Pages

Friday, December 20, 2013

பாதமே உன்னை ஆதாரிக்கிறேன்


http://www.beautythroughstrength.com/wp-content/uploads/2012/01/Pedicure3.jpg 
பலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றுவதை போல் பாதங்களில் வெடிப்பு ஏற்படுகிறது. ஆரம்பத்திலேயே பாதங்களை பராமரிப்பதில் ஆர்வம் காட்டினால் நிரந்தரமாக வெடிப்பு வருவதை தடுக்க முடியும்.

*கடுகு எண்ணெயை சூடாக்கி பாதம் முழுக்க தடவவும், பிறகு இளஞ்சூட்டு நீரில் கால்களை வை‌த்‌திரு‌ந்தா‌ல் வெடிப்புகள் மறையும்.

*பாத‌ங்க‌ள் அடி‌க்கடி ‌வீ‌க்க‌ம் ஏ‌ற்படுபவ‌ர்க‌ள் அ‌திக நேர‌ம் ‌நி‌ற்பதோ, அ‌திக நேர‌ம் கா‌ல்களை ‌கீழே தொ‌‌ங்க‌ப்போ‌ட்டு‌க் கொ‌‌ண்டு உ‌ட்காருவதோ கூடாது.

*படுக்கைக்கு செல்லும் முன்போ அல்லது காலை படுக்கையில் இருந்து எழுந்ததும் சிறிது நேரம் பாதங்களை மிதமான வெந்நீரில் கழுவி பாதத்திற்கு ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துங்கள்.

*வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

*உப்பில் ஆலிவ் ஆயில் கலந்து  பாதங்களில் தடவி ஸ்கரப் செய்தால் பாதங்கள் நன்கு பொலிவோடு மென்மையாக இருக்கும்

*பாதங்கள் மிருதுவாக இருக்க வேண்டுமானால் பீர்க்கங்காய் நார் கொண்டு தினமும் குளிக்கும்போது பாதத்தில் நன்றாக தேய்த்து வந்தால் பாதங்கள் மிருதுவாகி விடும்.

*பாதங்களை சுத்தம் செய்யும் போது மறக்காமல் கால் விரல் நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். இது எந்த காலத்திற்கும் முக்கியமான ஒன்று.

*பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் வீட்டில் மருதாணி இலையை விழுது போல நன்கு அரைத்து வெடிப்பு உள்ள இடங்களில் வாரந்தோறும் தடவி வந்தால் வெடிப்பு நீங்கும்.

*கால்களில் அதிகமான வெடிப்பு உள்ளவர்கள் , வெடிப்பு நீக்க ஆயிண்மெண்ட் உபயோகிக்கும்போது, இரவு தூங்கும்போது நன்றாக கால் வெடிப்புகளில் அந்த மருந்துகளை தடவி, ஒரு சாக்ஸ் அணிந்துக் கொண்டு உறங்க சென்றால் சிறந்த பலன் கிடைக்கும்.

சுவையான கேரட் அல்வா



http://tamil.boldsky.com/img/2012/05/18-carrot-halwa.jpg
தேவையான பொருட்கள்:

2 கப் கேரட்

1 டீஸ்பூன் நெய்

2 தேக்கரண்டி பால்

4 தேக்கரண்டி சர்க்கரை

4 டீஸ்பூன் மாவ (கோயா)

1 டீஸ்பூன் திராட்சை (கிஸ்மிஸ்)

1 டீஸ்பூன் பாதாம் (பாதாம்பருப்பு)

1/2 தேக்கரண்டி ஏலக்காய்  தூள்

செய்முறை:

பிரஷர் குக்கரில் நெய் ஊற்றி 4 முதல் 5 நிமிடங்கள் வரை மிதமான சூட்டில் கேரட்டை வதக்கவும்.

பின் பால் சேர்த்து, நன்கு கலந்து 1 விசில் வைக்கவும்.

வேகவைத்த கேரட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றி சர்க்கரை சேர்த்து, நன்கு கலந்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை கிளறவும்.

தேவைப்பட்டால் மேலும், சர்க்கரை சேர்த்து, சுவை பாருங்கள்

திராட்சை, பாதாம் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து மேலும் 1 நிமிடம் கிளறுவும்.

சூடாக பரிமாறவும்.

உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டுமா.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiuXLbDNc9o60eOYufy_XW6jVVpKCgPpIEIBgj6C80krVgXzKURB6qQNF91DA9_M4pjTwTWo4YOYlmPFTx-ybzteJ9scXnhzk-HHyU0ch12FXt1j8_2tgMm9MSVFBT52jqB58Ds17HjW-8/s1600/Acne.jpg 
**முகம் பிரகாசிக்க முதலில் குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தை கழுவி பின்னர் பப்பாளி பழச்சாறு, தேன் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து முகத்தில் தடவி 10-15 நிமிடங்கள் மசாஜ் செய்யவும் பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும்.

**ரோஸ் வாட்டர்  மற்றும் ஓட்ஸ் கலந்து
முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசிக்கும்.

**வேப்ப தூள், துளசி பொடி, ரோஜா இதழ் பொடி, முல்தானி
மெட்டி கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் வைத்துகொள்ளுங்கள். இந்த கலவையை தேவையான அளவு எடுத்து  1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் பேக் போல தடவி 20 நிமிடம் வைத்து பின்னர் மென்மையான வட்ட மசாஜ் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.



**உலர் திராட்சையை எடுத்து தோல் நீக்கி காய்ச்சாத பால் பயன்படுத்தி அரைத்து அதில் எலுமிச்சை சாறு, பன்னீர், தேன் துளிகள் மற்றும் கோதுமை மாவு இரண்டு தேக்கரண்டி கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் 20 நிமிடம் அப்லை செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

** தினமும் ஆரஞ்சு பழத்தை 2 துண்டுகளாக வெட்டி முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால் 1 மாதத்திற்குள் முகம் பளபளப்பாகவும்  பொலிவுடனும் இருக்கும்

**சில துளசி இலைகளை எடுத்து அரைத்து சாறு எடுத்து அதில்  எலுமிச்சை சாறு கலந்து 10-15 நிமிடங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் மசாஜ் செய்து பின் குளிர்ந்த நீரில் கழுவவும்.

**தயிர் மற்றும் தக்காளி சாறு, ஓட்ஸ் கலந்து முகத்தில் தடவி  20 நிமிடங்கள் அதை வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

**முள்ளங்கி சாறு 2 டீஸ்பூன், தக்காளி சாறு 2 டீஸ்பூன், எலுமிச்சை சாறு 2 டீஸ்பூன், கலந்து முகத்தில் தடவி  அரை மணி நேரம் வைத்து கழுவவும்.

Thursday, December 19, 2013

மாதவிலக்கு வயிற்று வலிக்கு வீட்டு மருந்து

http://beautyhealthtips.in/wp-content/uploads/2013/05/Irregular.periods.jpegமாதவிலக்கின் போது ஏற்படும் வயிற்று வலியால் அவதிப்படாத பெண்களே இருக்க மாட்டார்கள். மாதத்தின் மூன்று நாட்களை கடத்துவதற்குள் ஒரு யுகமே முடிந்து விட்டது என்றாகிவிடும். இதிலும் தற்போது 12 வயதிலே பெண்கள் பூப்பெய்துவதால் போதிய உடல் மன வலிமையில்லாமல் மாதவிலக்கு காலங்களில் பல்வேறு உடல் ரீதியான பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.

மாதவிலக்கு ஏற்படும் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பிலிருந்து மூன்று நாட்கள் வரை இடுப்பு, தொடை, வயிறு உள்ளிட்ட பாகங்‌களில் வலி ஏற்படும். இதில் இருந்து விடு படுவதற்கான தீர்வுகளை தேடும் முன்பு எந்த வகையான வலி என்பதை கண்டறிவது அவசியம். நமது உடலில் பூரோட்டோகிளாஸ்டின் எனும் பொருள் அதிகமாக சுரப்பதால் சிலருக்கு வயிற்று வலி ஏற்படலாம். இந்த சுரப்பியினால் கர்ப்ப பையின் தசைகள் சுருங்கி விரிந்து உட்தோல் சிதிலமடைந்து விடும்.

இதற்கு 20 வயதுக்கு மேற்பட்டோ அல்லது குழந்தை பெற்ற பிறகோ திர்வு கிடைத்துவிடும். இரண்டாம் நிலையில் மாதவிலக்கு வயிற்று வலியுடன் பெண்ணியல் நோய்களும் ஏற்படும். இந்நிலையில் கர்ப்பபை சுவரில் நார்திசு கட்டிகள், பாலியல் தொற்றுகள், இடுப்பு குழி நோய்கள் கர்ப்பபை  கட்டிகள் மற்றும் நீர்ப்பை கட்டிகளாலோ வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த வகை வயிற்று வலியை குணப்படுத்த உணவு முறையை மாற்றுவது அவசியம்.

மாதவிடாய் காலங்களில் உளுந்து கலந்த உணவை சாப்பிடுவது நல்லது. உளுந்துடன் பனை வெல்லம் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். பனைவெல்லத்தில் இரும்புச் சத்து அதிகமுள்ளது. இத்துடன் உளுந்து வயிற்று வலியை குணப்படுத்தும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசை வலி, கால் வலி, அடிவயிற்று வலிக்கு, வலி நிவாரணி மருந்துகளை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.

இதற்கு நமது சமையல் அறையில் இருக்கும் பொருட்களே நிரந்தர மருந்தாகும். வெற்றிலை இரண்டு, பூண்டு இரண்டு, சின்ன வெங்காயம் இரண்டு, சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிதளவு சுடு தண்ணீருடன் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிய தண்ணீரை காலை மாலை என இரு வேளைகளும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி மாயமாய் மறைந்து போகும். இந்த கசாயத்தை மாதவிலக்கின் முதல் நாளிலோ அல்லது வலி ஏற்படும் போதோ சாப்பிடலாம். இதன் மூலம் கர்ப்பபை வலுப்பெறும்.

மாதவிலக்கு காலங்களில் வெளியேறும் ரத்தப் போக்கை சமன் செய்ய அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், முட்டை, பேரீச்சம் பழம், மாதுளம் பழம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சி அடைவதோடு உடலும், மனமும் சோர்வின்றி  சுறுசுறுப்புடன் இயங்கும்.



கோதுமை மகத்தான பயன்கள்!


http://www.koodal.com/contents_koodal/health/images/2011/wheat19-594.jpg 
கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும். கோதுமை உலகில் முதலில் பயிரிடப் பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன் மகரந்த சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு இனங்கள் காணப் படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை  தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராயிச்சிகள் தெரிவிக்கின்றன.

ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரும்பாலான இடங்களில் கோதுமை பயிர் செய்யப்படுகிறது. உலக வணிகத்தில் கோதுமை வாணிபம் ஏனைய அனைத்து பயிர் வாணிபங்களின் மொத்த தொகையிலும் அதிகமாகும். உலகளவில் மனித உணவில் தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாக கோதுமை விளங்குகிறது. அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவு பயிராகவும் விளங்குகிறது. மனித நாகரிக வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பெரிய பரப்பளவில் எளிதாக பயிரிடக்  கூடியதாகவும் நீண்ட காலத்திற்கு களஞ்சியப் படுத்தி வைக்கக் கூடியதாகவும் இருப்பதே கோதுமை சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.

கோதுமையின் பயன்கள்:

**முதுகுவலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

**வயிற்றில் புளிப்பு தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி வைத்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

**கோதுமை மாவை அக்கிப் புண், நெருப்பு  பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணைய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

**கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

**வேர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர் உடல் பலம் அதிகரிக்கும்.

**கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊறவைத்து காலையில் அடித்து பசையாக்கி அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகிற பால் கோதுமை பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி சித்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும் வேறு வகை நோயினால் அவதிப் பட்டு தெளிந்தவர்களும் விரைவில் உடல் நலம் தேறுவார்கள்.

தனியா ஒதுக்காதீங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTNKKekN9KxBoHD4eKrVapwauDsVLSqsje-HjT0Txf87gofaAfz9H039y4GnlvJWktnSk35SMMZykMzv1xGWln8aS7UPA92NKLuUmrn-3xskL9Ex-EAbGJ4_M3kFfZnwFO74WjQhkGjYI/s320/Image+003.jpg
 

 எளிமையாக கிடைக்கக் கூடிய கறிவேப்பிலையை உணவில் சேர்க்கும் போது பலர் தனியே எடுத்து வைத்து  விடுகின்றனர். ஆனால் இது சிறந்த மருத்துவம் என்றால் மிகையல்ல. நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 இலை மாலையில் 10 இலையையும் பறித்து உடனேயே மென்று சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்து விடும்.

இளநரையை தடுக்க மட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உண்விலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் இளநரை போகும். கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணையில் போட்டு கா
ய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இள நரை மாறும். வைட்டமின் 'ஏ','பி','பி2','சி' போன்ற உயிர் சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்பு, இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும். மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போதும் பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பர். இவர்கள் எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பர். இவர்களுக்கு சிறந்த மருந்தாக கருவேப்பிலை திகழ்கிறது.

கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மன நிலை மாறும். ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும். தவிர கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகிறது. இந்த கொழுப்புப் பொருட்கள் பெரும்பாலும் எண்ணையின் மூலம் அதிகம் உடலில் சேர்கிறது. ஒரு லிட்டர் எண்ணையில் 10 கருவேப்பிலை போட்டு கா
ய்ச்சி வடிகட்டினால் எண்ணையில் உள்ள கொழுப்புச்சத்து நீங்கும். 

சிலருக்கு உணவு உட்கொள்ளும் போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும். வயிற்றுப் போக்கு குணமாக கறிவேப்பிலை 20 கிராம், சீரகம் 5 கிராம், இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேலைகள் அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.

குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் கண் பார்வை தெளிவடையும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும். கை, கால் நடுக்கத்தைப் போக்கும். வீக்கம் கட்டிகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும்.

தலைச்சுற்றலை தவிர்க்க உதவும் கறிவேப்பிலை

http://www.nilavan.kartook.com/wp-content/uploads/2012/09/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-300x300.jpg 
தலைச் சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம் எங்கேயும் போக முடியாமல் எதுவும்  செய்ய முடியாமல் அப்படியே உட்காந்திருக்க தோணும்.... கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு தெரியாது.   

இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது. கறிவேப்பிலை தைலம் தலை சுற்றலை அடியோடு விரட்டும் தன்மை கொண்டது.

இந்த தைலத்தை எளிதாக வீட்டில் தயார் செய்யலாம். கறிவேப்பிலை 200 கிராம், பச்சை கொத்தமல்லி 50 கிராம், சீரகம் 50 கிராம்,
நல்லெண்ணெய் 600 கிராம், பசுவின் பால் 200 மில்லி., எடுத்து கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சை கொத்தமல்லியும் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மில்லி பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடணும். ஐந்து நிமிடங்கள் சூடேறிய பிறகு பச்சை கொத்தமல்லியை போட வேண்டும்.

அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணைய்க்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்க வேண்டும். அன்றைய தினம் குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். நாளடைவில் தலைச்சுற்றல் பிரச்னை தீரும்.