கரைநோய்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் செடியின் இலை உடலுக்கு தேவையான அதிக பயன்களைத் தருகிறது. சர்க்கரை நோய் உள்ளவர்கள்  இன்சுலின் மருந்து பயன்படுத்த வேண்டும் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் நிலை சர்க்கரை நோயாளிகளை தவிர்த்து 2ம் நிலை சர்க்கரை  நோயாளிகள் இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதைத் தவிர்க்க இன்சுலின் செடியின் இலை ஒன்றை தினந்தோறும் காலையில் வெறும் வயிற்றில்  சாப்பிட்டுப் பாருங்கள்... பலன் அறியலாம்.  

இந்த இலையைத் தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்கள் ஐரோப்பிய, அமெரிக்கவிஞ்ஞானிகள்.  ஆரம்ப நிலை சர்க்கரையாளர்களுக்கு காஸ்டஸ்பிக்டஸ் எனும் இன்சுலின் செடி அதிக பலன் தருகிறது என அவர்களின் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.  இந்தச்செடி கேரளாவில் அதிகம் உபயோகிக்கப்படுகிறது. இந்த இன்சுலின் செடியின் இலையை தொடர்ந்து சாப்பிடுவதால் ஏற்படக் கூடிய மாற்றங்கள்  குறித்து முழுமையாக ஆராய்ச்சி செய்து வரும் ஐரோப்பியா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் இன்சுலின் மருந்து விலங்கிலிருந்தும், சின்தடிக்  முறையிலும் தான் தயாரிக்கப்படுகிறது.

சர்க்கரை நோயாளிகளுக்கு இதைவிட மாற்று மருந்து ஏதும் இல்லை. இன்சுலின் மருந்து மாத்திரை வடிவிலோ, திரவ மருந்தாகவோ இன்னும் கண்டு  பிடிக்கவில்லை. ஊசிமட்டுமே ஒரே வழியாகும். தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவைக்  கட்டுப்படுத்துவதோடு இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவலையும் படிப்படியாக்க் குறைக்கிறது. பல்லாண்டு பயிரான காஸ்டஸ் பிக்டஸ்  தாவரத்தின் இலை சாப்பிட்டால் எத்தகைய பின் விளைவிகளும் ஏற்படுவது இல்லை என்று ஆராய்ச்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம்  இன்சுலின் ஊசி போடுவது கட்டாயமில்லை என்ற நிலையில் சர்கரை நோயாளிகள் பயன் அடையலாம்.

 

செம்பருத்தியின் மருத்துவ குணம்!

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூ பார்க்கறதுக்கு மட்டுமல்ல... வைத்தியத்துக்கும் ரொம்ப சிறப்பானது. அதோட வேர், இலை, மொட்டு, பூ எல்லாமே மருத்துவ குணம் நிறைஞ்சதுதான். இது பருத்தி வகையைச் சேர்ந்த ஒரு செடி. இதோட பூக்கள் இரண்டு வகையா இருக்கும். ஒரு வகை பூக்கள் அடுக்கடுக்கா காட்சியளிக்கும். இன்னொரு வகை, தனித்தனியா அகலமா காட்சியளிக்கும். இந்தச் செடி எட்டடி உயரம் வரைக்கும் நல்லா செழித்து வளரும். இதோட பூக்கள், வருஷம் முழுக்கப் பூத்துக்கிட்டே இருக்கும்.


உடல் உஷ்ணம் குறைய...

உடல் உஷ்ணம் அதிகமாகிவிட்டால் பலவித பிணிகள் வர வாய்ப்புண்டு. இதுபோல் வராமல் தடுக்க, ஐந்து செம்பருத்திப் பூவைக் கொண்டு வந்து ஒரு லிட்டர் நீர் விட்டுப் பாதியாகச் சுண்டக் காய்ச்சி எடுத்துவைத்துக் கொண்டு குடிநீருக்குப் பதிலாக, இதனைப் பயன்படுத்தலாம். இதனால் உடல் உஷ்ணம் குறைஞ்சுடும். சாதாரண காய்ச்சலுக்கும் இந்த நீரைக் குடித்து நிவாரணம் பெறலாம்.


வெட்டை நோய் குணமாக...

ரகசிய வியாதிகளின் பிரிவைச் சேர்ந்த வெட்டை நோயை செம்பருத்திப் பூ குணமாக்குகிறது.

இந்தப் பூவினை அதிகாலையில் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவிட்டு ஒரு டம்ளர் பசுவின் பால் சாப்பிட வேண்டும். இதுபோன்று நாற்பது நாட்கள் அதிகாலையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் கடுமையான வெட்டை நோய் இருந்தாலும் குணமாகும்.இருதயம் பலம் பெற...

இருதய பலவீனமானவர்களுக்குச் செம்பருத்தி பூ டானிக் சிறப்பாக உதவுகிறது.

செம்பருத்திப் பூவை 250 கிராம் கொண்டு வந்து துண்டு துண்டாக நறுக்கி, ஒரு கண்ணாடிப் பாத்திரத்தில் போட்டு 50 கிராம் எலுமிச்சம் பழத்தின் சாறை அதில் பிழிந்துவிட்டு கலக்கி, காலையில் வெயிலில் வைக்கவும். பின்னர் மாலையில் எடுத்துப் பிசையவும். அப்போது சிவப்பான சாறு வரும். அந்தச் சாறை ஒரு சட்டியில் ஊற்றி சேர்க்க வேண்டிய சர்க்கரையைச் சேர்த்துக் காய்ச்சி சர்பத் செய்து வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.

இதிலிருந்து காலை_மாலை இரு வேளைகளிலும் ஒரு ஸ்பூன் எடுத்து 2 அவுன்ஸ் நீரில் கலந்து குடிக்கவும். இதுபோன்று தொடர்ந்து குடித்து வந்தால் இரத்தம் சீரான முறையில் பரவும். இருதயமும் பலம் பெறும்.


பேன் தொல்லை ஒழிய...

சில பெண்களுக்கு பேன் பெருந்தொல்லை தரும். இதுபோன்றோர் செம்பருத்திப் பூக்களைப் பறித்துத் தலையில் வைத்துக் கட்டிக்கொண்டு இரவு படுத்துக் கொள்ளவும். இதுபோன்று மூன்று நான்கு தடவைகள் செய்தால் தலையிலுள்ள பேன்கள் ஒழிந்துவிடும். தவிர, பொடுகு, சுண்டுகள் இருந்தாலும் நீங்கிவிடும்.


குழந்தையின் வளர்ச்சிக்கு...

சில குழந்தைகள் பிறக்கும்போதே பலகீனத்துடன் பிறப்பதுண்டு. இதனால் வயதிற்கேற்ப வளர்ச்சியில்லாமல் இருக்கும். இக்குறையைப் போக்கிட, ஐந்து செம்பருத்தி பூக்களை, ஒரு மண்பாண்டத்தில் போட்டு அரைலிட்டர் நீர் விட்டு கால் லிட்டராகக் காய்ச்சி வடிகட்டி பனைவெல்லம் சேர்த்துக் கொடுத்து வர வேண்டும். தொடர்ந்து கொடுத்து வந்தால், சில நாட்களிலேயே குழந்தை வளர்ச்சியில் நல்ல பலன் தெரியும்.