ஆயுர்வேத மருத்துவத்தில் பூண்டின் மருத்துவ குணங்கள் குறித்து மிகவும் சிறப்பாக கூறப்படுகின்றது. உடலுக்கு பூண்டு மிகவும் சிறந்தது. அது உடலுக்கு எவ்வித திங்கும் விளைவிப்பதில்லை. உடலை புத்துணர்வுடன் வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கவும் பூண்டு உதவுகிறது. உடம்பிலுள்ள சிறு கட்டிகள், முக பருகள், படை உள்ளிட்ட சரும நோய்களின் மீது பூண்டை அரைத்து தடவினால் நல்ல குணம் கிடைக்கும்.
அதிக
ரத்த அழுத்தம் மற்றும் இதயநோய் உள்ளவர்களுக்கு பூண்டு அருமருந்தாக உள்ளது.
பூண்டை உணவு வகைகளுடன் உண்ணும்போது அது உடலில் உள்ள ரத்த நாளங்களை
விரிவுபடுத்துவதுடன், அடைப்புகளையும் நீக்கி விடுகிறது. இதனால், சீரான ரத்த
ஓட்டம் ஏற்பட்டு மாரடைப்பு போன்ற நோய்களில் இருந்து விடுதலை
கிடைக்கிறது.உயர் ரத்த அழுத்தம் கொண்ட நோயாளிகளும் பூண்டை உணவில்
சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினந்தோறும்
ஒன்று முதல் மூன்று பூண்டு பற்களை உண்டு வந்தால், இதயநோய் வருவதற்கே
வாய்ப்பில்லை. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை பூண்டு அகற்றி விடுகிறது.
பொதுவாக, ரத்த நாளங்கள் சுருங்கி, ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் போகும்போது
மாரடைப்பு நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாகவே, இதய நோயாளிகளுக்கு ரத்தத்தின்
அடர்த்தியை குறைப்பதற்காக பூண்டை பயன்படுத்துகின்றனர். இதனால் இயற்கையாகவே ரத்தத்தின் அடர்நிலை குறைந்து, சீரான ரத்த ஓட்டம் ஏற்படுகிறது. எனவே, பூண்டு உண்பதால் எவ்வித பக்க விளைவும் இல்லாமல் நோய்கள் குணமாகின்றன.
காது மந்தமாக இருப்பவர்களுக்கு தொடர்ந்து பூண்டு சாறினை காதில் ஊற்றி வரலாம். பூண்டு சாறினை வலிப்பு வருகிற குழந்தைகளுக்கும் இருமல், சளி தொந்தரவு இருப்பவர்களுக்கும் கொடுத்துவர மெல்ல குணம் பெறலாம். இரைப்பு, இருமல், வயிற்றில் பூச்சி இருப்பவர்களுக்கு பூண்டு சாறுகள் சில துளிகள் உள்ளுக்கு சாப்பிட கொடுத்தால் எளிதில் குணம் கிடைக்கும். பூண்டை பாலில் வேகவைத்து சாப்பிட்டால் கொழுப்பு, ரத்தக் கொதிப்பு, டென்ஷன் போன்ற பாதிப்புள்ளவர்களுக்கு பூண்டு நல்ல மருந்து.
பூண்டில்
பலவிதமான சத்துக்கள் இருந்தாலும் அதிகமாக இருப்பது கால்சியம் சத்துதான்.
எனவே பூண்டை அதிகமாக சமையலில் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நமது
எலும்புக்கு வருகின்ற கேடுகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். பூண்டை
வருத்து சாப்பிடுவதை விட வேக வைத்து சாப்பிடுவதே நல்லது. பூண்டு சாறும்,
எலுமிச்சை சாறினையும் கலந்து தேமல் உள்ள இடங்களில் போட்டால் தேமல் காணாமல்
போய்விடும். சளிப் பிடிக்கக் கூடியவர்களுக்கு பூண்டை உரித்து நசுக்கி
தக்காளி, உப்பு, தண்ணீர் தெளிக்க வைத்து சூப் கொடுங்கள் சளி நீங்கும்.
No comments:
Post a Comment