அது
ஒரு கனாக்காலம். நிச்சயமாக சொல்லித்தான் ஆக வேண்டும். இன்றைய
தலைமுறையினரின் நாகரீகம் ரொம்பவும் பரந்து விரிந்து விட்டது. உணவுகளில்
துவங்கி உடை வரை நிச்சயமாக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது. பொங்கல்
சாப்பிடும் நாக்குகள் இன்று பீசாவை ருசி காண துடிப்பதால் அழையா
விருந்தாளியாக வந்து ஒட்டிக் கொள்கின்றன வியாதிகள்.
எதனால் வியாதி வந்தது என்று தெரியாமல் குழம்பிப் போய் மருத்துவரிடம் சென்றால் அரை வயிறு தான் சாப்பிட வேண்டும். கால் வயிறு தண்ணீர் குடிக்க வேண்டும். கால் வயிறு காலியாக வைக்க வேண்டும் என்று சொல்லி விட்டு மருந்து, மாத்திரைகள் எழுதி தருவார்கள். இயற்கைக்கு ஒத்துழைக்கும் நம் உடல் செயற்கை மருந்துகளுக்கு பழக்கப்படுத்திக் கொண்டால் பல பின் விளைவுகள் ஏற்பட்டு அதற்கும் மருந்துகளை நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதை எல்லாம் தவிர்த்து ஆதி காலத்து உணவுகளை எடுத்துக் கொண்டோமேயானால் எளிதாக மூச்சு விடுவதில் துவங்கி இனிமையான தூக்கம் வருவது வரை எல்லாம் சிறப்பாக நடந்தேறும் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று தான் 'கம்பு'.
கம்பு தானியத்தில் அதிகமாக அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, ரிபோபுளோவின், தயாசின் சத்துக்கள், வைட்டமின்கள், தாது உப்புகள், மாவுச் சத்து, பி வைட்டமின், காரோட்டின், லைசின் போன்ற அமிலங்கள் என பால் உயிர்ச் சத்துக்கள் உள்ளதால் உணவுச் சத்து தரத்தில் முதலிடம் வகிக்கிறது. தோலுக்கும், கண் பார்வைக்கும் அவசியமான வைட்டமின் 'ஏ' உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டின் அதிகளவில் கம்பில் மட்டுமே உள்ளது.
அரிசியை விட கிட்டத்தட்ட எட்டு மடங்கு அதிக இரும்புச் சத்து கம்பு தானியத்தில் உள்ளது. கம்பு மற்ற தானியங்களை காட்டிலும் வைட்டமின் அதிகமாக இருப்பதால் வைட்டமின் சத்துக் குறைவால் உடலில் தோன்றும் வியாதிகளை இதை உண்பதன் மூலம் சரி பண்ணலாம். வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் அடிக்கடி கம்பு உணவை சேர்க்க வேண்டும். வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும். வேண்டாத கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்கும். சர்க்கரை நோயாளிக்கு கம்பு ஒரு வரப்பிரசாதம் ஆகும்.
வெப்ப நாடுகளில் வேலை செய்பவர்கள் வெயிலில் அதிகம் அலைபவர்கள் அதிக சூடுடைய இயந்திரங்களில் வேலை பார்ப்பவர்கள். இரவு நேர வேலையில் இருப்பவர்கள் நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள், அஜீரணக் கோளாறு, மலச்சிக்கல், வயிற்றில் புண்கள், குடல்புண், கடின வேலை செய்பவர்கள், எப்போதும் மன அழுத்தத்துடன் இருபவர்கள் போன்றோருக்கு உடல் அதிக உஷ்ணமும் சோர்வும் உண்டாகும்.
கம்பு உணவை காலை மதியவேலைகளில் உண்டு வந்தால் உடல் சூடு குறையும். நம் முன்னோர்கள் கம்பு தானியத்தில் கம்பு சாதம் அல்லது கம்பஞ்சோறு, கம்பங்கூழ் மட்டுமே செய்து வந்தார்கள். பின்னர் கம்புத் தோசை, கம்பு இட்லி, கம்பு வடை, கம்பு சட்டினி, இனிப்பு கம்பு அடை, கம்பு உப்புமா, கம்மங்கொழுக்கட்டை, கம்பு புட்டு, கம்பு பொங்கல் என கம்பில் புதுப்புது உணவு வகைகளைக் கண்டு பிடித்து மிகவும் சுவையாக செய்ய தொடங்கி விட்டார்கள்.

No comments:
Post a Comment