Pages

Showing posts with label மூட்டு வலி. Show all posts
Showing posts with label மூட்டு வலி. Show all posts

Tuesday, April 21, 2015

மூட்டு வலியை போக்கும் முத்தான 4 பயிற்சிகள்


 
உடல் எடைக்கும், மூட்டு வலிக்கும் நேரடித் தொடர்பு உண்டு. உடல் பருமன் காரணமாக முழங்கால் மூட்டுக்கு அழுத்தம் உண்டாவதால், வலி ஏற்படுகிறது.

சில எளிய பயிற்சி மூலம் தொடைப் பகுதி தசைகளுக்கு வலுகூட்டினால், அவை மேல் முழங்கால் மூட்டினை இழுத்துப் பிடித்து கீழ் மூட்டுடன் உரசுவதைத் தவிர்த்துவிடும்.

 இந்தப் பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தால், 1 மாதத்தில் வித்தியாசத்தைக் காணலாம்.

1.லெக் எக்ஸ்டென்ஷன் (ஐஸொமெட்ரிக்) : ஒரு நாற்காலியில் அமர்ந்து ஒவ்வொரு காலையும் பொறுமையாக நீட்டி 10 முதல் 15 நொடிகள் அப்படியே வைத்திருந்து பின்னர் மடக்கவும். இது போல் 5-7 முறை பயிற்சி செய்யவும். தேவைப்பட்டால், கணுக்காலில் கனம் சேர்க்கலாம் (ankle weight).

2. சிட்-அப்ஸ் (ஐஸோடானிக்) : கால்களை அகட்டி, கைகளை முன்நோக்கி நீட்டி, நாற்காலியில் உட்கார்வது போல செய்ய வேண்டும். சில நொடிகள் இதேநிலையில் இருந்துவிட்டு, பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இது போல் 15 முதல் 20 முறை செய்ய வேண்டும். ஸ்விஸ் பந்து இருந்தால, முதுகில் சாய்வதற்கு  அதனை பயன்படுத்தலாம்.

3. லயிங் அன்ட் லெக் ரைஸிங் (ஐஸோமெட்ரிக்) : தரையில் மல்லாக்கப்படுத்து வலது காலை மேல் நோக்கி உயர்த்தி, 20 நொடிகள் வரை அப்படியே வைக்க வேண்டும். பின்னர் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்.  இதேபோல், இடது காலுக்கும் செய்யவும். ஒவ்வொரு பக்கமும் 5 முதல் 7 முறை பயிற்சி செய்யவும். தேவைப்பட்டால், கணுக்காலில் கனம் சேர்க்கலாம் (ankle weight). மிகவும் முற்றிய மூட்டு வலி உள்ளவர்களும்,, படுக்கையில் இருக்கும் நோயாளிகளும்கூட இதைச் செய்யலாம்.

4. லெக் கர்ல் (ஐஸோடானிக்) : குப்புறப் படுத்துக்கொண்டு முழங்காலை பின் நோக்கி மடக்கி பின்பு நீட்ட வேண்டும். அடுத்த காலுக்கும் இந்த பயிற்சியை செய்யவும். இவ்வாறு இந்த பயிற்சியை 5 முதல் 10 நிமிடம் செய்ய வேண்டும்.

Wednesday, April 1, 2015

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!


 sukku க்கான பட முடிவு

பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!
உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில் இருக்கும் சுக்கு. இஞ்சியை நன்கு காய வைத்து பொடி செய்தால் வெள்ளை நிறத்தில் இருக்கும். இந்த பொடி நன்கு மணமாக இருக்கும். இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால், ஒரு வருடம் வரை பயன்படுத்தலாம்.


மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும் 

சுக்கு ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும். ஏனெனில் இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் நிறைந்துள்ளது. அதற்கு ஒரு பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால், மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி நிவாரணம் கிடைக்கும்.


Friday, August 8, 2014

இயற்கை தரும் ஆரோக்கியம்! - 300th Post

தொண்டைப்புண் குறைய: சித்தரத்தை எடுத்து இடித்து பொடி செய்துக் கொள்ள வேண்டும். இந்த பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தொண்டைப்புண் குறையும்.

தலைவலி குறைய: கற்பூரவல்லி, நல்லெண்ணெய், சர்க்கரை ஆகியவற்றை கலந்து நன்கு கலக்கி நெற்றியில் பற்று போட்டு வந்தால் தலைவலி குறையும்.

 மூட்டு வலி குறைய: கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சம அளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சுட வைத்து அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலிஉள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டுவலி குறையும்.

 காதுவலி குறைய: கடுகை அரைத்து காதுக்கு பின்புறம் பற்று போட்டு வந்தால் குளிர்ச்சியினால் ஏற்படும் காதுவலி குறையும்.

 கண் உஷ்ணம் குறைய: வெள்ளை நத்தியாவட்டைப் பூவை எடுத்து கண்களில் மேல் வைத்து அடிக்கடி ஒற்றிக்கொண்டே இருந்தால் கண்களில் ஏற்படும் உஷ்ணம் குறையும்.

 வாய்ப்புண் குறைய: பலா இலையை வடிகட்டி அதனுடன் பனங்கற்கண்டை கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் குறையும்.

Sunday, March 16, 2014

மூட்டு வலியால் முடக்கம்

மூட்டு வலி
பொதுவாக மூட்டுகள் மூன்று வழிகளில் பாதிக்கப்படுகின்றன. முதலாவது தேய்மானத்தால் வருவது. சர்க்கரை நோய் இளமையிலேயே முதுமையை கெடுக்கும். சாதாரணமாக 65-70 வயதுகளில் வரக்கூடிய தேய்மானம் 40-50 வயதில் வந்து விடும். இரண்டாவது வகை. நோய்த் தொற்று காரணமாக பாதிக்கப்படுவது.

காசநோய் கிருமிகள் போன்ற கிருமிகளால் வரக்கூடியது. மூன்றாவது வகை மூட்டு பாதிப்பு தன்னைத்தானே தாக்கும் நோய்களில் ஒன்றால் வருவது. இந்த பாதிப்பு திடீரென வரலாம். விரைந்து சரியாகி விடும் அல்லது படிப்படியாக தீவிரமாகிப் பொருத்த தொல்லைகள் தரலாம். இரண்டு எலும்புகள் இணையும் பகுதி மூட்டு இரண்டையும் இணைப்பது மூட்டு உறை.

இரண்டு எலும்புகளின் நுனிப்பகுதிகளை ரப்பர் போன்ற குருத்தெலும்பு மூடி இருக்கும். இது மெத்தை போன்று மிருதுவானதாகவும் அதிர்ச்சியை தாங்கும் அமைப்பாகவும் உள்ளது. மூட்டுகளில் பசை போன்ற திரவம் உள்ளது. இதை சைனோவியல் திரவம் என்கிறார்கள். இது குருத்தெலும்பை மசகுத்தன்மை கொண்டாக வைத்துள்ளது.

மூட்டுகள் பாதிப்பு அடையும் போது எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உரசி தேய்ந்து விடுகின்றன. தேய்ந்த எலும்புகள் உரசும் போது வலி உண்டாகிறது. ஆரோக்கியமான உணவு முறை நோய் எதிர்ப்பு சக்தியை தர வல்லது. கொழுப்பு, உப்பு, இனிப்பு சத்துகள் அதிகமுள்ள உணவுப்பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

அசைவ உணவுகளை குறைத்துக் கொள்ள வேண்டும். தானிய வகைகள், காய்கறிகள் பருப்பு வகைகள், பரிந்துரைக்கப்பட்ட பழங்கள் ஆகியவற்றை வேண்டிய அளவுகளில் தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும். முறையான உடற்பயிற்சி மூட்டுகள் ஒரே நிலையில் இறுகி விடாமல் தடுக்கிறது. சரியாக இயங்க வைக்கிறது.

மூட்டு வலி
மூட்டுகளை சுற்றியுள்ள தசைகளை வலுப்படுத்தி மூட்டுகளுக்கு வலிமையை உண்டாக்கி வலியை குறைக்கும். வழக்கமான பணிகளை செய்ய உதவும். இதற்கு தரையில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். முழங்கால்களை மடக்கி கைகளை நீட்டி உள்ளங்கைகள் தரையில் படுமாறு படுத்துக்கொள்ளவேண்டும். இதனால் முதுகுப் பகுதியில் அழுத்தம் குறையும்.