Pages

Showing posts with label முட்டை. Show all posts
Showing posts with label முட்டை. Show all posts

Wednesday, October 19, 2016

பளபளப்பான தலை முடிக்கு டிப்ஸ்


 shiny hair க்கான பட முடிவு

இன்றைய பெண்களுக்கு பெரிய பிரச்சனையாக இருப்பது கூந்தல் உதிர்வது. இதற்கு காரணம் தூசி, மனஅழுத்தம், டென்ஷன், உணவுமுறைகள் போன்ற காரணங்களால் கூந்தல் உதிர்வு ஏற்படுகிறது. இதற்கு பயப்பட வேண்டாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த முறையை பின்பற்றி வந்தாலே விரைவில் கூந்தல் உதிர்வை தடுத்து பளபளப்பான கூந்தலை பெறலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டைகள்
எலுமிச்சை சாறு

தயாரிக்கும் முறை:

* ஒரு முட்டையை கிண்ணத்தில் போட்டு அதனோடு 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை சேர்க்கவும். இந்த கலவை மென்மையாக மாறும் வரை அவைகளை நன்றாக கலக்கவும்.

பின் இந்த கலவையை உங்கள் தலை முடியில் தடவி 15 நன்றாக மசாஜ் செய்து ஒரு அரை மணி நேரத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். அதன் பின் மிதமான ஷாம்புவை கொண்டு தலை முடியை அலசுங்கள். இதன் முடிவில் பளபளப்பான தலைமுடியை பெற்றிடுவீர்கள்.

* எலுமிச்சை சாறு பொடுகை தடுத்து தலைச்சருமத்தில் உள்ள வறட்சியை நீக்கும். முட்டை உங்கள் தலை முடி அமைப்பை பளபளவென மாற்றும். - இந்த முறையை வாரம் இருமுறை செய்து வர வேண்டும்.  

Friday, May 2, 2014

குழந்தைகளுக்கு அவசியமான முட்டை

முட்டை
சத்துள்ள உணவுப் பட்டியலில் முட்டைக்கு முக்கிய இடம் உண்டு. வளரும் குழந்தைகளுக்கு சக்தி தரும் உணவாகவும், சத்து நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது. குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையிலுள்ள சத்துக்களை பார்க்கலாம்... 

நாம் முட்டை என்று பொதுவாக சொல்வதும், அதிகமாக சாப்பிடுவதும் கோழி முட்டையைத்தான். அதிக புரதச்சத்து வழங்கும் உணவாகவும், அத்தியாவசிய வைட்டமின்கள், தாது உப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் நிறைந்த உணவாகவும் முட்டை விளங்குகிறது.

100 கிராம் முட்டைத் திரவத்தில் 75 கிராம் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. இதனால் 155 கலோரிகள் ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. முட்டையில் கொழுப்புச் சத்து கணிசமாக உள்ளது. முட்டை 100 கிராம் முட்டையில் 10.6 கிராம் கொழுப்பு உள்ளது. இதனால் உடலுக்கு சக்தி கிடைக்கிறது. தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள் 424 மில்லி கிராம் காணப்படுகிறது.

ஏற்கனவே உடல் பருமனாக இருப்பவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி சாப்பிட்டால் அதிகமான கொழுப்புகள் உடலில் சேர்வதை தடுக்கலாம்.  புரதமும், கார்போஹைட்ரேட்டும் நிறைந்தது முட்டை. 12.6 கிராம் புரதமும், 1.12 கிராம் கார்போஹைட்ரேட்டும் 100 கிராம் முட்டைத் திரவத்தில் உடலுக்கு கிடைக்கிறது.

மஞ்சள் கரு வைட்டமின்களின் இருப்பிடமாக விளங்குகிறது. வைட்டமின் ஏ, டி, ஈ சத்துக்கள் இதில் நிரம்பி உள்ளது. முட்டையில் கோலைன் எனும் சத்துப்பொருள் உள்ளது. இது மூளையின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டை தூண்டும் முக்கியப் பொருளாகும். முட்டையில் தினசரி உடலில் சேர்க்க வேண்டிய கோலைன் அளவில் பாதி கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வளரும் குழந்தைகளுக்கு அவசியம் முட்டை வழங்கலாம். இதேபோல ஒமேகா-3 எனும் கொழுப்பு அமிலமும் உள்ளது. இதுவும் மூளையின் செயல்பாட்டிற்கு அவசியமான கொழுப்பு அமிலமாகும். தினசரி உடலில் சேர்க்க வேண்டிய வைட்டமின்-ஏ அளவில் 19 சதவீதம் முட்டையில் கிடைக்கிறது.

அதாவது 149 மைக்ரோ கிராம் அளவு காணப்படுகிறது. வைட்டமின்-டி 15 சதவீதம் உள்ளது. இது சருமத்தின் பொலிவை பாதுகாப்பதுடன், பல்வேறு உடற் செயல்களில் பங்கெடுக்கிறது. பி-குழும வைட்டமின்களான தயாமின்(பி-1), ரிபோபி ளேவின்(பி-2), பான்டொதெனிக் அமிலம்(பி-5), போலேட் (பி-9), வைட்டமின் பி-12 ஆகியவை குறிப்பிட்ட அளவில் உள்ளன.

100 கிராம் முட்டை திரவத்தில் 50 மில்லிகிராம் கால்சியம் காணப்படுகிறது. 1.2 மில்லிகிராம் இரும்புத்தாது காணப்படுகிறது. கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் உறுதிக்கு உதவுகிறது. இரும்புத்தாது ரத்த சிவப்பணு உற்பத்தியில் பங்கெடுக்கிறது.

இதேபோல மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம் போன்ற தாது உப்புக்களும் கணிசமாக உள்ளன. பொட்டாசியம் இதயத்துடிப்பு மற்றும் ரத்தஅழுத்தத்தை சீராக பராமரிப்பதில் பங்கெடுக்கிறது. மற்ற தாதுக்களும் பல்வேறு உடற்செயல்களில் ஈடுபட்டு உடலை வளப்படுத்துகின்றன.

பல்வேறு கொழுப்பு அமிலங்கள் மற்றும் அமினோ அமிலங்கள் முட்டையில் காணப்படுகிறது. இவை பல்வேறு உடற்செயல்களில் பங்கெடுக்கின்றன.