Pages

Thursday, October 13, 2016

கண் நோய்களுக்கு உணவும் காரணம்

உடலில் உள்ள நோய் ஏற்ப்பட்டால் அது எப்படி கண்ணைப் பாதிக்கிறதோ அவ்வாறே கண்ணில் ஒரு நோய் தொற்றினால் அது உடலையும் பாதிக்கிறது. கண்ணில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சாதாரணமாக ஏற்படுவதில்லை. உடலில் ஸ்டார்ச், ப்ரோட்டீன், சர்க்கரை ஆகியவைகளின் அளவு கூடும் பொழுது கண் எரிச்சல் போன்ற நோய் ஏற்படுகிறது. மேலும் அதிகரிக்கும் பொழுது கண்ணில் நீர் வழிதல், புரை வளர்தல், போன்றவை ஏற்படும். அதன் முற்றிய நிலையில் கண் குருடாகி விடும்.

சரியான அளவில், சத்தான உணவு அமையாவிடில் கண் சம்பந்தமான கோளாறுகளும் ஏற்படுகின்றன. கண்ணின் அமைப்பையும் வேலை முறையையும் பாதிக்கும். சரியான முறையில் ஒழுங்குபடுத்தப்படாத உணவு, ரத்த ஓட்டத்தில் தடையை ஏற்படுத்தி, ரத்த நாளங்களையும் பாதிக்கிறது. எனவே உணவு சரியான விகிதத்தில் அமையாவிடின் அது வயிற்றை மட்டும் தான் பாதிக்கும். வயிற்றுக் கோளாறுகள் மட்டுமே ஏற்படும் என்பது தவறு. உணவு முறை சரியில்லாவிடில் உடல் முழுவதையும் பாதிக்கும். உடல் பாதிக்கப்படும் பொழுது உடலில் ஓர் உறுப்பான கண் பார்வையும் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ரத்த நாளங்களும், தசைகளும் பழுதடைந்தால் ரத்த ஓட்டம் சரியாக நடை பெறாது. மென்மையாக இருக்க வேண்டிய தசைகள் இறுகி கடினத்தன்மையை பாதித்து விடும். கண்ணின் உருவத்தில் மாறுதல் ஏற்பட்டால் அது பார்வைக் குறையை ஏற்படுத்தி விடும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை உணவு முறையில் ஏற்பட்ட முரண்பாடுகளால்தான் ஏற்படுகிறது. முதுமைப் பருவத்தில் ஏற்படும் பார்வைக் குறைபாடும் இதே காரணத்தால் தான் ஏற்படுகிறது. மனிதர்கள் முதுமை காலத்தில் வயது முதிர்வதால் இயற்கையிலேயே உருவத்தில் மாறுதல் அடைகின்றன. அதனால் தான் தூரப்பார்வை, கிட்டப்பார்வை ஆகியவை ஏற்படுகிறது. என்ற கருத்து மக்களிடத்தில் உள்ளது.

சுமார் 40 வயதிற்குப்பின் உடலில் முதிர்ச்சி ஏற்பட்டு தோல் சுருக்கம் ஏற்படுகிறது. கண்ணிலேயும் சுருக்கம் ஏற்படவே செய்யும். அருகிலுள்ள பொருள்களைக் கூட சரியாக பார்க்க முடியாது. எனவே கண்ணாடி தவிர வேறு வழியில்லை என்று மக்கள் முடிவெடுத்து விடுகிறார்கள். கடந்த 50 ஆண்டுகளாக நாம் நமது உணவு முறையை ஒழுங்குபடுத்திக்கொள்ள தவறிவிட்டோம். இதனாலேயே பார்வை குறைவு ஏற்பட்டது என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.

உணவு முறையில் ஏற்பட்ட மாற்றம் நஞ்சாகிப்போன உணவு, ஸ்டார்ச், குளுகோஸ் ஆகியவைகள் அதிகரித்த உணவால் தான், இன்று 40 வயதைக் கடந்தவர்களுக்கு தூரப்பார்வை குறைபாடு ஏற்படக் காரணம். இவர்கள் தங்கள் உணவு முறையை சரி செய்து கொண்டு எளிமையான சில பயிற்சிகளை மேற்கொண்டால், பார்வைக் குறைவை சரிப்படுத்திக் கொள்ள முடியும்.

No comments: