எந்த சந்தேகமும் வேண்டாம். தூக்கமின்மை மூளை சார்ந்த நோய் தான். ஐந்து பேரில் ஒருவர் தூக்கமின்மையால் அவதிப்படுகின்றனர். சரியாக தூங்காவிட்டால் எரிச்சல், சரியான அளவு திறனை வெளிப்படுத்தாமையுடன், வேலைத்திறன் குறைவதோடு, விபத்துகளுக்கும் வழிவகுக்கும்.
தூக்கமின்மையால், இதய நோய், பக்கவாதம் போன்ற வியாதிகள் வரவும், வாய்ப்புகள் அதிகம். தூங்கமுடியாத பட்சத்தில், காபி, டீ, மது பானங்களை, அறவே தவிர்க்க வேண்டும். துங்குவதற்கு, நான்கு மணி நேரத்திற்கு முன், உடற்பயிற்சி செய்வதை தவிர்க்க வேண்டும்.
படுக்கை அறை அமைதியான சூழ்நிலையில் இருப்பது அவசியம். படுக்கை அறையில், 'டிவி' பார்ப்பதை தவிர்க்க வேண்டும். தினமும் ஆறு மணி முதல் எட்டு மணி வரை கட்டாயம் தூங்க வேண்டும்.