Pages

Showing posts with label வேப்பிலை. Show all posts
Showing posts with label வேப்பிலை. Show all posts

Thursday, July 14, 2016

இளம் நரையா - இதைப் படிங்க முதல்ல

உங்களுக்கு இளநரை வந்து விட்டதே என்று கவலைப் பட வேண்டாம். அதற்கு கறுப்பு எள் உபயோகமாகும். கால் கிலோ கறுப்பு எள்ளை தண்ணீரில் ஊற வைங்க. இரண்டு மணி நேரம் கழிச்சு எள்ளை மையமாக அரைத்து தலைக்கு பூசி குளிக்கவும். தொடர்ந்து செய்து வந்தால் எப்பேர்ப்பட்ட இளநரையும் இல்லாது போகும்.

சிலருக்கு "டிரை ஸ்கால்ப்" பிரச்சினை இருக்கும். மண்டையை சொரிந்தாலே வெள்ளையாக தோல் பிய்ந்து வரும். அரிக்கும். கொஞ்சம் அசட்டையாக இருந்தால் அந்த இடத்தில் முடி கொட்டி போகும்.

இந்த பிரச்சினைக்கு வால் மிளகு, பிஞ்சு கடுக்காய் காம்பினேஷன் நன்றாக பயன் தரும். வால் மிளகையும், பேபி கடுக்காயையும் மையாக அரைத்து தலையில் பூசி குளிக்கவும். மண்டையின் மேல் தோல் ஆரோக்கியமாவதோடு, முடி கொட்டுவதும் டக்கென்று நின்று விடும்.

ஒரு சில பெண்களுக்கு மெல்லிய மீசை வளர்வதுண்டு. மேலும், சிலருக்கு கை, கால் எல்லாம் முடி வளர்ந்து அழகியே குலைத்து விடும்.

குப்பை மேனி இலை, வேப்பிலை, விராலி மஞ்சள் இம்மூன்றையும் சம அளவு எடுத்து, அரைத்து வைத்துக் கொள்ளவும். இரவு படுக்கப் போகும் முன்பு, ரோமம் உள்ள இடங்களில் பூசி வர, சில நாட்களில் முடி உதிர்ந்து விடும். மேனியும் பெண்மையில் பொலிவோடு மிளிரும்.

முட்டையின் வெள்ளைக் கருவை மிக்ஸியில் அடிக்கவும். அத்துடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் எண்ணெய் கலந்து, தலையின் மயிர்க் கால்களில் ஊடுருவிச் சொல்லும்படியாக அழுத்தமாக தேய்க்க வேண்டும். இயற்கையான கண்டிஷனரோடு உங்கள் கூந்தலுக்கு எழிலூட்டும்.

Monday, February 8, 2016

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை

சரும அழகை அதிகரிக்கும் வேப்பிலை
1. சருமத்தை சீர்செய்யவும் பயன்படுத்தலாம். அதற்கு அந்த வேப்பிலை நீரை, காட்டனில் நனைத்து, தினமும் இரவில் படுக்கும் போது, துடைத்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளிகள் போன்றவை போய்விடும்.

2. அந்த நீரை தலைக்கு ஊற்றினால், தலையில் இருக்கும் பொடுகு மற்றும் அதிகமான கூந்தல் உதிர்தல் சரியாகிவிடும்.

3. வேப்ப இலை மற்றும் ஆரஞ்சு தோல் சிறிது எடுத்துக் கொண்டு, அதனை கொதிக்கும் நீரில் போட்டு, சிறிது நேரம் ஊற வைக்கவும் பின்பு, அதை அரைத்து, அத்துடன் தேன், தயிர் மற்றும் சோயா பால் சேர்த்து பேஸ்ட் போன்று செய்து, முகத்தில் தடவி, ஊற வைத்து கழுவி வந்தால், பருக்கள், வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள், தழும்புகள் போன்றவை நீங்கிவிடும். இதனை மாதத்திற்கு ஒரு முறை செய்து வந்தால் நல்லது. 

Sunday, October 19, 2014

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்

பேன், தலை அரிப்பை போக்கும் வேப்பிலை வைத்தியம்
தாங்க முடியாத தலை அரிப்பால் அடிக்கடி தலைக்குள் கைவிட்டு `கிடார்' வாசிப்பவர்களுக்கும், கூந்தல் பிசுபிசுப்பால் தலையில், `குப்'பென்று அடிக்கிற வியர்வை துர்நாற்றத்தால் நொந்து போகிறவர்களுக்கு `தலை மேல் பலன்' கொடுக்கிற பேக் இது...

வேப்பிலை தூள்- அரை டீஸ்பூன்,
கடுக்காய்த்தூள்- அரை டீஸ்பூன்,
வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன்,
பயத்தமாவு-2 டீஸ்பூன்,
எலுமிச்சைச்சாறு - 1டீஸ்பூன்...


இவற்றுடன் வெந்நீரை கலந்து பேஸ்டாக்கிக் கொள்ளுங்கள். தலைக்கு `பேக்' போட்டு, பத்து நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை இந்த `பேக்' போட்டுப் பாருங்கள். பிசுபிசுப்பு, வியர்வை து
ர்நாற்றத்திலிருந்து நிரந்தரமாக விடுதலையாகி விடுவீர்கள். சீயக்காயுடன் வேப்பம்பட்டையை உலர்த்தி அரைத்தும் பயன்படுத்தலாம். தலை அரிப்பு ஓடியே போய்விடும்.

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த பேன் தொல்லைக்கு ஒரேயடியாக முடிவு கட்டுகிறது. இந்த ட்ரீட்மெண்ட்...

வேப்பிலை-1 பிடி,
சீயக்காய்-5,
தோல் நீக்கிய கடுக்காய்-1,
கொட்டை எடுத்த புங்கங்கொட்டை-3,
செம்பருத்தி இலை-1 பிடி...


இவற்றை இரவே தண்ணீரில் ஊறவிடுங்கள். காலையில் அரைத்து அந்த விழுதை தலையில் தேய்த்துக் குளியுங்கள். இந்த வாசனைக்கே பேன் தப்பித்து ஓடுவதுடன், உங்கள் தலை பக்கம் இனிமேல் எட்டிப் பார்க்கக்கூடப் பயப்படும்.

Friday, March 7, 2014

முகத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை

வேப்பிலை ஒரு கிருமிநாசினி. இந்த வேப்பிலையானது ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகம் பயன்படுகிறது. இது பல சரும நோய்கள் மற்றும் கூந்தல் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தருகிறது. இந்த வேப்பிலையை வைத்து எப்படியெல்லாம் ஃபேஸ் பேக் செய்வதென்று பார்க்கலாம்.

• கொதிக்கும் நீரில் வேப்பிலையை போட்டு, சிறிது நேரம் கொதிக்க வைத்து, பின் அதன் இலையை அரைத்து, பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி, 15 - 20  நிமிடம் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

• முகப்பரு இருப்பவர்களுக்கு வேப்பிலை பவுடருடன், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால், இரண்டு நாட்களில் பருக்கள் படிப்படியாக குறைய தொடங்கும். 

முகத்திற்கு பொலிவு தரும் வேப்பிலை
• வேப்பிலையை நன்கு அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகம் மற்றும் கழுத்திற்கு தடவி, 15 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இது எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு சிறந்த ஒரு ஃபேஸ் பேக். இந்த ஃபேஸ் பேக்கினால், இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் இருப்பதை தடுக்கும். வேண்டுமெனில் இதனை பருக்களால் ஏற்பட்ட தழும்புகளை நீக்கவும் பயன்படுத்தலாம்.

• சருமம் மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்க வேப்பிலை பொடியுடன் பால், எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து கலந்து, முகத்திற்கு தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

• ஒரு பௌலில் வேப்பிலைப் பொடி, துளசி பொடி மற்றும் சிறிது தேன் சேர்த்து கலந்து, சருமத்திற்கு தடவி, நன்கு ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் ஏற்படும் பருக்களை தடுத்து, சருமத்திற்கு பொலிவைத் தரும்.