Pages

Showing posts with label ஆயர்வேதம். Show all posts
Showing posts with label ஆயர்வேதம். Show all posts

Thursday, July 24, 2014

நோய் தீர்க்கும் வழி முறைகளே மருத்துவம்

மூலிகை: இயற்கையில் கிடைக்கும் மூலிகைகளைப்  பயன்படுத்திச் செய்யப்படும் முறையாகும். இந்தியா, சீனா, திபெத் ஆகிய நாடுகளில் தோன்றி வளர்ந்தது.
சித்த மருத்துவம்: பண்டைய சித்தர்களால் கண்டறியப்பட்ட மருத்துவ முறை. சித்த மருத்துவத்தில் மிகச் சிறந்த கலையே யோகா கலை. தமிழ் மண்ணில் தோன்றிய நாகரிகம், பண்பாடு, கலை வேர் ஊன்றி தமிழர்களில் உணர்வோடு தழைத்தோங்கி வளர்ந்தது.

ஆயர்வேதம்: இந்தியாவில் தோன்றி, மருத்துவ உலகில் முன்னோடியாக திகழ்வது, எல்லா விதமான சிகிச்சை முறைகளும் கையாளப்படுகின்றன. அன்றாட வாழ்க்கை முறையோடு மூலிகைகள், யோகா, தியானம், அரோமா வாசனைகளை பயன் பயன்படுத்தும் முறைகளை கொண்டது. நோய்க்கான காரணம், அறிகுறிகள், குணப்படுத்தும் முறை இவற்றோடு நாடிகளை சமன்படுத்துதல், செரிமான் சக்திகளை தூண்டுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துதல், உடற்பயிற்சி மூலம் குணமாக்கும் முறையாகும்.

இயற்கை மருத்துவம்: உணவு பொருள்களினால் உடலில் ஏற்படும்  நச்சுத் தன்மையை வெளியேற்றி உடலை துய்மைப்  படுத்தி, உடலின் உள்ளுறுப்புகள் அவற்றின் இயல்பு நிலை மாறாமல் பாதுகாத்து உடற்பயிற்சி உணவுப்பழக்கம் இவற்றோடு ஒளி, நீர், வெப்பம், மற்றும் இயற்கையில் கிடைக்கும் பொருட்களை மட்டும் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மருத்துவ முறை.

அக்கு பஞ்சர் : சித்தர்கள் வளர்ந்த வர்மா அறிவியலோடு, சீனாவில் தோன்றிய மருத்துவ முறை. மனித உடலில் உள்ள முக்கியமான புள்ளிகளில், மயிரிழை போன்ற மிகவும் மெல்லிய ஊசிகளை கொண்டு குத்தி, நரம்புகள் மற்றும் தசைகளை தூண்டுவதால் அவற்றை ஊக்கப்படுத்தி முறையாக செயல்பட வைத்து, நோயை குணப்படுத்துதல் அக்கு பஞ்சர் முறையாகும். 

அக்குபிரஷர்: இதுவும் அக்குபஞ்சர் போலவே உடலின் முக்கியப் புள்ளிகளில் அழுத்தம் கொடுத்து நோயை குணப்படுத்தும் முறையாகும்.தொடு சிகிச்சை முறையும் அக்குபிரஷர் போன்றே நம் உடலின் சக்தி ஓட்டப் பாதையில் உள்ள முக்கியமான் புள்ளிகளை தொட்டு அவற்றின் செயல்பாட்டைத் தூண்டிவிட்டு நோயைக் குணப்படுத்துவதாகும்.

யுனானி மருத்துவம்: மனித உடலில் உள்ள ரத்தம், இரைப்பை, மஞ்சள் மற்றும் கரும் பித்தநீர், கபம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது.

ஹோமியோபதி : எந்த ஒரு பொருளுக்கு உடலில் நோயை உண்டாக்க கூடிய தன்மை உள்ளதோ, அந்தப் பொருளுக்கே அந்த நோயைக் குணப்படுத்தும் தன்மையும் உண்டு எனும் இயற்கையின் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதே ஹோமியோபதி மருத்துவ முறை.

அலோபதி எனும் ஆங்கில மருத்துவம்: இன்றைய உலகில் அலோபதி மருத்துவமே எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுகின்ற மருத்துவ முறை. நோய் அறிகுறிகள், காரணிகளை அகற்றுவது இதன் நோக்கம்.