Pages

Thursday, December 19, 2013

கோதுமை மகத்தான பயன்கள்!


http://www.koodal.com/contents_koodal/health/images/2011/wheat19-594.jpg 
கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும். கோதுமை உலகில் முதலில் பயிரிடப் பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன் மகரந்த சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு இனங்கள் காணப் படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை  தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராயிச்சிகள் தெரிவிக்கின்றன.

ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரும்பாலான இடங்களில் கோதுமை பயிர் செய்யப்படுகிறது. உலக வணிகத்தில் கோதுமை வாணிபம் ஏனைய அனைத்து பயிர் வாணிபங்களின் மொத்த தொகையிலும் அதிகமாகும். உலகளவில் மனித உணவில் தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாக கோதுமை விளங்குகிறது. அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவு பயிராகவும் விளங்குகிறது. மனித நாகரிக வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பெரிய பரப்பளவில் எளிதாக பயிரிடக்  கூடியதாகவும் நீண்ட காலத்திற்கு களஞ்சியப் படுத்தி வைக்கக் கூடியதாகவும் இருப்பதே கோதுமை சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.

கோதுமையின் பயன்கள்:

**முதுகுவலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

**வயிற்றில் புளிப்பு தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி வைத்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

**கோதுமை மாவை அக்கிப் புண், நெருப்பு  பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணைய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

**கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

**வேர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர் உடல் பலம் அதிகரிக்கும்.

**கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊறவைத்து காலையில் அடித்து பசையாக்கி அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகிற பால் கோதுமை பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி சித்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும் வேறு வகை நோயினால் அவதிப் பட்டு தெளிந்தவர்களும் விரைவில் உடல் நலம் தேறுவார்கள்.

No comments: