Pages

Thursday, December 19, 2013

தலைச்சுற்றலை தவிர்க்க உதவும் கறிவேப்பிலை

http://www.nilavan.kartook.com/wp-content/uploads/2012/09/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-300x300.jpg 
தலைச் சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம் எங்கேயும் போக முடியாமல் எதுவும்  செய்ய முடியாமல் அப்படியே உட்காந்திருக்க தோணும்.... கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு தெரியாது.   

இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது. கறிவேப்பிலை தைலம் தலை சுற்றலை அடியோடு விரட்டும் தன்மை கொண்டது.

இந்த தைலத்தை எளிதாக வீட்டில் தயார் செய்யலாம். கறிவேப்பிலை 200 கிராம், பச்சை கொத்தமல்லி 50 கிராம், சீரகம் 50 கிராம்,
நல்லெண்ணெய் 600 கிராம், பசுவின் பால் 200 மில்லி., எடுத்து கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சை கொத்தமல்லியும் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மில்லி பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடணும். ஐந்து நிமிடங்கள் சூடேறிய பிறகு பச்சை கொத்தமல்லியை போட வேண்டும்.

அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணைய்க்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்க வேண்டும். அன்றைய தினம் குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். நாளடைவில் தலைச்சுற்றல் பிரச்னை தீரும்.

No comments: