Pages

Saturday, July 19, 2014

காரசார உணவுகள் தொண்டைக்கு எதிரி

சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்ப்படும். குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்ப்பட்டு மிகுந்த தொந்தரவை தரும். குறிப்பாக தொண்டையில் புண் வந்தால்,அரிப்பு எரிச்சல் வந்து பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். இதற்கு ஒரு சில உணவுகளை தவிர்த்தால் தொண்டை புண்ணை விரைவில் சரி செய்யலாம்.

நா ஊற வைக்கும் உணவுகள் 

நா ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பலன்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்பு, வலியும்ஏற்ப்படும். அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.

காரமான உணவுகள்

நிறைய பேர், சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது, காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று நினைகின்றனர். ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட்டு விடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். ஆகவே மிளகாய், கிராம்பு,மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்ந்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

பால்

தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைகின்றனர். ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்

வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு, அதிகமான் வலியையும் ஏற்படுத்தும். எனவே நட்ஸ் பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால், விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்ப்படாமலும்  இருக்கும்.

காபைன்

சூடான காப்பி குடித்தால் தொண்டைக்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காபைனில் உள்ள பொருள், தொண்டையில் அரிப்பை ஏற்ப்படுத்தி, வழியை உண்டாக்கும். ஆகவே காபைனால் ஆன பொருட்களை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக டீயை போட்டுக் குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.




சமையல் செய்யும் போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்!

பச்சை காய்கறிகளை சமைக்கும் போது சிறிதளவு எலுமிச்சைசாறு பிழிந்தால் காய்களின் நிறம் மாறாது.

பச்சை மிளகாயை  கம்பை கிள்ளி விட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது. 

பித்தளை பாத்திரங்களை கழுவிய பின் தோல் சீவிய உருளைகிழங்கை அந்த பாத்திரத்தின் மேல் தேய்க்க பளபளப்பு கூடும்.

முட்டையோடு, தக்காளி சாற்றையும் சேர்த்து ஆம்லெட் செய்யும் போது மிகவும் சுவையாக இருப்பதோடு, முட்டை வாசம் சிறிதும் வராது.
எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
சாம்பார் வைக்கும்போது உப்பு அதிகமாகிவிட்டால் இரண்டு உருளைகிழங்கை வெட்டிப் போட சரியாகிவிடும்.

மட்டன், நன்றாக வேகவேண்டும் என்றால் சிறிய பப்பாளித்துண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து சமைக்கும் போது அதன் நிறம் காய்கறி கலவையில் இறங்காமளிருக்க வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை மட்டும் சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு செய்தால் காய்களின் நிறம் மாறாது.

காலிப்பிளவரை அரைவேக்காடாக வேக வைத்து, அதில் சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்துள், உப்பு சேர்த்து, ஊற வைத்து பின் பொரித்து எடுத்தால்.எண்ணெய் குடிக்காத காலிப்பிளவர் சில்லி ரெடி. 

Friday, July 18, 2014

டென்ஷன்... டென்ஷன்... குறைக்க என்னதான் வழி?

இன்று வேலைக்கு செல்வோரில் பெரும்பாலனவர்கள் டென்ஷனால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு மற்றும் வேலையை திட்டமிட்டு செய்யாமல் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் வாழ்க்கையின் மீது வெறுப்பு உண்டவதோடு, எந்த ஒரு செயலையும் உருப்படியாக செய்யமுடியாமல் தவிப்பர்.

மன அழுத்தம், வேலை பளுவால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், உடன் பணிபுரியும் நபர்கள் செய்யும் சில வெறுக்கத்தக்க செயல்கள்,எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் மூத்த அதிகாரிகளாலும் ஏற்ப்படுகிறது. அதனால் எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி கொண்டு, பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தத்தில் இருந்து சுலபமாக வெளியே வர முடியும். மேலும் டென்ஷன் ஏற்படும் போது அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து, அதை மெதுவாக வெளியே விட வேண்டும். இதனால் மனமும் உடலும் அமைதியாகும். ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலை பளு இருக்கும் போது, பதற்றத்துடன் இருக்காமல் நிதானமாக வேலை செய்ய வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது தூரம் வாக்கிங் சென்று வரலாம். நல்ல இசை மன அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், உங்களுக்கு பிடித்த இசையை, உங்கள் மொபைல் போனில் கேளுங்கள் அல்லது விடியோவை பாருங்கள். டென்ஷன் குறைய வேண்டுமானால், காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. காபி குடிப்பது டென்ஷனை குறைக்கும் என்பது தவிறு.

காபியில் உள்ள காபின் என்ற வேதிப்பொருள் டென்ஷனை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தை, தியானம் கண்டிப்பாக குறைக்கும். தியானம் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து, மனம் அமைதியடைகிறது. மனம் அமைதி இழந்து காணப்படும் போது, உங்கள்ளுக்குப்பிடித்த நல்ல உணவுகளை உட்கொள்ளலாம். பாதாம், ஆரஞ்சு உள்ளிட்டவை டென்ஷனை குறைக்கும் உணவுகள் என்று கூறலாம். வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், மன அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.


குறிப்பாக ஆரஞ்சு,சாத்துக்குடி உள்ளிட்ட சிட்ரஸ் ரக பழங்களை, வேலையின் போது உண்ணலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. இது , உடலில் உள்ள தசைகளை அமைத்யடயச் செய்கிறது. இது தவிர, நம்மை சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாகவும், நல்ல வாசனை இருக்கக் கூடியதாகவும் அமைத்துக் கொள்ளவதால்,நமக்கே நம் மீது நம்பிக்கை பிறக்கும். டென்ஷன் தானாக விலகும்.

Tuesday, July 15, 2014

எந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்

பழங்களை உண்டல் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த வகையான சத்து கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

சில பழங்களை தேவையான் காலங்களை மட்டுமே உண்ண வேண்டும். வைட்டமின், பாஸ்பரஸ் , பொட்டாசியம் போன்ற சத்துக்கள், ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்களில் மட்டுமல்லாது, நம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, எலுமிச்சை போன்ற பழங்களிலும் சத்துகள் நிறைந்துள்ளது. எந்ததெந்த பழங்களில் எத்தனை சத்துகள் நிறைந்துள்ளது என்பதி பார்ப்போம்.

எழுமிச்சப்பழம்: தினமும் எழுமிச்ச பழச் சாற்றினை நீருடன் தினமும் காலை, மாலை என இரு வேலைகளிலும் பருகி வர உடல் சூடு குறையும். முகம் பொலிவு பெரும். எழுமிச்சை சாற்றுடன் சிறிதளவு பன்னீர் கலந்து வாய் கொப்பளிப்பது, பற்களை வலுவாக்குகிறது. ஈறுகளை உறுதியாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. எழுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி சத்து முழுமையாக உள்ளது.
வாழைப்பழம்வாழைப்பழம்: பழங்களில் பழத்திற்கென்றே தனிச் சிறப்பு உள்ளது. இவற்றில் பல வகை உண்டு. மஞ்சள் வாழை மலச்சிகளை போக்கவல்லது. செவ்வாழைபழம் கல்லிரல் வீக்கத்தை குறைப்பதுடன் சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகளை போக்குகிறது. பச்சை வாழைபழம் உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது. ரஸ்தாளி, கண் நோய்களை குணமாக்குகிறது. உடலை வலுப்படுத்துகிறது. கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி அளிக்கிறது. நேந்திரன் பழம் இரும்பு சத்து நிறைந்தது. ரத்த சோகையை போக்க சிறந்தது.

பொதுவாக வாழைப்பழங்களில் புரதம், வைட்டமின், பாஸ்பரஸ், இரும்புசத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழம் கொடுத்து வந்தால் உடலிற்கு நன்மை பயக்கும்.
பப்பாளிப்பழம்: ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் இப்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.மிகச் சிறந்த சத்துள்ள உணவான பப்பளியினை தினசரி 100 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவு பெரும். ரத்தசோகை, மலச்சிக்கல், போன்றவற்றை அறவே நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் இப்பழம் உதவுகிறது.

கொய்யாப்பழம்: வைட்டமின் சி சத்து உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் பல விதங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை  உடலுக்கு அளிக்கிறது. கண்பார்வை குறைப்பட்டினை நீக்குகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலில் ஏற்ப்படும் வியர்வை நாற்றத்தை போக்குகிறது.


இவற்றில் அனைத்து பழங்களையும் சாப்பிடாவிட்டாலும், ஏதேனும் ஒரு பழத்தை நாள்தோறும் உண்டு வந்தால் உடல்நலம் சீராகும். 

Monday, July 14, 2014

ஆண்மை குறைபாட்டை நீக்கும் தொட்டாற்சுருங்கி!

தோல்வியாதிகள், ஆண்மை குறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி.

தெய்வீக மூலிகை ‘நமஸ்காரி’ என்று அழைக்கப்படும் இந்த மூலிகை காந்த சக்தி உடையது. வன்னிமரம் போல் தெய்வ சக்தி உடைய மூலிகை என்பதால் துளசி போல வீட்டில் வைக்கலாம். நாளும் தொட வாய்ப்பாகும்.

தெய்வீக மூலிகையான இதனை தொடுகின்ற போது அதனுடைய சக்தி மனிதனுள் மின்சாரம் போல் பாயும். 48 நாள் தவறாது தொட்டு வந்தால் உளவாற்றல் பெருகி மனோசக்தி அதிகமாகி சொன்னது பலிக்கும். நினைத்தது நடக்கும். மனதில் உணர்ச்சி ஊட்டி சிற்றின்பத்தை அதிகரிக்கும்.

அதனால் ‘காமவர்த்தினி’ என்றும் கூறுவர். மாந்திரீகத் தன்மை இதன் வேரை
தொட்டாற்சுருங்கி!
வழிபாடு செய்து பிடுங்கி மாந்திரீகம் செய்யப் பயன்படுத்துவர். இதன் இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றிட வாத வீக்கும் கரையும். கீழ்வாதம் கரையும்.

இதன் வேரையும் இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து வைக்கவும், இந்த சூரணம் 10-15 கிராம் பசும்பாலில் குடிக்க சிறு நீர் பற்றிய நோய்கள், மூலச்சூடு, ஆசனக்கடுப்பு தீரும்.

10 முதல் 20 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட உடலில் கிளர்ச்சி பெருகும். சிறுநீர் கல் கரையும் தொட்டாற்சுருங்கி பெண் வசியம் செய்யும். சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும்.

இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். இதன் இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து குடித்தால் இடுப்பு வலி குணமாகும்.


Saturday, July 12, 2014

அத்திபழத்தால் ஆரோக்கியம் கூடும்

அத்திபழத்தால் ஆரோக்கியம் கூடும்

அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உணவை விரைவில் ஜீரணிக்க செய்து, சுறுசுறுப்பைத் தரும். பித்தத்தை வியர்வை வாயிலாக வெளியேற்றி ஈரல், நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. அத்திப்பழத்தை தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப் போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய் துர்நாற்றம் அகலும்.

தினசரி இரண்டு பழங்கள் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் நல்ல வளர்ச்சி அடையும். மலச்சிக்கலை தடுக்க உணவுக்குப்பின் சிறுது அத்தி விதைகளை சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை போக்க 5 பழங்களை இரவில் சாப்பிடலாம். போதை பழக்கம், மற்றும் இதர பழக்கங்களால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்த அத்திபழங்களை வினிகரில் ஊற வைத்து, தினசரி இரண்டு பழங்களை ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். அத்திப்பழங்களில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

அத்திபழம் குறித்து நடந்த ஆராய்ச்சியில் அதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஆகியவை மற்ற பழங்களைவிட நன்கு மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது தவிர விட்டமின் 'ஏ' மற்றும் 'சி' சத்தும் அதிகளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பழங்களை ஜீரணதுக்காகவும், ஜுரங்களை குணமாக்கவும் பரவலாக பயன்படுத்துவர். பதப்படுத்தப்பட்ட அத்திபழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை  குணமாக்குகிறது. அத்திபழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளி, வெண்குஷ்டம் மாறும். தோலின் நிற மாற்றம் குணமாகும். அத்திப்பழத்தை பொடியாக்கி பன்னீரில் கலந்து, வெண்புள்ளிகள் மீது பூசினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும். அத்திப்பழம் சாப்பிடுங்க.

Friday, July 11, 2014

வெற்றிலையின் மருத்துவ ரகசியம்


சளி பிடிப்பது என்பது சாதரணமானதுதான், என்றாலும் ஒரு வாரத்துக்கு படாதபாடு படுத்திவிடும். அதுவும் சிறு குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் என்றால் சொல்லவே வேண்டாம். இது போன்ற சமயங்களில் பெற்றோர்கள் சிறு, சிறு கை வைத்தியம் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. சிறு குழந்தைகளின் சளியை போக்குவதில் வெற்றிலை முக்கிய பங்காற்றுகிறது. மூலிகை குணம் நிறைந்த வெற்றிலையின் மகத்துவத்தை இப்பொழுது காண்போம்.

மூச்சு திணறல் 

குழந்தைகளுக்கு சளி அதிகமானால் இருமலும், மூச்சுதிணறலும் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் வெற்றிலை சிறந்த நிவாரணமாகும். வெற்றிலையை மெழுகுவர்த்தி நெருப்பில் லேசாகவாட்டி அதனுள் நாலைந்து வெற்றிலை இலைகளை சேர்த்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து அதில் 10 துளிகள், காலை மற்றும் மாலை கொடுத்தால் சளி, இருமல் குணமாகும். 

அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பில் பற்று போட நெஞ்சுசளி குணமாகும்.

வெற்றிலையை கடுகு எண்ணையில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்து கட்டி வந்தால், மூச்சுதிணறலும், இருமலும் சரியாகும்.

நுரையீரல் நோய்கள்

குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், ஜன்னிக்கு வெற்றிலை சாற்றில் கஸ்துரி, கேரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மசித்து தேனுடன் கொடுத்தால் குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும். நுரையீரல் நோய்கள் இருந்தால், வெற்றிலை சாறு, இஞ்சி சாறு ஆகிய இரண்டையும் சம அளவு கலந்து குடித்து வந்தால், பாதிப்புகள் குறையும். வெற்றிலையை அரைத்து கீல்வாத நோய்களுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கும் வைத்துக் கட்டினால் நல்ல பலன் கிடைக்கும்.

மலச்சிக்கல் நோய் குணமாக
சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கசாயம் செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலையை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன
வாயில் செலுத்தினால் உடனே மலம் கழியும். வெற்றிலை சாறு 15 மில்லி அளவு வெந்நீரில் கலந்து கொடுத்தால் வயிற்று உப்புசம், மாந்தம், ஜன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம், வயிற்றுவலி குணமாகும்.

கட்டிகள் குணமாகும்.
வெற்றிலைச்சாறு நான்கு துளி காதில் விட்டால் எழுச்சியினால் ஏற்படும் வலி குணமாகும்.தலையில் நீர் கோர்த்து விடாமல் மூக்கில் ஒழுகும் சளிக்கும், வெற்றிலை சாறை, மூக்கில் விட்டால் குணமாகும். வெற்றிலையை ஆமணக்கு எண்ணெய் தடவி, லேசாக தீயில் வாட்டி, கட்டிகளின் மேல் வைத்துக் கட்டி வந்தால், கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். இதை இரவில் செய்தால் நல்லது. சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்து திரிகடுகத்துடன் வெற்றிலை சாறு, தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்துமா குணமாகும்.

குரல் வளம் கிடைக்கும்
வெற்றிலையின் வேரை சிறிதளவு வாயிலிட்டு மென்று வந்தால், குரல் வளம் உண்டாகும். வெற்றிலை சாறு சிறுநீரகத்தைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலை சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வந்தால் சிறுநீர் நன்கு பிரியும்.