பலரும் அறிந்திராத சுக்கு பொடியின் மூலம் கிடைக்கும் நன்மைகள்!
உணவின் சுவையையும், மணத்தையும் அதிகரிக்க உதவும் இஞ்சி பல வழிகளில்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒன்று தான் உலர்ந்த நிலையில்
இருக்கும் சுக்கு. இஞ்சியை நன்கு காய வைத்து பொடி செய்தால் வெள்ளை
நிறத்தில் இருக்கும். இந்த பொடி நன்கு மணமாக இருக்கும். இதனை காற்றுப்புகாத
டப்பாவில் போட்டு இறுக்கமாக மூடி வைத்தால், ஒரு வருடம் வரை
பயன்படுத்தலாம்.
மூட்டு வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்கும்
சுக்கு
ஆர்த்ரிடிஸ் வலி மற்றும் வீக்கத்தில் இருந்து நிவாரணம் தரும். ஏனெனில்
இதில் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் நிறைந்துள்ளது. அதற்கு ஒரு
பாத்திரத்தி 4-5 டேபிள் ஸ்பூன் சுக்கு பொடியை போட்டு, அதில் ஒரு ஜார் நீரை
ஊற்றி கொதிக்க விட்டு வடிகட்டி, தினமும் தேன் சேர்த்து குடித்து வந்தால்,
மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் அங்குள்ள வீக்கம் குறைந்து, உடனடி
நிவாரணம் கிடைக்கும்.
No comments:
Post a Comment