மைக்ரேன் இது ஒரு ஸ்பெஷல் தலைவலி. சில காரணங்களால் சிலருக்கு வரும். ஆனால் வழக்கமான தலைவலி போல, எந்த அறிகுறியோ,அடிக்கடி வருவதோ இருக்காது. ஆனால் வந்தால் உயிரே போகும் அளவுக்கு கடுமையாக இருக்கும்.
இந்த தலைவலி வந்தால், அதை அனுபவிப்பவர்கள், தங்களுக்கு எந்த மாதிரியான வலி இருக்கிறது என்று சொல்லவே முடியாமல் தவிப்பர். அப்படி பயங்கரமாக இருக்கும் தலைவலி, அதிலும், தலையில் குறிப்பிட்ட பகுதியில் மட்டும் தான் வலி இருக்கும். சிலருக்கு மணி கணக்கில், நாட்கணக்கில் நீடிக்கும். கண்களில் கருவளையம் கட்டி, கண் பார்வையும் கூட சிலருக்கு பாதிக்கப்படும். எதைப்பர்த்தலும், ஒரு வித எரிச்சல் ஏற்படும். அதனால் அவர்கள் கண்களை மூடிக்கொண்டு இருக்கவே விரும்புவர்.
ஆண்கள் பெண்கள் இருபாலருக்கும் மைக்ரேன் வரும். பெண்களுக்கு அவர்களுக்கே உரிய மாதவிடாய் பிரச்சனைகளால் வரும். ஆண்களுக்கும் அப்படித்தான். தனித்தனி காரணங்கள் உள்ளன. எப்படியிருந்தாலும், நெற்றிப்போட்டில்தான் பலருக்கு வலி அதிகமாக இருக்கும். குடும்பத்தில் தாய் தந்தை என்று யாருக்காவது மைக்ரேன் (migraine ) இருந்தால், கண்டிப்பாக வாரிசுகளில் யாருக்காவது தொடரும். எல்லாருக்கும் வரும் என்று சொல்ல முடியாது. யாராவது ஒருவருக்கு வரும். அது மகளாக இருக்கலாம்: மானாகவும் இருக்கலாம் மகளாகவும் இருக்கலாம். சாக்லேட், பாலாடைக்கட்டி என்று சில கொழுப்பு சமாச்சாரங்களை அதிகம் சாப்பிடுவோருக்கு இது வரலாம்.
அலர்ஜி: இப்போதுள்ள வாழ்க்கை முறையில், இளம் தலைமுறையினர் அதிக சத்தம், அதிக ஒளியில் தான் காலத்தைக் கழிக்கின்றனர். அதுவும் மைக்ரேனுக்கு காரணம். வாக்மேன் கருவியில் அதிக சத்தத்துடன் பாடல் கேட்பது, டி.வி அதிக ஒலியுடன், அதிக கலர் வைத்து பார்ப்பது போன்றவற்றை, இளைய தலைமுறையினர் இப்போதே நிறுத்துவது நல்லது. இதைவிட, சிலருக்கு சில வாசனைகளால் கூட மைக்ரேன் வரும்.சிலரை பார்த்தால், எந்தவித வசனயாவது முகர்ந்தாலோ காற்றில் வந்ததை சுவசித்தாலோ, அவர்களுக்கு லேசாக தலைவலி வரும். ஆரம்பத்திலேயே அவர்கள் தங்களுக்கு அலர்ஜியான விஷயங்களை தவிர்ப்பது நல்லது.
வந்து விட்டால்... மைக்ரோன் (migraine ) என்று வந்து விட்டால், அஜாக்கிரதையாக இருக்க கூடாது. மற்ற தலைவலி போல நினைத்து, கண்ட கண்ட மருந்துகளை கடைகளில் வாங்கி சாப்பிடவோ, மருத்துவ முறைகளை மாற்றவோக் கூடாது. தகுந்த டாக்டரிடம் காட்டி அவரின் ஆலோசனை பேரில், தலைவலி மருந்தை தொடர்ந்து சாப்பிட்டு வரவேண்டும். அப்படியிருந்தால், தலைவலி வீரியம் குறையும். சத்தம் இல்லாத, வெளிச்சம் வராத இருட்டறையில் ஒய்வு எடுப்பது தலைவலி கடுமையாக குறைக்கும். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் மைக்ரேன் வந்தால், அவர்கள் தங்கள் உணவில் உப்பை குறைத்துக் கொள்ளவது நல்லது. அதுபோல, ஆண்கள், குடிப்பழக்கம் உள்ளவர்கள் என்றால், அதை விட்டு விடுவது நல்லது.