Pages

Saturday, July 12, 2014

அத்திபழத்தால் ஆரோக்கியம் கூடும்

அத்திபழத்தால் ஆரோக்கியம் கூடும்

அத்திப்பழம் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உணவை விரைவில் ஜீரணிக்க செய்து, சுறுசுறுப்பைத் தரும். பித்தத்தை வியர்வை வாயிலாக வெளியேற்றி ஈரல், நுரையீரலில் உள்ள அடைப்புகளை நீக்குகிறது. அத்திப்பழத்தை தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப் போகிறது. அத்திப்பழம் தின்பதால் வாய் துர்நாற்றம் அகலும்.

தினசரி இரண்டு பழங்கள் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் நல்ல வளர்ச்சி அடையும். மலச்சிக்கலை தடுக்க உணவுக்குப்பின் சிறுது அத்தி விதைகளை சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை போக்க 5 பழங்களை இரவில் சாப்பிடலாம். போதை பழக்கம், மற்றும் இதர பழக்கங்களால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தை குணப்படுத்த அத்திபழங்களை வினிகரில் ஊற வைத்து, தினசரி இரண்டு பழங்களை ஒரு வேளை மட்டும் சாப்பிடலாம். அத்திப்பழங்களில் ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் மொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது.

அத்திபழம் குறித்து நடந்த ஆராய்ச்சியில் அதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து, ஆகியவை மற்ற பழங்களைவிட நன்கு மடங்கு அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது தவிர விட்டமின் 'ஏ' மற்றும் 'சி' சத்தும் அதிகளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்பழங்களை ஜீரணதுக்காகவும், ஜுரங்களை குணமாக்கவும் பரவலாக பயன்படுத்துவர். பதப்படுத்தப்பட்ட அத்திபழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது.

சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை  குணமாக்குகிறது. அத்திபழத்தை தினசரி ஒருவேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளி, வெண்குஷ்டம் மாறும். தோலின் நிற மாற்றம் குணமாகும். அத்திப்பழத்தை பொடியாக்கி பன்னீரில் கலந்து, வெண்புள்ளிகள் மீது பூசினாலும் நல்ல பலன் கிடைக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கும், ரத்த விருத்திக்கும். அத்திப்பழம் சாப்பிடுங்க.

No comments: