Pages

Saturday, March 29, 2014

காலை நேர உணவு அவசியம் !

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும் என்று உணவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளுக்கு காலை உணவில் கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகளை அளிப்பது அவர்கள் நாள்முழுவதும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட, தேவையான சக்தியை அளிக்கிறது என்றும் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அவசர உலகத்தில் பெரும்பாலானவர்களுக்கு, காலை உணவை சாப்பிடக்கூட நேரமின்மையால் அதனை தவிர்த்து விடுகின்றனர். அதிலும் பள்ளிக்குழந்தைகள் அநேகம் பேர் காலை உணவை உட்கொள்வதே இல்லை. பெரும்பாலும் காலி வயிறுடனே பள்ளிக்குச் செல்கின்றனர். இதற்கு நேரமின்மையையே காரணமாக தெரிவிக்கின்றனர்.

இரவு சாப்பிட்ட பின் 6 முதல் 10 மணி நேரங்கள் வரை எதுவும் சாப்பிடாமல், நீண்ட இடைவெளிக்கு விடப்படுகிறது. எனவே உடலுக்கு தேவையான சக்திக்கு, காலையில் உணவு சாப்பிடுவது அவசியம் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். காலையில் நாம் சாப்பிடும் உணவு தான், நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் செயல்பட, மூளை மற்றும் தசைகளுக்கு தேவையான சக்தியை அளிக்கிறது.

காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும் போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும் போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும்.

எனவே ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவாக திட்டமிட்டு குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும் என்பது உணவியல் வல்லுநர்களின் அறிவுரையாகும்.

Friday, March 28, 2014

உலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்-2

உலர் திராட்சை
திராட்சையில் கறுப்பு திராட்சை, பச்சை திராட்சை, பன்னீர் திராட்சை, காஷ்மீர் திராட்சை, ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு. குழந்தைகள் வளர்ச்சிக்கு, இரத்த விருத்திக்கு, உடல் வலி குணமாக, கர்ப்பிணிப் பெண்களுக்கு, மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு, மலச்சிக்கல் தீர, குடல்புண் ஆற, இதயத் துடிப்பு சீராக, சுகமான நித்திரைக்கு என்று இதன் பயனை அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதில் வைட்டமின் பி மற்றும் சுண்ணாம்புச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உகந்ததுதான் இந்த உலர்ந்த திராட்சை. இந்தப் பழம் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது. எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாறு இறக்கினால் எலும்பு மஞ்ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும்.

மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு கருவில் வளரும் குழந்தைக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் தாயின் மூலம் தான் கிடைக்கும். தாயின் ஆரோக்கியமே முதலில் முக்கியம். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் உலர்ந்த திராட்சையை பாலில் கலந்து கொதிக்க வைத்து பருகி வந்தால் பிறக்கும் குழந்தை குறையில்லாமல் ஆரோக்கியமாக பிறக்கும்.

மாதவிலக்குக் காலங்களில் சில பெண்களுக்கு வயிற்றில் வலி இருந்துகொண்டே இருக்கும். இந்த பிரச்சனை தீர கைகொடுக்கும் மருந்தாக உலர்ந்த திராட்சை பயன்படுகிறது. இந்தப் பழத்தை நீரில் போட்டு காய்ச்சி, கசாயமாக செய்து சாப்பிட்டால் வலி மறைந்து போகும். உலர்ந்த திராட்சையை பதப்படுத்தும் போது ரசாயன அமிலங்கள் கொண்டுதான் பதப்படுத்துகின்றனர்.

எனவே உலர்ந்த திராட்சையை அப்படியே பயன்படுத்துவது மிகவும் தவறு. அதனை நன்றாக கழுவிவிட்டு அல்லது தண்ணீரில் சிறிது நேரம் ஊறவிட்டு பின்னர் நன்கு கைகளால் பிசைந்து கழுவ வேண்டும். குழந்தைகளுக்கு உலர்ந்த திராட்சையைக் கொடுக்கும்போதும் நன்கு கவனமாக கழுவிய பின்னரே கொடுக்க வேண்டும்.

கொய்யாவின் மருத்துவக் குணங்கள்

கொய்யா
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.

* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.

* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.

* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.

* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.

* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.

* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.

* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.

* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.

* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.

* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.

* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.

* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

Thursday, March 27, 2014

உலக சித்தர் தினம்: நோயின்றி வாழ உறுதி கொள்வோம்


சித்த மருத்துவம் தந்த சித்தர்களை நினைவு கொண்டு வணங்கி நோயற்ற வாழ்வு வாழ உறுதி கொள்ளும் தினமே ஏப்ரல் 14. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த உலகில் மனித இனம் தோன்றியது முதல் இன்று வரை சாவல் விடும் நோய்களுக்கு நிரந்தர தீர்வு தரும் அதிசயத்தக்க மருந்துகளை, உணவு பொருட்களை, மூலி கைகளை நமக்கு அடையாளம் காட்டி மருந்தாக்கி நோய் தீர்க்கும் கலையை மருத்துவத்தை வழங்கிய மகான்கள்தான் சித்தர்கள்.

இவர்கள் இன்னும் இவ்வுலகில் பல வடிவங்களில் மனித உருவில் கலந்து மனிதர களின் துயரை களைந்து தங்களின் மகா சக்தியை வெளிப்படுத்திக்கொண்டு தான் இருக்கின்றனர் சித்தர்கள். எந்தவித அறிவியல் உபகரணங்கள், ஆராய்ச்சிகள், ஆய்வுக்கூட வசதிகள் இல்லாத காலங்களிலேயே அதிசயிக்கத்தக்க வகையில் நோய்களை கண்டறிந்து முற்றிலும் குணப்படுத்தும் ஆற்றல் பெற்றிருந்தனர் சித்தர்கள்.

எளிய நோய்களான காய்ச்சல், சளி, இருமல், வயிற்று புண்கள், கழிச்சல், தலை வலி, கைகால் மூட்டு வலிகள், சோகை, கடின நோய்களான சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், காச நோய், பிறப்புறுப்பு நோய்கள், தொழுநோய், புற்று நோய்களுக்கு மருந்தாக மூலிகைகளையும், உலோகங்களையும், தாது உப்புக்களையும், உபரசங்கள் பாடா ணங்களையும் மருந்தாக்கி கொடுத்துதான் மேற்கண்ட நோய்களில் இருந்து மக்களை காத்து வந்தனர் சித்தர்கள்.

அறிவியல் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, சோதனைக்கான ஆய்வுக்கூட வளர்ச்சி, அயல் நாட்டு சிகிச்சை, புதிய வகை ரசாயன மருந்துகள், கண்டுபிடிப்புகள் போன்ற இத்தனை வந்த பிறகும், வளர்ச்சிகளை நாம் அடைந்த பிறகும் நோய்களை கண்டு நாம் இன்னும் பயந்து கொண்டு தானே வாழ்ந்து வருகிறோம்.

அதிக நேரம், அதிக பணம், அதிகமான மருந்துகள், ஆலோசனைகள் தந்த

பேராசைகளை துறந்து கடமையை சரியாக செய்ய வேண்டும். அயல்தேச நவீன கலாச்சாரங்களை பின்பற்றுவதை தவிர்க்க வேண்டும். பணமே பிரதானமாக எண்ணி உடலை வருத்தி சம்பாதித்து மருந்துக்கு செலவழிப்பதை விட உடலே பிரதானமாக உணவை மருந்தாக எண்ணி உட்கொண்டு உடல் ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் நிலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

ஏழை முதல் பணக்காரர் வரை பாரபட்சமின்றி அனைத்து நோய்களும் அனைத்து தரப்பினருக்கும் வந்து விட்டது. கூலி தொழிலாளி முதல் உயர் படிப்பு படித்த, ஏன் மருத்துவர்கள் உள்பட அனைவருக்கும் வந்து விட்டது சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு நோய், இதய நோய். இதற்கு யார் காரணம். எங்கிருந்து வந்தது. எதனால் வந்தது. தீர்க்க வழி உண்டா, இல்லையா?

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒன்று முதல் 15 குழந்தைகள் வரை பெற்றெடுத்த தாய்மார்கள் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள். அன்று தடுப்பூசி இல்லை. மகளிர் மருத்துவர் ஆலோசனை, தொடர் கண்காணிப்பு இல்லை. சத்து ஊசி இல்லை. சத்து மாத்திரை இல்லை. ஆனாலும் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் சுகப் பிரசவம்.

இன்று எல்லாம் இருந்தும் மனித இனம் எல்லா கஷ்டங்களையும் அனுபவித்துக் கொண்டு தானே வாழ்ந்து வருகிறோம். மருத்துவராலும், மருந்தினாலுமே நோயிலிருந்து நம்மை காக்க முடியாது. நாம் மனது வைத்தால் மட்டுமே அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், அனைத்து நோய்களில் இருந்தும் நம்மை காத்து ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழமுடியும். உண்ணும் உணவுதான் மருந்து.

ஒவ்வொரு உணவு பொருட்களுமே ஒவ்வொரு உடல் உறுப்புகளை வளர்க்கிறது, பாதுகாக்கிறது. உணவு பொருட்களான தானியங்கள், காய்கள், கனிகள், கீரைகள், பயிறு வகைகள் இவைகள் அனைத்தும் தான் நோய் தீர்க்கும் மருந்துகள். இவைகள் போக நம் வீட்டிலும், தோட்டத்திலும் இருக்கும் மூலிகை தாவரங்கள் தான் நோய் தீர்க்கும் மருத்துவர்கள். எந்த நோயை கண்டும் பயப்பட தேவையில்லை.

உணவு பொருட்களாலும், மூலிகைகளாலும், சித்தர்கள் சொன்ன வழி முறைகளை கடைபிடித்து சித்த மருந்துகளை சித்த மருத்துவர்கள் (உண்மையான பட்டம் பெற்ற, உண்மையான பாரம்பரிய மருத்துவர்கள்) ஆலோசனை பெற்று எடுத்துகொள்ள நீண்ட ஆயுளும் உடல் முழு ஆரோக்கியமும் கிடைப்பது நிச்சயம்.

சர்க்கரை நோய்க்கும் சகல நோய்க்கும் ஒரே மருந்து........

வெந்தயம்-600 கி.
கொள்ளு-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன் நிறமாக வறுத்து தனித்தனியாக பொடி செய்து பின் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 2 டம்ளர் (200 மில்லி) தண்ணீருக்கு 2 டீஸ்பூன் பொடியை கலந்து அடுப்பில் கொதிக்க வைத்து 100 மில்லியாக (1 டம்ளராக) சுண்டக்காய்ச்சி வடிகட்டி நோயின் தீவிரத்திற்கு ஏற்ப 6 மணி நேரத்திற்கு ஒரு முறை ஆகாரத்திற்கு முன்பு (குறைந்தது 45 நிமிடம்) குடித்து வர சர்க்கரை நோய் மட்டுமல்ல, சகல நோயும் தீரும், இது அதிசயம் ஆனால் உண்மை.

உடல் பருமனால் வயிற்று பிரச்சினையா?

கொள்ளு ரசம்-கொள்ளு கசாயம் கொள்ளு-600 கி.
வெந்தயம்-100 கி.
மல்லி-100 கி.
சுக்கு-100 கி.
சீரகம்-50 கி.
பட்டை-50 கி.

இவற்றை ஒவ்வொன்றையும் தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 200 மில்லி நீரில் 2 டீஸ்பூன் பொடிய கலந்து 100 மில்லியாக சுண்டக்காய்ச்சி வெறும் வயிற்றில் காலை, மாலை (சாப்பாட்டிற்கு 45 நிமிடங்களுக்கு முன்பாக) இருவேளை அல்லது 3 வேளை குடித்தால் உடல் எடை குறைந்து தொப்பை குறைந்து வயிற்று பிரச்சினைகள் நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், இன்சுலின் ஊசி வேண்டாம்........

வரகொத்துமல்லி-500 கி.
வெந்தயம்-250 கி.

இவற்றை தனித்தனியே பொன்நிறமாக வறுத்து தனித்தனியே பொடி செய்து பின்பு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்துக்கொண்டு 2 டம்ளர் (200 மில்லி) தண்ணீரில் 2 டீஸ்பூன் பொடியை கலந்து கொதிக்க வைத்து 1 டம்ளராக சுண்டக்காய்ச்சி பின்னர் அதனை வடிகட்டி 2 அல்லது 3 வேளை சாப் பாட்டிற்கு 45 நிமிடத்திற்கு முன்பு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் போயே போச்சு.

முதுமை வராமல் இளமையோடு இருக்க..........

 கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு கலந்து பொடியை தினமும் 2 வேளை 5 கிராம் தேனில் அல்லது வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வந்தால் (சாப்பாட்டிற்கு பிறகு) முதுமையின்றி இளமையோடு வாழலாம். திரிபலா சூரணம் அல்லது திரிபலா மாத்திÛரை (காலை 2, இரவு 2) சாப்பிடலாம். இதனை சாப்பிட முதுமை வராது.

ஆண்மையுடன் அழகாக இருக்க...........

அமுக்கரா சூரணம் 5 கிராம்,
2 வேளை (அமுக்கரா கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி கலந்தது) பாலில் கலந்து சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிடலாம். அல்லது அமுக்கரா சூரண மாத்திரை காலை 2, இரவு 2 சாப்பிட ஆண்மை வலுவடைந்து மேனி அழகுபெறும்.

மலம் தினசரி கழிக்க......

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் (திரிபலா) பொடியை அல்லது மாத்திரைகளை காலை, மாலை 5 கிராம் (2-0-2) வெந்நீரில் கலந்து பருகினால் பலன் உண்டு.

சித்த மருத்துவம்

பிறகும் நோய் பயம் இன்னும் தீரவில்லையே. மனிதன் மாறவேண்டும், தன்னுடைய உணவு முறையை மாற்றவேண்டும். பழக்க வழங்கங்களை மாற்றிக் கொள்ள வேண்டும். உறங்கும் நேரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். தமிழ் கலாச்சாரம் சொன்ன ஆலய வழிபாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும்.

Wednesday, March 26, 2014

திராட்சை:சத்துப்பட்டியல்

திராட்சை
கனிகளின் இளவரசி என்ற பெயர் திராட்சைக்கு உண்டு. சிறு உருண்டைகளாக திரண்ட கொத்தாக இருக்கும் திராட்சையை, 'சத்துக்களின் கொத்து' என்று புகழ்ந்தால் மிகையில்லை. அந்த அளவிற்கு வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், நோய் எதிர்ப்பு பொருட்கள் மற்றும் சத்துப்பொருட்கள் திராட்சையில் நிறைந்துள்ளது. அவற்றிலுள்ள சத்துக்களின் பட்டியல்...

* திராட்சை குறைந்த ஆற்றல் வழங்கும் உணவுப் பொருளாகும். 100 கிராம் திராட்சைப் பழம் 69 கலோரி ஆற்றலை உடலுக்கு வழங்குகிறது. இதில் கெட்ட கொழுப்புகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* திராட்சை பல சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் 'ரெஸ்வரடிரால்' எனும் நோய் எதிர்ப்பொருள் குறிப்பிடத்தக்கது. இது தொண்டை மற்றும் குடல் புற்றுநோய்க்கு எதிராக செயல்பட வல்லது. 'கரோனரி ஹார்ட் டிசிஸ்' எனும் இதய வியாதி ஏற்படாமல் காக்கும். நரம்பு வியாதிகள், நினைவு இழப்பு வியாதி போன்றவற்றில் நிவாரணம் கிடைக்க உதவும். வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்த் தொற்றுகளையும் தடுக்கும்.

*'ரெஸ்வரடிரால்' ஆன்டி-ஆக்சிடென்ட்டிற்கு முடக்குவாதத்தை முடக்கும் குணமும் உண்டு. ரத்தத் தட்டுகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதை சரிப்படுத்தும். ரத்தத்தட்டுகள் சுறுசுறுப்புடன் செயல்பட அவசியமான நைட்ரிக் ஆக்சைடு மற்றும் வாசோடிலேட்டர் போன்ற ரசாயன மூலக்கூறுகள் உற்பத்தியை பெருக்குகிறது.

* ஆன்தோசயனின் எனும் நோய் எதிர்ப்பு பொருள், சிவப்பு திராட்சையில் அதிகமுள்ளது. இது ஒவ்வாமை வியாதிகளுக்கு எதிராக செயல்படும். நோய்த் தொற்றை தடுப்பது, புற்றுநோய்க்கு எதிராக செயல்படுவது போன்ற செயல்களிலும் பங்கெடுக்கும்.

* கேட்சின் எனும் டேனின் குழும ஆன்டி-ஆக்சிடென்ட், வெள்ளை-பச்சை திராட்சையில் காணப்படுகிறது. இது உடலுக்கு ஆரோக்கியம் வழங்கும்.

* நுண் ஊட்டச்சத்துக்களான தாமிரம், இரும்பு மாங்கனீசு போன்ற தாது உப்புக்கள் திராட்சையில் இருக்கிறது. தாமிரமும், மாங்கனீசும் நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணை புரியும். உலர் திராட்சையில் அதிக அளவு இரும்புத்தாது கிடைக்கிறது. மேலும் 100 கிராம் திராட்சையில் 191 மில்லிகிராம் பொட்டாசியம் தாது கிடைக்கிறது. இது உடலுக்கு மின்னாற்றல் வழங்க வல்லது.

* 'வைட்டமின்-சி', 'வைட்டமின்-ஏ', 'வைட்டமின்-கே' மற்றும் பீ-காம்ப்ளக்ஸ் குழும வைட்டமின்களான பைரிடாக்சின், ரிபோபிளேவின், தயமின் போன்றவையும் திராட்சையில் கிடைக்கிறது.

சாப்பிடும் முறை......... திராட்சைகள் அப்படியே சாப்பிட ஏற்ற கனி வகையாகும். கோடைகாலத்தில் மிகுதியாக உண்டால் உடல் ஆற்றல் இழப்பை ஈடுகட்டும். விதையற்ற திராட்சையை மற்ற பழங்களுடன் சேர்த்து சாலட் செய்து சாப்பிடலாம்.

உலர்ந்த திராட்சை கேக் வகைகள், ரொட்டி வகைகள், கேசரி வகைகள் மற்றும் பாயாசம் போன்ற இனிப்பு பானங்களிலும் சேர்க்கப்படுகிறது. மேலும் உணவுத் தொழில்துறையில் ஜாம், ஜெல்லி, ஜூஸ் மற்றும் ஒயின் தயாரிப்பில் திராட்சை பயன்படுகிறது.

நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்!

கண்கள்
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது மாதிரி, உடல் நோய் பாதிப்புகளை கண்கள் எடுத்துக்காட்டி விடும். அவ்வாறு கண்கள் விடுக்கும் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை இங்கு காணலாம்...

கண்கள் உப்பியிருப்பது....... உடல் பாதிப்பு: சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதை இது குறிக்கும். சிறுநீரகங்கள் உடலில் இருந்து   கழிவுப்பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவரச் செயல்படவில்லை என்றால் உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். அது கண்களைச் சுற்றித் தேங்குவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

செய்ய வேண்டியது: உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட உதவும்.

கண் இமைகளில்....... வலி உடல் பாதிப்பு: அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி ஏற்படலாம். மேலும் உடலில் மக்னீ சியம் குறைவதால் உடல் சோர்ந்து கண் இமைகளில் வலி ஏற்படுகிறது.

செய்ய வேண்டியது: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் அத்துடன் உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்..... உடல் பாதிப்பு: அதிகமாக வேலை செய்துகொண்டே இருப்பது. இந்த நெருக்கடியால் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென்று அதிகப்படியான வெளிச்சமும், புள்ளிகளும் தெரிகின்றன.

செய்ய வேண்டியது: எப்போதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது....... உடல் பாதிப்பு: ஏ.சி. எனப்படும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இடத்தில் அதிக நேரத்தைச் செலவிடும்போதும், கண்கள் அதிக வேலையால் களைப்படையும் போதும் கண்கள் உலர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றன.

செய்ய வேண்டியது: அன்றாடம் குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டிலும் அசைப்பது போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒருநாளில் இரண்டு முறை செய்ய வேண்டும். கண்கள் காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாது உடனடியாக உடம்பைக் கவனிப்பது, பல ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்கும்!

Tuesday, March 25, 2014

துரியன் பழம் - சத்து பட்டியல்

துரியன்
பழங்களின் அரசன்' என்ற பெயர் துரியன் பழத்திற்கு உண்டு. தென் கிழக்கு ஆசிய நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மென்மை மற்றும் இனிய சுவையால் களிப்பூட்டும் துரியன் பழத்தில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோம்...

* வெப்ப மண்டல கனிகளான வாழை, பலா போல துரியன் பழமும் அதிக ஆற்றல் தரக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாதுசத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் துரியன் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* சாப்பிட்ட உடன் செரிமானம் ஆகும் மென்மையான சதைப்பற்று கொண்டது. பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் எனப்படும் ஒற்றைச் சர்க்கரைகள் இதில் உள்ளன. இவை சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும்.

* கொழுப்புச்சத்து நிறைய அளவில் உள்ளது. நிறைவுறா கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி துரியன் பழத்திற்கு உண்டு.

* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலை விரட்டும். பெருங்குடலை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாதவாறு கவசம்போல காக்கிறது.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான 'வைட்டமின் சி' துரியன் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. இது நோய்த் தொற்றுகளை தடுக்கும். தீமை தரும் 'பிரீ-ரேடிக்கல்'களை விரட்டியடிக்கும்.

* நியாசின், ரிபோபிளேவின், பான்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின் மற்றும் தயமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது. இவை உடல் உறுப்புகளை புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

* தாது உப்புக்களான மாங்கனீசு, தாமிரம், இரும்பு, மக்னீசியம் துரியன் பழத்தில் குறிப்பிட்ட அளவு உள்ளது. மாங்கனீசு நோய் எதிர்ப்பு நொதிகள் துரிதமாக செயல்பட துணைக் காரணியாக செயல்படும். தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக துணைபுரியும். துடிப்புள்ள ரத்த சிவப்பணுக்களுக்கு இன்றியமையாதது இரும்புத்தாது.

* பொட்டாசியம் தாது மிக அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆற்றல் வழங்கும் எரிபொருளாகவும், இத யத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

* டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் துரியன் பழத்தில் உள்ளது. இதனை 'உறங்கும் மருந்து' என்று சிறப்பித்து அழைப்பது உண்டு. இது உடலில் செரடானின் மற்றும் மெலடானின் ஆக வளர்ச்சிதை மாற்றம் அடையும். இவை நரம்புகள் நலமாக இருக்க அவசியமான ரசாயனமாகும். தூக்கத்தை தூண்டுவதி லும், நினைவிழப்பு பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதிலும் இவை பயன்படும்.

சாப்பிடும் முறை.......... துரியன் பழம் சிறிய பலாப்பழம்போல தோன்றும். இதன் தோலிலும் முட்கள் காணப்படும். கவனமாக இதனை வெட்டி எடுத்தால் உள்ளே பலாச்சுளை போன்ற சதைப்பகுதி இருக்கும். அதை அப்படியே உண்ணலாம். ஐஸ்கிரீம், மில்க்ஷேக் ஆகியவற்றில் துரியன் பழம் சேர்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் 'சாயர்' எனப்படும் துரியன் சூப் பிரபலம். சிவப்பு நிற சதைப்பற்றுள்ள துரியன் பழத்தை, நன்னீர் மீன்களுடன் சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படு கிறது. 'துரியன் சாஸ்' செய்து சாப்பிடலாம். இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் 'இகான் பிரெங்கஸ்' என்ற பெயரில் துரியன் சாஸ் பிரபலம்.

பழுக்காத துரியன் காய்கள், பல்வேறு குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்கப்படுகிறது. துரியன் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடப்படுகிறது.