Pages

Saturday, July 19, 2014

காரசார உணவுகள் தொண்டைக்கு எதிரி

சாதாரணமாக பருவ நிலை மாறும் போது நமது உடலில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்ப்படும். குறிப்பாக குளிர் காலங்களில் இருமல், ஜலதோஷம் ஏற்ப்பட்டு மிகுந்த தொந்தரவை தரும். குறிப்பாக தொண்டையில் புண் வந்தால்,அரிப்பு எரிச்சல் வந்து பெரிய பாதிப்பு ஏற்படுத்தும். இதற்கு ஒரு சில உணவுகளை தவிர்த்தால் தொண்டை புண்ணை விரைவில் சரி செய்யலாம்.

நா ஊற வைக்கும் உணவுகள் 

நா ஊற வைக்கும் உணவுகளான புளி, ஊறுகாய் மற்றும் சிட்ரஸ் பலன்களை சாப்பிட்டால் தொண்டையில் அரிப்பு, வலியும்ஏற்ப்படும். அத்தகைய உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். வினிகர் கலந்திருக்கும் உணவுகளும் தொண்டைக்கு பெரும் தொந்தரவை தரும்.

காரமான உணவுகள்

நிறைய பேர், சளி மற்றும் ஜலதோஷம் இருக்கும் போது, காரமான உணவுகளை சாப்பிட்டால் குணமாகிவிடும் என்று நினைகின்றனர். ஆனால் அவற்றை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட்டு விடக் கூடாது. ஏனெனில் இதனால் தொண்டையில் உள்ள புண் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு விடும். ஆகவே மிளகாய், கிராம்பு,மிளகு மற்றும் பல பொருட்கள் சேர்ந்துள்ள உணவுகளை இந்த நேரத்தில் தவிர்ப்பது நல்லது.

பால்

தொண்டையில் புண் இருக்கும் போது ஒரு டம்ளர் சூடான பால் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று பலர் நினைகின்றனர். ஆனால் அவை மிகவும் ஆபத்தானது. எனவே பால் பொருளை இந்த சமயத்தில் தவிர்க்க வேண்டும்.

வறட்சியான உணவுகள்

வறட்சியான உணவுகளை தொண்டையில் புண் இருக்கும் போது சாப்பிட வேண்டாம். இதனால் விழுங்குவதற்கு கடினமாக இருப்பதோடு, அதிகமான் வலியையும் ஏற்படுத்தும். எனவே நட்ஸ் பிஸ்கட், தானியங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டாம். வேண்டுமெனில் நீரில் ஊற வைத்தோ அல்லது சமைத்தோ சாப்பிட்டால், விழுங்குவதற்கு எளிதாக இருப்பதோடு, வலி ஏற்ப்படாமலும்  இருக்கும்.

காபைன்

சூடான காப்பி குடித்தால் தொண்டைக்கு இதமாகத் தான் இருக்கும். ஆனால் அது நிரந்தரமாக அல்ல. சிறிது நேரம் கழித்து காபைனில் உள்ள பொருள், தொண்டையில் அரிப்பை ஏற்ப்படுத்தி, வழியை உண்டாக்கும். ஆகவே காபைனால் ஆன பொருட்களை தவிர்ப்பது நல்லது. வேண்டுமெனில் அதற்கு பதிலாக சூடாக டீயை போட்டுக் குடிக்கலாம். இதனால் தொண்டை கரகரப்புடன், வலியும் இருக்காது.




No comments: