Pages

Saturday, July 26, 2014

முந்திரி பழம் சாப்பிட்டால் நல்லது


முந்திரி பழம் சாப்பிட்டால் நல்லது.

முந்திரி பருப்புகளை விரும்பி சாப்பிடும் அளவுக்கு, முந்திரி பழத்தை சாப்பிடுவது குறைவு. ஏனெனில் பழத்தில் உள்ள டானின் எனு பொருளே காரணம். இதனால் பழம் சாப்பிடும் பொது தொண்டையில் கரகரப்பு தன்மை ஏற்படுகிறது.

இதனை போக்க பழத்தை நீராவியில் பத்து நிமிடம் வேக வைத்தோ, உப்பு நீரில் ஊற வைத்தோ சாப்பிடலாம். மா, பலா, ஆரஞ்சு போன்று அதிக சத்துகள் நிறைந்தது முந்திரி பழம்.

முக்கியமாக விட்டமின் 'சி' ஆரஞ்சு பழத்தை விட, முந்திரி பழத்தில் ஐந்து மடங்கு அதிகம் உள்ளது. விட்டமின் 'சி' மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது. 

ஈறுகளில் ஏற்படும் ரத்த கசிவு நோயை குணமாக்குகிறது. பற்கள், நகங்களை உருதிப்பதுகின்றது. ஸ்கர்வி என்ற விட்டமின் 'சி' குறைபாடு நோயை குணமாக்குகின்றது.

Thursday, July 24, 2014

குழந்தைக்கு மலச்சிக்கலா?

காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன் நல்ல அக்மார்க் தேனை  ஒரு சொட்டு நாக்கில் தடவவும். தேன்உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த ஓர் அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால் குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். ஆனால் தேன் தடவுவதால் நாக்கு புரண்டு சீக்கிரம் பேச்சு வரும்.

தினமும் இரவில் விளக்கேற்றியவுடன் சுட்ட வசம்பைக் கல்லில் உரைத்து குழந்தைக்கு ஒரு சங்கு குடிக்கக் கொடுத்து, சிறிது தொப்புளைச் சுற்றி தடவுங்கள். பின் ஒரு வெற்றிலையில் எண்ணெய் தடவி அதை விளக்கில் வாட்டி, பொறுக்கும் சூட்டில் அந்த இலையை குழந்தயின் தொப்புள் மேல் போட்டால் அசுத்த காற்றெல்லாம் வெளியேறி, வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கும்.

நாட்டுமருந்து கடையில் மாசிக்காய் என்று கிடைக்கும். அதை வாங்கி சாதம் வேகும் போது, அதோடு போட்டு எடுத்து உலர்த்தி வைத்துகொள்ளவும். குழந்தையை குளிப்பட்டும் போது, நாக்கில் தடவி வழித்தால் நாக்கில் உள்ள மாவு அகன்று குழந்தை ருசித்துப் பால் சாப்பிடும்.

சில  குழந்தைகள் அடிக்கடி வாந்தி எடுக்கும். அதற்கு வேப்பார்க்குத்துளி, அரை மிளகு ஒரு சீரகம், ஒரு ஸ்பூன் ஓமம், ஒரு பல் பூண்டு இவற்றை அம்மியில் தட்டி துளி வெந்நீர் விட்டுப் பிழிந்து வட்டிக்கட்டி ஊற்றினால் வாந்தி சற்றென்று நின்று விடும். குழந்தை அடிக்கடி வெளிக்குப் போனால், சுட்ட வசம்பை இரண்டு உரை உரைத்து ஊற்றினால் நின்று விடும்.

குழந்தை தினமும் இரண்டு மூன்று முறை மலங்கழிக்க வேண்டும். இல்லாமல் கஷ்டப்பட்டால், முதலில் ஒரு பாலாடை வெந்நீர் புகட்டிப் பார்க்கவும். அப்படியும் போகவில்லை என்றால் ஐந்தாறு விதையில்ல உலர்ந்த திராட்சைகளை வெந்நீரில் ஊறப்போட்டு ககிப் புகட்டினால் ஒரு மணி நேரத்தில் போய்விடும். மலங்கட்டி அவஸ்தைப்பட்டால் விளக்கெண்ணையோ, வேறு மருந்துகளோ தர வேண்டாம். 

பொடுகு பிரச்சனையா... போக்க இதோ வழிகள்!


பொடுகு என்பது என்ன? தலையின் மேற்புற தோலில் உள்ள இறந்து போன உயிரணுக்கள் மொத்த மொத்தமாக செதில் செதிலாக உதிரும். இதை தான் பொடுகு என்கிறோம். 

பொடுகு வர காரணம் என்ன? 
வறட்சியான சருமம், அவசரமாக தலைக்கு குளித்து, நன்றாக துவட்டாமல் இருப்பது, எண்ணெய் பசை மிகுந்த தலையுடன் இருப்பது, அழுக்கு தலையுடன் இருப்பது, தலையில் வியர்வை உருவாவது போன்றவை பொடுகு வர முக்கியக் காரணங்கள். பிடி ரோஸ்போரம் ஓவல் என்ற நுண்ணுயிர் கிருமியினாலும் பொடுகு வரலாம். சொரியாசிஸ் என்ற தோல் வியாதியும், பொடுகு வர காரணமாகும். அதிகளவில் ஷாம்பூ பயன்படுத்துவது, மன அழுத்தம், கவலை போன்றவையும் பொடுகு வரக் காரணங்கள்.

எதெல்லாம் கூடாது?
 
ஒருவர் பயன்படுத்திய சீப்பு, தலையணை, துண்டை அடுத்தவர் பயன்படுத்தக் கூடாது. தலையை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். உணவில் கொழுப்பு சத்துள்ள நெய், பால், வெண்ணெய் போன்ற உணவுகளை சேர்க்க வேண்டும். இதனால் தோலுக்கு தேவையான எண்ணெய் பசை கிடைக்கும்.
எப்படி தவிர்க்கலாம்?

தலையில் புண், வெட்டுக்காயம் இல்லாமல் இருந்தால், செலெனியம் சல்பைடு அல்லது ஜிங்க் பைரிதியோன் என்ற மருந்துள்ள ஷாம்பூவை பயன்படுத்தி தலையை சுத்தம் செய்யலாம். salaisilik அமிலம், சல்பர் கலந்த ஷாம்பூவை பயன்படுத்தலாம். பிடிரோஸ்போரம் ஓவல் என்ற நுண்ணுயிர் கிருமி மூலம் பரவுவதை தடுக்க மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம். சின்ன வெங்காயத்தை, அரைத்து தலையில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு குறையும். பாலுடன் மிளகு பவுடரை சேர்த்து சேர்த்து தலையில் தேய்த்து, 15 நிமிஷம் கழித்து குளிக்கலாம். தலையில் தயிர் தேய்த்தும் குளிக்கலாம்.

வாரம் ஒரு முறை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கலாம். பசலை கீரையை அரைத்து தலையில் தேய்த்து குளிப்பது, வெந்தய பவுடரை தலையில் தேய்த்து குளிப்பது பொடுகு தொல்லையை குறைக்கும். உடல் உஷ்ணம் குறையும். அருகம்புல் சாறு எடுத்து தேங்காய் எண்ணையுடன்  சேர்த்து நன்றாக காய்ச்சி, பின் ஆற வைத்து, தினசரி தலையில் தேய்த்து குளிப்பது பொடுகு தொல்லையை குறைக்கும்.

வேப்பில்லைச் சாறு, துளசி சாறு கலந்து தலையில் தேய்ப்பது, வசம்பு பவுடரை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்ப்பது, குளித்த பின் தலையை துவட்டாமல் கொஞ்சம் வினிகரை தண்ணீரில் கலந்து குளித்து, பின் துவட்டுவது, மருதாணி இலையை அரைத்து, அதனுடன் கொஞ்சம் தயிர், எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்ப்பது, தேங்காய் எண்ணெயுடன், வெப்ப எண்ணெயை காய்ச்சி தலையில் தேய்ப்பது என, பொடுகு தொல்லையை நீக்க பல வழிகள் உண்டு. 

ரத்த விருத்திக்கு உற்ற துணை உணவுகள்


இயற்கை உணவுகள் மூலம் ரத்தத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதும், உடலில் த்தவிருத்திக்கு எளிதாகிறது.  
 
ரத்தத்திற்கு உற்ற துணை உணவுகள்.
-----நாவல் பலத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலுக்கு அதிக பலத்தைக் கொடுப்பதுடன், உடலில் ரத்தம் ஊறவும் உதவி செய்யும். 
 
-----பேரீச்சம் பலத்தை மூன்று நாட்களுக்கு தேனில் ஊற வைத்து பிறகு வேலைக்கு இரண்டு, அல்லது மூன்று சாப்பிட்டு வந்தால் ரத்த விருத்தியாகும். 
 
-----தினமும் இரவில் அரை டம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை ஊற வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்.
-----பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் உள்ள மகரந்தத்தை தவிர்த்து அதன் இலைகளை சாப்பிட்டு வந்தால் வேட்டை சூடு தீர்ந்து ரத்தம் ஊறும்.
-----முருங்கைகீரையை துவரம்பருப்புடன் சேர்த்து சமைத்து அதில் ஒரு முட்டை உடைத்து நெய் சேர்த்து கிளறி 41 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தம் பெருகும். 
 
-----இஞ்சி சாருடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும்.
-----தக்காளிப்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாகும், ஆனால் வாத நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. 
 
-----இலந்தைப் பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தம் சுத்தமாவதுடன் சுறுசுறுப்பாகவும் இருக்க உதவும்.பசியைத் தூண்டும் தன்மை கொண்டது.  
 
-----விளாம்பழம் சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்து போகும்.

நோய் தீர்க்கும் வழி முறைகளே மருத்துவம்

மூலிகை: இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைப்  பயன்படுத்திச் செய்யப்படும் முறையாகும். இந்தியா, சீனா, திபெத் ஆகிய நாடுகளில் தோன்றி வளர்ந்தது.
சித்த மருத்துவம்: பண்டைய சித்தர்களால் கண்டறியப்பட்ட மருத்துவ முறை. சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த கலையே யோகா கலை. தமிழ் மண்ணில் தோன்றிய நாகரிகம், பண்பாடு, கலை வேர் ஊன்றி தமிழர்களில் உணர்வோடு தழைத்தோங்கி வளர்ந்தது.

ஆயர்வேதம்: இந்தியாவில் தோன்றி, மருத்துவ உலகில் முன்னோடியாக திகழ்வது, எல்லா விதமான சிகிச்சை முறைகளும் கையாளப்படுகின்றன. அன்றாட வாழ்க்கை முறையோடு மூலிகைகள், யோகா, தியானம், அரோமா வாசனைகளை பயன் பயன்படுத்தும் முறைகளை கொண்டது. நோய்க்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்தும் முறை இவற்றோடு நாடிகளை சமன்படுத்துதல், செரிமான் சக்திகளை தூண்டுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், உடற்பயிற்சி மூலம் குணமாக்கும் முறையாகும்.

இயற்கை மருத்துவம்: உணவு பொருள்களினால் உடலில் ஏற்படும்  நச்சுத் தன்மையை வெளியேற்றி உடலை துய்மைப்  படுத்தி, உடலின் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாத்து உடற்பயிற்சி உணவுப்பழக்கம் இவற்றோடு ஒளி, நீர், வெப்பம், மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மருத்துவ முறை.

அக்கு பஞ்சர் : சித்தர்கள் வளர்ந்த வர்மா அறிவியலோடு, சீனாவில் தோன்றிய மருத்துவ முறை. மனித உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளில், மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளை கொண்டு குத்தி, நரம்புகள் மற்றும் தசைகளை தூண்டுவதால் அவற்றை ஊக்கப்படுத்தி முறையாக செயல்பட வைத்து, நோயை குணப்படுத்துதல் அக்கு பஞ்சர் முறையாகும். 

அக்குபிரஷர்: இதுவும் அக்குபஞ்சர் போலவே உடலின் முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து நோயை குணப்படுத்தும் முறையாகும்.தொடு சிகிச்சை முறையும் அக்குபிரஷர் போன்றே நம் உடலின் சக்தி ஓட்டப் பாதையில் உள்ள முக்கியமான் புள்ளிகளை தொட்டு அவற்றின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு நோயைக் குணப்படுத்துவதாகும்.

யுனானி மருத்துவம்: மனித உடலில் உள்ள ரத்தம், இரைப்பை, மஞ்சள் மற்றும் கரும் பித்தநீர், கபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

ஹோமியோபதி : எந்த ஒரு பொருளுக்கு உடலில் நோயை உண்டாக்க கூடிய தன்மை உள்ளதோ, அந்தப் பொருளுக்கே அந்த நோயைக் குணப்படுத்தும் தன்மையும் உண்டு எனும் இயற்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே ஹோமியோபதி மருத்துவ முறை.

அலோபதி எனும் ஆங்கில மருத்துவம்: இன்றைய உலகில் அலோபதி மருத்துவமே எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்ற மருத்துவ முறை. நோய் அறிகுறிகள், காரணிகளை அகற்றுவது இதன் நோக்கம்.

குழந்தைகளின் வளர்ச்சி பத்திரம்!


குழந்தை செல்வம் இல்லதவர்களுக்குதான், குழந்தையின் அருமை தெரியும். அப்பேர்ப்பட்ட குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும்.? குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். 1. உடல் சார்ந்த வளர்சிகள், 2. அறிவு சார்ந்த வளர்சிகள்.

உடல் சார்ந்த வளர்ச்சி:

இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்சிப்படிகள். அதாவது குழந்தை பிறந்து  3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்திற்குள் திரும்பி படுத்தல்.

6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மதத்தில், உதவியுடன் பிடித்து கொண்டு நின்றால், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல், 11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்சிப்படிகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதை விட அதிகமாக (இரண்டு மாதங்கள் kaliththum ) மாதங்கள் கடந்தும் வளர்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர்.அல்லது நமது குடும்பத்தில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலேயே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:

குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப்படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டுகொள்ள குழந்தையின் சில நடவடிக்கைகள்.

குழந்தையை கூப்பிடும் பொது திரும்பி பார்க்காமல் இருத்தல், குழந்தையிடம் பேசும் போது முகத்தைப் பார்க்காமல் இருத்தல், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருத்தல், தனியாக விளையாடுதல், சில சமயங்களில் அடம்பிடித்தல் , அழுது கொண்டே இருத்தல் ஓரிடத்தில் அமராமல் சுற்றிக்கொண்டே இருத்தல், பொது இடங்களில் சுய கட்டுப்பாடின்றி அழுதல், அடம் பிடித்தல், மற்றவர்களுடன் பழக மறுத்தல், பொருட்களை உடைத்தல்/தூக்கி எறிதல், இயற்கை உபாதையை கட்டுப்பாடின்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல். 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல், தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல். இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக  இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும்.

Wednesday, July 23, 2014

நடப்பதால் இதயத்தை பாதுகாக்கலாம்

தினமும் நடப்பதால் இதயம் மற்றும் நுரையீரல் வலுவடையும். ரத்த அழுத்தம் சீராகும். மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.மன அழுத்தம் குறையும். நல்ல உறக்கம் கிடைக்கும். சர்க்கரை நோய் குறைகிறது. கெட்ட கொழுப்பு சத்து குறையும். புற்று நோய்க்கான சாத்தியங்கள் குறைவு. மூளை நாள வியாதிகள் வராமல் தடுக்கும்.

இதய நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் ஏரோபிக் எக்ஸர்சைஸ் எனப்படும் விரைவாக நடத்தல், சைக்கிள் சவாரி, நீச்சல், டென்னிஸ், கைப்பந்து போன்றவற்றை செய்யலாம்.

உடற்பயிற்சி செய்யும் போது சிரமம் இல்லாமல் பேச வேண்டும். அப்படி முடியாவிட்டால் உடனடியாக பயிற்சியின் வேகம் மற்றும் அளவை குறைத்துக் கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகளால் ரத்தக் குழாய்களின் உட்புறக் சுவரில் அடைப்பு அதிகம் ஆகாமல் தடுக்கும்.