ஹார்ட் பேஷண்ட்...! மனதை நெருட வைக்கும். இந்த பட்டத்தை சுமந்து வாழ பலரும் விரும்ப மாட்டார்கள். நவீன மருத்துவத்தில இதய நோய்க்கு இன்று பல தீர்வுகள் வந்து விட்டன. ஆனால் இந்த சிகிச்சை முறைகளுக்கு உட்பட்டால், கட்டாயம் மாத்திரைகளை ஆயுள் முழுக்க சாப்பிட வேண்டும். இதனால் தங்களுக்கு இதய நோய் வந்து விட்டதை போல் உணர்கின்றனர்.
ஆனால் வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வந்தாலே, இதய நோயை விரட்டிவிடலாம் என்பது தான் லேட்டஸ்ட் மருத்துவம். இதய நோய்க்கு, தொடர் சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியம் என்பது மருத்துவர்கள் கூறும் அட்வைஸ். இதய நோய் வராமல் தடுக்க, நாம் தினமும் குடிக்கும் டீ உதவி செய்கிறது. என்றால் டீ குடிக்க கசக்குமா என்ன? தினமும் 3 கப் டீ குடித்தால் இதய நோய் வரும் வாய்ப்பு குறைவு என், பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனனர்.
டீ குடிப்பது மாரடைப்பு ஏற்படுவதை பெருமளவு தடுக்கிறது. டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஏற்கனவே பல ஆய்வுகள் மேகொள்ளப்பட்டிருந்தாலும், பிரிட்டனைச் சேர்ந்த உணவு முறை வல்லுநர் குழுவின் தலைவர் டாக்டர் கேரி ராக்ஸ்டன் ஆய்வு மேற்கொண்டு, டீ குடித்தால் இதய நோய்க்கான வாய்ப்பு 70 சதவீதம் குறைவு, என்பது தெரிய வந்துள்ளது. தவிர 2 கோப்பைக்கு அதிகமாக டீ குடிக்கும் நபருக்கு வலிப்பு நோய் வரும் வாய்ப்பு 21 சதவீதம் குறைவு.