Pages

Wednesday, March 26, 2014

நோய் எச்சரிக்கை விடுக்கும் கண்கள்!

கண்கள்
'அகத்தின் அழகு முகத்தில் தெரியும்' என்பது மாதிரி, உடல் நோய் பாதிப்புகளை கண்கள் எடுத்துக்காட்டி விடும். அவ்வாறு கண்கள் விடுக்கும் சில எச்சரிக்கை சமிக்ஞைகளை இங்கு காணலாம்...

கண்கள் உப்பியிருப்பது....... உடல் பாதிப்பு: சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதை இது குறிக்கும். சிறுநீரகங்கள் உடலில் இருந்து   கழிவுப்பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவரச் செயல்படவில்லை என்றால் உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். அது கண்களைச் சுற்றித் தேங்குவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.

செய்ய வேண்டியது: உணவில் சேர்த்துக்கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன், அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாகச் செயல்பட உதவும்.

கண் இமைகளில்....... வலி உடல் பாதிப்பு: அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி ஏற்படலாம். மேலும் உடலில் மக்னீ சியம் குறைவதால் உடல் சோர்ந்து கண் இமைகளில் வலி ஏற்படுகிறது.

செய்ய வேண்டியது: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் அத்துடன் உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம்..... உடல் பாதிப்பு: அதிகமாக வேலை செய்துகொண்டே இருப்பது. இந்த நெருக்கடியால் மூளை குழப்பமடைந்து கண்களுக்குத் தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென்று அதிகப்படியான வெளிச்சமும், புள்ளிகளும் தெரிகின்றன.

செய்ய வேண்டியது: எப்போதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கம் இருந்தால் குறைத்துக் கொள்ள வேண்டும்.

கண்கள் உலர்ந்து போவது....... உடல் பாதிப்பு: ஏ.சி. எனப்படும் குளிர்சாதன வசதி செய்யப்பட்ட இடத்தில் அதிக நேரத்தைச் செலவிடும்போதும், கண்கள் அதிக வேலையால் களைப்படையும் போதும் கண்கள் உலர்ந்து பாதிப்புக்குள்ளாகின்றன.

செய்ய வேண்டியது: அன்றாடம் குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் அவசியம். தினமும் கண்களை மேலும் கீழுமாகவும், பக்கவாட்டிலும் அசைப்பது போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒருநாளில் இரண்டு முறை செய்ய வேண்டும். கண்கள் காட்டும் அறிகுறிகளை அலட்சியம் செய்யாது உடனடியாக உடம்பைக் கவனிப்பது, பல ஆபத்துகளில் இருந்து நம்மைக் காக்கும்!

No comments: