Pages

Friday, July 18, 2014

டென்ஷன்... டென்ஷன்... குறைக்க என்னதான் வழி?

இன்று வேலைக்கு செல்வோரில் பெரும்பாலனவர்கள் டென்ஷனால் அதிகப் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். மன அழுத்தம் மற்றும் வேலைப்பளு மற்றும் வேலையை திட்டமிட்டு செய்யாமல் இருப்பதால் உருவாகிறது. இத்தகைய மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவோர் வாழ்க்கையின் மீது வெறுப்பு உண்டவதோடு, எந்த ஒரு செயலையும் உருப்படியாக செய்யமுடியாமல் தவிப்பர்.

மன அழுத்தம், வேலை பளுவால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், உடன் பணிபுரியும் நபர்கள் செய்யும் சில வெறுக்கத்தக்க செயல்கள்,எதற்கெடுத்தாலும் குறை சொல்லும் மூத்த அதிகாரிகளாலும் ஏற்ப்படுகிறது. அதனால் எந்த வேலையாக இருந்தாலும் அதை விரும்பி கொண்டு, பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதனால் மன அழுத்தத்தில் இருந்து சுலபமாக வெளியே வர முடியும். மேலும் டென்ஷன் ஏற்படும் போது அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஆழ்ந்து மூச்சை உள்ளே இழுத்து, அதை மெதுவாக வெளியே விட வேண்டும். இதனால் மனமும் உடலும் அமைதியாகும். ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கலாம்.

அலுவலகத்தில் வேலை பளு இருக்கும் போது, பதற்றத்துடன் இருக்காமல் நிதானமாக வேலை செய்ய வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், சிறிது தூரம் வாக்கிங் சென்று வரலாம். நல்ல இசை மன அழுத்தத்தை குறைக்கும். குறிப்பாக மன அழுத்தம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், உங்களுக்கு பிடித்த இசையை, உங்கள் மொபைல் போனில் கேளுங்கள் அல்லது விடியோவை பாருங்கள். டென்ஷன் குறைய வேண்டுமானால், காபி குடிப்பதை தவிர்ப்பது நல்லது. காபி குடிப்பது டென்ஷனை குறைக்கும் என்பது தவிறு.

காபியில் உள்ள காபின் என்ற வேதிப்பொருள் டென்ஷனை அதிகப்படுத்தும். மன அழுத்தத்தை, தியானம் கண்டிப்பாக குறைக்கும். தியானம் செய்யும் போது இரத்த ஓட்டம் அதிகரித்து, மனம் அமைதியடைகிறது. மனம் அமைதி இழந்து காணப்படும் போது, உங்கள்ளுக்குப்பிடித்த நல்ல உணவுகளை உட்கொள்ளலாம். பாதாம், ஆரஞ்சு உள்ளிட்டவை டென்ஷனை குறைக்கும் உணவுகள் என்று கூறலாம். வைட்டமின் சி சத்துள்ள உணவுகள், மன அழுத்தத்தை குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன.


குறிப்பாக ஆரஞ்சு,சாத்துக்குடி உள்ளிட்ட சிட்ரஸ் ரக பழங்களை, வேலையின் போது உண்ணலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது, அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது. இது , உடலில் உள்ள தசைகளை அமைத்யடயச் செய்கிறது. இது தவிர, நம்மை சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாகவும், நல்ல வாசனை இருக்கக் கூடியதாகவும் அமைத்துக் கொள்ளவதால்,நமக்கே நம் மீது நம்பிக்கை பிறக்கும். டென்ஷன் தானாக விலகும்.

No comments: