Pages

Friday, December 6, 2013

சம்பங்கி பூவில் இத்தனை மகத்துவமா!

சம்பங்கி பூ


பூஜைக்கு உகந்த சம்பங்கிப்பூ, மருத்துவ குணம் நிறைந்த மலர்களில் சற்று வித்தியாசமானது. மயக்கும் நறுமணம் கொண்டது. சம்பங்கி பூவின் இதழ்களுக்கு, தண்டும் அழகு சேர்க்கும் வகையில் தோற்றமுடையது. சம்பங்கி பூஜைக்கு ஏற்ற பூவாக மட்டும் இல்லாமல்,பல்வேறு மருத்துவ பயன்களை கொண்டது.




சம்பங்கி தைலம்

அரை கிலோ தேங்காய் எண்ணையில், 50 கிராம் பூவை போட்டு நான்கு காய்ச்சி இறக்க வேண்டும். காய்ச்சிய எண்ணைய்தான் 'சம்பங்கி தைலம்' என அழைக்கப் படுகிறது. இதனை உச்சி முதல் பதம் வரை நன்றாக தேய்த்தால் உடல் வலி தீரும். சம்பங்கி பூவில் பவுடரும் தயாரிக்கலாம். 100 கிராம் சம்பங்கி, 20 கிராம் வெள்ளரி விதை, 20 கிராம் பயத்தம் பருப்பு ஆகியவற்றை சேர்த்து முழுமுழுவென அரைத்து கொண்டால் பவுடர் ரெடி. இந்த தைலம் தேய்த்து குளிக்கும்போது, பவுடரையும் கலந்து குளித்தால் மேனி பளபளக்கும்.

பலன்கள்

நான்கு சம்பங்கி பூவுடன் ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணைய் கலந்து அரைத்து, சூடு பறக்க நெற்றிப்பகுதியில் தடவி வந்தால் தலைவலி குறையும். ஒரு டம்ளர் நீரில் ஐந்து சம்பங்கி பூவை போட்டு, பாதியாக சுண்டும் வரை காய்ச்சி, அந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வந்தால் மலச்சிக்கல் தீரும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும்.

சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். அதை கண்களை சுற்றி பூசி 10 நிமிடத்திற்கு பிறகு கழுவ வேண்டும். கண்நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி போன்ற பிரச்னைகள்  தீரும். கண்ணுக்கு குளிர்ச்சியை கொடுக்கும். கண்கள் பளிச்சிடும் வகையில் இருக்கும். காய்ச்சிய பாலில் இரண்டு சம்பங்கி பூவை போட்டு ஆற வைக்க வேண்டும். இதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் விதம் தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் உடல் தெம்பும், பலமும் பெரும்.

200 கிராம் நல்லெண்ணையுடன் 50 கிராம் சம்பங்கி பூவை போட்டு காய்ச்ச வேண்டும். இதில், சிறிது விளக்கெண்ணைய் கலந்து கணுக்கால் மற்றும் பாதத்தில் தடவி வந்தால் சொரசொரப்பு, வெடிப்பு மறையும். இதில் விளக்கெண்ணைய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து எலுமிச்சை சாறை கலந்து, ரசத்தை ஒரு பத்திரத்தில் ஊற்றி, குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். இதை தினமும் காலை மாலை நேரத்தில் பாதத்தில் தடவி வந்தால் பாதம் மேன்மையாகும். சம்பங்கி இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவி வந்தால் பாதவலி நீங்கும்.

ஒரு கைப்பிடி சம்பங்கி பூவை, கொதிக்கும் நீரில் போட்டு வாரமிருமுறை ஆவி பிடித்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட பருக்கள், தழும்புகள் மறையும். சம்பங்கி பூ இரண்டு, தேங்காய் பால் இரண்டு தேக்கரண்டி அளவு கலந்து நன்கு அரைத்து முகத்தில் பூசினால் முகம் புத்துணர்ச்சி பெரும். இதுபோன்று பல்வேறு மருத்துவ பயன்கள் உள்ளன.

ஈட்டி மரத்துக்கு இவ்வளவு மவுசா!

'ஈட்டி மரத்தை இரும்புக்கு இணையானது' என்று கூறுவர். தென்னிந்தியாவை பூர்வீகமாக கொண்ட இந்த மரத்தின் தமிழ் பெயர் தோதகத்தி. ஆங்கிலத்தில் ரோஸ்‌வுட் என்று அழைக்கப்படுகிறது. அதிகம் மழைப் பொலிவு உள்ள ஈரப்பாங்கான பகுதி மற்றும் அடர்ந்த வனப்பகுதிகளில் இம்மரம் அதிகம் வளர்கிறது.

குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் தக்காண பீடபூமி பகுதிகளில் அதிகம் உள்ளன. தமிழகத்தில் கோவை, ஆனைமலை, வெள்ளியங்கிரி மலை மற்றும் நீலகிரி மாவட்டங்‌களில் ஈட்டி மரங்கள் அதிகம் உள்ளன.

தமிழகத்தில் பரவலாக மலை மற்றும் வனப்பகுதியில் மட்டும் வளர்கிறது. இம்மரம் மிக உயரமாக வளரக்கூடியது. சுமார் 35 மீட்டருக்கு மேல் வளரும். நன்றாக வளர்ந்த மரத்தின் சுற்றளவு 6 மீட்டர் வரை இருக்கும்.

25 மீட்டர் உயரம் வளர 80 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது. பல நூற்றாண்டுகள் பழமையான மரமாக தோதகத்தி  விளங்குகிறது. உதாரணமாக, கிறிஸ்து பிறப்பதற்கு 3,500 ஆண்டுகள் முன்பாகவே இம்மரம்
இருந்துள்ளது என,  புதைபொருள் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. சிந்து சமவெளி மற்றும் ஹராப்பா அகழ்வாராய்ச்சியின் போது வீடுகளுக்கு உத்திரமாக பயன்படுத்தப்பட்டு இருந்தது தெரிய வந்துள்ளது. பழங்‌காலத்தில்
கடல் வாணிப் பொருளாக இம்மரம் இடம் பெற்றுள்ளது.

ஆங்‌கிலேயர்களின் ஆட்சி காலத்தில் ஆனைமலை டிரஸ்ட் என்ற வணிக குழுவினர். 4.8 மீட்டர் நீளம் 2.4 மீட்டர் அகலம் கொண்ட ஈட்டி மரப் பலகையில் அழகிய வேலைப்பாடு உள்ள மேசை ஒன்று தயாரித்து, வெல்லிங்டன் சீமாட்டிக்கு பரிசளித்துள்ளனர். அந்த மேசை தற்போது பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ளது. இம்மரத்தின் சிவந்த நிறமும், உறுதித்தன்மையும் அனைவரையும் கவர்ந்தது. அதனால் ஆடம்பரமான வீட்டு  உபயோக பொருட்கள் தயாரிக்க இம்மரங்கள் அதிகம் வெட்டி அழிக்கப்பட்டன. 

அதனால், அதன் எண்ணிக்கை குறைந்து விட்டது. 1963ல் வனச்சட்டத்தின் படி, ஈட்டி தேசிய மரமாக அறிவிக்கப்பட்டது. ஈட்டி, தேக்கு மரத்தை விட அதிகம் உறுதியானது என்பதால் இதன் விலை மதிப்பும் அதிகம். அதனால், விலை உயர்ந்த பொருட்கள் மட்டுமே தயாரிக்கப் படுகிறது. மிகவும் நுட்பமான வேலைப்பாடு கொண்ட மேசை, நாற்காலிகள், கட்டில், பிரோ மற்றும் ரயில் பெட்டிகள் தயாரிக்க இம்மரம் பயன்படுகிறது. இன்றைக்கு இதன் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்து விட்டது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் இருந்து 30 கோடிக்கு மேல் வெளிநாடுகளுக்கு எற்றுமதி செய்வதில்லை. 

ஆனால் மரப்பொருட்கள் மற்றும் பிளைவுட்டுகளாக தயாரிக்கப்பட்டு எற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், போதுமான அளவு எற்றுமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தோதகத்தி மரத்தை 500 மீட்டர் உயரத்தில் உள்ள இடத்தில் மட்டுமே பயிரிட முடியும். குறைந்து பட்சம் 1000 மில்லி மீட்டர் மழை உள்ள இடங்களில் மட்டுமே இம்மரம் வளரும். வற்றாத ஆற்றங்கரை ஓரங்களில் நடலாம். தேக்கு மரக்காடுகள் ஊடே நடலாம். ஆரம்பத்தில் தோதகத்தி, தேக்கு மரத்தைவிட குறைவாக வளரும். நன்றாக வளர்ந்த பிறகு தேக்கை விட வேகமாக வளரும். ஈட்டி மரத்தை பிற மரங்களோடு சேர்த்து   இரண்டு, மூன்று மரங்களை வளர்க்கலாம்.

தேனின் மருத்துவ குணங்கள்


  • மாதுளம்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால், புதுரத்தம் விருத்தியாகும்.
  • எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இருமல் குணமாகும்.
  • நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், இன்சுலின் சுரக்கும்.
  • ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால், நல்ல தூக்கம் வரும்.
  • பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும்.
  • ரோஜாப்பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால், உடல் சுடு தணியும்.
  • தேங்காய் பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.
  • பாலில் தேன் கலந்து சாப்பிட நல்ல தூக்கம் வரும். இதயம் பலம் பெரும்.
  • இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.
  • கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால், ரத்த சோகை நீங்கும்.
  • தேனில் சுண்ணாம்பு கலந்து உடலில் ஏற்படும் கட்டிகள் மீது தடவினால், உடையும்.

Tuesday, December 3, 2013

கொழுப்பு கூடி போச்சா? பூண்டை பயன்படுத்துங்க



 ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது. உடலுக்கு பூண்டு மிகவும் சிறந்தது. அது உடலுக்கு எவ்வித திங்கும் விளைவிப்பதில்லை. உடலை புத்துணர்வுடன் வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் பூண்டு உதவுகிறது. உடம்பிலுள்ள சிறு கட்டிகள், முக பருகள், படை உள்ளிட்ட சரும நோய்களின் மீது பூண்டை அரைத்து தடவினால் நல்ல குணம் கிடைக்கும்.

அதிக ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கு பூண்டு அருமருந்தாக உள்ளது. பூண்டை உணவு வகைகளுடன் உண்ணும்போது அது உடலில் உள்ள ரத்த நாளங்களை விரிவுபடுத்துவதுடன், அடைப்புகளையும் நீக்கி விடுகிறது. இதனால், சீரான ரத்த ஓட்டம் ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது.உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளும் பூண்டை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். 

தினந்தோறும் ஒன்று முதல் மூன்று பூண்டு பற்களை உண்டு வந்தால், இதயநோய் வருவதற்கே வாய்ப்பில்லை. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை பூண்டு அகற்றி விடுகிறது. பொதுவாக, ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்போது  மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, இதய நோயாளிகளுக்கு ரத்தத்தின் அடர்த்தியை குறைப்பதற்காக பூண்டை பயன்படுத்துகின்றனர். இதனால் இயற்கையாகவே ரத்தத்தின் அடர்நிலை குறைந்து, சீரான ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. எனவே, பூண்டு உண்பதால் எவ்வித பக்க விளைவும் இல்லாமல் நோய்கள் குணமாகின்றன.

காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம். பூண்டு சாறினை வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும் இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல குணம் பெறலாம். இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகள் சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுத்தால் எளிதில் குணம் கிடைக்கும். பூண்டை பாலில்  வேகவைத்து சாப்பிட்டால் கொழுப்பு, ரத்தக் கொதிப்பு, டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.  

பூண்டில் பலவிதமான சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம் சத்துதான். எனவே பூண்டை அதிகமாக  சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நமது எலும்புக்கு வருகின்ற கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பூண்டை வருத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. பூண்டு சாறும், எலுமிச்சை சாறினையும் கலந்து  தேமல் உள்ள இடங்களில் போட்டால் தேமல் காணாமல் போய்விடும். சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி தக்காளி, உப்பு, தண்ணீர் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள் சளி நீங்கும்.

வயிற்று பிரச்னை தீர்க்கும் புதினா


புதினா கீரையை அடிக்கடி உண்டு வந்தால், ரத்தம் விருந்தி அடையும். ஏதாவது ஒரு காரணத்தால் வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இருந்தால், புதினா கீரையின் துவையல் நல்ல பலன் அளிக்கும். சிறு குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப்போக்கு, வாந்தி ஆகியவை குணமாக புதினா கஷாயம் நல்ல மருந்து. 

கர்ப்பிணிகளுக்கு வாந்தி, குமட்டல் வரும். சிலருக்கு இது பிரசவம் ஆகும் வரை நீடிக்கும்.இதை கட்டுப்படுத்த புதினா கீரை நல்ல மருந்து. புதினா கீரையை சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து, மூன்று மணி நேரம் ஊறவைத்து தெளிந்த நீரை பருகி வந்தால் வாந்தி, வாயு, வயிற்றுப்போக்கு நோய்கள் குணமாகும்.

புதினா கீரையை துவையல் அல்லது பிற உணவுடன் சமைத்து சாப்பிட்டு வந்தால், பெண்களின் மாதவிலக்கு சீர்படும். இக்கீரையை சூப் செய்துக் குடித்து வந்தால் இதய நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும். தொண்டைப்புண் உள்ளவர்களுக்கு இக்கீரையை நன்கு அரைத்து கழுத்தில் வலியுள்ள பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் நல்ல குணம் தெரியும்.

புதினா கீரையை பற்பொடி தயார் செய்து தினமும் பல் தேய்த்தால் பல்வலி உள்ளிட்ட  நோய்கள் நீங்கும். மேற்கண்ட மருத்துவ முறைகளை அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப தகுந்த மருத்துவரின் ஆலோசனை பெற்று மேற்கொள்ளுவது நல்லது.

முடி உதிர்வதை தடுக்கும் நெல்லிக்கனி



நெல்லிக்கனியை தினமும் பயன்படுத்தினால் உடலுக்கு மிகவும் நல்லது. வசந்த காலத்தில் நெல்லிக்காய் அனைத்து இடங்களிலும் கிடைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் 'சி'  சத்து நிறைந்து உள்ளது. நமது உடலில் தோல் பகுதியில் நோய் எதுவும் ஏற்படாமல் இருக்கு, வைட்டமின் சி சத்து அவசியம். 

அது நெல்லிக்கையில் அதிகளவு உள்ளது. சிலருக்கு அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். இது வைட்டமின் சி சத்து குறைவால் ஏற்படுகிறது. இக்குறை உள்ளவர்கள் நெல்லிக்காயை அடிக்கடி சாப்பிட்டால் ஜாலதோஷத்திலிருந்து தப்பலாம்.

இது தவிர நெல்லிக்கையில் பாஸ்பரஸ், புரதம், கொழுப்பு, சுண்ணாம்பு, மாவுசத்து, நார்ச்சத்து, வைட்டமின் 'ஏ' போன்ற சத்துக்களும் உள்ளன. நெல்லிக்காய் உடலுக்கு குளிர்ச்சியானது. இதை உண்பதால் சிறுநீர் நன்றாக பிரியும்.

பெண்களுக்கு கர்ப்பபை நோய்கள் குணமாகும். ரத்தம் தூய்மை அடையும். நெல்லிக்காயை உலர வைத்தாலும், வேக வைத்தாலும், குளிர வைத்தாலும் அதில் உள்ள வைட்டமின் சி சத்து குறையாது. 

பொதுவாக நெல்லிக்காயை வாங்கியவுடன் அதை நன்றாக சுத்தம் செய்து கொள்ள வேண்டும். ஒரு பத்திரத்தில் போட்டு நீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும். சிறிது மஞ்சள் மற்றும் உப்பு போட்டு 5 அல்லது 1௦ நிமிடங்கள் கழித்து ஒரு நெல்லிக்காயை எடுத்து அழுத்திப் பார்த்தால் உடையும் அளவு இருக்கும். அதை உடனே இறக்கி வைத்து ஒரு பாட்டிலில் நீரோடு எடுத்து வைத்துக் கொண்டால் சாம்பார் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்.

தேவையான வெந்த நெல்லிக்காயை உடைத்து விதை நீக்கி ஊறுகாய் போடலாம். தேங்காய், பச்சை மிளகாய், வெந்த நெல்லிக்காய் ஆகியவற்றை புளிக்காத தயிரில் சேர்த்து நெல்லிக்காய் பச்சடி தயார் செய்யலாம். நெல்லிக்காயை உப்பு எதுவும் போடாமல் வேக வைத்து விதை நீக்கி நான்கு மசித்துக் கொள்ள வேண்டும். 

ஒரு கிலோ நெல்லிக்காய்க்கு அரை கிலோ சர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கிளற வேண்டும். சிறிது சிட்ரிக் அமிலம் சேர்த்து லேகியம் போல வரும் போது இறக்கி வெண்ணிலா எசன்ஸ் அல்லது ரோஸ்மில்க் எசன்ஸ்அல்லது ஸ்ட்ராபெர்ரி ஏதாவது ஒன்றை ஒரு அரைக்கரண்டி சேர்த்து சுடு ஆறியதும், காற்றுப் புகாத பாட்டிலில் எடுத்து வைத்துக் கொண்டு சப்பாத்தி, பிரட், தோசை, இட்லி போன்றவற்றுக்கு தொட்டுக்கொள்ளலாம். இது உடம்புக்கு மிகவும் நல்லது.

நெல்லிக்காயை நிறைய வாங்கி வைத்து கொண்டு அதை தேங்காய் எண்ணையில் போட்டு காய்ச்சி வைத்துக் கொண்டு தினமும் சிறிது தலையில் தடவி வந்தால் கண்களுக்கு குளிர்ச்சி ஏற்படும். தலை குளிரும். கூந்தல் கருகருவென வளரும், முடிகள் வலுவாகும். பொடுகு தொந்தரவு, முடிஉதிர்தல் குறையும்.

Monday, December 2, 2013

ரத்தம் சுத்தமாக்கும் 'திராட்சை'

திராட்சை



திராட்சை பழத்தில் இருந்து மருந்து ஒயின், கிராப் சீட் எண்ணை, சாக்லேட், ஜூஸ் என பலவற்றை தயாரிக்கலாம். உடலுக்கு தேவையான தாதுக்கள், ஆன்டி-ஆக்சிடன்ட்கள், வைட்டமின்கள் போன்ற சத்துக்கள் வழங்கி, ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. திராட்சை பழம் உடலுக்கு மிக நல்லது. தினமும் உண்டு வந்தால் உடல் இளமையாகவும், அழகாகவும்  இருக்கும்.

உடல் வறட்சியும்  பித்தமும் நீங்கும். ரத்தம் தூய்மை பெரும். இதயம், கல்லீரல், மூளை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தால் ஏற்படும் வாந்தி, தலை சுற்றல், ஒற்றை தலைவலி ஆகிய பிரச்சனைகளுக்கு இது நல்ல தீர்வாக அமையும். திராட்சை பழத்துடன் மிளகு சேர்த்து அரைத்து சாப்பிட்டு வந்தால், நாக்கு வறட்சி நீங்கும். 

உடல் அசதி, பயணத்தின் போது ஏற்படும் உஷ்ணத்தை தணிக்க திராட்சை  பழம் எற்றது திராட்சை சாறுடன் சர்க்கரை சேர்த்து தினமும் சாப்பிட்டால் மாதவிடாய் கோளாறு நீங்கும். வயிற்று புண், வாய்ப்புண் ஆறும். கண் பார்வைக்கு நல்லது. உடலில் தேவை யற்ற கொழுப்புக்கள் நீங்கும். இளம் பெண்களுக்கு ஏற்படும் முகப்பரு பிரச்சனைகளுக்கு திராட்சை சாறு எடுத்து தடவினால் விரைவில் பரு கொட்டி விடும்.

உலர் திராட்சை


உலர் திராட்சையில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12, அமினோ அமிலம், இரும்பு சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற அனைத்து சத்துக்களும் ௨ள்ளன.

இதில் கால்சியம் சத்துக்கள் நிறைந்துள்ளதால் எலும்புகள் உறுதி பெரும். பற்கள் வலுப் பெரும். குழந்தைகளுக்கு தேகாபூஷ்டி வேண்டும் என்றால் தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்னர் பாலில் போட்டு காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். இதனால்  மலச்சிக்கல் பிரச்னை தீரும். உலர் திராட்சை தாமிர சத்து கொண்டுள்ளதால் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; எலும்பு மஜ்ஜை வலுப்பெறும்.