கனிகளின் இளவரசி என்ற பெயர் திராட்சைக்கு
உண்டு. சிறு உருண்டைகளாக திரண்ட
கொத்தாக இருக்கும் திராட்சையை, 'சத்துக்களின்
கொத்து' என்று புகழ்ந்தால் மிகையில்லை. அந்த
அளவிற்கு வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நோய்
எதிர்ப்பு பொருட்கள் மற்றும் சத்துப்பொருட்கள் திராட்சையில் நிறைந்துள்ளது. அவற்றிலுள்ள சத்துக்களின்
பட்டியல்...
* திராட்சை குறைந்த ஆற்றல் வழங்கும் உணவுப் பொருளாகும். 100 கிராம் திராட்சைப் பழம் 69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
* திராட்சை பல சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் 'ரெஸ்வரடிரால்' எனும் நோய் எதிர்ப்பொருள் குறிப்பிடத்தக்கது. இது தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட வல்லது. 'கரோனரி ஹார்ட் டிசிஸ்' எனும் இதய வியாதி ஏற்படாமல் காக்கும். நரம்பு வியாதிகள், நினைவு இழப்பு வியாதி போன்றவற்றில் நிவாரணம் கிடைக்க உதவும். வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும்.
*'ரெஸ்வரடிரால்' ஆன்டி-ஆக்சிடென்ட்டிற்கு முடக்குவாதத்தை முடக்கும் குணமும் உண்டு. ரத்தத் தட்டுகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரிப்படுத்தும். ரத்தத்தட்டுகள் சுறுசுறுப்புடன் செயல்பட அவசியமான நைட்ரிக் ஆக்சைடு மற்றும் வாசோடிலேட்டர் போன்ற ரசாயன மூலக்கூறுகள் உற்பத்தியை பெருக்குகிறது.
* ஆன்தோசயனின் எனும் நோய் எதிர்ப்பு பொருள், சிவப்பு திராட்சையில் அதிகமுள்ளது. இது ஒவ்வாமை வியாதிகளுக்கு எதிராக செயல்படும். நோய்த் தொற்றை தடுப்பது, புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது போன்ற செயல்களிலும் பங்கெடுக்கும்.
* கேட்சின் எனும் டேனின் குழும ஆன்டி-ஆக்சிடென்ட், வெள்ளை-பச்சை திராட்சையில் காணப்படுகிறது. இது உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும்.
* நுண் ஊட்டச்சத்துக்களான தாமிரம், இரும்பு மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் திராட்சையில் இருக்கிறது. தாமிரமும், மாங்கனீசும் நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணை புரியும். உலர் திராட்சையில் அதிக அளவு இரும்புத்தாது கிடைக்கிறது. மேலும் 100 கிராம் திராட்சையில் 191 மில்லிகிராம் பொட்டாசியம் தாது கிடைக்கிறது. இது உடலுக்கு மின்னாற்றல் வழங்க வல்லது.
* 'வைட்டமின்-சி', 'வைட்டமின்-ஏ', 'வைட்டமின்-கே' மற்றும் பீ-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் திராட்சையில் கிடைக்கிறது.
சாப்பிடும் முறை......... திராட்சைகள் அப்படியே சாப்பிட ஏற்ற கனி வகையாகும். கோடைகாலத்தில் மிகுதியாக உண்டால் உடல் ஆற்றல் இழப்பை ஈடுகட்டும். விதையற்ற திராட்சையை மற்ற பழங்களுடன் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.
உலர்ந்த திராட்சை கேக் வகைகள், ரொட்டி வகைகள், கேசரி வகைகள் மற்றும் பாயாசம் போன்ற இனிப்பு பானங்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் உணவுத் தொழில்துறையில் ஜாம், ஜெல்லி, ஜூஸ் மற்றும் ஒயின் தயாரிப்பில் திராட்சை பயன்படுகிறது.