உடல் உறுப்புகளின் சீரான செயல்பாட்டுக்கும், நல்ல நிலையில் வைத்துக் கொள்வதற்கும் உதவுகிற ஒரே தீர்வு, உடற்பயிற்சி.
உடற்பயிற்சி செய்வதன் மூலம் தசைகள் நன்றாக விரிவடையும். உடலில் சோர்வு நீங்கும், மனதில் உற்சாகம் பிறக்கும்.
நிம்மதியான தூக்கம் வரும். எந்த பக்கவிளைவும் இல்லாதது.
தொடர்ந்து உடற்பயிற்சி செய்பவர்களுக்குப் புற்றுநோய் வரும் வாய்ப்புகள்கூட குறையும் என்கிறது ஆராய்ச்சி. எனவே, உடற்பயிற்சியின் மூலம் உற்சாக வாழ்வை வாழலாம்.'' வாரத்துக்கு மூன்று மணி நேரம் நடந்தால், மாரடைப்பைத் தடுப்பதற்கான வாய்ப்புகள் 40 சதவிகிதமும், ஐந்து மணி நேரம் நடைப்பயிற்சி செய்யும்போது, 50 சதவிகிதமும் ஏற்படுகிறது என்கிறது ஓர் ஆராய்ச்சி.
மாரடைப்பு மட்டுமல்ல, பல்வேறு நோய்கள் வருவதற்கான வாய்ப்பும் வெகுவாகக் குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும். மற்றவர்களுடன் உரையாடியபடியே நடக்கும்போது, மனதிலும், உடலிலும் உற்சாகம் பிறக்கும். உடல் ரீதியான பிரச்சனைகள், நோய்கள், சுற்றுச்சூழலை மனதில் கொண்டு பயிற்சிகளைத் தேர்ந்தெடுக்கலாம்.
நல்ல ஆரோக்கியம் உள்ளவர்கள், நடப்பது, ஓடுவது, சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் விளையாடுவது போன்ற உடற்பயிற்சிகளை 30 முதல் 45 நிமிடங்கள் வரை செய்யலாம். வசதிப் படைத்தவர்கள், டிரெட் மில்-ல் 15 நிமிடங்கள் பயிற்சி எடுக்கலாம். டிரெட்மில் இல்லாதவர்கள், மேடு பள்ளம் இல்லாத சமமான பாதையில் வீட்டைச் சுற்றியே தினமும் ஐந்து கிலோ மீட்டர் வரை நடக்கலாம்.
நடக்க முடியாதவர்கள், கையில் ஒரு வாக்கிங் ஸ்டிக், வாக்கர் எடுத்துக்கொண்டு நடக்கலாம். இதனால், உடல் பருமன் குறையும். மாரடைப்பு வராமல் தடுக்கும். எலும்பு வலுபெறும். நல்லத் தூக்கம் வரும். ரத்த அழுத்தம் குறையும். தசைகள் உறுதிபடும்.
முதுமைக் காலத்தில் உடற்பயிற்சி செய்வதன் மூலமே பல்வேறு நோய்களை அருகே நெருங்கவிடாமல் செய்யலாம்.