Pages

Showing posts with label பப்பாளி. Show all posts
Showing posts with label பப்பாளி. Show all posts

Wednesday, May 6, 2015

பப்பாளி செய்யும் மாயம் என்ன?




பாப்பாளி தற்போது எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் பழம். மலிவானது. இனிப்பானது. எல்லோரும் அறிந்தது. சத்துக்கள் மிகுந்தது. மஞ்சள், சிவப்பு நிற பழங்களாகவும், சில சமயம் பச்சை கலந்த நிறத்திலும் உள்ளது. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்டமின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது.

பப்பாளி க்கான பட முடிவு
பல் சம்மந்தமான குறைபாட்டிற்கும், சிறுநீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும், பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும் நரம்புகள் பலப்படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள். அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில், இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் சங்கதி உள்ளது.  

மருத்துவக் குணங்கள்:

பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர, குண்டான உடல் படிப்படியாக மெலியும்.

தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.

பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.

நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து, தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிகள் அழிந்து விடும்.

பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.

பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.

பப்பாளி இலைகளை அரைத்து கட்டி, மேல் போட்டு வர கட்டி உடையும்.

பப்பாளி விதைகளை அரைத்து, தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.

பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.

100 கிராம் பச்சைக் காயான பப்பாளியில் 32 மில்லி கிராமும், நன்றாகப் பழுத்ததில் 68 முதல் 136 மில்லி கிராமும், வைட்டமின் சி இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள் வெளியேறும்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பப்பாளி மருத்துவரீதியாக உதவி சரிசெய்யும்.

முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி உண்பது சரியான வழி. அடிவயிற்றுப் பிரச்னைகளுக்கு பப்பாளியே மிகச் சிறந்த மருந்து.

வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை, மலச்சிக்கல் இவற்றுக்கெல்லாம் அருமருந்து பப்பாளி.

முகப்பரு உள்ளவர்கள், பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதித் துண்டுகளை மென்மையாக முகத்தில் தேய்க்க வேண்டும். இது முகப்பருக்களைப் போக்கி, முகச் சுருக்கங்களையும் நீக்கி, பொலிவு கூட்டும். பப்பாளிப்பழம் விலை குறைவு ஆனால் அது தரும் பயன்களோ ஏராளம்.

Tuesday, July 15, 2014

எந்த பழம் சாப்பிட்டால் என்ன சத்து கிடைக்கும்

பழங்களை உண்டல் அதிக நன்மை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த தகவலே. பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த வகையான சத்து கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒன்று.

சில பழங்களை தேவையான் காலங்களை மட்டுமே உண்ண வேண்டும். வைட்டமின், பாஸ்பரஸ் , பொட்டாசியம் போன்ற சத்துக்கள், ஆப்பிள் ஆரஞ்சு போன்ற பழங்களில் மட்டுமல்லாது, நம் அன்றாடம் பயன்படுத்தும் தக்காளி, எலுமிச்சை போன்ற பழங்களிலும் சத்துகள் நிறைந்துள்ளது. எந்ததெந்த பழங்களில் எத்தனை சத்துகள் நிறைந்துள்ளது என்பதி பார்ப்போம்.

எழுமிச்சப்பழம்: தினமும் எழுமிச்ச பழச் சாற்றினை நீருடன் தினமும் காலை, மாலை என இரு வேலைகளிலும் பருகி வர உடல் சூடு குறையும். முகம் பொலிவு பெரும். எழுமிச்சை சாற்றுடன் சிறிதளவு பன்னீர் கலந்து வாய் கொப்பளிப்பது, பற்களை வலுவாக்குகிறது. ஈறுகளை உறுதியாக்குகிறது. வாய் துர்நாற்றத்தை போக்குகிறது. எழுமிச்சை சாற்றில் உள்ள வைட்டமின் சி சத்து முழுமையாக உள்ளது.
வாழைப்பழம்வாழைப்பழம்: பழங்களில் பழத்திற்கென்றே தனிச் சிறப்பு உள்ளது. இவற்றில் பல வகை உண்டு. மஞ்சள் வாழை மலச்சிகளை போக்கவல்லது. செவ்வாழைபழம் கல்லிரல் வீக்கத்தை குறைப்பதுடன் சிறுநீரகம் சம்பந்தமான வியாதிகளை போக்குகிறது. பச்சை வாழைபழம் உடலை குளிர்ச்சி அடைய செய்கிறது. ரஸ்தாளி, கண் நோய்களை குணமாக்குகிறது. உடலை வலுப்படுத்துகிறது. கற்பூர வாழை கண்ணிற்கு குளிர்ச்சி அளிக்கிறது. நேந்திரன் பழம் இரும்பு சத்து நிறைந்தது. ரத்த சோகையை போக்க சிறந்தது.

பொதுவாக வாழைப்பழங்களில் புரதம், வைட்டமின், பாஸ்பரஸ், இரும்புசத்து உள்ளிட்ட சத்துக்கள் உள்ளன. குழந்தைகளுக்கு தினமும் ஒரு வாழைப்பழம் கொடுத்து வந்தால் உடலிற்கு நன்மை பயக்கும்.
பப்பாளிப்பழம்: ஏழைகளின் ஆப்பிள் என்றழைக்கப்படும் இப்பழத்தில் வைட்டமின் ஏ நிறைந்துள்ளது.மிகச் சிறந்த சத்துள்ள உணவான பப்பளியினை தினசரி 100 கிராம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கண்பார்வை தெளிவு பெரும். ரத்தசோகை, மலச்சிக்கல், போன்றவற்றை அறவே நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கவும் இப்பழம் உதவுகிறது.

கொய்யாப்பழம்: வைட்டமின் சி சத்து உள்ளது. எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
அன்னாசிப்பழம்: அன்னாசிப்பழம் பல விதங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை  உடலுக்கு அளிக்கிறது. கண்பார்வை குறைப்பட்டினை நீக்குகிறது. ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. உடலில் ஏற்ப்படும் வியர்வை நாற்றத்தை போக்குகிறது.


இவற்றில் அனைத்து பழங்களையும் சாப்பிடாவிட்டாலும், ஏதேனும் ஒரு பழத்தை நாள்தோறும் உண்டு வந்தால் உடல்நலம் சீராகும்.