Pages

Tuesday, January 28, 2014

பிரசவத்திற்கு பின் குண்டாகாமல் இருக்க

 பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாயாவது. தாய், சேய் இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிக்கு தரும் கவனம் குழந்தை பிறந்த பின்னும் தொடர வேண்டும். பிரசவத்துக்குப் பின் பெண்கள் குண்டாகி விடுவது சகஜம். அதை தவிர்க்க வேண்டும்.

பிரசவத்துக்கு பின் பெண்கள் குண்டாவதற்கு முதல் காரணம் - "நார்மல்" பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக கொழுப்பு, ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் தருவது. குழந்தை பிறந்திருப்பதால் ஏற்பட்ட பலவீனத்தை போக்க இது தான் வழி என்று பெற்றோர்கள் அதிக ஊட்டச்சத்து உணவை பிரசவமான பெண்களுக்கு திணிக்கிறார்கள். சில பெண்கள் பிரசவத்துக்குப் பின் "ஒய்விலேயே" இருக்கின்றனர். பிரசவத்திற்கு பின்னும் லகுவான, சிரமமில்லாத உடல் உழைப்பு (அல்லது) உடற்பயிற்சி தேவை. இதை தாயின் பெற்றோர் கவனிக்க வேண்டும். நமது நாட்டில், பிரசவமான பெண்ணை வீட்டில் வேலை செய்யவே மற்ற குடும்பத்தினர் விடவே மாட்டார்கள். இந்த அதீத அன்புத் தொல்லையால் உடல் எடை கூடும்.

"சிசேரியன்" செய்து பிரசவித்த பெண்களால் உடனடியாக நார்மல் செயல்களை செய்ய முடியாது. உடற்பயிற்சியிலும் ஈடுபட இயலாது. அதனால் அவர்களின் கர்பப்பை நார்மல் நிலைக்கு சுருங்குவது தாமதமாகும். இதனால் அடிவயிறு பெருத்து விடும். கூடவே போஷாக்கான, கொழுப்பு / இனிப்பும் சேர்ந்த உணவுகளும் கொடுக்கப்படுகின்றன. இதனால் 'ஓபிசிடி' உண்டாகும்.

சில பெண்கள், பிரசவ காலத்தில் ஏற்படும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் இவற்றால் மனோரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எல்லோரிடமும் எரிந்து விழுதல், அநாவசியமாக கோபப்படுதல் போன்ற குணமாற்றங்கள் ஏற்படுவது அதிசயமல்ல. பிரசவ பாதிப்புகளில் இதுவும் ஒரு அங்கம். மனபாதிப்பினால் இத்தகைய பெண்கள் அதிகம் உண்ணத் தொடங்கி, உடல் எடையை கூட்டிக் கொள்கின்றனர்.

ஆயுர்வேத சிகிச்சை முறைகள்

1. உணவு கட்டுப்பாடு - உங்களின் செல்லக் குழந்தை பிறந்த பின் ஏறும் எடையை குறைக்கலாம். அதற்கு முதல் தேவை "பத்தியம்" அல்ல. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு சத்தான உணவு தேவை. எனவே அவசரப்பட்டு "டயட்" டில் இறங்கி விடாதீர்கள். உங்கள் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தேவையின்றி "எக்ஸ்ட்ரா" கலோரிகளை ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

2. நிறைய தண்ணீர் குடிக்கவும். உணவுடனும் குடிக்கவும். தண்ணீர் அதிகமாக குடிக்க, உணவு குறைவாகும்.

3. உணவில் நார்ச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து சாப்பிட்ட பின் சர்க்கரை உட்கிரகிக்கப்படுவதை தாமதப்படுத்தும். நார்ச்சத்தினால் வயிறு சீக்கிரமே நிறைந்தது போல் உணர்வீர்கள். பழங்கள், காய்கறி, பீன்ஸ், பழுப்பு அரிசி (கைக்குத்தல் அரிசி, முழுத்தானியங்கள், பார்லி, ஓட்ஸ்) முதலியவை நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்.

4. சர்க்கரையை கூடிய வரையில் தவிர்க்கவும். சர்க்கரையில் எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லை. சர்க்கரைக்கு பதில் தேனை பயன்படுத்தலாம்.

5. கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.

6. உணவு உண்ணும் போது நன்றாக மென்று விழுங்கவும்.

7. ஆயுர்வேதம் தாய்க்கும் சேய்க்கும் ஏற்ற வாசனை திரவியங்கள் கலந்த உணவை வலியுறுத்துகிறது. உணவுகள் புதிதாக தயாரிக்கப்பட வேண்டும். ஈரப்பசை உடையதாக இருக்க வேண்டும். இளம் சூட்டுடன் பரிமாறப்பட வேண்டும். சீரகம், கருஞ்சீரகம், இஞ்சி, கடுகு, துளசி, மஞ்சள், வெந்தயம், இலவங்கப்பட்டை, பூண்டு (வறுத்து உபயோகிக்க வேண்டும் பச்சையாக அல்ல) முதலியவை உணவில் இடம் பெற வேண்டும். மாமிசம் இரு வாரங்களுக்கு ஒரு முறை போதும். காப்பி, டீ, வெள்ளை சீனி, பச்சை காய்கறிகள், உலர்ந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.

8. காய்கறிகளின் பயன்கள் கரட், தக்காளி வளர்சிதை மாற்றம் துரிதமாக நடைபெற உதவும் காய்கறிகள்.
பீட்ரூட், சிட்ரஸ் பழங்கள், தர்பூசணி போன்றவை உடலின் கொழுப்பை கரைக்கின்றன.

9. நெய்யை தவிர்க்காதீர்கள். சிறிதளவு பசுநெய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

10. உணவைத் தவிர நிறைய இளம்சூடான சுத்தமான தண்ணீர், கொதிக்க வைத்து இளம் சூட்டுக்கு ஆறின பால் இவற்றை நாள் முழுவதும் குடித்து வரலாம்.



இதர டிப்ஸ்

1. இளம் சூடான நல்லெண்ணையால் உடல் மசாஜ் செய்து கொண்டு குளிப்பது நல்லது.
2. ஒரு பருத்திப் புடவை எடுத்து வயிற்றை சுற்றி இறுக்கமாக கட்டிக் கொண்டால் வாயு சரிநிலையில் இருக்கும். வயிறு சாதாரண நிலைக்கு திரும்பும். இதை 42 நாட்கள் செய்யவும். தற்போது இதற்கென பிரத்யேக பெல்ட்டுகள் கிடைக்கின்றன.
3. ஆயுர்வேத திரிபால கஷாயம் உடல் எடை குறைய உதவும். 20 கிராம் த்ரிபாலா சூரணத்தை 200 மி.லி. நீருடன் கலந்து, நீர் 50 மி.லி. அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சவும். வடிகட்டி தேன் சேர்த்து பருகவும்.
4. கடுக்காய் வயிற்றை சுத்திகரிக்கும் குணமுடையது. உடல் கொழுப்பையும் குறைக்கும். கடுக்காய் தோலின் பொடியை 1 டீஸ்பூன் எடுத்து வெந்நீருடன் படுக்கும் முன்பு எடுத்துக் கொள்ளவும்.

கடைசியாக, லேசான உடற்பயிற்சி எடை குறைக்க மிகவும் உதவும். இதை டாக்டரின் ஆலோசனைப்படி மேற்கொள்ளவும்.

உலர்ந்த திராட்சை மருத்துவப் பயன்கள்

உலர்ந்த திராட்சை

உலர்ந்த திராட்சையில் பொட்டாசியம் மாங்கனிஸீம் உள்ளன. அதனால் திராட்சை அமிலத்தன்மை கொண்ட உணவாகிறது. அமிலத்தன்மை நிறைந்த உணவுகளை திராட்சை காரத்தன்மையாக (Alkaline) மாற்றவல்லது. உணவின் அதிக அமிலத்தன்மை, சருமநோய்கள், கட்டிகள், ஆர்த்தரைடீஸ், கவுட், முடி இழப்பு, இதய நோய்கள் முதலியவற்றை உண்டாக்கும்.

திராட்சையில் உள்ள கால்சியம் எலும்புகள், பற்கள் இவை ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. ஆஸ்டியோத பொராசிஸ் (Osteo porosis) எனும் எலும்பு பலவீனம், உலர் திராட்சையில் உள்ள போரான் (Boron) தாதுப்பொருளால் குறைக்கப்படுகிறது.

ரத்த சோகைக்கு உலர் திராட்சையில் உள்ள செம்பு, இரும்பு, விட்டமின் பி12 நல்லவை. இவை ரத்தம் உண்டாக உதவுகின்றன.

உலர் திராட்சையில் உள்ள Polyphenolic phyto - nutrients என்ற சத்துக்கள் பேக்டீரியா உள்பட எல்லா தொற்று நோய்களிலிருந்து உடலை காப்பாற்றுகிறது.


Free radical உடலை காப்பது உலர் திராட்சையின் ஆன்டி- - ஆக்சிடான்ட் குணங்கள் தான். கண்புரை, குருடு - இவைகள் தவிர்க்கப்படுகின்றன.

குழந்தை உண்டாக உதவுகிறது உலர் திராட்சை. இதில் உள்ள ஆர்ஜினைன் (Arginine) என்ற அமினோ அமிலம், பாலியல் பலவீனத்தை போக்கி பாலியல் ஆர்வத்தை தூண்டும்.

பொதுவாக குழந்தைகளுக்கு (ஏன், பெரியவர்களுக்கு கூட) இனிப்புகள் சாப்பிட்டால் பற்களில் சொத்தை உண்டாகும். உலர் திராட்சை இனிப்பானாலும் பற்களை பாதிக்காது. அதில் உள்ள ஓலியோநாலிக் (Oleanolic) அமிலம் பற்களை பற்சிதைவு, சொத்தை, ஈறுநோய்கள் முதலியவற்றிலிருந்து காப்பாற்றுகிறது.

உலர் திராட்சையில் ஃப்ரூக்டோஸ் (Fructose) மற்றும் குளூகோஸ் (Glucose) அதிகமாக உள்ளது.

மேலும் உலர் திராட்சை இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவும். புற்றுநோயை தடுக்கும்.

உலர் திராட்சையில் விட்டமின் 'சி' மிகவும் குறைவு.

குன்றாத இளமையைத் தரும் கற்றாழை

சோற்றுக் கற்றாழை
கற்றாழை என்றும், சோற்றுக் கற்றாழை என்றும் அழைக்கப்படும் மூலிகை சரித்திர புகழ் பெற்றது. உலகெங்கும் அறிந்த மூலிகைகளில் ஒன்று. நாளுக்கு நாள் தேவை அதிகரித்து வரும் கற்றாழைக்காக அந்த காலத்திலேயே 'போர்' நடந்திருக்கின்றது. மாவீரன் அலெக்சாண்டரின் கருவான அரிஸ்டாடில்' கற்றாழை போர்வீரர்களுக்கு ஏற்படும் புண்கள், காயங்களை உடனடியாக ஆற்றி விடும் ஆற்றல் படைத்தது என்பதை தெரிந்து, அலெக்சாண்டரை கிழக்கு ஆப்ரிக்க தீவான சாக்கோர்டோ (Socorto) மீது படையெடுக்க தூண்டினார். ஏனென்றால் இந்த தீவில் அபரிமிதமாக விளைந்திருந்த கற்றாழையை கைப்பற்றத்தான்! அரிஸ்டாடில் பிறகு கற்றாழையை உபயோகித்து, போர் வீரர்களின் காயங்களை அகற்றிக் காட்டினராம்.

உலகெங்கும் மூலிகை பொருட்களை அதிகம் பயன்படுத்தும் விருப்பம் அதிகரித்து வருகிறது. மருந்தாகட்டும் இல்லை அழகுப்பொருள் சாதனமாகட்டும் கற்றாழை இன்று வெகுவாக பயன்படுத்தப்படுகிறது. இதைப்பற்றிய ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன.



நம் நாட்டு சித்தர்கள் கற்றாழை குன்றாத இளமையை தருவதால் இதை 'குமரி' என்று குறிப்பிடுகின்றனர். உலகப் பேரழகிகளில் ஒன்றாக குறிப்பிடப்படும் 'கிளியோபாட்ரா' வால் புகழப்பெற்றது கற்றாழை!

விஞ்ஞான ரீதியாக கற்றாழையின் பெயர் Aloe Barbadensis வட ஆப்ரிக்காவில் முதன் முதலாக பயிரிடப்பட்டது. ஆங்கிலப் பெயர் Aloe vera இதில் உள்ளவை

அமினோ அமிலங்கள், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள், என்சைம்கள் (Enzymes).

சோற்றுக்கற்றாழையின் சிறப்புத்திறமை என்னவென்றால் இதன் சாற்றின் சில குறிப்பான அணுக்கூறுகள் (Molecules) உள்ளன. இந்த அணுக்கூறு, நம் உடலில் உள்ள நோய் தடுக்கும் செல்களில் உள்ள சில Receptor (விரும்பி வரவேற்கும்) களுக்கு மிகவும் ஒத்தவையாகவும், பிடித்தமாகவும் இருப்பதால் கற்றாழை சாறு சேர்ந்த உடனேயே நோயை அழிக்கும் நடவடிக்கை பலமாக தொடங்கி விடுகின்றது. முக்கியமாக Phagocytes எனப்படும் நம் உடல் செல்கள், கற்றாழை சாறால் பலமாக ஊக்குவிக்கப்பட்டு, தீய பாக்டீரியா, கழிவுப்பொருட்கள் இவற்றை சுற்றி வளைத்து விரைவாக அழித்து விடுகின்றது. இதனால் உடல் பல விதத்தில் சுத்தீகரிக்கப்படுகின்றது. காயங்கள் விரைவாக ஆறிவிடுகின்றது.

கற்றாழை சாறு பற்றிய விளம்பரங்கள் வெகுவாக இப்போது வருகின்றன. இதில் ஒரு விதமான கொழுப்பும், நாற்றமும் இருப்பதால் உணவாக சேர்த்துக் கொள்வது கடினம். அதனால் சுவையூட்டப்பட்ட Ready made ஜுஸாக கற்றாழை கிடைக்கின்றது. இதன் சாறு நல்ல டானிக், வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அடங்கியது.

வீட்டில் தயாரிக்க வேண்டுமென்றால் மடல்களை 10 முறை தண்ணீரில் கழுவி உலர்த்தி, பொடி செய்து, தினசரி இரு வேளை அரை ஸ்பூன் அளவு வெந்நீருடன் அருந்த, மலச்சிக்கல் நீங்கும், மூல வியாதிக்கு நல்லது. காயங்கள், தீப்புண்கள், இவற்றுக்கு கற்றாழையை வெட்டி அதன் 'ஜெல்' (Gel) எடுத்து அப்படியே பூசிட காயங்கள் ஆறும், வடுவும் வராது.

தேங்காய் எண்ணெய்யுடன் இதன் சாற்றை காய்ச்சி, வாசனை திரவியங்கள் சேர்த்து, 15 நாள் வெய்யிலில் வைத்து தலைக்கு உபயோகிக்க, தலைமுடி செழித்து வளரும்.

சோரியாசிஸ், எக்சிமா போன்ற பல சர்ம வியாதிகளுக்கு கற்றாழை 'சோறு' நிவாரணமளிக்கின்றது. எரிச்சல், அரிப்பு இவற்றை நீக்குகின்றது. மேலை நாடுகளில் தயாராகும் பல வித அழகு சாதனப் பொருட்களில் கற்றாழை இல்லாமல் இல்லை. தோலை மிருதுவாக்கி இறந்த செல்களை நீக்கி, புதிய செல்களை புதுப்பிக்கின்றது.

வாய், பற்களின் சுகாதாரத்திற்கு Mouth Wash ஆகவும் கற்றாழை தயாரிக்கப்படுகிறது. கற்றாழையில் "குழம்பு" (Pulp) வயிற்றுப் புண்கள், கல்லீரல் நோய்கள் (Cirrhosis), ஆர்த்தரைடிஸ், மூட்டுவலி இவை வராமல் தடுக்கின்றது. வலியுள்ள மூட்டுக்களில் கற்றாழை சாற்றை தடவலாம்.

சித்த வைத்தியத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட வியாதிகளுக்கும், ஆண் தன்மை நீடிப்பதற்கும், கற்றாழை பயனா கின்றது. ஹோமியோபதி முறையிலும் கற்றாழை அருமருந்தாக பயன்படுகின்றது.

இதன் பயனை அடைய தினமும் ஒரு டீஸ்பூன் கற்றாழை சாற்றை குடிக்க ஆரம்பிக்கவும். நாளாக இதை 2 (அ) 4 டேபிள்ஸ்பூனாக (தினசரி) அதிகரிக்க வும். மூன்று மாதம் குடித்தால் உங்கள் சக்தி பெருகும். இந்த மருத்துவ பயன்களை தவிர, கற்றாழை நார் துணிகள் நெய்ய பயன்படுகின்றது! எனவே கற்றாழை பயிரிடுவது நல்ல பணம் தரும் விவசாயமாகிவிட்டது. வீட்டில் முதலுதவிக்காக நீங்களும் மண் தொட்டியில் கற்றாழையை வளருங்கள்!

Saturday, January 25, 2014

Adai


Time of preparation :     2 Hours 20 Minutes
Serves :     4

Ingredients:     

1 Cup Channa Dal
1 Cup Tuvar Dal
1/4 Cup Urad Dal
1/4 Cup Moong Dal
1/4 Cup Rice
1/2 Cup Grated Coconut
2 Green Chilies
4 Red Chilies
1'' Ginger
Salt to Taste
1/2 Cup Chopped Coriander
8 Curry Leaves
Oil

Method of cooking:    

Soak dals together and rice separately for 2 hours.
Grind rice, chilles, curry leaves and ginger together.
Add dals and grind again.
Add salt, coriander and coconut and mix well, Heat a griddle and pour some batter and spread in a circular motion.
Spread one spoon of oil around the dosa and cook both sides.

Method of Serving:     
Serve Hot.

Friday, January 24, 2014

க்ரீன் டீயின் நன்மைகள் (GreenTea -Health Benefits)

Green Tea

* ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.

* உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

* ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.

* இதய நோய் வராமல் தடுக்கிறது.


* ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.

* உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

* புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

* புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

* எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

* பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது.

* வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

* ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.

* சருமத்தை பாதுகாத்து இளைமையாக வைக்கிறது.

* பருக்கள் வராமல் தடுக்கிறது.

* நரம்பு சம்பந்தமான நோய்களை தடுக்கிறது.

குழந்தைகளின் உயரம் & எடை

AGE (years) MALE (HT) FEMALE (HT) MALE(WT) FEMALE(WT)       

Masala Vada

Time of preparation : 30 Minutes
Serves :     6

Ingredients:     

    1 Cup Yellow Gram 'Chana' Dak
    1/2 Cup Onion Finely Chopped
    1/2 Cup Coriander Finely Chopped
    1/2 Cup Dill Leaves Finely Chopped
    3-4 Green Chillies Finely Chopped
    1/2 Tsp. Cumin Seeds
    Oil O Deep Fry   

Method of cooking:   

Wash And Soak Dal For 3-4 Hours, Keep 2 Tbsp. Dal Aside, Grind The Rest, Coarsely.
Mix All Other Ingredients, Including Whole Dal. Add 2-3 Tbsp. Hot Oil To The Mixture.
Heat Oil, Make Pattie Shaped Rounds With Moist Palm.Let Carefully Into The Hot Oil.
Fry First One Side Then The Other Till Golden Brown.


Method of Serving    
Serve Hot With Green Chutney, Tamarind Chutney, Or Ketchup