திராட்சை பழத்திலும், அதன் விதையிலும்
உடலுக்கு பயன் தரும் பல நல்ல சத்துக்கள் உள்ளன. எல்லா வகையான
திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் ஏ உயிர்ச்சத்து அதிகம் உண்டு. சரியாக பசி
இல்லாமல், வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள், கருப்பு திராட்சை
எனப்படும் பன்னீர் திராட்சையில் அரை டம்ளர் சாறு எடுத்து, அதனுடன் சர்க்கரை
சிறிது சேர்த்து அருந்தினால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு, திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதம். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாகவும், அதிகமாகவும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு, கருப்பு திராட்சை சாறு நல்லது. அரை டம்ளர் சாறில், சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றை, தொடர்ந்து, 21 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும்.
இரைப்பை, குடல்களில் புண் ஏற்பட்டிருந்தால், வாயிலும் புண் ஏற்படும். வாயில் உள்ள புண்ணை ஆற்ற, முதலில் வயிற்று புண்ணை ஆற்ற வேண்டும். எலுமிச்சை சாறுடன் சிறிய இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு, கொதிக்க வைத்து, பின் ஆற வைத்து தொடர்ந்து காலை, மாலையாக மூன்று தினங்கள் கொடுத்து வந்தால் இருமல் நின்று விடும். தலைவலி இருப்பவர்கள் சூடான காபியில், அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, 3 நாட்கள் குடித்து வந்தால் பிறகு தலைவலியே வராது.
தேள் கொட்டிய இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டாக பிளந்து, ஒரு பாதியை கொட்டிய இடத்தில் நன்றாக தேய்க்க வேண்டும். இவ்வாறு இரண்டு துண்டுகளையும் தேய்த்து விட்டால் சிறிது நேரத்திற்கெல்லாம் விஷம் இறங்கி வலி நின்றுவிடும். எலுமிச்சம்பழத்தை அடிக்கடி உபயோகித்து வருபவர்களுக்கு உஷ்ண அதிகரிப்பால் உண்டாகும் வயிற்று வலி, பித்தத்தால் ஜீரண உறுப்புகளில் ஏற்படும் குறைபாடுகள், உஷ்ணத்தால் ஏற்படும் சிறுநீர் தொந்தரவுகள், மலச்சிக்கல், உஷ்ண இருமல் ஆகிய தொந்தரவுகள் வராது.
திராட்சை விதை சாற்றை, இயற்கை உணவு என ஜப்பான் அங்கீகரித்துள்ளது. உடலிலுள்ள வைட்டமின் சி, வைட்டமின் -இ பாதுகாப்பில், மிகப் பெரிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் இ சத்தை விட, திராட்சை விதை ஐம்பது விழுக்காடு அதிக சக்தி கொண்டது. ரத்தக் கொதிப்பு நோய்க்கு, அருமருந்தாக பயன்படுகிறது. ரத்தக் குழாய் அடைப்பு, ரத்தக் குழாய்களின் வீக்கம் ஆகியவற்றை திராட்சை பழவிதை குறைக்கிறது. ரண சிகிச்சையின் காயத்தை விரைந்து ஆற்றுகிறது. மூலநோய் உள்ளவர்களின் ரத்தப் போக்கை துரிதமாகக் கட்டுப்படுத்துகிறது.
ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது. கண் புரை வந்தாலும் நீக்குகிறது. சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்ய பயன்படுகிறது. மாலைக்கண் நோய் நீக்கி, கண்களில் ஒளியைத்தருகிறது. பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகளிலிருந்து தடுக்க வல்லதாக உள்ளது. நினைவாற்றலை மேலும் வளர்க்கிறது. ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமல் தடுக்கிறது.