Pages

Showing posts with label வைட்டமின் சி. Show all posts
Showing posts with label வைட்டமின் சி. Show all posts

Monday, November 7, 2016

சிவப்பு அணுக்களை உருவாக்கும் லிச்சி!


பழங்கள் இயற்கை மனிதனுக்கு அளித்திருக்கும் கொடையாகும். உணவில் பழங்களையும், காய்களையும் அதிகம் சேர்த்துக் கொண்டால், நோய் நம்மை விட்டு தூர போய்விடும். அந்த அளவுக்கு அவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியும், சத்தும் நிறைந்துள்ளன. குறிப்பாக,  லிச்சிப்பழத்தில் உடலுக்கு நன்மை தரும் பல முக்கிய சத்துக்கள் அடங்கி உள்ளன.

லிச்சிப்பழம் பற்றி தென் மாநில மக்களுக்கு அதிகம் தெரியாது. சீனாவை பூர்வீகமாக கொண்ட இப்பழம், வடமாநிலங்களில் அதிகம் கிடைக்கிறது. லிச்சிப்பழம் சிவப்பு நிறத்தில், கெட்டியான தோலுடன் இருக்கும். அதனுள்ளே வெள்ளை நிறத்தில், பழத்தின் சுளை முட்டை போல் இருக்கும். இனிப்பும் புளிப்பும் கலந்த சுவையுடன் இருக்கும் அப்பழத்தில், பல ஊட்டச்சத்துகள் உள்ளன.

லிச்சி, அதிக கலோரி கொண்ட பழமாகும். இதில் புரதம், கொழுப்பு, நார்ச்சத்து, கால்சியம், மாவுச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு, தையாமின், ரிபோப்ளோவின், நியாசின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் மற்றும் வைட்டமின் சி ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. மலச்சிக்கலை கட்டுப்படுத்தி, குடலின் தசைநார்களை சீராக இயங்க வைக்கும். நார்ப்பொருள், 0.5 கிராமும், எலும்பு, பல் வலிமை பெற உதவும் கால்சியம், 10 மில்லி கிராமும், பாஸ்பரஸ், 35 மி.கி., இரும்புச்சத்து, 0.7 மி.கி., உள்ளன.

உடலில் முக்கிய உறுப்புகளாக செயல்படும், இதயத்தையும், ஈரலையும் ஆரோக்கியமாக வைக்க லிச்சிப்பழம் உதவும். லிச்சிப்பழத்தை தினமும் உண்டு வந்தால், இதயம் நல்ல ஆரோக்கியத்துடனும் சுறுசுறுப்பாகவும் வேலை செய்யும். லிச்சியின் பழச்சாறு, ஈரலுக்கு உரம் ஊட்டும்; தாகத்தை தணிக்கும். இதில் வைட்டமின் சி, மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட்களை கொண்டுள்ளதால், நோயை எதிர்க்கக் கூடிய ஆற்றலை பெற்றுள்ளது.

இது இருமல், சளி, காய்ச்சல், போன்ற பொதுவான நோய்களுக்கு எதிராக போராடி, உடலுக்குத் தேவையான பாதுகாப்பை அளிக்கிறது. நோய்த் தொற்று ஏற்படாமல் தடுப்பதற்கும் இது சிறந்த பழம். தினமும் ஒரு லிச்சிப்பழம் சாப்பிட்டு வந்தால், ரத்த உற்பத்தி அதிகமாகும்.  ஏனெனில், சிவப்பணுக்கள் உருவாவதற்கு தேவையான மாங்கனீசு, மெக்னீசியம், தாமிரம், இரும்பு மற்றும் போலேட் போன்ற அனைத்தையும் வழங்குகிறது.

வைட்டமின் சி கொண்டுள்ளதால் இரும்புச் சத்துகளை உறிஞ்சும் திறன் கொண்டு செயல்படுகிறது. தினம் ஒரு லிச்சிப்பழத்தை சாப்பிட்டு உடலை பாதுகாத்துக் கொள்வோம்...வாருங்கள்!

Wednesday, February 18, 2015

முதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா


guava fruit க்கான பட முடிவு

பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இம்மரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.

கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது. இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிக சத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும்.

முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.

சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல், தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் நோய் அதிகமாகும். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடவே கூடாது. மற்றவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

Tuesday, July 15, 2014

எந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்

பழங்களை உண்டல் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த வகையான சத்து கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

சில பழங்களை தேவையான் காலங்களை மட்டுமே உண்ண வேண்டும். வைட்டமின், பாஸ்பரஸ் , பொட்டாசியம் போன்ற சத்துக்கள், ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்களில் மட்டுமல்லாது, நம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, எலுமிச்சை போன்ற பழங்களிலும் சத்துகள் நிறைந்துள்ளது. எந்ததெந்த பழங்களில் எத்தனை சத்துகள் நிறைந்துள்ளது என்பதி பார்ப்போம்.

எழுமிச்சப்பழம்: தினமும் எழுமிச்ச பழச் சாற்றினை நீருடன் தினமும் காலை, மாலை என இரு வேலைகளிலும் பருகி வர உடல் சூடு குறையும். முகம் பொலிவு பெரும். எழுமிச்சை சாற்றுடன் சிறிதளவு பன்னீர் கலந்து வாய் கொப்பளிப்பது, பற்களை வலுவாக்குகிறது. ஈறுகளை உறுதியாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. எழுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி சத்து முழுமையாக உள்ளது.
வாழைப்பழம்வாழைப்பழம்: பழங்களில் பழத்திற்கென்றே தனிச் சிறப்பு உள்ளது. இவற்றில் பல வகை உண்டு. மஞ்சள் வாழை மலச்சிகளை போக்கவல்லது. செவ்வாழைபழம் கல்லிரல் வீக்கத்தை குறைப்பதுடன் சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகளை போக்குகிறது. பச்சை வாழைபழம் உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது. ரஸ்தாளி, கண் நோய்களை குணமாக்குகிறது. உடலை வலுப்படுத்துகிறது. கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி அளிக்கிறது. நேந்திரன் பழம் இரும்பு சத்து நிறைந்தது. ரத்த சோகையை போக்க சிறந்தது.

பொதுவாக வாழைப்பழங்களில் புரதம், வைட்டமின், பாஸ்பரஸ், இரும்புசத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழம் கொடுத்து வந்தால் உடலிற்கு நன்மை பயக்கும்.
பப்பாளிப்பழம்: ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் இப்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.மிகச் சிறந்த சத்துள்ள உணவான பப்பளியினை தினசரி 100 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவு பெரும். ரத்தசோகை, மலச்சிக்கல், போன்றவற்றை அறவே நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் இப்பழம் உதவுகிறது.

கொய்யாப்பழம்: வைட்டமின் சி சத்து உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் பல விதங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை  உடலுக்கு அளிக்கிறது. கண்பார்வை குறைப்பட்டினை நீக்குகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலில் ஏற்ப்படும் வியர்வை நாற்றத்தை போக்குகிறது.


இவற்றில் அனைத்து பழங்களையும் சாப்பிடாவிட்டாலும், ஏதேனும் ஒரு பழத்தை நாள்தோறும் உண்டு வந்தால் உடல்நலம் சீராகும்.