Pages

Showing posts with label ஷாப்பிங். Show all posts
Showing posts with label ஷாப்பிங். Show all posts

Friday, October 7, 2016

ஷாப்பிங்: பெண்கள் கில்லாடிகளா? ஏமாளிகளா?


பெண்களுக்கு ஷாப்பிங் போவதைப் போன்ற மகிழ்ச்சியான விஷயம் வேற எதுவும் இருந்துவிட முடியாது. தங்களுக்குத் தேவையான விஷயத்தை நேரடியாகத் தொட்டு உணர்ந்து தேர்வு செய்து வாங்குவதையே பெரிய மகிழ்ச்சியாக பெண்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் பெரும்பாலான பெண்கள் ஷாப்பிங் செய்ய ஆண்களைத் துணைக்கு அழைப்பதில்லை. காரணம் ஆண்கள் அவசரக்காரர்கள். எதையும் பொறுமையாக தேர்வு செய்ய அவர்கள் அனுமதிப்பதில்லை என்பது பெண்களின் குற்றச்சாட்டு. பெரும்பாலான பெண்கள் தங்கள் தோழிகளை அல்லது சகோதரிகளைத்தான் ஷாப்பிங் செல்லத் துணையாக அழைத்துச் செல்கிறார்கள். எனக்கு தலைக்க மேல் வேலை இருக்கிறது.

யாரும் என்னை கூப்பிடாதீர்கள் என்று கறாராகப் பேசும் பெண்கள் கூட ஷாப்பிங் என்றதும் துள்ளிக் குதித்துத் தயாராகி விடுகிறார்கள். அவர்களுடைய மனநிலை அப்படிப்பட்டது. ஷாப்பிங் போவது மட்டுமல்ல மற்றவர் வாங்குவதைப் பார்ப்பதும் கூட பெண்களுக்கு மகிழ்ச்சிதான். இது அவர்களின் பிறவிலேயே ஏற்பட்ட குணம்.

பெண்கள் எப்போதும் எதையாவது வாங்குவதில் பிரியமுடையவர்கள். அவர்களை சமாதானப்படுத்த வேண்டுமானால் கடைக்குத்தான் அழைத்துப்போக வேண்டும். மற்றவர்கள் வாங்கும் போது நமக்கு கிடைக்கும் அனுபவம் அலாதியானது. இந்த அனுபவம் தனக்கும் பயன்படும் என்ற வகையில் கடைகடையாக ஏறி இறங்க பெண்கள் தயங்க மாட்டார்கள்.

கடைத்தெரு அனுபவங்களை மற்றவர்களோடு பகிர்ந்துக் கொள்வதிலும் பெண்களுக்கு அலாதி பிரியம். கையில் இருக்கும் பணத்துக்கு என்ன வாங்குவது என்றுதான் எப்போதும் கணக்குப்போடுவார்கள். இந்த கணக்கை தெளிவாகப் புரிந்துகொண்டு தான் வியாபாரிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பெண்களும் ஷாப்பிங்கும் என்ற தலைப்பில் சமீபத்தில் லண்டனில் நடந்த ஒரு கருத்தரங்கு பெண்கள் ஷாப்பிங் பிரியர்கள் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. அந்த கருத்தரங்களில் வெளியான சில சுவாரசியமான விஷயங்கள்.....

தள்ளுபடி :

இந்த தள்ளுபடி, இலவசம், ஆபர் இவற்றையெல்லாம் தெரிந்து கொள்வதில் பெண்களுக்கு இருக்கும் ஆர்வம் வேறு யாருக்கும் இருந்துவிட முடியாது. தள்ளுபடியின் பின்னே மறைமுகமாக என்னவெல்லாம் விஷயங்கள் இருக்கின்றன என்று யோசிக்காமல் பெண்கள் கடைக்கு ஒடுவார்கள். அதே போல் ஸ்டாக் கிளியரன்ஸ் என்று வந்துவிட்டால் அங்கே குவிவது பெண்கள் மட்டுமே.

சமீபத்தில் லண்டன், ஆஸ்திரேலியா என்று பல நாடுகளில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு ஒட்டி போடப்பட்ட ஸ்டாக் கிளியரண்ஸ் விற்பனையில் எழுபந்தைந்து சதவீதம் பெண்கள் மட்டுமே ஆக்கிரமித்திருக்கிறார்கள். குறைந்த விலையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் குவித்து கணவருக்கு சேவை செய்யும் பெரிய தியாகத்தை உலக அளவில் பெண்கள் மட்டுமே அதிகமாக செய்கிறார்கள்.

தள்ளுபடியில் வாங்கும் பொருட்கள் பின்னால் செல்லுபடியாகுமா என்பதை பற்றியெல்லம் அவர்கள் கவலைப்படுவதில்லை. பெண்களின் ஒட்டுமொத்த மேதாவித்தனத்தை வியாபாரிகள் புரிந்து கொண்டு பிழைப்பை நடத்துகிறார்கள்.

பேரம் - வியாபராம் :

எந்தப்பொருளானாலும் பேரம் பேசி பத்து ரூபாயாவது குறைத்து வாங்கினால் தான் பெண்களுக்கு மகிழ்ச்சி. இதற்காக எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செலவிடத் தயாராக இருக்கிறார்கள். கடைக்காரர்களும் இவர்களுக்கு ஏற்றாற்போல் ஏற்ற இறக்கி காட்டி குறைத்து வியாபாரத்தை சாமர்த்தியமாக முடித்துக் கொள்வார்கள்.

பேரம் இல்லாத வியாபாரம் பெண்களுக்கு ஆகாது. பணம் - மிச்சம்..... தன்னுடைய ஷாப்பிங்க சாமர்த்தியத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் ஓர் அலதியான சுகம் பெண்களுக்கு. குறைந்த விலையில் வாங்கி பணத்தை மிச்சம் பிடித்த சாமர்த்தியத்தை எல்லோரிடமும் பகிர்ந்த கொள்ள வேண்டும்.

மற்றவர்கள் பாராட்டு தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும். இது ஷாப்பிங் செய்ததால் வந்த பாராட்டு, மற்றவர்கள் தன்னை பார்த்து கற்றுகொள்ள வேண்டும். தன்னை பின்பற்ற வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கிறார்கள். தேவையான பொருட்களை மிகக் குறைந்த விலையில் வாங்குவது தான் இவர்களுடைய சாமர்த்தியம்.

மற்றவர் அபிப்பிராயம் :

தான் வாங்கிய பொருட்களை பற்றி மற்றவர்கள் நல்ல அபிப்பிராயம் பெண்களுக்கு நிச்சயம் தேவை தான். தான் வாங்கிய   பொருள் வாங்கிய விதம் அதன் சிறப்பு எல்லாமே எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். பொது இடங்களில் பெரும்பாலும் அவர்களுடைய பேச்சு இதை பற்றியதாகதான் இருக்கும்.

மற்றவர்  அபிப்பிராயம்தான் இவர்களுடைய அனுபவம். அந்த அனுபவம் வருங்கால ஷாப்பிங்கில் பயன்படும். விலை வித்தியாசம்.... தான் வாங்கிய பொருள் மற்றவர்கள் வாங்கிய பொருளைவிட விலை கூடுதலாக இருந்தால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவார்கள். பொருளின் தரம் கண்ணில் படாது.

விலை வித்தியாசம் மட்டுமே மனதை உறுத்தம். இதற்காக சம்பந்தப்பட்ட கடைக்காரரிடம் போய் சண்டை போடவும் தயங்க மாட்டார்கள். விலை வித்தியாசம் அவர்களின் ஷாப்பிங் சந்தோஷத்தை குலைத்து விடும. இதை புரிந்து கொண்டு சிலர் வேண்டுமென்றே விலையை வித்தியாசப்படுத்தி கூறி மற்றவரை எரிச்சல் படுத்துவார்கள்.

சரியான தேர்வு :

தான் தேர்வு செய்திருக்கும் பொருள் சரியானது தானா? தனக்கு பொருத்தமானதுதானா? என்று நெருங்கிய தோழியின் அபிப்பிராயத்தை தெரிந்து கொள்ள விரும்புவார்கள். தனக்கு பிடித்தமான பொருளாக இருந்தாலும் குறை நிறைகளை பார்த்து சொல்ல ஒருவர் அருகில் இருப்பது இவர்களின் ஷாப்பிங் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

அதனால் பெண்கள் எப்போதும் ஒருவரை (கணவரையல்ல) தன்னோடு அழைத்து கொண்டு போக விரும்புவார்கள். இந்த நிறம் உனக்கு மிகவும் அழகாக இருக்கிறது என்று சொன்ன மாத்திரத்தில் விலை, தரம், எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இல்லாவிட்டால் கடைசிவரை நான் தேர்வு செய்தது சரியா தவறா என்றே சிந்தித்துக்கொண்டிருப்பார்கள்.

விளம்பரம் :

பெரும்பாலான விளம்பரங்கள் பெண்களை மையப்படுத்தியே வெளிவருகின்றன. கவனிப்பது பெணகள் தானே, விளம்பரங்களால் பெரிதும் கவரப்படுவது பெண்களே என்ற முடிவுக்கு விளம்பரதாரர்கள் வந்ததால் தான் பெண்கள் எல்லா விளம்பரங்களிலும் இடம் பெறுகிறார்கள்.

விளம்பரத்தை பின் தொடர்நது போய் பொருட்களை கேட்டு வாங்குவதில் பெண்களே அதிகம். விளம்பரத்தில் வரும் விஷயங்களை உண்மை என்று நம்புபவர்களிலும் பெண்கள் தான் அதிகம்.

ஆன்லைன் ஷாப்பிங் :

இதுவும் பெரும்பாலும் பெண்களை மையப்படுத்தியே வருகிறது. இதில் வாங்கும் பொருட்கள்பெரும்பாலும் நாம் பார்ப்பது போல இருப்பதில்லை. நாம் எதிர்பார்த்ததற்கு மாறாக வந்துவிட்டால் அதை மாற்றுவதும் கஷ்டம். பார்த்தவுடன் வாங்கத் தூண்டும் மனது பெண்களுக்கு இருப்பதால் மற்ற விஷயங்களை பற்றி யோசிப்பதில்லை.

ஏமாந்து போனால் வெளியே சொல்வதும் இல்லை. புதிய ரகம்... புதிய ரகம், புதுமையான விஷயம் என்றால் அது முதலில் நம்மிடமிருக்க பேண்டும் என்று பெண்கள் நினைப்பார்கள். சுற்றியிருக்கும் எல்லோரும் தன்னை புதுமையாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். புதிய விஷயம் தனக்கு தேவைப்படுமா என்பதெல்லாம் இரண்டாம்பட்சம் தான்.

தான் ஒரு புதுமைப்பெண் என்பதை எந்த விதத்திலாவது மற்றவர்களுக்கு நிரூபிக்க புதிய ரகங்கள் பெரிதும் விரும்பி வாங்குவது பெண்களே.

ஷாப்பிங் :
ஆண்களுக்கான ஷாப்பிங்கையும் சேர்த்து பெண்களே செய்ய விரும்புவார்கள். வீட்டையும், குடும்பத்தையும் நான்தான் நிர்வாகம் செய்கிறோம் என்பதில் பெண்களுக்கு நிறைய பெருமை உண்டு. அந்த பெருமைக்கு துணை நிற்பது இந்த ஷாப்பிங். ஷாப்பிங் செய்வதை பெரிய வேலையாக நினைக்கும் ஆண்களுக்கு ஷாப்பிங் திறமையுள்ள பெண்கள் ஒரு வரப்பிரசாதம் தான்.