Pages

Showing posts with label திராட்சை. Show all posts
Showing posts with label திராட்சை. Show all posts

Monday, November 21, 2016

ஒற்றைத் தலைவலியா திராட்சை சாப்பிடுங்க!


 grapes க்கான பட முடிவு
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை விரும்பி உண்ணும் பழம் திராட்சை. அபரிதமான சத்துக்களை கொண்டுள்ள இந்த பழம், எளிதில் ஜீரணமாகக்கூடியது. உருண்டையாகவோ அல்லது முட்டை வடிவிலோ இருக்கும் இந்த பழம் பச்சை, கருப்பு, நீலம் ஆகிய கலர்களில் இருக்கும்.\ குளூக்கோஸ் வடிவிலான, சர்க்கரை அதிகம் உள்ள பழம் இது. குறுகிய காலத்தில் உடம்புக்கு தேவையான வெப்பத்தையும், சக்தியையும் திராட்சை வழங்கும். பழ மருத்துவ முறையில் திராட்சையின் பங்கு சிறப்பானது. திராட்சைக்கு மலச்சிக்கலை போக்கும் சக்தி உண்டு. 

350 கிராம் திராட்சை உண்பதால், உடலில் சக்தி கூடுவதோடு, வயிறு, குடல் பகுதிகளை வலுப்படுத்துகிறது. திராட்சை லேசான உணவு என்பதால், அஜீரணத்தை போக்குவதோடு, வயிறு எரிச்சலையும் கட்டுப்படுத்தும். ஆஸ்துமா நோய்க்கு இது ஒரு சிறந்த மருந்தாகும். இதை உண்பதன் வாயிலாக, சிறுநீரக கற்கள், உள்ளிட்ட பிரச்னைகள் எளிதில் குணமாகின்றன. 

ஒற்றைத்தலைவலிக்கு திராட்சைபழ ஜூஸ் சக்தி வாய்ந்த மருந்தாகும்.

Tuesday, July 1, 2014

தோல் நிறத்தைப் பாதுகாக்க திராட்சை சாப்பிடுங்க!






திராட்சை பழச்சாற்றில் பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ளது. இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. இது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மேலும் திராட்சை பழத்தை பயன்படுத்தி சருமத்தை எவ்வாறு பாராமரிக்கலாம் என்பதை பார்க்கலாம்.


  • திராட்சை பழச்சாறு இறந்த தோலை நீக்குவதில் உதவக் கூடியதாகும். இதை நீங்கள் சருமத்தில் போட்டால் போதும். உடனடியாக தோல் உரிய ஆரம்பித்து விடும். இவை இறந்த திசுக்களை நீக்கி சுறுக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல இரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நீட்சித்தன்மையையும் திராட்சை அதிகரிக்கின்றது. நீர் பதத்தை சருமத்திற்கு கொடுக்கும் போது திராட்சை சாறு ஈரப்பதத்தை சருமத்திற்கு இயற்கையாக அளிக்கின்றது.
  • ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவிவிட வேண்டும். இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
  • கண்களுக்கு கீழே உள்ள கருவளையம் மறைய திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.
  • திராட்சை பழச்சாறு 2 ஸ்பூன், பாசிபயிறு மாவு 1 ஸ்பூன் சேர்த்து நன்றாக கலந்து இந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இதை தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதம் செய்து வந்தால் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள் படிப்படியாக மறைவதை காணலாம்.
  • திராட்சை உணவுப் பதார்த்தங்களிலும், மருந்துப் பொருள்களிலும் சேர்க்கப்படுகிறது. மேக நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வர, தோலின் நிறத்தைப்   பாதுகாக்கும். நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதவிடாய்த் தொல்லை தீர திராட்சை ரசம் தினம் மூன்று ஸ்பூன் என இருவேளை   சாப்பிட்டு வர குணம் பெறலாம். 
  • எந்த காரணமும் இன்றி அச்சமடைவர்பவர்களுக்கு திராட்சை அருமருந்தாக உள்ளது. கை, கால் நடுக்கம், உடல் சோர்வு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  பச்சைத் திராட்சைப் பழத்தை சாறுபிழிந்து ஒரு அவுன்ஸ் எடுத்து, அதில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையை கலந்து சாப்பிட்டு வர நடுக்கம் குறையும்.  தினமும் பகல் உணவுக்குப் பின்னர் 20 நாட்களுக்கு சாப்பிட்டு வர பயம் குறைந்து மன தைரியம் ஏற்படும்.
  • திராட்சைச் சாறுடன் சர்க்கரை சேர்த்து காலையில் மட்டும் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர மாதவிடாய்க் கோளாறுகள் சரிப்படும். வயிற்றுப்புண்,  வாய்ப்புண் ஆறிவிடும். உடலில் பலம் ஏறும். ஆனால் கொஞ்சம் சீதளத்தைத் தரும். குளிர்ச்சியான தேகமுள்ளவர்கள் அதிக அளவில் சாப்பிடுவது   நல்லதல்ல. பகல் உணவுக்கு பின் தினசரி 15 பச்சை திராட்சை சாப்பிட்டு வர தலைவலியே வராது.
  • வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும்பொழுது தினசரி உலர்ந்த திராட்சை பழத்தை இரவு ஆகாரத்திற்குப் பின் சாப்பிட்டு வந்தால்   வயோதிக வயதில் தளர்வு ஏற்படாது. எலும்புகள், பற்கள் கெட்டிப்படும். இருதயம் பலத்துடனிருக்கும். இருதயத்துடிப்பு, இயற்கை அளவிலேயே   இருக்கும்.

Wednesday, March 26, 2014

திராட்சை:சத்துப்பட்டியல்

திராட்சை
கனிகளின் இளவரசி என்ற பெயர் திராட்சைக்கு உண்டு. சிறு உருண்டைகளாக திரண்ட கொத்தாக இருக்கும் திராட்சையை, 'சத்துக்களின் கொத்து' என்று புகழ்ந்தால் மிகையில்லை. அந்த அளவிற்கு வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் சத்துப்பொருட்கள் திராட்சையில் நிறைந்துள்ளது. அவற்றிலுள்ள சத்துக்களின் பட்டியல்...

* திராட்சை குறைந்த ஆற்றல் வழங்கும் உணவுப் பொருளாகும். 100 கிராம் திராட்சைப் பழம் 69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* திராட்சை பல சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் 'ரெஸ்வரடிரால்' எனும் நோய் எதிர்ப்பொருள் குறிப்பிடத்தக்கது. இது தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட வல்லது. 'கரோனரி ஹார்ட் டிசிஸ்' எனும் இதய வியாதி ஏற்படாமல் காக்கும். நரம்பு வியாதிகள், நினைவு இழப்பு வியாதி போன்றவற்றில் நிவாரணம் கிடைக்க உதவும். வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும்.

*'ரெஸ்வரடிரால்' ஆன்டி-ஆக்சிடென்ட்டிற்கு முடக்குவாதத்தை முடக்கும் குணமும் உண்டு. ரத்தத் தட்டுகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரிப்படுத்தும். ரத்தத்தட்டுகள் சுறுசுறுப்புடன் செயல்பட அவசியமான நைட்ரிக் ஆக்சைடு மற்றும் வாசோடிலேட்டர் போன்ற ரசாயன மூலக்கூறுகள் உற்பத்தியை பெருக்குகிறது.

* ஆன்தோசயனின் எனும் நோய் எதிர்ப்பு பொருள், சிவப்பு திராட்சையில் அதிகமுள்ளது. இது ஒவ்வாமை வியாதிகளுக்கு எதிராக செயல்படும். நோய்த் தொற்றை தடுப்பது, புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது போன்ற செயல்களிலும் பங்கெடுக்கும்.

* கேட்சின் எனும் டேனின் குழும ஆன்டி-ஆக்சிடென்ட், வெள்ளை-பச்சை திராட்சையில் காணப்படுகிறது. இது உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும்.

* நுண் ஊட்டச்சத்துக்களான தாமிரம், இரும்பு மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் திராட்சையில் இருக்கிறது. தாமிரமும், மாங்கனீசும் நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணை புரியும். உலர் திராட்சையில் அதிக அளவு இரும்புத்தாது கிடைக்கிறது. மேலும் 100 கிராம் திராட்சையில் 191 மில்லிகிராம் பொட்டாசியம் தாது கிடைக்கிறது. இது உடலுக்கு மின்னாற்றல் வழங்க வல்லது.

* 'வைட்டமின்-சி', 'வைட்டமின்-ஏ', 'வைட்டமின்-கே' மற்றும் பீ-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் திராட்சையில் கிடைக்கிறது.

சாப்பிடும் முறை......... திராட்சைகள் அப்படியே சாப்பிட ஏற்ற கனி வகையாகும். கோடைகாலத்தில் மிகுதியாக உண்டால் உடல் ஆற்றல் இழப்பை ஈடுகட்டும். விதையற்ற திராட்சையை மற்ற பழங்களுடன் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

உலர்ந்த திராட்சை கேக் வகைகள், ரொட்டி வகைகள், கேசரி வகைகள் மற்றும் பாயாசம் போன்ற இனிப்பு பானங்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் உணவுத் தொழில்துறையில் ஜாம், ஜெல்லி, ஜூஸ் மற்றும் ஒயின் தயாரிப்பில் திராட்சை பயன்படுகிறது.