உலகெங்கும் மூலிகை பொருட்களை அதிகம் பயன்படுத்தும் விருப்பம் அதிகரித்து வருகிறது. மருந்தாகட்டும் இல்லை அழகுப்பொருள் சாதனமாகட்டும் கற்றாழை இன்று வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.
நம் நாட்டு சித்தர்கள் கற்றாழை குன்றாத இளமையை தருவதால் இதை 'குமரி' என்று குறிப்பிடுகின்றனர். உலகப் பேரழகிகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் 'கிளியோபாட்ரா' வால் புகழப்பெற்றது கற்றாழை!
விஞ்ஞான ரீதியாக கற்றாழையின் பெயர் Aloe Barbadensis வட ஆப்ரிக்காவில் முதன் முதலாக பயிரிடப்பட்டது. ஆங்கிலப் பெயர் Aloe vera இதில் உள்ளவை
அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், என்சைம்கள் (Enzymes).
சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின் சில குறிப்பான அணுக்கூறுகள் (Molecules) உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில Receptor (விரும்பி வரவேற்கும்) களுக்கு மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகின்றது. முக்கியமாக Phagocytes எனப்படும் நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றது. இதனால் உடல் பல விதத்தில் சுத்தீகரிக்கப்படுகின்றது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றது.
கற்றாழை சாறு பற்றிய விளம்பரங்கள் வெகுவாக இப்போது வருகின்றன. இதில் ஒரு விதமான கொழுப்பும், நாற்றமும் இருப்பதால் உணவாக சேர்த்துக் கொள்வது கடினம். அதனால் சுவையூட்டப்பட்ட Ready made ஜுஸாக கற்றாழை கிடைக்கின்றது. இதன் சாறு நல்ல டானிக், வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அடங்கியது.
வீட்டில் தயாரிக்க வேண்டுமென்றால் மடல்களை 10 முறை தண்ணீரில் கழுவி உலர்த்தி, பொடி செய்து, தினசரி இரு வேளை அரை ஸ்பூன் அளவு வெந்நீருடன் அருந்த, மலச்சிக்கல் நீங்கும், மூல வியாதிக்கு நல்லது. காயங்கள், தீப்புண்கள், இவற்றுக்கு கற்றாழையை வெட்டி அதன் 'ஜெல்' (Gel) எடுத்து அப்படியே பூசிட காயங்கள் ஆறும், வடுவும் வராது.
தேங்காய் எண்ணெய்யுடன் இதன் சாற்றை காய்ச்சி, வாசனை திரவியங்கள் சேர்த்து, 15 நாள் வெய்யிலில் வைத்து தலைக்கு உபயோகிக்க, தலைமுடி செழித்து வளரும்.
சோரியாசிஸ், எக்சிமா போன்ற பல சர்ம வியாதிகளுக்கு கற்றாழை 'சோறு' நிவாரணமளிக்கின்றது. எரிச்சல், அரிப்பு இவற்றை நீக்குகின்றது. மேலை நாடுகளில் தயாராகும் பல வித அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை இல்லாமல் இல்லை. தோலை மிருதுவாக்கி இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை புதுப்பிக்கின்றது.
வாய், பற்களின் சுகாதாரத்திற்கு Mouth Wash ஆகவும் கற்றாழை தயாரிக்கப்படுகிறது. கற்றாழையில் "குழம்பு" (Pulp) வயிற்றுப் புண்கள், கல்லீரல் நோய்கள் (Cirrhosis), ஆர்த்தரைடிஸ், மூட்டுவலி இவை வராமல் தடுக்கின்றது. வலியுள்ள மூட்டுக்களில் கற்றாழை சாற்றை தடவலாம்.
சித்த வைத்தியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கும், ஆண் தன்மை நீடிப்பதற்கும், கற்றாழை பயனா கின்றது. ஹோமியோபதி முறையிலும் கற்றாழை அருமருந்தாக பயன்படுகின்றது.
இதன் பயனை அடைய தினமும் ஒரு டீஸ்பூன் கற்றாழை சாற்றை குடிக்க ஆரம்பிக்கவும். நாளாக இதை 2 (அ) 4 டேபிள்ஸ்பூனாக (தினசரி) அதிகரிக்க வும். மூன்று மாதம் குடித்தால் உங்கள் சக்தி பெருகும். இந்த மருத்துவ பயன்களை தவிர, கற்றாழை நார் துணிகள் நெய்ய பயன்படுகின்றது! எனவே கற்றாழை பயிரிடுவது நல்ல பணம் தரும் விவசாயமாகிவிட்டது. வீட்டில் முதலுதவிக்காக நீங்களும் மண் தொட்டியில் கற்றாழையை வளருங்கள்!
No comments:
Post a Comment