உடற்பயிற்சி உடலை கட்டுக்கோப்பாக, உயர்தர ஆரோக்கியத்தை அளிக்கிறது என்பதில்
அணு அளவும் ஐயமில்லை. ‘உடற்பயிற்சி செய்தால் நீண்ட காலம் சிறந்த
ஆரோக்கியத்தோடு வாழ முடியும் என்று உறுதி அளிக்க முடியும்.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுள் இறுதி வரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களின் ஆயுள் இறுதி வரை உற்சாகமாகவும் உறுதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது என்றும் விஞ்ஞானபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி என்பது, உடலை வருத்தி தினம் 2 மணி நேரம் ஓட்டமும் நடையும், ஜிம்மில் எடை தூக்குவதும்தான் என்ற எண்ணத்தை முதலில் கைவிடுங்கள். சிறியதாக உடற்பயிற்சிகள் - தினமும் 30 நிமிடங்கள், வாரத்தில் 5 நாட்கள் செய்து பாருங்கள்...
நீங்களே வியக்கும் வண்ணம் பல நல்ல மாறுதல்களை உடலிலும் உள்ளத்திலும் உணரத் தொடங்குவீர்கள். உடல்நலக் குறைவுகள் உங்களிடம் வர பயந்து, விலகி ஓடத் தொடங்கும். மிகவும் முக்கியமாக இதய நோய்கள் உள்பட அதிபயங்கர நோய்கள் உங்களை நெருங்க அஞ்சும்.
முன்பே இந்த நோய்கள் உள்ளவர்கள், மேலே கூறியபடி, 30 நிமிட உடற்பயிற்சிகளை மெதுவாகச் செய்து நோய்களின் வீரியத்தைக் குறைத்து, நல் ஆரோக்கியத்தைப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் உடற்பயிற்சி செய்வதன் மூலம் ஆரோக்கியம் அடைவது
மட்டுமல்ல... எவரது உதவியும் இல்லாமல் தங்களின் தேவைகளை தாங்களே
நிறைவேற்றிக் கொள்ளவும் முடியும்.