Pages

Showing posts with label சமையல் செய்யும் போது. Show all posts
Showing posts with label சமையல் செய்யும் போது. Show all posts

Saturday, July 19, 2014

சமையல் செய்யும் போது கவனிக்க வேண்டிய டிப்ஸ்!

பச்சை காய்கறிகளை சமைக்கும் போது சிறிதளவு எலுமிச்சைசாறு பிழிந்தால் காய்களின் நிறம் மாறாது.

பச்சை மிளகாயை  கம்பை கிள்ளி விட்டு பிரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்கள் கெடாது. 

பித்தளை பாத்திரங்களை கழுவிய பின் தோல் சீவிய உருளைகிழங்கை அந்த பாத்திரத்தின் மேல் தேய்க்க பளபளப்பு கூடும்.

முட்டையோடு, தக்காளி சாற்றையும் சேர்த்து ஆம்லெட் செய்யும் போது மிகவும் சுவையாக இருப்பதோடு, முட்டை வாசம் சிறிதும் வராது.
எலுமிச்சம் பழத்தை உப்பு ஜாடிக்குள் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு அழுகிப்போகாமல் இருக்கும்.
சாம்பார் வைக்கும்போது உப்பு அதிகமாகிவிட்டால் இரண்டு உருளைகிழங்கை வெட்டிப் போட சரியாகிவிடும்.

மட்டன், நன்றாக வேகவேண்டும் என்றால் சிறிய பப்பாளித்துண்டை சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

பீட்ரூட்டை மற்ற காய்களுடன் சேர்த்து சமைக்கும் போது அதன் நிறம் காய்கறி கலவையில் இறங்காமளிருக்க வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு பீட்ரூட்டை மட்டும் சிறிது நேரம் நன்றாக வதக்கி, பிறகு செய்தால் காய்களின் நிறம் மாறாது.

காலிப்பிளவரை அரைவேக்காடாக வேக வைத்து, அதில் சிறிது அரிசி மாவு, கடலை மாவு, மிளகாய்துள், உப்பு சேர்த்து, ஊற வைத்து பின் பொரித்து எடுத்தால்.எண்ணெய் குடிக்காத காலிப்பிளவர் சில்லி ரெடி.