பிறந்தது முதல் இறப்பு வரை பெண் உடலமைப்பிலும் மனதளவிலும் பல கட்டங்களைக் கடந்து வர வேண்டியிருக்கிறது.
குழந்தைப்பேறு ,ஹார்மோன்கள் மாற்றம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகள், அதற்கான சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள் என உடலளவிலும் பெண்கள் சந்தித்தே ஆகவேண்டிய பல சிக்கல்கள் உள்ளன. அந்தந்த நிலைகளைக் கடக்க பெண்கள் சத்தான ஆகாரங்களை எடுத்துக்கொள்வதுடன் நல்ல மனநிலையையும் வளர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால், குடும்பம், குழந்தைகள், அலுவலகம் என காலில் சக்கரம் கட்டிக்கொண்டு பறக்கும் பெண்கள் தங்களுக்காக நேரம் ஒதுக்குகிறார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. இதனால், பெண்களின் காலை உணவு என்பது பெரும்பாலாக இல்லாமலே போய்விடுகிறது காலையில் குடிக்க வேண்டிய காபியோ, பாலோ கூட குடிப்பதற்கு நேரமில்லாமல் அல்லாடும் நிலை பெரும்பாலான பெண்களுக்கு நடுத்தரக் குடும்பங்களில் இருக்கிற உணவைக் குழந்தைகளுக்குக் கொடுத்துவிட்டு அம்மாக்கள் பட்டினி கிடப்பதும் உண்டு.
கர்ப்பம், குழந்தைப் பராமரிப்பு போன்ற நிலைகளில் பெண்களுக்கு சத்தான உணவு அவசியம். நடுத்தர வயதை எட்டும் போது எலும்பு தேய்மானம், அனிமியா போன்ற நிலைகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. பெண்கள் 30 வயதைக் கடக்கும் போதே பல சிக்கல்களுக்கும் ஆளாகிறார்கள் .உடல்நலக் கோளாறுகளால் பல பெண்கள் மன உளைச்சல், மனச்சோர்வு என மனரீதியாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஸ்டிரெஸ், மன அழுத்தம் போன்ற சிக்கல்களில் சிக்கும் பெண்கள் பலருக்கும் சரியான தூக்கம், சரிவிகித உணவு இல்லாததே குறைபாட்டுக்குக் காரணமாக இருக்கிறது.
இரும்புச்சத்து குறைபாடு என்பது பொதுவாக பெண்கள் பலரிடமும் காணப்படுகிறது. பெண்களுக்கு அவர்களது உடலில் 500 மில்லிகிராம் இரும்புச்சத்து இருக்கவேண்டும். ஆனால், அவை 150 மில்லிகிராம் அளவு கூட இருப்பதில்லையாம் அனேக பெண்களுக்கு. ஒரு நாளைக்கு 15 மிகி., அளவு இரும்புச்சத்தை பெண்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். ஆனால், 11மிகி., அளவுகூட எடுத்துக் கொள்வதில்லையாம்.
இத்தகைய இரும்புச்சத்துக் குறைபாடுதான் அனிமியா போன்றவற்றிற்குக் காரணமாகிறது. அசதி, மனதளவில் எரிச்சல் தன்மை, முடிகொட்டுதல், மாதவிடாய் கோளாறு போன்ற பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிகிறது. பிட்டோ எலும்புகளில் அடர்த்திக் குறைபாடு என்பதும் பெண்கள் சந்திக்கும் பிரச்னைகளில் முக்கியமானதாகும்.
இதுதான் மெனோபாஸ் சமயத்தில் பெண்களைப் பாடாய்படுத்தும் காரணியாக இறக்கிறது. கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிகம் கொண்ட உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் ஆச்டியோபோட்ரிசிஸ், எலும்பு முறிவு போன்ற சிக்கல்களிலிருந்து தப்பலாம். பால் மற்றும் பால் பொருட்கள், சோயா, மீன் போன்ற உணவு வகைகளை அதிகம் சேரத்துக்கொள்ள வேண்டும்
விதவிதமான காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்வதும் அவசியம். முழு கோதுமையால் சமைக்கப்பட்ட உணவுகளையும் சேர்த்துக் கொள்வது அவசியம். இவை வைட்டமின்கள் பைட்டோ நியூட்டிரியன்ட்கள், மினரல்கள் நிறைந்த சரிவிகித உணவாகும். முதுமைத் தோற்றத்தை இவை தள்ளிப்போடும் என்பது உறுதி. வைட்டமின் "சி ","இ", பீடா கெரோடின், பிட்டோ நியூட்டிரியன்ட் போன்ற ஆண்டி ஆக்சிடெண்ட் சத்துகொண்ட பழங்கள், காய்கறிகள், டீ போன்றவை முதுமையை விரட்ட உதவுகின்றன. சோயா, பிளேக்ஸ் [ஆலி] விதைகள் உடல்ரீதியான பல குறைபாடுகளை களைகின்றனவாம். உணவில் சர்க்கரை, ஈஸ்ட் போன்றவற்றைக் குறைத்துக்கொள்வது அவசியம். சத்துமிக்க கரையும் தன்மை கொண்ட கொழுப்புச்சத்துகள் மிகுந்த உணவை எடுத்துக் கொள்வது அவசியமாகிறது.

No comments:
Post a Comment