Pages

Showing posts with label கற்றாழை. Show all posts
Showing posts with label கற்றாழை. Show all posts

Friday, February 13, 2015

ஒரு வாரத்தில் சருமம் பொலிவடைய வேண்டுமா?

 Image result for face glow
வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு வாரத்தில் அழகாக மாறலாம். முகத்தில் தூசிகள் படிந்திருப்பதால் முகம் பொலிவின்றி காணப்படும். எனவே அவ்வப்போது முகத்தை சுத்தமான நீரினால் கழுவினால், முகம் நன்கு சுத்தமாக பருக்களின்றி இருக்கும்.

முகத்தில் உள்ள கருமையைப் போக்குவதற்கு நிறைய ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அத்தகைய மாஸ்க்குகள், ஸ்கரப்கள் போன்றவற்றை மேற்கொண்டால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, சருமத்தின் நிறம் இயற்கையாகவே அதிகரிக்கும். எலுமிச்சை ஒரு சூப்பரான ப்ளீச்சிங் பொருள்.  

இத்தகைய எலுமிச்சையின் துண்டுகள் அல்லது சாற்றைக் கொண்டு, தினமும் முகத்தை சிறிது நேரம் தேய்த்து கழுவினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி, சருமம் பொலிவோடு மின்னும். ஆனால் முகப்பரு உள்ளவர்கள் இதனை பயன்படுத்த கூடாது., பழங்களில் வாழைப்பழம், பப்பாளி, அவகோடா போன்றவை சருமத்திற்கு பொலிவைத் தரக்கூடியவை.

எனவே இத்தகைய பழங்களை சாப்பிடுவதோடு சருமத்திற்கு தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களால் சருமத்திற்கு கடுமையான பாதிப்பானது ஏற்படுவதோடு, சருமத்தின் நிறமும் மாறும். எனவே சருமம் வெள்ளையாகவும், நிறம் மாறாமலும் இருப்பதற்கு வெயிலில் நீண்ட நேரம் இருப்பதை தவிர்க்கவும். 

அப்படியே வெயிலில் சுற்றினால் சருமத்திற்கு சன் ஸ்கிரீன் லோசனை தடவி செல்ல வேண்டும். குறிப்பாக வீட்டிற்கு வந்ததும் சருமத்தை சுத்தமான நீரினால் கழுவிட வேண்டும். தயிர் முகத்தை வெள்ளையாக்க உதவும் அழகுப் பொருட்களில் ஒன்று. எனவே அதனைக் கொண்டு தினமும் முகத்திற்கு மசாஜ் செய்து கழுவினால், ஒரு வாரதத்தில் ஒரு நல்ல முகப்பொலிவு கிடைக்கும்.

கற்றாழை ஒரு சிறந்த கிளின்சிங் பொருள். எனவே கற்றாழையின் ஜெல்லை முகத்திற்கு தடவி மசாஜ் செய்து, காய வைத்து கழுவினால், முகத்தில் உள்ள அழுக்குகள் அனைத்து நீங்கி, முகம் பளிச்சென்று புத்துணர்ச்சியுடன் காணப்படும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி சருமம் மின்ன ஆரம்பிக்கும். 

Tuesday, January 28, 2014

குன்றாத இளமையைத் தரும் கற்றாழை

சோற்றுக் கற்றாழை
கற்றாழை என்றும், சோற்றுக் கற்றாழை என்றும் அழைக்கப்படும் மூலிகை சரித்திர புகழ் பெற்றது. உலகெங்கும் அறிந்த மூலிகைகளில் ஒன்று. நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் கற்றாழைக்காக அந்த காலத்திலேயே 'போர்' நடந்திருக்கின்றது. மாவீரன் அலெக்சாண்டரின் கருவான அரிஸ்டாடில்' கற்றாழை போர்வீரர்களுக்கு ஏற்படும் புண்கள், காயங்களை உடனடியாக ஆற்றி விடும் ஆற்றல் படைத்தது என்பதை தெரிந்து, அலெக்சாண்டரை கிழக்கு ஆப்ரிக்க தீவான சாக்கோர்டோ (Socorto) மீது படையெடுக்க தூண்டினார். ஏனென்றால் இந்த தீவில் அபரிமிதமாக விளைந்திருந்த கற்றாழையை கைப்பற்றத்தான்! அரிஸ்டாடில் பிறகு கற்றாழையை உபயோகித்து, போர் வீரர்களின் காயங்களை அகற்றிக் காட்டினராம்.

உலகெங்கும் மூலிகை பொருட்களை அதிகம் பயன்படுத்தும் விருப்பம் அதிகரித்து வருகிறது. மருந்தாகட்டும் இல்லை அழகுப்பொருள் சாதனமாகட்டும் கற்றாழை இன்று வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.



நம் நாட்டு சித்தர்கள் கற்றாழை குன்றாத இளமையை தருவதால் இதை 'குமரி' என்று குறிப்பிடுகின்றனர். உலகப் பேரழகிகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் 'கிளியோபாட்ரா' வால் புகழப்பெற்றது கற்றாழை!

விஞ்ஞான ரீதியாக கற்றாழையின் பெயர் Aloe Barbadensis வட ஆப்ரிக்காவில் முதன் முதலாக பயிரிடப்பட்டது. ஆங்கிலப் பெயர் Aloe vera இதில் உள்ளவை

அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், என்சைம்கள் (Enzymes).

சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின் சில குறிப்பான அணுக்கூறுகள் (Molecules) உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில Receptor (விரும்பி வரவேற்கும்) களுக்கு மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகின்றது. முக்கியமாக Phagocytes எனப்படும் நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றது. இதனால் உடல் பல விதத்தில் சுத்தீகரிக்கப்படுகின்றது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றது.

கற்றாழை சாறு பற்றிய விளம்பரங்கள் வெகுவாக இப்போது வருகின்றன. இதில் ஒரு விதமான கொழுப்பும், நாற்றமும் இருப்பதால் உணவாக சேர்த்துக் கொள்வது கடினம். அதனால் சுவையூட்டப்பட்ட Ready made ஜுஸாக கற்றாழை கிடைக்கின்றது. இதன் சாறு நல்ல டானிக், வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அடங்கியது.

வீட்டில் தயாரிக்க வேண்டுமென்றால் மடல்களை 10 முறை தண்ணீரில் கழுவி உலர்த்தி, பொடி செய்து, தினசரி இரு வேளை அரை ஸ்பூன் அளவு வெந்நீருடன் அருந்த, மலச்சிக்கல் நீங்கும், மூல வியாதிக்கு நல்லது. காயங்கள், தீப்புண்கள், இவற்றுக்கு கற்றாழையை வெட்டி அதன் 'ஜெல்' (Gel) எடுத்து அப்படியே பூசிட காயங்கள் ஆறும், வடுவும் வராது.

தேங்காய் எண்ணெய்யுடன் இதன் சாற்றை காய்ச்சி, வாசனை திரவியங்கள் சேர்த்து, 15 நாள் வெய்யிலில் வைத்து தலைக்கு உபயோகிக்க, தலைமுடி செழித்து வளரும்.

சோரியாசிஸ், எக்சிமா போன்ற பல சர்ம வியாதிகளுக்கு கற்றாழை 'சோறு' நிவாரணமளிக்கின்றது. எரிச்சல், அரிப்பு இவற்றை நீக்குகின்றது. மேலை நாடுகளில் தயாராகும் பல வித அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை இல்லாமல் இல்லை. தோலை மிருதுவாக்கி இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை புதுப்பிக்கின்றது.

வாய், பற்களின் சுகாதாரத்திற்கு Mouth Wash ஆகவும் கற்றாழை தயாரிக்கப்படுகிறது. கற்றாழையில் "குழம்பு" (Pulp) வயிற்றுப் புண்கள், கல்லீரல் நோய்கள் (Cirrhosis), ஆர்த்தரைடிஸ், மூட்டுவலி இவை வராமல் தடுக்கின்றது. வலியுள்ள மூட்டுக்களில் கற்றாழை சாற்றை தடவலாம்.

சித்த வைத்தியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கும், ஆண் தன்மை நீடிப்பதற்கும், கற்றாழை பயனா கின்றது. ஹோமியோபதி முறையிலும் கற்றாழை அருமருந்தாக பயன்படுகின்றது.

இதன் பயனை அடைய தினமும் ஒரு டீஸ்பூன் கற்றாழை சாற்றை குடிக்க ஆரம்பிக்கவும். நாளாக இதை 2 (அ) 4 டேபிள்ஸ்பூனாக (தினசரி) அதிகரிக்க வும். மூன்று மாதம் குடித்தால் உங்கள் சக்தி பெருகும். இந்த மருத்துவ பயன்களை தவிர, கற்றாழை நார் துணிகள் நெய்ய பயன்படுகின்றது! எனவே கற்றாழை பயிரிடுவது நல்ல பணம் தரும் விவசாயமாகிவிட்டது. வீட்டில் முதலுதவிக்காக நீங்களும் மண் தொட்டியில் கற்றாழையை வளருங்கள்!