Pages

Showing posts with label நோய் எதிர்ப்பு சக்தி. Show all posts
Showing posts with label நோய் எதிர்ப்பு சக்தி. Show all posts

Friday, August 8, 2014

தடுப்பூசிகள் அவசியமானதா?


ம்மைச் சுற்றி எண்ணிலடங்கா எதிரிகள் இருக்கிறார்கள் என்றால், நம்புவீர்களா? ஆம், நம்பித்தான் ஆக வேண்டும். நம்மைச் சூழ்ந்திருக்கும் கண்ணுக்கே தெரியாத, பலதரப்பட்ட, தீமை தரும் கிருமிகள்தான் நம் எதிரிகள்! 
தடுப்பாற்றல் மண்டலம்:

உடலின் திசுக்களுக்குள்ளும், உறுப்புகளுக்குள்ளும் புகுந்து ஆக்கிரமிக்கும் கோடிக்கணக்கான நுண்கிருமிகள் எந்த நேரமும் நம்மை ஆட்டிப்படைக்கக் காத்துக்கொண்டிருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கை உணர்வு உள்ள ஒரு தற்காப்புப் படை மட்டும் நம் உடலில் இல்லாமல்போனால், கிருமிகள் நடத்தும் வேட்டையில் நாம் சுலபமாய்ச் சிக்கி, இவை உண்டாக்கும் நோய்களுக்கு ஆளாகி, பல ஆபத்துகளைச் சந்தித்திருப்போம். ஆனால், மனித இனத்துக்கே கிடைத்துள்ள மிகப் பெரிய வரப்பிரசாதம், 'தடுப்பாற்றல் மண்டலம்’ (Immune system) என்ற தற்காப்புப் படைதான்.
நாம் உறங்கினாலும் இந்தத் தற்காப்புப் படை உறங்குவது இல்லை; இதற்கு 24 மணி நேரமும்
தடுப்பு மருந்துகள்
நம்மைக் 'காவல் காக்கும்’ வேலைதான். நாட்டைக் காக்கின்ற ராணுவம்போல், இது நம் உடலைக் காக்கிறது. நம் ரத்தம்தான் இதன் 'கேம்ப் ஆபீஸ்’. ரத்த வெள்ளை அணுக்கள்தான் தளபதிகள். 'T’ அணுக்கள், 'B’ அணுக்கள், 'மேக்ரோபேஜ்’ அணுக்கள், 'எதிர் அணுக்கள்’ (Antibodies) என்று பலதரப்பட்ட சிப்பாய்கள் இந்தத் தற்காப்புப் படையில் பணிபுரிகிறார்கள்.  
ரத்தக்குழாய்களும், ரத்தக்குழாய்க்கு வெளியில் இருக்கும் நிணநீர்க்குழாய்களும்தான் யுத்தம் நடக்கும் இடங்கள். சரி, யாருடன் யுத்தம்? கண்ணுக்குத் தெரியாத நுண் கிருமிகள் என்று சொன்னோமல்லவா? அவற்றுடன்தான் யுத்தம். இந்தக் கிருமிகளுக்குள்ளும் பலவிதங்கள் உண்டு. சுருக்கமாகப் பிரித்தால், வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டோசோவா ஆகிய நான்கு வகைகளில் அவை அடங்கும்.
இந்த 'எதிரிகள்’ நம் உடலுக்குள் நுழையும்போது, உடலின் தற்காப்புப் படை தன்னிடமுள்ள 'சிப்பாய்’களை அனுப்பி, யுத்தம் செய்யும். சில சிப்பாய்கள் இந்த எதிரிகளைக் கொன்றுவிடுவார்கள். சில சிப்பாய்கள், கொல்லப்பட்ட எதிரிகளை அப்படியே விழுங்கி, அந்த இடத்தைத் துப்புரவு செய்வார்கள். இன்னும் சில சிப்பாய்கள் இந்த எதிரிகளை நினைவில் வைத்துக் கொண்டு, இனியும் இதுபோன்ற எதிரிகள் உடலுக்குள் நுழைகிறார்களா என்று வேவு பார்த்துத் 'தளபதி’க்குத் தகவல் அனுப்புவார்கள். இப்படி, நம் எதிரிகளை அழித்து, அவை உண்டாக்கும் பல நோய்களிலிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது, உடலின் தற்காப்புப் படை.
இவ்வாறு நம் உடல் மேல் படையெடுக்கும் பல வகைப்பட்ட கிருமிகளை அல்லது உடலுக்குத் துன்பம் தரும் எந்த ஒரு வெளிப்பொருளையும் எதிர்த்துத் தாக்குவதற்கும், அழிப்பதற்கும் உடலில் தற்காப்புப் படை தருகின்ற சக்திக்கு 'நோய் எதிர்ப்பு சக்தி’ அல்லது 'நோய்த் தடுப்பாற்றல்’ (immunity) என்று பெயர்.
நோய் எதிர்ப்பு சக்தியின் வகைகள்:
நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்தவரை, 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Innate Immunity ), 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ (Acquired immunity) என இரண்டு வகைகள் உண்டு. 'இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது உடலில் பிறவியிலேயே அமைந்திருப்பது. 'செயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி’ என்பது பிறவியில் அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைச் செயற்கை முறையில் தூண்டும்போது கிடைப்பது. இது, நாம் பிறந்த பிறகு, நம் வாழும் காலத்தில் பெறப்படுவது. இது எப்படிச் சாத்தியமாகிறது? 'முள்ளை முள்ளால் எடுக்கிற வித்தை’தான் இங்கு கைகொடுக்கிறது. ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்புச் சக்தி கிடைக்க வேண்டும் என்றால், அந்தக் கிருமியையே உடலுக்குள் செலுத்த வேண்டும். இதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டவைதான் தடுப்பூசிகள்.

தடுப்பூசிகள்:
தடுப்பூசிகள் மற்றும் தடுப்பு மருந்துகள் (Oral vaccines) மூலம் வீரியம் குறைந்த நோய்க்கிருமிகளைச் சிறிதளவு நம் உடலுக்குள் செலுத்தினால், அந்தக் கிருமிகளுக்கு எதிராக 'எதிர் அணுக்கள்’ உருவாகி, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கிவிடும். பிறகு, மற்றொரு சமயத்தில் இதே நோய்க்கிருமிகள் நம் உடலுக்குள் நுழையும்போது, ஏற்கனவே உள்ள எதிர் அணுக்கள் அந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு அழித்துவிடும். இதன் பலனாக, அந்த நோய் நம்மை அண்ட முடியாது. இதுதான் தடுப்பூசிகள் வேலை செய்வதற்கான அடிப்படைத் தத்துவம்.

Saturday, July 26, 2014

முந்திரி பழம் சாப்பிட்டால் நல்லது


முந்திரி பழம் சாப்பிட்டால் நல்லது.

முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு, முந்திரி பழத்தை சாப்பிடுவது குறைவு. ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனு பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும் பொது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.

இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேக வைத்தோ, உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரி பழம்.

முக்கியமாக விட்டமின் 'சி' ஆரஞ்சு பழத்தை விட, முந்திரி பழத்தில் ஐந்து மடங்கு அதிகம் உள்ளது. விட்டமின் 'சி' மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. 

ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு நோயை குணமாக்குகிறது. பற்கள், நகங்களை உருதிப்பதுகின்றது. ஸ்கர்வி என்ற விட்டமின் 'சி' குறைபாடு நோயை குணமாக்குகின்றது.

Friday, May 2, 2014

குழந்தைகளுக்கு அவசியமான முட்டை

முட்டை
சத்துள்ள உணவுப் பட்டியலில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு சக்தி தரும் உணவாகவும், சத்து நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்... 

நாம் முட்டை என்று பொதுவாக சொல்வதும், அதிகமாக சாப்பிடுவதும் கோழி முட்டையைத்தான். அதிக புரதச்சத்து வழங்கும் உணவாகவும், அத்தியாவசிய வைட்டமின்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது.

100 கிராம் முட்டைத் திரவத்தில் 75 கிராம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் 155 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. முட்டையில் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது. முட்டை 100 கிராம் முட்டையில் 10.6 கிராம் கொழுப்பு உள்ளது. இதனால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் 424 மில்லி கிராம் காணப்படுகிறது.

ஏற்கனவே உடல் பருமனாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிட்டால் அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.  புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்தது முட்டை. 12.6 கிராம் புரதமும், 1.12 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் முட்டைத் திரவத்தில் உடலுக்கு கிடைக்கிறது.

மஞ்சள் கரு வைட்டமின்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வைட்டமின் ஏ, டி, ஈ சத்துக்கள் இதில் நிரம்பி உள்ளது. முட்டையில் கோலைன் எனும் சத்துப்பொருள் உள்ளது. இது மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தூண்டும் முக்கியப் பொருளாகும். முட்டையில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய கோலைன் அளவில் பாதி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வளரும் குழந்தைகளுக்கு அவசியம் முட்டை வழங்கலாம். இதேபோல ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலமும் உள்ளது. இதுவும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமான கொழுப்பு அமிலமாகும். தினசரி உடலில் சேர்க்க வேண்டிய வைட்டமின்-ஏ அளவில் 19 சதவீதம் முட்டையில் கிடைக்கிறது.

அதாவது 149 மைக்ரோ கிராம் அளவு காணப்படுகிறது. வைட்டமின்-டி 15 சதவீதம் உள்ளது. இது சருமத்தின் பொலிவை பாதுகாப்பதுடன், பல்வேறு உடற் செயல்களில் பங்கெடுக்கிறது. பி-குழும வைட்டமின்களான தயாமின்(பி-1), ரிபோபி ளேவின்(பி-2), பான்டொதெனிக் அமிலம்(பி-5), போலேட் (பி-9), வைட்டமின் பி-12 ஆகியவை குறிப்பிட்ட அளவில் உள்ளன.

100 கிராம் முட்டை திரவத்தில் 50 மில்லிகிராம் கால்சியம் காணப்படுகிறது. 1.2 மில்லிகிராம் இரும்புத்தாது காணப்படுகிறது. கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுகிறது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கெடுக்கிறது.

இதேபோல மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளன. பொட்டாசியம் இதயத்துடிப்பு மற்றும் ரத்தஅழுத்தத்தை சீராக பராமரிப்பதில் பங்கெடுக்கிறது. மற்ற தாதுக்களும் பல்வேறு உடற்செயல்களில் ஈடுபட்டு உடலை வளப்படுத்துகின்றன.

பல்வேறு கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் முட்டையில் காணப்படுகிறது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன. 

Saturday, April 12, 2014

ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள நன்மைகள்

ஸ்ட்ராபெரி
தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியம் இருக்காது எனக் கூறுவது உண்டு. ஏனெனில் ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்.ஆனால் இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரி பழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஸ்ட்ராபெரி பழத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இந்த பொருள் வேறு சில பழங்கள், காய்கறிகள், டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றில் உள்ளன. இது சர்க்கரை நோய், புற்று நோயை தடுக்கும் திறன் வாய்ந்தது.

இதுதவிர எல்லாவிதமான நோய்களையும் தடுக்கும். ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. எனவே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த பழம் உதவும்.

ஸ்ட்ராபெர்ரி பழங்களில் வைட்டமின் சி, தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், வைட்டமின் ஏ, டோக்கோபெரால், வைட்டமின் கே போன்ற வைட்டமின்களும், செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தனிமங்களும், பல்வேறு வகையான அமினோ அமிலங்களும், தேவையான கொழுப்பு அமிலங்களும் ஏராளமாக நிறைந்துள்ளன.

இதில் ஆன்டி ஆக்சிடன்ட் என சொல்லப்படும் செல் அழிவை தடுக்கும் தன்மை உள்ளது. இந்த தன்மை நிறைந்துள்ள பழங்கள் பெரும்பாலும் சிவப்பு நிறத்தில் காணப்படுவது இதன் சிறப்புக்கு அடையாளமாகும். இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து மாரடைப்பு வராமல் தடுக்கும்.

இதை சாப்பிட்டால் கேன்சர் வருவதைத் தடுக்கலாம். மேலும் இது ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கின்றது. ஸ்ட்ராபெர்ரி பழச்சாற்றை குடித்தால் பற்களில் கறை ஏற்படுவதை தவிர்க்கலாம். இதில் உள்ள அமிலங்கள் பல் கறையையும் நீக்குகின்றன.

Wednesday, March 19, 2014

பழைய சோற்றில் இருக்கு சத்து

பழைய சோறு
கியாஸ் அடுப்பும், குக்கர் சோறும் வந்தபின்னர் பழைய சோறு சாப்பிடுவதே நமக்க மறந்துவிட்டது. குழந்தைகளுக்க பழைய சோறு கொடுப்பதையே குற்றமாக கருதும் பெற்றோர்கள் பெருகிவிட்டனர். ஆனால் பழைய சோற்றில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருப்பதாக அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சி செய்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் சென்று அங்க குடியேறிய நம்மவர்கள் சிலர். தங்களின் இளமைக்காலத்தில் சாப்பிட்ட உணவுகள் கண்டறிந்து நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டாராம். அப்போது அவர்களில் ஒரு சிலருக்கு பழைய சாதத்தில் அப்படி என்னதான் இருக்கிறது என்று ஆராய்ச்சி செய்யும் எண்ணம் வந்துள்ளது.

அதன் விளைவாக ஒரு குழுவாக அமைத்து ஆராய்ச்சியில் இறங்கினர். அவர்கள் கண்டறிந்த தகவல்கள் அவர்களை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது முதல் நாள் சோற்றில் நீருற்றி மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் பி6, பி12 வைட்டமின்கள் ஏராளமாக இருந்துள்ளது.

உடலுக்கு குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் ட்ரில்லியன்ஸ் ஆப் பாக்டீரியாஸ் (கவனியுங்கள் மில்லியன் அல்ல ட்ரில்லியன்) பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம். கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும் போது நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம்.

அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன எந்தக்காய்ச்சலும் நம்மை அணுகாது. காலை சிற்றுண்டியாக பழைய சாதத்தை சாப்பிடுவதால் உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் லட்சக்கணக்கான நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் அதில் உருவாகின்றன.

மறுநாள் இதை சாப்பிடும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்துகிறது. இதிலிருந்து நார்ச்சத்து,மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு கொழுப்பு சத்து குறைந்துள்ளது. உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால் எந்த நோயும் அருகில் கூட வராது. இப்போதைய நிலையில் பிரவுன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசி சாதத்தை ஒரு மண் சட்டியில் போட்டு சுத்தமான தண்ணீர் ஊற்றி மூடி வைத்து விட்டு மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து மோர் சிறிது சோர்த்து, சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிட்டால் போதும். ஆராய்ச்சியில் சொன்ன பலன்களை அனுபவிக்க முடியும்.