Pages

Showing posts with label துரியன் பழம். Show all posts
Showing posts with label துரியன் பழம். Show all posts

Tuesday, March 25, 2014

துரியன் பழம் - சத்து பட்டியல்

துரியன்
பழங்களின் அரசன்' என்ற பெயர் துரியன் பழத்திற்கு உண்டு. தென் கிழக்கு ஆசிய நாடுகளை தாயகமாகக் கொண்டவை. மென்மை மற்றும் இனிய சுவையால் களிப்பூட்டும் துரியன் பழத்தில் உள்ள சத்துக்களை பட்டியல் போடுவோம்...

* வெப்ப மண்டல கனிகளான வாழை, பலா போல துரியன் பழமும் அதிக ஆற்றல் தரக்கூடியது. வைட்டமின்கள் மற்றும் தாதுசத்துக்கள் நிறைந்தது. 100 கிராம் துரியன் பழத்தில் 147 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.

* சாப்பிட்ட உடன் செரிமானம் ஆகும் மென்மையான சதைப்பற்று கொண்டது. பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் எனப்படும் ஒற்றைச் சர்க்கரைகள் இதில் உள்ளன. இவை சாப்பிட்டவுடன் உடலுக்கு உடனடி புத்துணர்ச்சி அளிக்கும்.

* கொழுப்புச்சத்து நிறைய அளவில் உள்ளது. நிறைவுறா கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகளை கரைக்கும் சக்தி துரியன் பழத்திற்கு உண்டு.

* எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து நிறைந்தது. மலச்சிக்கலை விரட்டும். பெருங்குடலை புற்றுநோய் பாதிப்பு ஏற்படாதவாறு கவசம்போல காக்கிறது.

* சிறந்த நோய் எதிர்ப்பு பொருளான 'வைட்டமின் சி' துரியன் பழத்தில் சிறந்த அளவில் உள்ளது. இது நோய்த் தொற்றுகளை தடுக்கும். தீமை தரும் 'பிரீ-ரேடிக்கல்'களை விரட்டியடிக்கும்.

* நியாசின், ரிபோபிளேவின், பான்டோதெனிக் அமிலம், பைரிடாக்சின் மற்றும் தயமின் போன்ற பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் அதிக அளவில் உள்ளது. இவை உடல் உறுப்புகளை புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

* தாது உப்புக்களான மாங்கனீசு, தாமிரம், இரும்பு, மக்னீசியம் துரியன் பழத்தில் குறிப்பிட்ட அளவு உள்ளது. மாங்கனீசு நோய் எதிர்ப்பு நொதிகள் துரிதமாக செயல்பட துணைக் காரணியாக செயல்படும். தாமிரம் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாக துணைபுரியும். துடிப்புள்ள ரத்த சிவப்பணுக்களுக்கு இன்றியமையாதது இரும்புத்தாது.

* பொட்டாசியம் தாது மிக அதிக அளவில் உள்ளது. இது உடலுக்கு ஆற்றல் வழங்கும் எரிபொருளாகவும், இத யத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைப்பதிலும் பங்கெடுக்கிறது.

* டிரிப்டோபான் எனப்படும் அமினோ அமிலம் துரியன் பழத்தில் உள்ளது. இதனை 'உறங்கும் மருந்து' என்று சிறப்பித்து அழைப்பது உண்டு. இது உடலில் செரடானின் மற்றும் மெலடானின் ஆக வளர்ச்சிதை மாற்றம் அடையும். இவை நரம்புகள் நலமாக இருக்க அவசியமான ரசாயனமாகும். தூக்கத்தை தூண்டுவதி லும், நினைவிழப்பு பாதிப்புக்கு சிகிச்சை அளிப்பதிலும் இவை பயன்படும்.

சாப்பிடும் முறை.......... துரியன் பழம் சிறிய பலாப்பழம்போல தோன்றும். இதன் தோலிலும் முட்கள் காணப்படும். கவனமாக இதனை வெட்டி எடுத்தால் உள்ளே பலாச்சுளை போன்ற சதைப்பகுதி இருக்கும். அதை அப்படியே உண்ணலாம். ஐஸ்கிரீம், மில்க்ஷேக் ஆகியவற்றில் துரியன் பழம் சேர்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் 'சாயர்' எனப்படும் துரியன் சூப் பிரபலம். சிவப்பு நிற சதைப்பற்றுள்ள துரியன் பழத்தை, நன்னீர் மீன்களுடன் சேர்த்து இந்த சூப் தயாரிக்கப்படு கிறது. 'துரியன் சாஸ்' செய்து சாப்பிடலாம். இந்தோனேசியா மற்றும் சுமத்ரா தீவுகளில் 'இகான் பிரெங்கஸ்' என்ற பெயரில் துரியன் சாஸ் பிரபலம்.

பழுக்காத துரியன் காய்கள், பல்வேறு குழம்புகளில் காய்கறி போல சேர்த்து சமைக்கப்படுகிறது. துரியன் பழ விதைகள், பலாக் கொட்டைபோல அவித்தும், வறுத்தும் சாப்பிடப்படுகிறது.