Pages

Wednesday, July 6, 2016

கிருமிகள் தங்குமிடம்

 house cleaning
வீட்டை சுத்தமாக வைத்துக் கொள்ள தவறினால், அது கிருமிகளின் புகலிடமாக மாறலாம். அதற்கு வீட்டை தவறாமல் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக ஒருசில இடங்களில் கவனம் செலுத்தி, நன்கு கழுவ வேண்டும். சரி, இப்போது வீட்டை கிருமிகளற்றதாக்க, செய்ய வேண்டியது என்னவென்று பார்ப்போம். வீட்டில் அழுக்குத் துணிகளை நீண்ட நேரத்திற்கு போட்டு வைக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். குறைந்தது இரு நாளைக்கு ஒரு முறையாவது துணிகளைத் துவையுங்கள். அதோடு உங்கள் வாஷிங் மெஷினையும், சுத்தம் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

இதை செய்ய சிறந்த வழி, உள்ளங்கையளவு பிளீச்சிங் அல்லது சுத்தம் செய்யும் பவுடரை அதில் போட்டு சில நிமிடம் ஓட விடுங்கள். இது அதில் சேர்ந்துள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை அகற்றும். மற்றுமொரு பிரச்னை, அழுக்கு டவல்கள். அவற்றை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை துவைத்து, வெந்நீரில் அலசி கிருமிகளைப் போக்குங்கள்.

வீட்டில் உள்ளோர் அனைவரும், தனித்தனி டவல்களை பயன்படுத்துங்கள். வாரம் ஒருமுறை மெத்தை உறைகளை மாற்றுங்கள். மெத்தையில் அமர்ந்து உண்பதை அனுமதிக்காதீர்கள். இது, எறும்பு மற்றும் புழுக்களை ஈர்க்கும். சுத்தம் செய்யும் சானிடைசர் கொண்டு, பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடிப் பொருட்களை சுத்தம் செய்யுங்கள். அலமாரி, கதவுக் கைப்பிடிகள் ஆகியவற்றை சுத்தம் செய்யவும் மறக்காதீர்கள். 

சிறிய வேக்யூம் கிளீனர் கொண்டு, கம்ப்யூட்டர் கீபோர்டை சுத்தம் செய்யுங்கள். சமையலறையில் பாத்திரம் கழுவும் இடமும், கிருமிகள் வளரும் இடமும் ஒரே இடமாதலால் அதை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம். உங்கள் சமையலறை மேடைக்கும் இது பொருந்தும்.

No comments: