Pages

Thursday, December 19, 2013

கோதுமை மகத்தான பயன்கள்!


http://www.koodal.com/contents_koodal/health/images/2011/wheat19-594.jpg 
கோதுமை என்பது டிரிடிகம் இனத்தை சேர்ந்த தானிய வகைகளில் ஒன்றாகும். இதன் தாயகம் மத்திய கிழக்கின் லிவான்ட் பிரதேசம் மற்றும் ஏத்தியோப்பிய விலை நிலங்களாகும். கோதுமை உலகில் முதலில் பயிரிடப் பட்ட தாவரங்களில் ஒன்றாகும். கோதுமையின் தன் மகரந்த சேர்க்கை காரணமாக இதில் பல்வேறு இனங்கள் காணப் படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சிகள் முதன் முதலில் வளர் பிறை மற்றும் கழிமுக பகுதிகளிலும் பயிரிடப் பட்டதை  தெரிவிக்கின்றன. தென் கிழக்கு துருக்கியில் கோதுமை பயிரிடப் பட்டதாக அண்மை ஆராயிச்சிகள் தெரிவிக்கின்றன.

ஏனைய எந்த பயிர்களை காட்டிலும் அதிக பரப்பளவில் உலகின் பெரும்பாலான இடங்களில் கோதுமை பயிர் செய்யப்படுகிறது. உலக வணிகத்தில் கோதுமை வாணிபம் ஏனைய அனைத்து பயிர் வாணிபங்களின் மொத்த தொகையிலும் அதிகமாகும். உலகளவில் மனித உணவில் தாவர புரதத்தின் முக்கிய ஆதாரமாக கோதுமை விளங்குகிறது. அரிசிக்கு அடுத்தபடியான மனித உணவு பயிராகவும் விளங்குகிறது. மனித நாகரிக வளர்ச்சியில் கோதுமை முக்கிய பங்களிப்பு வழங்கியது. பெரிய பரப்பளவில் எளிதாக பயிரிடக்  கூடியதாகவும் நீண்ட காலத்திற்கு களஞ்சியப் படுத்தி வைக்கக் கூடியதாகவும் இருப்பதே கோதுமை சாகுபடி பரப்பு அதிகரிக்க காரணம்.

கோதுமையின் பயன்கள்:

**முதுகுவலி மூட்டு வலியால் அவதிப்படுபவர்களுக்கு கோதுமையை வறுத்து பொடித்து அதனுடன் தேன் சேர்த்து உட்கொள்ள வேண்டும்.

**வயிற்றில் புளிப்பு தன்மை உடையவர்கள் மற்றும் புளித்த ஏப்பம் அடிக்கடி வருபவர்கள் கோதுமை ரவையை கஞ்சி வைத்து குடித்தால் உடனே நிவாரணம் பெறலாம்.

**கோதுமை மாவை அக்கிப் புண், நெருப்பு  பட்ட இடம், மேல் தோல் உரிந்துபோன இடம் ஆகியவற்றில் தூவினாலும் அல்லது வெண்ணைய் கலந்து பூசினாலும் எரிச்சல் தணியும்.

**கோதுமை மாவை களியாக செய்து கட்டிகளுக்கு வைத்து கட்ட அவை சீக்கிரம் குணமாகும்.

**வேர்க்குருவால் அவதிப்படுபவர்கள் கோதுமை மாவை புளித்த காடி நீரில் கலந்து பூசிவர அவை விரைவில் மறையும். கோதுமையை உணவில் அதிகம் எடுத்துக் கொள்பவர் உடல் பலம் அதிகரிக்கும்.

**கோதுமையை முந்தைய நாளே நீரில் ஊறவைத்து காலையில் அடித்து பசையாக்கி அதை மெல்லிய துணியில் இட்டு வடிகட்டி பிழிந்து வருகிற பால் கோதுமை பாலாகும். இந்த பாலை கப நோயாளிகள் பருக நல்ல பலன் கிடைக்கும். கோதுமை கஞ்சி சித்து சாப்பிட காசநோய் உள்ளவர்களும் வேறு வகை நோயினால் அவதிப் பட்டு தெளிந்தவர்களும் விரைவில் உடல் நலம் தேறுவார்கள்.

தனியா ஒதுக்காதீங்க


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTNKKekN9KxBoHD4eKrVapwauDsVLSqsje-HjT0Txf87gofaAfz9H039y4GnlvJWktnSk35SMMZykMzv1xGWln8aS7UPA92NKLuUmrn-3xskL9Ex-EAbGJ4_M3kFfZnwFO74WjQhkGjYI/s320/Image+003.jpg
 

 எளிமையாக கிடைக்கக் கூடிய கறிவேப்பிலையை உணவில் சேர்க்கும் போது பலர் தனியே எடுத்து வைத்து  விடுகின்றனர். ஆனால் இது சிறந்த மருத்துவம் என்றால் மிகையல்ல. நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 இலை மாலையில் 10 இலையையும் பறித்து உடனேயே மென்று சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வெறும் வயிற்றில் தினமும் கறிவேப்பிலை இலையை மென்று சாப்பிட வேண்டும். இப்படியே 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் பருமனாவது தவிர்க்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறும் அளவும் குறைந்து விடும்.

இளநரையை தடுக்க மட்டுமல்ல நரை முடி வந்தவர்களும் உண்விலும் தனியாகவும் கறிவேப்பிலையை அதிகமாக சாப்பிட்டு வந்தால் இளநரை போகும். கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணையில் போட்டு கா
ய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இள நரை மாறும். வைட்டமின் 'ஏ','பி','பி2','சி' போன்ற உயிர் சத்துக்கள் நிரம்பியுள்ளன. சுண்ணாம்பு, இரும்புச் சத்தும் அதிகம் உள்ளன.

சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் அடிக்கடி கருவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை, மாலை குடித்து வந்தால் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும். மன அழுத்தம் காரணமாக சிலர் எப்போதும் பார்த்தாலும் குழப்பமாகவே இருப்பர். இவர்கள் எந்த வேலையை முதலில் செய்வது என்று புரியாமல் தவிப்பர். இவர்களுக்கு சிறந்த மருந்தாக கருவேப்பிலை திகழ்கிறது.

கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மன நிலை மாறும். ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும். தவிர கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் ரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகிறது. இந்த கொழுப்புப் பொருட்கள் பெரும்பாலும் எண்ணையின் மூலம் அதிகம் உடலில் சேர்கிறது. ஒரு லிட்டர் எண்ணையில் 10 கருவேப்பிலை போட்டு கா
ய்ச்சி வடிகட்டினால் எண்ணையில் உள்ள கொழுப்புச்சத்து நீங்கும். 

சிலருக்கு உணவு உட்கொள்ளும் போது அதில் அதீத சுவை இருந்தாலும் கூட அதை அவர் நாவினால் உணர முடியாது. இவர்கள் கறிவேப்பிலை, சீரகம், இஞ்சி, சிறிதளவு பச்சை மிளகாய், புளி, உப்பு, பூண்டு இவைகளை நன்கு அரைத்து சூடான சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் சுவையை உணரும். வயிற்றுப் போக்கு குணமாக கறிவேப்பிலை 20 கிராம், சீரகம் 5 கிராம், இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேலைகள் அருந்தி வந்தால் வயிற்றுப் போக்கு குணமாகும்.

குடலில் உள்ள கிருமிகளை அழிக்கும் கண் பார்வை தெளிவடையும் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். மது போதையில் தள்ளாடுபவர்களுக்கு கறிவேப்பிலையின் சாறு கொடுத்தால் போதை உடனே குறையும். கை, கால் நடுக்கத்தைப் போக்கும். வீக்கம் கட்டிகள் போன்றவற்றைக் குணப்படுத்தும். நகங்களில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்தும்.

தலைச்சுற்றலை தவிர்க்க உதவும் கறிவேப்பிலை

http://www.nilavan.kartook.com/wp-content/uploads/2012/09/%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-300x300.jpg 
தலைச் சுற்று வந்தால் சொல்லவே வேண்டாம் எங்கேயும் போக முடியாமல் எதுவும்  செய்ய முடியாமல் அப்படியே உட்காந்திருக்க தோணும்.... கொஞ்ச நேரம் என்ன நடக்குதுன்னு தெரியாது.   

இதிலிருந்து விடுதலை பெற இயற்கையின் வரப்பிரசாதமான கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது. கறிவேப்பிலை தைலம் தலை சுற்றலை அடியோடு விரட்டும் தன்மை கொண்டது.

இந்த தைலத்தை எளிதாக வீட்டில் தயார் செய்யலாம். கறிவேப்பிலை 200 கிராம், பச்சை கொத்தமல்லி 50 கிராம், சீரகம் 50 கிராம்,
நல்லெண்ணெய் 600 கிராம், பசுவின் பால் 200 மில்லி., எடுத்து கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை காம்புகள் நீக்கி நன்றாக அரைத்துக் கொள்ளவும். பச்சை கொத்தமல்லியும் மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

சீரகத்தை சுத்தம் செய்து மண் சட்டியில் போட்டு 200 மில்லி பாலை ஊற்றி ஆறு மணி நேரம் மூடி வைத்திருந்து சீரகத்தை எடுத்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு மண்பானையில் நல்லெண்ணையை ஊற்றி அடுப்பில் வைத்து சிறிது சூடேறியதும் அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலையை போடணும். ஐந்து நிமிடங்கள் சூடேறிய பிறகு பச்சை கொத்தமல்லியை போட வேண்டும்.

அதன் பின் ஐந்து நிமிடங்கள் கழித்து சீரகத்தையும் போட்டு தைலப்பதம் வந்ததும் இறக்கி ஆறவிடவும். ஆறியதும் மெல்லிய துணியில் வடிகட்டிக் கொள்ளவும். நான்கு நாட்களுக்கு ஒருமுறை நல்லெண்ணைய்க்கு பதிலாக கறிவேப்பிலைத் தைலத்தை தேய்த்து குளிக்க வேண்டும். அன்றைய தினம் குளிர்ந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். நாளடைவில் தலைச்சுற்றல் பிரச்னை தீரும்.

Wednesday, December 18, 2013

பழங்கால உணவே சிறந்தது


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhVzWQPIDYZFrRjjOBl_ULgM6s0odmDNlPYTeumWhpaM0fyp5osNByXAVulnvfeFmpfYcnR0PK4xe7NslcyCudFEZMGMbv7MMuNDqJFo_6T9UWV4r7W_lTBLrH7bSLstgLWMB3DKP085gA/s1600/whole+grains.jpgஉணவே மருந்து அன்றைககு நம் முன்னோர் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவு தான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்துக்கு காரணமாக விளங்குகிறது. ஆனால் இன்றைய இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம் தான். அதிலும் இப்போது பாஸ்ட் புட் கலாசாரமாகி விட்டது. இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது. இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க, பழங்கால உணவு முறைக்கு மாறினால் தான் நல்லது.

பசுமை புரட்சிக்கு பின் தான் அனைவரும் நெல்லரிசியை முதன்மையாக கொண்டு தங்கள் உணவுப்பழக்கத்தை மாற்றிக் கொண்டனர். இதனால் சிறு தானியங்களின் பயன்பாடு பெருமளவு குறைந்து விட்டது. நெல், கோதுமை என்ற பசுமைப் புரட்சியின் ஒற்றைச் சிந்தனையிலிருந்து விடுபட்டு வரகு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரை வாலி போன்ற சிறு தானியங்களுக்கு மாற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

சமீபத்தில் இந்திய மருத்துவக் கழகம் நடத்திய ஆய்வில் தமிழகத்தில் 42 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும் அந்நோய் அறிகுறிகளுடன் 30 லட்சம் பேர் வாழ்ந்து வருவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. நெல், கோதுமை, வாழை, கரும்பு ஆகியவற்றை காட்டிலும் சிறு தானிய பயிர்களே பல்லுயிர் பெருக்கத்துக்கு காரணமாக உள்ளன. வரகு, சாமை, கம்பு, பனிவரகு, கேழ்வரகு, திணை ஆகியவற்றை தேடி உன்ன வேண்டும். கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன. இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும். இது தாய்மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும். சோளத்தில் உடலுக்கு தேவையான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன. உடல் பருமனைக் குறைக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூல நோயாளிகளுக்கு சோள உணவு ஒததுக்கொள்ளாது. வரகில் புரதம், இரும்பு, மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது. இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்து மிக்கது கேழ்வரகு, ராகி என்றும் இதை அழைப்பர். புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன. இது உடல் உஷ்ணத்தை சம நிலையில் வைத்திருக்கும் குடலுக்கு வலிமை அளிக்கும், நிரழிவு நோயாளிகள் கூட கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.

புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது, மலச்சிக்கல் ஏற்படாது. பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது. கொழுப்பு சத்தை அதிகரிக்கும். இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும். சம்பா வகையில் சீரகச் சம்பா அரிசி, ஆரம்ப நிலை வாத நோய்களை போக்க வல்லது. பசியை ஊக்குவிக்கும். ஈர்க்குச்சம்பா  அரிசி சாப்பிட ருசியானது. ஆனால் பித்தம் கூடும். குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச் சம்பா, கோரைச் சம்பா, கடைச் சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவ குணம் நிறைந்தவை. அரிசியை விட கோதுமையில் சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக்  போன்ற பல சத்துக்கள் உள்ளன. இது நீரிழிவு நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.

தெம்பு தரும் கம்பு!

http://i00.i.aliimg.com/photo/v0/126955954/Indian_Bajara.jpg_250x250.jpg 
அது ஒரு கனாக்காலம். நிச்சயமாக சொல்லித்தான் ஆக வேண்டும். இன்றைய தலைமுறையினரின் நாகரீகம் ரொம்பவும் பரந்து விரிந்து விட்டது. உணவுகளில் துவங்கி உடை வரை நிச்சயமாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. பொங்கல் சாப்பிடும் நாக்குகள் இன்று பீசாவை ருசி காண துடிப்பதால் அழையா விருந்தாளியாக வந்து ட்டிக் கொள்கின்றன வியாதிகள்.

எதனால் வியாதி வந்தது என்று தெரியாமல் குழம்பிப் போய் மருத்துவரிடம் சென்றா
ல் அரை வயிறு தான் சாப்பிட வேண்டும். கால் வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறு காலியாக வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மருந்து, மாத்திரைகள் எழுதி தருவார்கள். இயற்கைக்கு ஒத்துழைக்கும் நம் உடல் செயற்கை மருந்துகளுக்கு பழக்கப்படுத்திக் கொண்டால் பல பின் விளைவுகள் ஏற்பட்டு அதற்கும் மருந்துகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை எல்லாம் தவிர்த்து ஆதி காலத்து உணவுகளை எடுத்துக் கொண்டோமேயானால் எளிதாக மூச்சு விடுவதில் துவங்கி இனிமையான தூக்கம் வருவது வரை எல்லாம் சிறப்பாக நடந்தேறும் அதில் குறிப்பிடத்தக்க  ஒன்று தான் 'கம்பு'.

கம்பு தானியத்தில் அதிகமாக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, ரிபோபுளோவின், தயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச் சத்து, பி வைட்டமின், காரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பால் உயிர்ச் சத்துக்கள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. தோலுக்கும், கண் பார்வைக்கும் அவசியமான வைட்டமின் 'ஏ' உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டின்  அதிகளவில் கம்பில் மட்டுமே உள்ளது.

அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. கம்பு மற்ற தானியங்களை காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம். வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள் வெயிலில் அதிகம் அலைபவர்கள் அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள். இரவு நேர வேலையில் இருப்பவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும்.

கம்பு உணவை காலை மதியவேலைகளில் உண்டு வந்தால் உடல் சூடு குறையும். நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்பு சாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். பின்னர் கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்டினி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டு பிடித்து மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள்.

குளிர்காலத்திற்கான சரும பாதுகாப்பு


உடலின் ஆரோக்கியத்தை வெளிக்காட்டுவதில் சருமத்திறுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவேhttps://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgGbxUHKGUhSasPQw7mXy5sxHOrBKY9EkaeluBG6u2VdgyF1rSXaO_9W1fRjtq45NS-jzct7u5EopCNatlu9QBK6K99RHguv6Ye2Lip09NuCGShG8iAUBvkSzavhNxP3Bu1U0upjFQWpwU/s1600/Skin-care-in-Winter-Season.jpg அதை பாதுகாப்பது மிகவும் அவசியம். பனிக்காலத்தில் தோலில் வெடிப்பு, அரிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகிறது. குளிர்காலத்தில் தோலை வருடும் பனிக்காற்று, இதமாய் தொல்லைகளையும் தந்து விட்டு செல்கிறது.

அதிகாலையில் பனி அதிகம் இருப்பதால், தோலில் வறட்சி ஏற்படுகிறது. சோப்பு போட்டு குளிப்பதால் தோல் வறண்டு வெள்ளை வெள்ளையாக திட்டுகள் உருவாகிறது. வறண்ட தோலின் மீது வெயில் படும் போது சிலருக்கு அரிப்பு ஏற்படலாம். இது போன்ற தொல்லைகளை தவிர்க்க நீர்ப்பசை மற்றும் எண்ணைய் பசை உள்ள ஈரப்பதமான சோப்பை பயன்படுத்தலாம். பனிக்காலத்தில் பாதங்களை பாடாய் படுத்துவது வெடிப்பு தொடர்ந்து தண்ணீரில் வேலை செய்வது பித்தம் காரணமாக வெடிப்பு அதிகரிக்கும்.  சிறிய அளவில் வெடிப்பு உள்ளவர்கள் கண்டு கொள்ளாமல் விடுவதால் அதில் அழுக்கு சேர்ந்து வலியை ஏற்படுத்தும்.

சிறிய அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சொரியாசிஸ் ஏற்படவும் பனிக்காற்று காரணமாகி விடுகிறது. தலையில் பொடுகு உள்ளவர்களுக்கு பனிக்காலத்தில் தொல்லை அதிகரிக்கும். தலைப் பகுதியில் உள்ள தோலில் ஏற்படும் வறட்சியின் காரணமாக பொடுகு பிரச்னை அதிகமாகி அது உதிரத் தொடங்கும். இதனால் தலை முடி பொலிவிழந்து அரிப்பு அதிகரிக்கும். முடியும் கொட்டும்.

குழந்தைகளுக்கு இக்காலங்களில் கொசுக் கடியால் தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதனால் தோல் பகுதியில் அரிப்புடன் புண் ஆகியவை ஏற்படலாம். இதற்கு குளிப்பதற்கு ஈரப்பதம் உள்ள சோப்புகளை பயன்படுத்தலாம். இதன் மூலம் தோல் வறட்சியை தவிர்க்கலாம்.

சாதாரண சோப்பு பயன்படுத்துபவர்கள் குளித்து ஐந்து நிமிடத்துக்குள் ஈரப்பதம் நிறைந்த கிரீமை தோல் பகுதியில் தடவினால் வெடிப்பு ஏற்படாமல் பாதுகாக்கலாம். பாதத்தில் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் இரவு தூங்க செல்லும் முன் பத்து நிமிடங்கள் மிதமான சுடுதண்ணீரில் கல்உப்பு சேர்த்து கால்களை வைத்திருக்கலாம். பின் சுத்தமாக துடைத்து விட்டு வெடிப்பு மறைவதற்கான கிரீம்களை பயன்படுத்தலாம்.

பொடுகினை தவிர்ப்பதற்கு வாரம் இரண்டு முறை கட்டாயம் தலைக்கு குளித்து சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். முடி வறட்சியாக இல்லாமல் பார்த்துக் கொள்வது அவசியம். இப்பிரச்னை உள்ளவர்களின் துண்டு, சீப்பு, சோப்பு உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். சொரியாசிஸ் மற்றும் அரிப்பு போன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக தோல் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். பனிக் காலத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் கொசுக் கடியால் தோலில் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது. டாக்டரின் ஆலோசனைகளுடன் கொசு தடுப்பு கிரீம்களை பயன்படுத்தலாம்.

பற்களை பராமரிப்பது எப்படி?

 http://www.yarljothy.com/wp-content/uploads/2013/12/dental-9.jpg
உண்ணும் உணவுப் பொருட்களை நன்றாக அரைத்து எளிதில் செரிமானம் அடைய பற்கள் இன்றியமையாதது. முக அழகுக்கும் முக பொலிவுக்கும் பேசவும் பற்கள் மிக முக்கியம். உடலின் நுழைவு வாயிலான வாயை ஆரோக்கியமாக வைத்திருப்பது உடலில் பல நோய்களை வராமல் ருக்க வழி செய்யும்.

பற்களின் பாகங்களில் மிகவும் அதிகமாகப் பாதிக்கக் கூடியது பற்களை சுற்றியுள்ள ஈறு தான். பொதுவாக ஈறு நோய் வருவதின் முதல் கட்டம் நிறம் மாறுதல், ஈறு தடிப்பு, பால் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல் ஆகும். இயற்கையாகவே பால் ஈறுக்கும், பற்களுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும். அதுவே ஈறு வியாதியால் பாதிக்கப்பட்டால் பெரும் அளவு ஆழமாகி அதில் நிறைய பாக்டீரியாக்களும், பாக்டீரியாவால் வெளியேறும் விஷப் பொருட்களும் மற்றும் ஈறுடன் அழகிய சில பாகங்களும், உமிழ் நீரும் அடங்கி ஒரு பள்ளம் போல் ஆகிறது.

அதில், உற்பத்தியாகும் பொருட்கள் மூலம் தான் பற்களின் ஈறு மட்டும் அல்லாமல் எலும்புகளும் மற்றும் லிக்மண்டுகளும் பாதிக்கப்பட்டு பற்களில் அசைவு ஏற்பட்டு முடிவாக தானாகவே பற்கள் விழுவதற்கும் வாய்ப்பு ஏற்படுகிறது. இவ்வகையில் வியாதிகள் ஈறுகளில் ஏற்படும் போது ரத்தம் கசிதல், வாயில் உள்ள உமிழ்நீர் ஒரு திரவம் போல், சமயங்களில் வாய், தாடை போன்றவற்றில் கடைசி வரை பரவுதல் போன்றவையாகும். பொதுவாக பிளேக் என்னும் ஒரு வெண்படலம் பற்களின் ஈறுகளைச் சுற்றிப் படருகிறது. இது சாதாரண வெண்படலம் அல்ல. இந்தப் படலம் முழுவதும் விஷக் கிருமிகள் உள்ளன. அதை வளர விடுவதால் தொடர்ந்து கெட்டியாகி கறையாக மாறிவிடுகிறது.

ஈறு நோய்க்கான சிகிச்சை:
வருடத்துக்கு ஒருமுறை பற்களைச் சுத்தம் செய்து கொள்வதுடன் பற்கரை அகற்றி பற் களை பாதுகாக்க வேண்டும் 'அல்ட்ராசோனிக் ஸ்கேலர்' என்ற நவீன கருவி மூலம் பற் களை சுத்தம் செய்து கொள்ளலாம். பற்களில் ஏற்படும் சொத்தையானது பாக்டீரியாக்களால் ஏற்படுகிறது. பற்களில் உள்ள குழிகளில் ஒட்டும் தன்மையுள்ள உணவுப் பொருட்கள் தங்கி விடுவது கிருமிகள் வளர வழி வகுத்து பல் அரித்து பல சொத்தையை ஏற்படுத்துகிறது. பற்கூழைப் பாதிக்கும் பொழுது வழி ஏற்படுகிறது.

பல் சொத்தைக்கான சிகிச்சை:
சிறு புள்ளியாக சொத்தை ஏற்படும் போதே பல் மருந்துவரை அணுகி பல் அடைத்துக் கொள்வது நல்லது. முன் பற்களில் ஏற்படும் சொத்தையை காம்போசிட் எனப்படும் பல்லின் நிறம் கொண்ட சிமெண்டால் அடைப்பதால் பாதிப்பில்லாமல் பல் அழகு பாதுகாக்கப்படும்.

பல் சீரமைப்பு:
பொதுவாக முன் பல் தூக்கலாக இருப்பதற்கு காரணம் குழந்தை சிறு வயதில் உள்ள போது விரல் சுப்புவதாலும் பால் பற்கள் விழுந்து முளைக்கும் போது நக்கினால் முன் பல்லைத் தள்ளுவதாலும் ஏற்படுகிறது. ஆறு வயதுக்கு மேல் பற்பல விழுந்து முளைக்கும் சமயம் ஒவ்வொரு ஆறு மாதத்துக்கு ஒரு முறை பல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக கிளிப்புகள்  மூலம் வெளியில் தூக்கலாகத் தெரியும் பல் சரி செய்து பொருத்தப்படுகிறது. அதனால் பற்கள் சரியான இடத்துக்கு தள்ளப் படுவதால் பல்வரிசை சீராக அமையும். பல் சொத்தை பற்கூழ் பாதித்தாலும் வேர் சிகிச்சை எனும் நவீன சிகிச்சை மூலம் பற்களைப் பாதுகாக்கலாம்.