மாதவிலக்கின்
போது ஏற்படும் வயிற்று வலியால் அவதிப்படாத பெண்களே இருக்க மாட்டார்கள்.
மாதத்தின் மூன்று நாட்களை கடத்துவதற்குள் ஒரு யுகமே முடிந்து விட்டது
என்றாகிவிடும். இதிலும் தற்போது 12 வயதிலே பெண்கள் பூப்பெய்துவதால் போதிய
உடல் மன வலிமையில்லாமல் மாதவிலக்கு காலங்களில் பல்வேறு உடல் ரீதியான
பிரச்னைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடுகின்றனர்.
மாதவிலக்கு ஏற்படும் ஒரு சில மணி நேரங்களுக்கு முன்பிலிருந்து மூன்று நாட்கள் வரை இடுப்பு, தொடை, வயிறு உள்ளிட்ட பாகங்களில் வலி ஏற்படும். இதில் இருந்து விடு படுவதற்கான தீர்வுகளை தேடும் முன்பு எந்த வகையான வலி என்பதை கண்டறிவது அவசியம். நமது உடலில் பூரோட்டோகிளாஸ்டின் எனும் பொருள் அதிகமாக சுரப்பதால் சிலருக்கு வயிற்று வலி ஏற்படலாம். இந்த சுரப்பியினால் கர்ப்ப பையின் தசைகள் சுருங்கி விரிந்து உட்தோல் சிதிலமடைந்து விடும்.
இதற்கு 20 வயதுக்கு மேற்பட்டோ அல்லது குழந்தை பெற்ற பிறகோ திர்வு கிடைத்துவிடும். இரண்டாம் நிலையில் மாதவிலக்கு வயிற்று வலியுடன் பெண்ணியல் நோய்களும் ஏற்படும். இந்நிலையில் கர்ப்பபை சுவரில் நார்திசு கட்டிகள், பாலியல் தொற்றுகள், இடுப்பு குழி நோய்கள் கர்ப்பபை கட்டிகள் மற்றும் நீர்ப்பை கட்டிகளாலோ வலி ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த வகை வயிற்று வலியை குணப்படுத்த உணவு முறையை மாற்றுவது அவசியம்.
மாதவிடாய் காலங்களில் உளுந்து கலந்த உணவை சாப்பிடுவது நல்லது. உளுந்துடன் பனை வெல்லம் சேர்த்து கஞ்சி வைத்து குடிக்கலாம். பனைவெல்லத்தில் இரும்புச் சத்து அதிகமுள்ளது. இத்துடன் உளுந்து வயிற்று வலியை குணப்படுத்தும். மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தசை வலி, கால் வலி, அடிவயிற்று வலிக்கு, வலி நிவாரணி மருந்துகளை உபயோகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. ஏன் என்றால் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம்.
இதற்கு நமது சமையல் அறையில் இருக்கும் பொருட்களே நிரந்தர மருந்தாகும். வெற்றிலை இரண்டு, பூண்டு இரண்டு, சின்ன வெங்காயம் இரண்டு, சீரகம் ஒரு தேக்கரண்டி எடுத்து சிறிதளவு சுடு தண்ணீருடன் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்டிய தண்ணீரை காலை மாலை என இரு வேளைகளும் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து சாப்பிட்டால் வயிற்று வலி மாயமாய் மறைந்து போகும். இந்த கசாயத்தை மாதவிலக்கின் முதல் நாளிலோ அல்லது வலி ஏற்படும் போதோ சாப்பிடலாம். இதன் மூலம் கர்ப்பபை வலுப்பெறும்.
மாதவிலக்கு காலங்களில் வெளியேறும் ரத்தப் போக்கை சமன் செய்ய அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பால், முட்டை, பேரீச்சம் பழம், மாதுளம் பழம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சி அடைவதோடு உடலும், மனமும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் இயங்கும்.

No comments:
Post a Comment