Pages

Showing posts with label குழந்தைகளின் வளர்ச்சி. Show all posts
Showing posts with label குழந்தைகளின் வளர்ச்சி. Show all posts

Thursday, July 24, 2014

குழந்தைகளின் வளர்ச்சி பத்திரம்!


குழந்தை செல்வம் இல்லதவர்களுக்குதான், குழந்தையின் அருமை தெரியும். அப்பேர்ப்பட்ட குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும்.? குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம். 1. உடல் சார்ந்த வளர்சிகள், 2. அறிவு சார்ந்த வளர்சிகள்.

உடல் சார்ந்த வளர்ச்சி:

இதில் உடல் சார்ந்த வளர்ச்சி என்பது குழந்தை பிறந்தது முதல் நடக்கும் வரை உள்ள பல்வேறு வளர்சிப்படிகள். அதாவது குழந்தை பிறந்து  3 முதல் 4 மாதத்திற்குள் காலை நிற்க வேண்டும். 4 முதல் 5 மாதத்திற்குள் திரும்பி படுத்தல்.

6-7 மாதத்தில் நெஞ்சால் தேய்த்துக் கொண்டு முன்னே நகருதல், 7-8 மாதத்தில் கைகளை ஊன்றி உட்காருதல், 8-9 மாதத்தில் தவழுதல், 9-10 மதத்தில், உதவியுடன் பிடித்து கொண்டு நின்றால், 10-11 மாதத்தில் உதவியுடன் நடத்தல், 11-12 மாதத்தில் தனியாக நடத்தல், 14-18 மாதங்களில் மாடிப்படி ஏறுதல், 18-24 மாதங்களில் மாடிப்படி இறங்குதல், இந்த வளர்சிப்படிகள் ஒன்று அல்லது இரண்டு மாதங்கள் முன் பின் நடக்கலாம். ஆனால் அதை விட அதிகமாக (இரண்டு மாதங்கள் kaliththum ) மாதங்கள் கடந்தும் வளர்சிப்படியில் மாற்றம் இல்லை என்றால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான மருத்துவத்தை ஆரம்பிக்க வேண்டும்.

ஏனென்றால் சில பெற்றோர்கள் சரியான மாதத்தில் குழந்தையின் வளர்ச்சிப்படி இல்லை என்றாலும் அதை உடனடியாக கவனிக்க மறந்து விடுகின்றனர்.அல்லது நமது குடும்பத்தில் எல்லோரும் சற்று தாமதமாகத்தான் நடந்தார்கள் என்று எண்ணி குழந்தையை வீட்டிலேயே வைத்து விடுகின்றனர். பின் தாமதமாக பயிற்சியளிப்பது மிக குறைவான முன்னேற்றத்தையே தரும்.

2. அறிவு சார்ந்த வளர்ச்சிப் படிகள்:

குழந்தையின் அறிவு சார்ந்த வளர்ச்சிப்படிகள் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே நம்மால் கண்டு கொள்ள முடியும். எளிமையாக கண்டுகொள்ள குழந்தையின் சில நடவடிக்கைகள்.

குழந்தையை கூப்பிடும் பொது திரும்பி பார்க்காமல் இருத்தல், குழந்தையிடம் பேசும் போது முகத்தைப் பார்க்காமல் இருத்தல், மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் இருத்தல், தனியாக விளையாடுதல், சில சமயங்களில் அடம்பிடித்தல் , அழுது கொண்டே இருத்தல் ஓரிடத்தில் அமராமல் சுற்றிக்கொண்டே இருத்தல், பொது இடங்களில் சுய கட்டுப்பாடின்றி அழுதல், அடம் பிடித்தல், மற்றவர்களுடன் பழக மறுத்தல், பொருட்களை உடைத்தல்/தூக்கி எறிதல், இயற்கை உபாதையை கட்டுப்பாடின்றி இருக்கும் இடத்திலேயே கழித்தல். 1 வயதில் பேசிய குழந்தை 1 வயது முதல் பேசாமல் இருத்தல்.

வயதுக்கேற்ற புரிதல், பேசுதல் இல்லாமல் இருத்தல், தனியாக அர்த்தமற்ற வார்த்தைகளால் பேசுதல் அல்லது கத்துதல். இது போன்ற செயல்களை நாம் வீட்டில் கவனித்தால் உடனடியாக  இதற்கான பயிற்சியை கொடுக்க வேண்டும்.