Pages

Showing posts with label உலர்ந்த திராட்சை. Show all posts
Showing posts with label உலர்ந்த திராட்சை. Show all posts

Tuesday, July 1, 2014

தோல் நிறத்தைப் பாதுகாக்க திராட்சை சாப்பிடுங்க!






திராட்சை பழச்சாற்றில் பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ளது. இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. இது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மேலும் திராட்சை பழத்தை பயன்படுத்தி சருமத்தை எவ்வாறு பாராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.


  • திராட்சை பழச்சாறு இறந்த தோலை நீக்குவதில் உதவக் கூடியதாகும். இதை நீங்கள் சருமத்தில் போட்டால் போதும். உடனடியாக தோல் உரிய ஆரம்பித்து விடும். இவை இறந்த திசுக்களை நீக்கி சுறுக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல இரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நீட்சித்தன்மையையும் திராட்சை அதிகரிக்கின்றது. நீர் பதத்தை சருமத்திற்கு கொடுக்கும் போது திராட்சை சாறு ஈரப்பதத்தை சருமத்திற்கு இயற்கையாக அளிக்கின்றது.
  • ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவிவிட வேண்டும். இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.
  • திராட்சை பழச்சாறு 2 ஸ்பூன், பாசிபயிறு மாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதம் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைவதை காணலாம்.
  • திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப்   பாதுகாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று ஸ்பூன் என இருவேளை   சாப்பிட்டு வர குணம் பெறலாம். 
  • எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும்.  தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மன தைரியம் ஏற்படும்.
  • திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண்,  வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது   நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.
  • வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால்   வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு, இயற்கை அளவிலேயே   இருக்கும்.

Tuesday, January 28, 2014

உலர்ந்த திராட்சை மருத்துவப் பயன்கள்

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சையில் பொட்டாசியம் மாங்கனிஸீம் உள்ளன. அதனால் திராட்சை அமிலத்தன்மை கொண்ட உணவாகிறது. அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை திராட்சை காரத்தன்மையாக (Alkaline) மாற்றவல்லது. உணவின் அதிக அமிலத்தன்மை, சருமநோய்கள், கட்டிகள், ஆர்த்தரைடீஸ், கவுட், முடி இழப்பு, இதய நோய்கள் முதலியவற்றை உண்டாக்கும்.

திராட்சையில் உள்ள கால்சியம் எலும்புகள், பற்கள் இவை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆஸ்டியோத பொராசிஸ் (Osteo porosis) எனும் எலும்பு பலவீனம், உலர் திராட்சையில் உள்ள போரான் (Boron) தாதுப்பொருளால் குறைக்கப்படுகிறது.

ரத்த சோகைக்கு உலர் திராட்சையில் உள்ள செம்பு, இரும்பு, விட்டமின் பி12 நல்லவை. இவை ரத்தம் உண்டாக உதவுகின்றன.

உலர் திராட்சையில் உள்ள Polyphenolic phyto - nutrients என்ற சத்துக்கள் பேக்டீரியா உள்பட எல்லா தொற்று நோய்களிலிருந்து உடலை காப்பாற்றுகிறது.


Free radical உடலை காப்பது உலர் திராட்சையின் ஆன்டி- - ஆக்சிடான்ட் குணங்கள் தான். கண்புரை, குருடு - இவைகள் தவிர்க்கப்படுகின்றன.

குழந்தை உண்டாக உதவுகிறது உலர் திராட்சை. இதில் உள்ள ஆர்ஜினைன் (Arginine) என்ற அமினோ அமிலம், பாலியல் பலவீனத்தை போக்கி பாலியல் ஆர்வத்தை தூண்டும்.

பொதுவாக குழந்தைகளுக்கு (ஏன், பெரியவர்களுக்கு கூட) இனிப்புகள் சாப்பிட்டால் பற்களில் சொத்தை உண்டாகும். உலர் திராட்சை இனிப்பானாலும் பற்களை பாதிக்காது. அதில் உள்ள ஓலியோநாலிக் (Oleanolic) அமிலம் பற்களை பற்சிதைவு, சொத்தை, ஈறுநோய்கள் முதலியவற்றிலிருந்து காப்பாற்றுகிறது.

உலர் திராட்சையில் ஃப்ரூக்டோஸ் (Fructose) மற்றும் குளூகோஸ் (Glucose) அதிகமாக உள்ளது.

மேலும் உலர் திராட்சை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். புற்றுநோயை தடுக்கும்.

உலர் திராட்சையில் விட்டமின் 'சி' மிகவும் குறைவு.