Pages

Thursday, October 13, 2016

கண் நோய்களுக்கு உணவும் காரணம்

உடலில் உள்ள நோய் ஏற்ப்பட்டால் அது எப்படி கண்ணைப் பாதிக்கிறதோ அவ்வாறே கண்ணில் ஒரு நோய் தொற்றினால் அது உடலையும் பாதிக்கிறது. கண்ணில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படுவதில்லை. உடலில் ஸ்டார்ச், ப்ரோட்டீன், சர்க்கரை ஆகியவைகளின் அளவு கூடும் பொழுது கண் எரிச்சல் போன்ற நோய் ஏற்படுகிறது. மேலும் அதிகரிக்கும் பொழுது கண்ணில் நீர் வழிதல், புரை வளர்தல், போன்றவை ஏற்படும். அதன் முற்றிய நிலையில் கண் குருடாகி விடும்.

சரியான அளவில், சத்தான உணவு அமையாவிடில் கண் சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படுகின்றன. கண்ணின் அமைப்பையும் வேலை முறையையும் பாதிக்கும். சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படாத உணவு, ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, ரத்த நாளங்களையும் பாதிக்கிறது. எனவே உணவு சரியான விகிதத்தில் அமையாவிடின் அது வயிற்றை மட்டும் தான் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகள் மட்டுமே ஏற்படும் என்பது தவறு. உணவு முறை சரியில்லாவிடில் உடல் முழுவதையும் பாதிக்கும். உடல் பாதிக்கப்படும் பொழுது உடலில் ஓர் உறுப்பான கண் பார்வையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ரத்த நாளங்களும், தசைகளும் பழுதடைந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடை பெறாது. மென்மையாக இருக்க வேண்டிய தசைகள் இறுகி கடினத்தன்மையை பாதித்து விடும். கண்ணின் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டால் அது பார்வைக் குறையை ஏற்படுத்தி விடும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை உணவு முறையில் ஏற்பட்ட முரண்பாடுகளால்தான் ஏற்படுகிறது. முதுமைப் பருவத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடும் இதே காரணத்தால் தான் ஏற்படுகிறது. மனிதர்கள் முதுமை காலத்தில் வயது முதிர்வதால் இயற்கையிலேயே உருவத்தில் மாறுதல் அடைகின்றன. அதனால் தான் தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை ஏற்படுகிறது. என்ற கருத்து மக்களிடத்தில் உள்ளது.

சுமார் 40 வயதிற்குப்பின் உடலில் முதிர்ச்சி ஏற்பட்டு தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணிலேயும் சுருக்கம் ஏற்படவே செய்யும். அருகிலுள்ள பொருள்களைக் கூட சரியாக பார்க்க முடியாது. எனவே கண்ணாடி தவிர வேறு வழியில்லை என்று மக்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக நாம் நமது உணவு முறையை ஒழுங்குபடுத்திக்கொள்ள தவறிவிட்டோம். இதனாலேயே பார்வை குறைவு ஏற்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் நஞ்சாகிப்போன உணவு, ஸ்டார்ச், குளுகோஸ் ஆகியவைகள் அதிகரித்த உணவால் தான், இன்று 40 வயதைக் கடந்தவர்களுக்கு தூரப்பார்வை குறைபாடு ஏற்படக் காரணம். இவர்கள் தங்கள் உணவு முறையை சரி செய்து கொண்டு எளிமையான சில பயிற்சிகளை மேற்கொண்டால், பார்வைக் குறைவை சரிப்படுத்திக் கொள்ள முடியும்.

Friday, October 7, 2016

ஷாப்பிங்: பெண்கள் கில்லாடிகளா? ஏமாளிகளா?


பெண்களுக்கு ஷாப்பிங் போவதைப் போன்ற மகிழ்ச்சியான விஷயம் வேற எதுவும் இருந்துவிட முடியாது. தங்களுக்குத் தேவையான விஷயத்தை நேரடியாகத் தொட்டு உணர்ந்து தேர்வு செய்து வாங்குவதையே பெரிய மகிழ்ச்சியாக பெண்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் பெரும்பாலான பெண்கள் ஷாப்பிங் செய்ய ஆண்களைத் துணைக்கு அழைப்பதில்லை. காரணம் ஆண்கள் அவசரக்காரர்கள். எதையும் பொறுமையாக தேர்வு செய்ய அவர்கள் அனுமதிப்பதில்லை என்பது பெண்களின் குற்றச்சாட்டு. பெரும்பாலான பெண்கள் தங்கள் தோழிகளை அல்லது சகோதரிகளைத்தான் ஷாப்பிங் செல்லத் துணையாக அழைத்துச் செல்கிறார்கள். எனக்கு தலைக்க மேல் வேலை இருக்கிறது.

யாரும் என்னை கூப்பிடாதீர்கள் என்று கறாராகப் பேசும் பெண்கள் கூட ஷாப்பிங் என்றதும் துள்ளிக் குதித்துத் தயாராகி விடுகிறார்கள். அவர்களுடைய மனநிலை அப்படிப்பட்டது. ஷாப்பிங் போவது மட்டுமல்ல மற்றவர் வாங்குவதைப் பார்ப்பதும் கூட பெண்களுக்கு மகிழ்ச்சிதான். இது அவர்களின் பிறவிலேயே ஏற்பட்ட குணம்.

பெண்கள் எப்போதும் எதையாவது வாங்குவதில் பிரியமுடையவர்கள். அவர்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் கடைக்குத்தான் அழைத்துப்போக வேண்டும். மற்றவர்கள் வாங்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இந்த அனுபவம் தனக்கும் பயன்படும் என்ற வகையில் கடைகடையாக ஏறி இறங்க பெண்கள் தயங்க மாட்டார்கள்.

கடைத்தெரு அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதிலும் பெண்களுக்கு அலாதி பிரியம். கையில் இருக்கும் பணத்துக்கு என்ன வாங்குவது என்றுதான் எப்போதும் கணக்குப்போடுவார்கள். இந்த கணக்கை தெளிவாகப் புரிந்துகொண்டு தான் வியாபாரிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்களும் ஷாப்பிங்கும் என்ற தலைப்பில் சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கு பெண்கள் ஷாப்பிங் பிரியர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அந்த கருத்தரங்களில் வெளியான சில சுவாரசியமான விஷயங்கள்.....

தள்ளுபடி :

இந்த தள்ளுபடி, இலவசம், ஆபர் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் வேறு யாருக்கும் இருந்துவிட முடியாது. தள்ளுபடியின் பின்னே மறைமுகமாக என்னவெல்லாம் விஷயங்கள் இருக்கின்றன என்று யோசிக்காமல் பெண்கள் கடைக்கு ஒடுவார்கள். அதே போல் ஸ்டாக் கிளியரன்ஸ் என்று வந்துவிட்டால் அங்கே குவிவது பெண்கள் மட்டுமே.

சமீபத்தில் லண்டன், ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒட்டி போடப்பட்ட ஸ்டாக் கிளியரண்ஸ் விற்பனையில் எழுபந்தைந்து சதவீதம் பெண்கள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கிறார்கள். குறைந்த விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவித்து கணவருக்கு சேவை செய்யும் பெரிய தியாகத்தை உலக அளவில் பெண்கள் மட்டுமே அதிகமாக செய்கிறார்கள்.

தள்ளுபடியில் வாங்கும் பொருட்கள் பின்னால் செல்லுபடியாகுமா என்பதை பற்றியெல்லம் அவர்கள் கவலைப்படுவதில்லை. பெண்களின் ஒட்டுமொத்த மேதாவித்தனத்தை வியாபாரிகள் புரிந்து கொண்டு பிழைப்பை நடத்துகிறார்கள்.

பேரம் - வியாபராம் :

எந்தப்பொருளானாலும் பேரம் பேசி பத்து ரூபாயாவது குறைத்து வாங்கினால் தான் பெண்களுக்கு மகிழ்ச்சி. இதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள். கடைக்காரர்களும் இவர்களுக்கு ஏற்றாற்போல் ஏற்ற இறக்கி காட்டி குறைத்து வியாபாரத்தை சாமர்த்தியமாக முடித்துக் கொள்வார்கள்.

பேரம் இல்லாத வியாபாரம் பெண்களுக்கு ஆகாது. பணம் - மிச்சம்..... தன்னுடைய ஷாப்பிங்க சாமர்த்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஓர் அலதியான சுகம் பெண்களுக்கு. குறைந்த விலையில் வாங்கி பணத்தை மிச்சம் பிடித்த சாமர்த்தியத்தை எல்லோரிடமும் பகிர்ந்த கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் பாராட்டு தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். இது ஷாப்பிங் செய்ததால் வந்த பாராட்டு, மற்றவர்கள் தன்னை பார்த்து கற்றுகொள்ள வேண்டும். தன்னை பின்பற்ற வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். தேவையான பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்குவது தான் இவர்களுடைய சாமர்த்தியம்.

மற்றவர் அபிப்பிராயம் :

தான் வாங்கிய பொருட்களை பற்றி மற்றவர்கள் நல்ல அபிப்பிராயம் பெண்களுக்கு நிச்சயம் தேவை தான். தான் வாங்கிய   பொருள் வாங்கிய விதம் அதன் சிறப்பு எல்லாமே எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொது இடங்களில் பெரும்பாலும் அவர்களுடைய பேச்சு இதை பற்றியதாகதான் இருக்கும்.

மற்றவர்  அபிப்பிராயம்தான் இவர்களுடைய அனுபவம். அந்த அனுபவம் வருங்கால ஷாப்பிங்கில் பயன்படும். விலை வித்தியாசம்.... தான் வாங்கிய பொருள் மற்றவர்கள் வாங்கிய பொருளைவிட விலை கூடுதலாக இருந்தால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். பொருளின் தரம் கண்ணில் படாது.

விலை வித்தியாசம் மட்டுமே மனதை உறுத்தம். இதற்காக சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் போய் சண்டை போடவும் தயங்க மாட்டார்கள். விலை வித்தியாசம் அவர்களின் ஷாப்பிங் சந்தோஷத்தை குலைத்து விடும. இதை புரிந்து கொண்டு சிலர் வேண்டுமென்றே விலையை வித்தியாசப்படுத்தி கூறி மற்றவரை எரிச்சல் படுத்துவார்கள்.

சரியான தேர்வு :

தான் தேர்வு செய்திருக்கும் பொருள் சரியானது தானா? தனக்கு பொருத்தமானதுதானா? என்று நெருங்கிய தோழியின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ள விரும்புவார்கள். தனக்கு பிடித்தமான பொருளாக இருந்தாலும் குறை நிறைகளை பார்த்து சொல்ல ஒருவர் அருகில் இருப்பது இவர்களின் ஷாப்பிங் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

அதனால் பெண்கள் எப்போதும் ஒருவரை (கணவரையல்ல) தன்னோடு அழைத்து கொண்டு போக விரும்புவார்கள். இந்த நிறம் உனக்கு மிகவும் அழகாக இருக்கிறது என்று சொன்ன மாத்திரத்தில் விலை, தரம், எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இல்லாவிட்டால் கடைசிவரை நான் தேர்வு செய்தது சரியா தவறா என்றே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

விளம்பரம் :

பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களை மையப்படுத்தியே வெளிவருகின்றன. கவனிப்பது பெணகள் தானே, விளம்பரங்களால் பெரிதும் கவரப்படுவது பெண்களே என்ற முடிவுக்கு விளம்பரதாரர்கள் வந்ததால் தான் பெண்கள் எல்லா விளம்பரங்களிலும் இடம் பெறுகிறார்கள்.

விளம்பரத்தை பின் தொடர்நது போய் பொருட்களை கேட்டு வாங்குவதில் பெண்களே அதிகம். விளம்பரத்தில் வரும் விஷயங்களை உண்மை என்று நம்புபவர்களிலும் பெண்கள் தான் அதிகம்.

ஆன்லைன் ஷாப்பிங் :

இதுவும் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே வருகிறது. இதில் வாங்கும் பொருட்கள்பெரும்பாலும் நாம் பார்ப்பது போல இருப்பதில்லை. நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக வந்துவிட்டால் அதை மாற்றுவதும் கஷ்டம். பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் மனது பெண்களுக்கு இருப்பதால் மற்ற விஷயங்களை பற்றி யோசிப்பதில்லை.

ஏமாந்து போனால் வெளியே சொல்வதும் இல்லை. புதிய ரகம்... புதிய ரகம், புதுமையான விஷயம் என்றால் அது முதலில் நம்மிடமிருக்க பேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள். சுற்றியிருக்கும் எல்லோரும் தன்னை புதுமையாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். புதிய விஷயம் தனக்கு தேவைப்படுமா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

தான் ஒரு புதுமைப்பெண் என்பதை எந்த விதத்திலாவது மற்றவர்களுக்கு நிரூபிக்க புதிய ரகங்கள் பெரிதும் விரும்பி வாங்குவது பெண்களே.

ஷாப்பிங் :
ஆண்களுக்கான ஷாப்பிங்கையும் சேர்த்து பெண்களே செய்ய விரும்புவார்கள். வீட்டையும், குடும்பத்தையும் நான்தான் நிர்வாகம் செய்கிறோம் என்பதில் பெண்களுக்கு நிறைய பெருமை உண்டு. அந்த பெருமைக்கு துணை நிற்பது இந்த ஷாப்பிங். ஷாப்பிங் செய்வதை பெரிய வேலையாக நினைக்கும் ஆண்களுக்கு ஷாப்பிங் திறமையுள்ள பெண்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.

நடந்து... நடந்து... உடல் நலம் காப்போம்!

உணவுப்பழக்கத்தில் எல்லோருக்கும் கவனம் எடுத்துக் கொள்கிறோம். அது போல உடற்பயிற்சியிலும் கவனம் எடுத்துக் கொள்ளுதல் அவசியம். நகரத்து மக்கள் மத்தியில் உடற்பயிற்சி பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீன, நெதர்லாண்ட் மற்றும் மேற்கத்திய நாடுகளில் அலுவலக வேலைக்கு செல்பவர்கள் பலர், வசதியான வாகனம் இருந்தும் நடந்து செல்வத்யோ அல்லது சைக்கிளில் செல்வதையோ பழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடைப்பயிற்சி என்பது உடற்பயிற்சிகளில் சிறந்தது தேவையான ஒரு பயிற்சியுமாக இருக்கிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்ற பயிற்சியாகும். தினமும் நடை பயிற்சி செய்துவந்தால், உடலில் ரத்த ஓட்டம் சீராகிறது. நுரையீரல் சுவாசம் புத்துணர்ச்சியாக்குகிறது. பிறரிடத்தில் மென்மையாக பழகும் குணத்தை வளர்க்கிறது. நடைபயிற்சி என்பது பொதுவாக தினமும் விரைவான எட்டுக்களை வைத்து 6 கி.மீ., வரை செல்வதாகவும். நான்கு மணி நேரம் நீந்துவதும் நான்கு மணி நேரம் டென்னிஸ் விளையாடுவதும் இதற்கு சமமானதே.

அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிப்பவர்கள், லிப்டை பயன்படுத்தாமல் ஒவ்வொரு முறையும் படிகளைப் பயன்படுத்தி ஏறி இறங்குவதாலும், வீட்டைச் சுத்தப்படுத்துதல், விளையாட்டு மைதானத்தில் சிறு குழந்தைகளுடன் விளையாடுவதாலும் நடை பயிற்சியின் தேவையை சற்று சமன் செய்துக்கொள்ளலாம். நடைபயிற்சி உடலுக்கு ஆரோக்கியம் தருவதோடு பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கச் செய்கிறது. நடைப்பயிற்சியின் போது உடலில் உள்ள எல்லா தசைத் தொகுதிகளும் இயங்குவதால், உடலுக்கு அதிகமான ஆக்சிஜன் கிடைகிறது. இதனால், மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். ரத்த சுழற்சி உடலின் எல்லா பாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.

நாள்தோறும் நடைப்பயிற்சி செய்வதால், உடலில் தேவைக்கதிகமான எடை குறைகிறது. இப்பயிற்சி உடலிலுள்ள மூட்டுகளை பலப்படுத்துகிறது. இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கத்தை சீராக்குகிறது, நாள்தோறும் நடைப்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொண்டவர்கள், அன்றாடம் செய்யும் வேலைகளை சோர்வின்றி செய்ய வழிவகுக்கிறது. குறிப்பாக முதுமையடந்தவர்கள் கூட ஆரோக்கியமாக தங்களின் இயல்பான வேலைகளை செய்து கொள்ளும் திறமையை வளர்த்துவிடுகிறது.

அலுவலகம், வேலை, உறக்கம், மீண்டும் அலுவலகம், வேலை உறக்கம் என்று கரம் போல தினசரி வாழ்கையை அமைத்துக் கொள்பவர்களுக்கு, உடற்பயிற்சி என்பது மறந்தே போய்விட்டது. சில கனமான பொருட்களை இடம் மாற்ற வேண்டுமெனில் பிறர் உதவியை நாடுபவர்களாகி விடுகிறார்கள். எனவே, நடைப்பயிற்சியை மேற்கொள்வோம்! ஆரோக்கியம் காப்போம்.

நோய்களை தீர்க்கும் சின்ன வெங்காயம்


 சின்ன வெங்காயம் க்கான பட முடிவு
பெயர் சின்ன வெங்காயம் என்று இருந்தாலும், பெரிய நோய்களை தீர்க்கும் அரிய மருத்துவ குணம் சின்ன வெங்காயத்தில் உள்ளது. 50க்கும் மேற்பட்ட நோய்களை போக்கும் சஞ்சீவியாக சின்ன வெங்காயம் பலன் தருகிறது. வெங்காயத்துடன் வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில் விட்டால் காது இரைச்சல் மறையும்.

வெங்காய நெடி தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட்டால் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும். வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்து கட்டினால், கட்டிகள் உடனே பழுத்து உடையும். வெங்காய சாற்றை மோரில் கலந்து குடித்தால், இருமல் குறையும். வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச்சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவி வந்தால்
பல்வலி, ஈறுவலி குறையும்.

வெங்காயத்தை சமைத்து சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் உடல் வெப்பநிலை சமநிலை பெறும், மூலச்சூடு தணியும். வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டால், நரம்புத் தளர்ச்சி குணமாகும். வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்ட பின், பசும் பால் குடித்தால் ஆண்மை பெருகும். வெங்காயச் சாற்றையும், தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும், குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால், சீதபேதி நிற்கும். வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.

வெங்காயத்தில் குறைந்த கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயம் சாப்பிடலாம். வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும். தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் 3 வேளை சாப்பிட்டால் நுரையீரல் சுத்தமாகும்.
வாயு காரணமாக மூட்டுக்களில் ஏற்படும் வலிக்கு, வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய்யை கலந்து தடவினால், வலி நீங்கும். நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி கடித்தால் மாலைக்கண் நோய் சரியாகும். வெங்காயத்தை அரைத்து தொண்டையில் பற்றுப்போட்டால் தொண்டை வலி குறையும். பாம்பு கடிக்கு, நிறைய வெங்காயம் தின்றால் விஷம் இறங்கும். வெங்காய சாற்றை தண்ணீரில் கலந்து பருகினால் சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.

வெங்காயம், சோடா உப்பு இரண்டையும் சேர்த்து, அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவினால், நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை கலந்து குடித்தால் மூலநோய் குணமாகும். சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம். தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து, வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இருதுண்டாக நறுக்கி தேய்த்த்தால் முடி வளரும்.

காக்காய் வலிப்பு நோய் உள்ளவர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு குடித்து வந்தால் வலிப்பு குறையும். வெங்காயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் டி.பி.நோய் குறையும். வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் வாதநோய் குறையும்.

தூக்கமின்மை மூளை சார்ந்த பாதிப்பு



எந்த சந்தேகமும் வேண்டாம். தூக்கமின்மை மூளை  சார்ந்த நோய் தான். ஐந்து பேரில் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காவிட்டால் எரிச்சல், சரியான அளவு திறனை வெளிப்படுத்தாமையுடன், வேலைத்திறன் குறைவதோடு, விபத்துகளுக்கும் வழிவகுக்கும்.

தூக்கமின்மையால், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் வரவும், வாய்ப்புகள் அதிகம். தூங்கமுடியாத பட்சத்தில், காபி, டீ, மது பானங்களை, அறவே தவிர்க்க வேண்டும். துங்குவதற்கு, நான்கு மணி நேரத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.

படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் இருப்பது அவசியம். படுக்கை அறையில், 'டிவி' பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் ஆறு மணி முதல் எட்டு மணி வரை கட்டாயம் தூங்க வேண்டும்.

எது அசல் தேன்?


அசல் தேன் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் நல்ல நிலையில் அப்படியே இருக்கும். ஆனால் சிலர் சர்க்கரைப் பாகு அல்லது வெள்ளப் பாகுவை தேன் என்று விற்று விடுகின்றனர். நாமும் அதை அசல் தேன் என்று நம்பி விடுகின்றோம்.

அசல் தேன், கலப்பட தேன் எது? என்பதை எளிமையான முறையில் மூன்று வழிகளில் கண்டறியலாம்.

1) ஒரு வெள்ளைத் தாளில் ஒரு துளி தேனை விடுங்கள்.அந்த தேனை தேன் ஊற்றப்பட்ட காகிதம் உறிஞ்சாமலும், மேலும் அந்த வெள்ளைத் தாளில் பரவாமலும் இருந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

அல்லது அந்த வெள்ளைத் தாள் ஒரு துளி தேனை உறிஞ்சிவிட்டாலோ, பரவ விட்டாலோ அந்த தேன் கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

2) ஒரு டம்ளர் நிறைய தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஒரு துளி தேனை விடுங்கள். அந்த ஒரு துளி தேன் தண்ணீரில் கரையாமல், நேராக கீழே சென்று விழுந்தால் அது அசல் தேன்.
ஒரு வேலை அந்த ஒரு துளி தேன் தண்ணீரோடு கலந்து விட்டால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு தீக்குச்சியின் மருந்துப் பகுதியில், ஒரு துளி தேனை விட்டு, தீப்பெட்டியின் பக்க வாட்டில் உள்ள மருந்துப் பட்டையில் உரசுங்கள், உடனே தீப்பற்றி எறிந்தால், அது அசல் தேன் என்பதை கண்டறியலாம்.

ஒரு வேலை அந்த தீக்குச்சி எரியாமல் போனால் அது கலப்பட தேன் என்பதை கண்டறியலாம்.

மூளையை ஏன் பாதுகாக்க வேண்டும்? மூளையை பாதுகாப்பது எப்படி?



பல்வேறு நோய்களால் மூளை பாதிக்கப்படும் போது, நமது உடலில் நிரந்தர ஊனம் ஏற்படுகிறது. அப்படியானால் வேலை செய்ய முடியாது. குடும்பத்தில் வறுமை, நிதி நெருக்கடி, மற்றவர்களை சார்ந்திருத்தல் போன்று சமூக பொருளாதார பிரச்சனைகள் எழுகின்றன. எனவே, நிரந்தர ஊனத்தை தவிர்க்க, முறையான மூளை பாதுகாப்பு அவசியம்.

மூளையை பாதுகாத்தல்: அன்றாட உணவில், காய்கறி, பழங்கள் அடங்கிய ஆரோக்கியமான உணவு சாப்பிடுதல் அன்றாட உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் தவிர்த்தல், புகை புகையிலை போதை மருந்து, மது வகைகளை தவிர்த்தல் ஆகியவை, மூளை பாதிப்பு வராமல் தடுக்கும்.

தலை சுற்றல், மயக்கம் வந்தால் முறையான மருத்துவ ஆலோசனை பெறுதலும், மூளையை பாதுகாக்க உதவும்.